Thursday, April 23, 2009

சாரு நிவேதிதாவின் மூடுபனி சாலை புத்தக விமர்சனம்






மூடுபனி சாலை புத்தக விமர்சனம் :
எனக்கு பொதுவாக பயண கட்டுரைகள், அனுபவ கட்டுரைகள் படிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். அடுத்தவர்கள் எழுதிய அனுபவங்களையாவது அறிந்து அதில் இருந்து நாம் எதாவது தெரிந்துகொள்வோம் என்ற ஒரு நாப்பாசை. ஒரு அனுபவ கட்டுரை என்பது படிக்கும் தன் வாசகர்களுக்கு எதாவது ஒரு வகையில் உருப்படியாக இருக்க வேண்டும்.நான் இந்த புத்தகத்தை வாங்கியதாக நண்பன் இலக்கியமிடம் கூறினேன் அவன் அதற்க்கு "அதுல என்ன இருக்க பொது எங்கே குடிச்சேன் யாரை *******ன்னு எழுத போறார் அதான் இருக்க போதுன்னு சொன்னான்". நான் இந்த புத்தகத்தில் படித்ததில் எதோ சில விஷயங்கள் மட்டுமே உருப்படியாக இருக்கிறது.மிச்சபடி சாரு அவர்கள் எங்கு குடித்தார் யார்குட குடித்தார் போன்ற விஷயங்கள் இருக்கிறது.
சாரு அவர்கள் கட்டுரையில் எந்த ஊருக்கு சென்றாலும் அங்கே தன் குடும்ப கதையையும் கொண்டு வந்து விடுகிறார்.நான் பொதுவாக சாரு அவர்களின் புத்தகத்தை அவ்வளவாக விரும்புவது இல்லை அவரின் zero degree என்ற நாவலை தான் நான் முதல் முதல் வாங்கிய சாரு சாரின் புத்தகம். அந்த புத்தகத்தை முதல் அத்தியாயத்தை படித்த உடன் வித்யாசமா எழுதிரிக்கிறார் என்று அடுத்த அடுத்த அத்தியாயத்தை படித்தேன் ஒரு சில அத்தியாயத்தை படித்த பிறகு எனக்கு ஒன்றும் விளங்கவில்லை, ஆனால் அந்த நாவல் ஒரு மெகா ஹிட் ஆனா நாவல் ஏன் எனக்கு புரியவில்லை என்று யோசித்து சில தடவை படிக்க முயற்சி செய்தேன் ஆனால் திரும்பவும் எனக்கு போர் அடித்தது அந்த நாவலை தூக்கி அப்படியே ஓரம் வைத்துவிட்டேன்.
ஆனால் இந்த புத்தகத்தில் அவர் எழுதியுள்ள சில விஷயங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது, மேலும் அவர் இந்த புத்தகத்தில் சமூக சிந்தனைக்காக சில பல கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் இந்த புத்தகத்தில் தொடாத விசயமே இல்லை. பெரியார் பற்றி ஒரு அருமையான தகவலை கூறிருந்தார் அதாவது அவர் படித்த பெரியாரின் பயண கட்டுரையில் வெளியான பெரியாரின் அனுபவங்களை நமக்கு அளித்துள்ளார் பெரியார் அவர்கள் ரஷ்யாவில் உள்ள நிர்வாண சங்கத்தில் சென்று அங்கு நிர்வாண புகைப்படங்கள் எடுத்து கொண்டதையும், பெரியார் கூறிய சில நல்ல கருத்துகளை தொகுத்து நமக்கு ஒரு அத்தியாயத்தில் கொடுத்துள்ளார்.
அப்புறம் நம் சாமியார்களை பற்றி காரசாரமாக கருத்துக்களை அள்ளி தெளித்துள்ளார். உதரணமாக சங்கரசாரியாரை பற்றி அவர் கூறுகின்ற கருத்துகள் நெற்றியில் அடித்தது போல் உள்ளது.
ஆனா இவர் இந்த மாதிரி தேவை இல்லாத கணக்கெல்லாம் பண்ணிட்டு இருக்கார்ன்னு புரியுல. ஒரு அரசியல்வாதி தன் வாழ்நாளில் எத்தனை பெண்களை சந்திக்கிறார்கள் என்று ஒரு maths கிளாஸ் நடத்துறார் நீங்களே படிங்க " ஒரு அரசியல்வாதி ,தொழிலதிபர்கள், சினிமாகாரர்கள் தன் வாழ்நாளில் எத்தனை பெண்களை 'சந்திக்கிறார்கள்' என்று ஒரு கணக்கு கூறுகிறார் "வாரம் நான்கு என்று கொண்டால் மாதத்தில் 16 . வருடத்தில் 16x12=192......ஆகா இவர்கள் 40 வருடங்கள் 200x40=8000
பெண்களை 'சந்திக்கிறார்கள்'".
இந்த மாதிரி மொக்கை கணக்கெல்லாம் போட்டு பார்த்து நம்ம நேரத்தை வீணடிக்கிறார். மொத்தத்தில் நான் இந்த புத்தகத்தை படித்ததில் நல்ல கருத்துகளை கற்றதை விட பலான விஷயங்கள் தான் அதிகம். உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.


5 comments:

சித்து said...

/*
மொத்தத்தில் நான் இந்த புத்தகத்தை படித்ததில் நல்ல கருத்துகளை கற்றதை விட பலான விஷயங்கள் தான் அதிகம். */

நண்பா இதை வருத்தமாக கூறுகிறாயா அல்லது சந்தோசமாகவா??

Giri said...

//ரஷ்யாவில் உள்ள நிர்வாண சங்கத்தில் சென்று அங்கு நிர்வாண புகைப்படங்கள் எடுத்து கொண்டதையும் //

அது ஜெர்மனியில்.பெர்லின் என்று நினைக்கிறேன்.

ரா.கிரிதரன்
http://beyondwords.typepad.com

Giri said...

//ரஷ்யாவில் உள்ள நிர்வாண சங்கத்தில் சென்று அங்கு நிர்வாண புகைப்படங்கள் எடுத்து கொண்டதையும்//

அது ஜெர்மனி (பெர்லின் என்று நினைக்கிறேன்)

ரா.கிரிதரன்
http://beyondwords.typepad.com

பாரதி.சு said...

வணக்கம்,
இவரின் (சாரு) எழுத்துகளை வாசிப்பதே வேஸ்ட்...அதில ஏம்பா விமர்சனமெல்லாம்...

Sarathguru Vijayananda said...

சார் சாரு நிவேதிதாவைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அவருக்கு நம் நாட்டு இசை, மேற்கத்திய இசை என்று ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியரில் வரும் சிறுவன் ஸ்ரீகாந்த் அளவுக்குக் கூட சங்கீதம் தெரியாவிட்டாலும் பலரும் பாராட்டிய காத்துக்கு இனிமையான பாடல்களுடைய “நான் கடவுள்” படத்தின் பின்னனி இசையையும் பாடல்களையும் கேவலாம் என்றவர்.

சாரு போன்றோர் என்னைப் பொறுத்தவரை சாடிஸ்ட் ரகம். அரசியல்வாதிகள் அனுபவிக்கிறார்களே நம்மால் முடியவில்லையே என்றும் ஏங்கும் ஏக்கமே அந்த அல்ஜீப்ரா கணக்கு. மற்றபடி அவர் உள்பட தமிழ்நாட்டின் பட்டிதொட்டி என்று எல்லோருக்கும் தெரிந்த விஷய்ம்தான் அரசியவாதிகளின் நடவடிக்கைகள். இதை புத்தமயமாக்கலின் உள்நோக்கம் பிரபலமடைவதே தவிர, நிச்சயம் பொது நோக்கு அல்ல.

அதுதவிர, அவர் குற்றம் கண்டுபிடித்து அதில் சுகம் காண்பவர். மற்றபடி ஒரு எழுத்தாளன் என்ற முறையில் அவரை நான் மதிக்கிறேன்...அவர் படைப்புகளை அல்ல.

Vijayasarathy R
http://www.manalkayiru.com