Friday, April 24, 2009

குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் சுட சுட விமர்சனம்.

குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் சுட சுட விமர்சனம்.

கு.பூ.கொ.பு இந்த படத்துக்கு நான் முதல் நாள் முதல் காட்சி சென்று வந்து சூட்டோட சுட உங்களுக்காக இந்த விமர்சனத்தை அளிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அந்த மகிழ்ச்சி என்னவென்று முடிவுரையில் சொல்கிறேன்.
இந்த படத்தின் நாயகனாக ராமகிருஷ்ணன் அறிமுகம் ஆகியுள்ளார், இவர் ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் என்ற படத்தில் நம்ம ஸ்ரீகாந்தின் நண்பர்களில் ஒருவராக வருவார். கதாநாயகி பெயர் சரிவர தெரியவில்லை, அப்புறம் படத்தில் நடித்த முக்கிய கதாபாத்திரங்கள் எல்லாருமே புதுசு.
இசை நம்ம யுவன்(அதை நம்பி தானே படத்துக்கு போனேன்).ரைட் கதைக்கு வருவோம் ஒரு கடலோர கிராமம் முட்டம் அங்கு ஒரு பஸ்ஸில் இருந்து ஒரு பெண் இறங்கி புதுசாக அந்த கிராமத்துக்கு தன் பாட்டியுடுன் குடியிருக்க வருகிறார்கள். அங்கு படிக்கும் பள்ளியில் தான் ஹீரோவும் படிக்கிறார் , அப்புறம் என்ன காதல் தான். ஆனா இவங்க காதல் செய்யும் காட்சிகளில் சில காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளது, மிச்ச காட்சிகள் மொக்கை தாங்கலடா சாமி!.....ஹீரோவின் அம்மாக்கு இந்த லவ் தெரிஞ்சு கதாநாயகியை கேவலப்படுத்தி ஊரை விட்டு துரத்தி விடுகிறார் .ஆகையால் சந்தர்ப்ப வசத்தால் கதாநாயகி வேறு ஒருவனக்கு திருமணம் செய்து வைக்க படுகிறார். கதாநாயகியின் புருஷனாக வரும் தர்மன் அசல் நம்ம கஞ்ச கருப்பை நினைவு படுத்துகிறார். அவனுக்கெல்லாம் வேற ஒரு பாட்டு சுத்தமா அந்த s.p.b. வாய்ஸ் நான் தர்மண்ட பாட்டு செட் ஆகவில்லை.
அப்புறம் என்ன நடக்கும் நம்ம ஹீரோ இன்னும் கதாநாயகியை நினைத்து குடித்து, தாடி வளர்த்து, உலகத்தில் உள்ள காதலிகளை திட்டி, அப்புறம் நம்ம பழைய காதலிக்கு உதவி செய்து....... என்னால முடியலங்க படம் FULLa FEELINGSga .....ஒரே செண்டிமெண்ட் போட்டு தாக்குறாங்க.
அதுவும் படம் ஆமையை விட கொஞ்சம் SLOWva போதுங்க. காமெடி ஒன்னும் சொல்ற மாதிரி இல்லை. படம் முழுக்க செண்டிமெண்ட் தான். அப்புறம் கதை எந்த காலகட்டத்தில் நடக்குதுன்னு சரியாய் தெரியில ஏன்னா காட்சிகளில் F.M.ரேடியோவில் ஒரே பழைய பாட்டாக ஓடி கொண்டிரிக்கிறது, சட்டேன்று தர்மன் கேரக்டர் கமல் தசாவதாரம் படத்தின் கட் அவுட்க்கு பால் அபிஷேகம் செய்கிறார். நான் இதுவரை பார்த்த மொக்கை படங்கள் வரிசையில் கு.பூ.கொ.பு. படமும் இடம் பிடித்துவிட்டது.


நான் ஏன் இந்த விமர்சனத்தை உங்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்
என்பது உங்களுக்கு புரிஞ்சி இருக்கும்ன்னு நினைக்கறேன்
இப்போ இருக்கற சினிமா ட்ரெண்டுக்கு எத்த மாதிரி ஒரு கிராமம், ஒரு காதல் ஜோடி, கதாநாயகனுக்கு தாடி, ஒரு கோவில் திருவிழா என்று இருந்தால் சுப்ரமணியபுரம்,கபடி குழு படங்களின் வெற்றி மாதிரி நம்ம படமும் வெற்றி அடையுணும்னு நினைச்சு கிராமத்து படம் எடுப்பவர்களுக்கு குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் படம் நல்ல பாடமாக அமையும்...........நான் இப்பவும் சொல்றேன் மொக்கை படம் பாக்கறது என் தப்பு இல்லை படம் எடுத்தவன் தப்பு.18 comments:

Suresh said...

நல்ல வேளை போலாமும் நினைத்தேன் யுவனுக்காக இப்போ முடிவு பண்ணிட்டேன் ;) இல்லைனு

ஜெட்லி said...

எப்படியோ சுரேஷ், உங்களை மாதிரி நண்பர்களை நான் காப்பாதிடேன்னு உள்ளுக்குள்
ஒரு மகிழ்ச்சி.

Naikkutty said...

கோடி புண்ணியம் சாமி உங்களுக்கு... ஒரு மொக்க படத்த மொதல்ல பாத்துட்டு அடுத்தவன் நல்ல இருக்கனுமுன்னு ஒரு விமர்சனம் போட்டு எல்லாரையும் காப்பாத்தற உங்க நல்ல மனசுக்கு ஒரு பத்ம விபுஷன் அவார்ட் தரலாம்.

பத்ம விபுசன் அவார்ட் எல்லாம் எது எதுக்கோ குடுக்கறாங்க.... உங்கள்ளுக்கு கண்டிபாக கொடுக்கலாம் பாஸு...

குப்பன்_யாஹூ said...

good review.

raman- Pages said...

//நல்ல வேளை போலாமும் நினைத்தேன் யுவனுக்காக இப்போ முடிவு பண்ணிட்டேன் ;) இல்லைனு// repetay

வான்முகிலன் said...

உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுண்ணே தெரியலிங்க.

ஜெட்லி said...

வான்முகிலன் அழ கூடாது.. நாங்கெல்லாம் எதையும் தாங்கும் இதயம்.

kailash,hyderabad said...

you are so brave seeing this type mokkai cinema. and also so kind to save us from
danger by warnig us.
so its good that only listenig the songs.
thank u.

வழிப்போக்கன் said...

சுத்த மொக்க போல இருக்கு???
:)))

வழிப்போக்கன் said...

நல்ல படம்ன்னு நினைச்சன்...
இப்பிடி பண்ணீட்டாங்களே???
:(((

தீப்பெட்டி said...

:-(

ஜெட்லி said...

நான்தான் சொன்னனே, யுவன் இசைக்காக தெரியாதனமா இந்த படம் போய்ட்டேன்,
சரி நான் பட்ட கஷ்டம் நம்ம ப்ளாக் நண்பர்கள் படக்கூடாதுன்னு, என்னால் இயன்ற சிறு
உதவி.

வண்ணத்துபூச்சியார் said...

Thanx my dear...

நண்பர் கேபிளும் புறா செத்து போச்சின்னு சொன்னார்.

நீங்க இரங்கல் பா பாடிவிட்டீர்கள்.

சரோஜாவில் சம்பாதித்ததை சரண் மறுபடியும் விட்டு விட்டார் போல இருக்கு.

சித்து said...

செம விமர்சனம் நண்பா. உன் உயர்ந்த உள்ளதை எப்படி பாராட்டுவது???

வண்ணத்துபூச்சியார் said...

ஏன் இந்த கொலை வெறின்னு கேட்க கூடாது..???

மரியாதை பார்க்க வில்லையா..??

sharevivek said...

hallo i am reading all your posts from morning. still i crossed around 10 postings. Really wonderful the way you present. Congratulations.
Arumai nanbargaley
Vivek

livingston baba said...

padam nalla padam than nan dvd la than parthean

konjammeathuva irunthalum nalla irunthau

ஷோபிகண்ணு said...

யாரு அந்த போட்டாவுல இருக்கற பையன். தடுக்குள்ள இருக்கான். என்ன வயசுக்கு வந்து குடுசு கட்டியிருக்கா?

http://navanithan.tk