Wednesday, April 29, 2009

சூர்யாவின் ஆதவன்

ஆதவன் கதை.
இந்த படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் மூன்று தோற்றங்களில் நடிக்கிறார் , அப்பா, மகன் மற்றும் வாரணம் ஆயிரம் படத்துக்கு 20 கிலோ குறைத்து +2 மாணவனாக நடித்த சூர்யா இந்த படத்தில் இன்னும் 20 கிலோ குறைத்து L.K.G படிக்கும் மாணவனாக நடிக்கிறார்.



காட்சி 1:
சன் டி.வி முக்கிய செய்திகள் சுஜாதா பாபு அவர்கள் வாசித்து கொண்டு இருந்தார்.

தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாகவே மிச்சர்(mixture) தட்டுப்பாடாக இருக்கிறது. இதனால் சரக்கு விற்பனை சரிந்து அரசுக்கு பெரும் நஷ்டம் உண்டாகிறது. மிச்சர் போடுபவர்களை சில சமூக விரோதிகள் கடத்தி கொண்டு போய்விடுவதால் நாட்டில் முன் ஒருபோது இல்லாத அளவுக்கு மிச்சர் தட்டுபாடு ஆகியுள்ளது.

குடிமகனின் பேட்டி:" என்னங்க பண்ண சொல்றிங்க என்னதான் நெறைய சைடு டிஷ் இருந்தாலும் ஒரு கட்டிங் உட்டு மிச்சர் சாப்பிடற சுகமே தனிங்க..ஆனா இப்ப பாருங்க மிச்சர் 100 கிராம் 100 ரூபாய் விக்கிறாங்க நாங்கல்லாம் ஏழை பாழைங்க அவ்ளோ காசுக்கு எங்க போறது... இதுக்கெல்லாம் ஒருத்தன் பொறந்து வருவான்".
அப்போது ஒரு கிழவன் பொறந்துட்டான் அப்படின்னு சொல்லிட்டு போவார். அந்த கிழவனை உற்று நோக்கினால் அவர் தான் சூர்யா.


*********************************************************************************

காட்சி 2:
(இடம்: சென்னை துறைமுகம்)
சூரியன் கிழக்கு திசையில் இருந்து எழும்புகிறது அப்போது நமது நாயகன் சூர்யா கோட்டு சூட்டு போட்டு கொண்டு கழுத்தில் ஒரு சிகப்பு நிற ரிப்பனை கட்டிக்கொண்டு சூரியனில் இருந்து குதிப்பது போல் வருகிறார். அவர் தான் ஆதவன், துறைமுகத்தில் உள்ள CONTAINERil எல்லாம் ஏதோ தேடுகிறார், அதற்குள் வில்லன் ஆட்கள் ஆதவனை கண்டுகொள்கிறார்கள். உடனே ஒரு பைட், ரைட் கால CONTAINER மேல வெச்சி LEFT கையால் வில்லன் கோஸ்டியை துவம்சம் செய்கிறார் ஆதவன்.நமது .அப்புறம் துறைமுகத்தில் நிற்கும் கப்பலில் ஏறி சும்மா சும்மா பறந்து பறந்து அடிக்கிறார்,அப்புறம் ஒரு ஆளுக்கு சூர்யாவின் பஞ்ச் மிஸ்ஸாகி CONTAINER மேல் பட்டு CONTAINER saro அடுத்து ஒரு ஒரு CONTAINER ஆக தான் தேடி வந்த பொருளை தேடுகிறார். கடைசியில் ஒரு CONTAINERil தான் தேடி வந்த பொருள் கிடைக்கிறது. அந்த CONTAINERil 1000 டன் மிச்சர் இருக்கிறது. அதை ஒவ்வொரு டாஸ்மாக் பாருக்கு சென்று குடிமகன்களிடம் ப்ரீயாக குடுக்கிறார். கொஞ்சம் மிச்சரை எடுத்து தன்
பாக்கெட்டில் போட்டு கொள்கிறார்.உடனே ஒரு தத்துவ பாட்டு.

நாயகி நயன்தாரா துறைமுகம் பக்கத்தில் கருவாடு விற்கும் ஆயாவாக வருகிறார் ஐயோ சாரி ஆயாவின் மகளாக வருகிறார். இந்த படத்தில் நயன் SINGLE பீஸ் இல் வந்து கடலில் குளிப்பது போன்று கிளுகிளுப்பான காட்சிகள் வருகின்றன.


துறைமுகத்தில் எந்த கப்பல்ல எப்ப சரக்கு எத்துராங்கன்னு நயன் சூர்யாவிடம் சொல்வார். வடிவேலு அப்போ அப்போ வந்து "வில்லு
உடஞ்சிபோச்சே" என்று சொல்வார்(போக்கிரியில் வடை போச்சே அது மாதிரி பி .கு: " நான் விஜயை கிண்டல் பண்ணவில்லை")
***********************************************************************************
காட்சி 2:
இடம் : ஆதவனின் வீடு

நைட் வீட்டுக்கு வரும் ஆதவனிடம் அப்பா சூர்யா சோக பாட்டை படுகிறார்.......
வில்லன் படத்தில் வரும் ஆடியில் காத்து அடிச்சா சோக பாட்டு மாதிரி

காலையில சரக்கு அடிச்சா
தொட்டுக்க மிச்சர் இல்ல
கொமடிகிட்டு வாந்தி வருது அன்பு மகனே.........

உடனே தன் பாக்கெட்டில் உள்ள மிச்சரை அப்பாவிடம் கொடுக்கிறார் .

********************************************************************************

காட்சி 3:

இடம் : துறைமுகம் பக்கத்தில் உள்ள ஏரியா


தான் ஏன் மிச்சர் பொட்டலங்களை திருடுகிறேன் என்று நயந்தாரா
கேட்காமலயே ஆதவன் தன் FLASHBACKi கூறுகிறார்.

FLASHBACK:

ஆதவன் அப்போது L.K.G படித்து கொண்டு இருந்தான்(அதுவும் சூர்யாதான்) ஆதவனின் அப்பா சூர்யா வேலையை விட்டு தினம்தோறும் வீட்டுக்கு வரும்போது அரை கிலோ மிச்சர் வாங்கி கொண்டு வருவார். ஆதவன் சாப்பிட்டு வைத்த மீதி மிச்சரில் அப்பா சூர்யா சரக்குக்கு சைடு டிஷாக சாப்பிடவது வழக்கம். ஒரு நாள் அப்பா சூர்யா டாஸ்மாக் பாரில் சரக்கு அடித்து கொண்டு இருக்கும் போது வில்லன் சுமன் பக்கத்தில் கட்டிங் சாப்பிட்டு கொண்டு இருந்தார், சுமன் சூர்யாவிடம் கொஞ்சம் மிச்சர் கேட்கிறார். ஆனால் சூர்யா அது தனக்கே பத்தாது என்று சுமனை
கேவலபடுத்துகிறார். இந்த அவமானத்தை தாங்காமல் சுமன் சூர்யாவின் மிச்சர் பொட்டலத்தை வாங்கி கிழே கொட்டுகிறார். "இனிமே இந்த தமிழ்நாட்டுல யாருக்கும் மிச்சர் கிடைக்காத படி செய்றேன்" என்று சுமன் கர்ஜிக்கிறார். அப்போதிலிருந்து சுமன் மிச்சர் போடுபவர்களை கடத்தி
கொன்றுவிடுகிறார் அல்லது தனது கூடாரத்தில் அடைத்து மிச்சர் போட்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். தனது மிச்சர் பொட்டலத்தை கிழே கொட்டிய சுமனை பழிவாங்க வேண்டும் என்று L.K.G படிக்கும் ஆதவனுக்கு அனைத்து சண்டைகளையும் கற்று தருகிறார்.மேலும் L.K.G படிக்கும் ஆதவன் தன் அப்பா மிச்சர் இல்லாமல் சரக்கு அடிப்பதை பார்த்து மனம் வெம்புகிறார். எப்படியாவது தான் பெரியவன் ஆகியதும் தன் அப்பாவுக்கு தினமும் சரக்குக்கு சைடு டிஷ் ஆக மிச்சர் பொட்டலம் தருவேன் என்று சபதம் போடுகிறார்.


கிளைமாக்ஸ்:

இந்த தடவை CONTAINER எல்லாம் சரக்கு கப்பல்ல ஏத்தி வண்டி கிளம்பிடிச்சு..ஆதவன் இந்த தடவை கொஞ்சம் லேட் ஆக வந்துட்டார், வந்ததும் அங்கே இங்கே என்று பார்க்கிறார் உடனே பீச் மணலில் நிறுத்தி இருக்கும் கட்டுமரத்தில் ஏறுகிறார். கட்டுமரத்தால் அந்த சரக்கு கப்பலை
பின் தொடருகிறார், ஆதவன் அவசரத்தில் துடுப்பு எடுக்காம கட்டுமரத்தை கடலில் இறக்கிவிட்டார், அதனால் கட்டுமரத்தில் படுத்து தன் இரு கையை துடுப்பாய் பயன்படுத்துகிறார்.சரக்கு கப்பல் ஆதவன் கண் முன்னால் போய் கொண்டிருக்கிறது தீடிரென்று ஆதவனக்கு ஒரு யோசனை வருகிறது அதாவது நிலாவின் திசை அறிந்து கப்பலை பின் தொடர்வது என்று ஆதவன் வானத்தில் டார்ச் அடிக்கிறார் ஆனா பாருங்க ஆதவனோட கெட்ட நேரம் அன்னிக்கு அமாவாசை ஆகி போச்சு. ஒரு பத்து நிமிஷமா ஆதவன் நிலாவா தேடுகிறார் அவர் தேடுற சமயத்தில மிச்சர் ஏத்துகிட்டு போற சரக்கு கப்பல் அவர் கண்ணில் இருந்து மறைந்து வெகு தூரம் போய்விட்டது.
அப்போது அந்த வழியாக வந்த STAR CRUISER பிரமாண்ட கப்பல் போகிறது, உடனே கட்டுமரத்தில் இருக்கும் கயிறை தூக்கி CRUISER கப்பலில் உள்ள பால்கனி கம்பியில் போடுகிறார். அந்த கயிர் நன்றாக தன்னை கப்பலுடன் இணைத்து கொள்கிறது. CRUISER கப்பல் வேகம் எடுத்து கிளம்புகிறது CRUISER பின்னாடி சூர்யா SURFING செய்வது போல் கட்டுமரத்தில் செல்கிறார்,அப்போது சில டால்பின்கள் சூர்யாவை முத்தமிட்டு செல்கின்றன. இந்த SURFING காட்சியை நாம் ஆறு விதமான ஷாட் களில் காண்கிறோம். அப்புறம் சிறிது தூரத்தில் ஒரு ராட்சஸ சுறா இருப்பதை கண்டு கொள்ளும் சூர்யா, சுறாவை technical ஆக ஏமாற்றுகிறார்.ஆதாவது LEFTil திரும்புவது போல் கை காட்டி RIGHTil திரும்பி நேராக போய்விடுகிறார்.

CRUISER கப்பல் மூலமாக ஆதவன் மிச்சர் சரக்கு கப்பலை அடைந்து எதிரிகளை பந்தாடி திரும்பவும் தமிழ்நாட்டுக்கு குடிமக்களுக்கு மிச்சர்களை கிடைக்க செய்கிறார்.
சுபம்.
உங்களுக்கு பிடிச்சிதுன்ன கண்டிப்பா TAMISHil ஒட்டு போடுங்க.


13 comments:

FunScribbler said...

சூர்யாவ கலாய்த்து வந்த முதல் பதிவு இது தானு நினைக்குறேன். since i am an anti-surya fan, i liked it!

கடைக்குட்டி said...

ஹ்ஹ ஹா... இப்போதான் ஆதிஅண்ணன் எழுதுனத படிச்சு சிரிச்சிட்டு வ்ர்றேன்.. அதுக்குள்ள நீங்களும்...

மிக்சர் மேட்டெரோடு பல விஷயங்கள் மிக்ஸ் பண்ணி.. சூப்பர் காக்டெய்ல்ங்க.... :-)

கடைக்குட்டி said...

இதுக்கெல்லாம் ஓட்டு போடுங்கன்னு சொல்லனுமா??? தரமான பதிவு ..

நீங்க நல்லா வருவீங்க தம்பி... (ச்சும்மா எல்லாருக்கும் சொல்றதுதான்..:-)

கடைக்குட்டி said...

guruji adds code வாங்கும் போது .. new window select பண்ணி வாங்குங்க..

ஏன்னா.. கிளிக் பண்ணா.. அதே page ல ஓப்பன் ஆகுது :-)

கடைக்குட்டி said...

தல மறுபடியும் மொக்க வாங்கிட்டேன்..

ஒரு தடவ அதே pageலெயும்... இன்னொரு தடவ அடுத்த pageலேயும் openஆகுது..

அடப்போங்கப்பா...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சூர்யா வளர்ந்து வருகிறார்....,

விஜய் மாதிரி அவருக்கும் நிறைய பதிவு போட்டு ஊக்குவியுங்கள் மக்களே

Unknown said...

Your story line is exceptional - pat on your back for a mindblowing imagination and creativity. Great flow of thought and narration - if you enter the kollywood you would crack the show!

When I would think this story line when picturised with the best technicians will sure shot beat the success story of all the top hits in the industry today, your choice of hero is teh only obstacle to keep you reaching great heights.
This is "THE APT" story line for the so-called mass heroes Ajith or Vijay and definitely not for the classy Surya.

Try selling this script to your mass heroes - even when u are half way through the narration of the story you will see them readily signing the contract and may even give you a discount on their not so deserving wages as those souls desperately need something close to atleast a 25 day show runner!!!Both your masses have fallen flat on their face with consecutive flops - but that is also a talent right!!

Good Luck!

ஜெட்லி... said...

கடைக்குட்டி,தமிழ் மாங்கனி , தலைவர் சுரேஷ் உங்கள் பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றி....

ஜெட்லி... said...

உங்கள் பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றி மீனாட்சி...
சினிமா வாய்ப்பு கிடைத்தால் பின்னிடலாம்.....

சித்து said...

மச்சி பின்னி பெடல் எடுத்துட்ட. மீனாட்சி சொன்ன மாதிரி சினிமால ஒரு கலக்கு கலக்கு

ஆகாய நதி said...

ஏன் இந்த கொலவெறி... ஒரு வளர்ந்து வரும் நல்ல திறமையான கலைஞனை இப்படி கேலி செய்யலாமா? :(

ஆகாய நதி said...

நன்றி ஜெட்லி தங்கள் பதிலுக்கு :)
இந்த பதிவில் சிரிப்பிற்குக் குறைவில்லை... அந்த கிரியேட்டிவிடிக்கு எனது பாராட்டுகள்!

250WcurrentIsay said...

nalla irukku......