Wednesday, April 22, 2009

தி டர்மினல் - ஒரு பார்வை.

என்னடா இது ஐந்து வருடங்களுக்கு முன்பு வந்த படத்தை பற்றி எழுதுகிறேன் என்று யோசிக்கிறீங்களா?? ரொம்ப நல்ல இருந்துச்சு, நேத்து தான் பார்த்தேன் அதனால் தான் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இயக்குனர் ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் ஒரு வித்தியாசமான ஆளுங்க, ET, Jurassic Park போன்ற Fiction படங்களில் ஒரு கலக்கு கலக்கி பிறகு Schindlers List என்னும் அருமையான ஒரு சரித்திர படத்தை அப்படியே மாறாமல் கண் முன்னே கொண்டு வந்தார். இவரே இந்த Terminal படத்தையும் இயக்கி உள்ளார், ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் சம்மந்தமே இல்லாமல் எப்படி தான் இவரால் முடிகிறதோ. நம்மவர்கள் இவரிடம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது குறிப்பாக ஷங்கர்.

இவர் இப்படி என்றால் டாம் ஹாங்க்ஸ் நடிப்பில் ஒரு சகாப்தம் என்று தான் சொல்ல வேண்டும். நம்மூரில் சொல்வது போல் கதாப்பாத்திரமாகவே அவர் வாழ்ந்திருக்கிறார். மொழி  தெரியாத ஒரு நாட்டில் அவர் மாட்டிக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியேயும் உள்ளேயும் செல்ல முடியாமல் ஒரு மனிதன் படும் துண்பங்கள் தான் படத்தின் கதை. அதை துண்பம் தெரியாமல் மிக சுவாரசியமாக சொல்லி இருப்பது தான் இயக்குநரின் சிறப்பு. 

ஒவ்வொரு முறையும் அந்த விமான நிலைய தலைமை அதிகாரியுடன் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொண்டு பிறகு அதில் சாமர்த்தியமாக அவர் தப்பிப்பது நல்ல விறுவிறுப்பு. ஒரு பயணி தன் தந்தைக்காக மருந்து எடுத்து செல்வதும் அதை இந்த அதிகாரி தடுப்பதும் அவர் அழுவும் பொழுது நம் கண்கள் பனிக்கின்றன பிறகு அவருக்காக டாம் பரிந்து பேசி காரியத்தை சாதிக்கும் பொழுது நம் இதயம் இனிக்கின்றது. இப்படி நிறைய சுவாரசியமான காட்சிகள் படம் முழுவதும் இருக்கின்றது. 

அனைவருடனும் இனிமையாக பழகி ஒரு தெரியாத நாட்டில் பல உள்ளங்களை கொள்ளை கொள்கிறார். ஒரு கட்டத்தில் அவர் வெளியேறுகிறார் எனும்பொழுது அந்த விமான நிலைய முனையத்தில் உள்ள அனைவரும் வந்து வழி அனுப்பி வைக்கும் காட்சி நெகிழ்ச்சியாக இருக்கிறது. படம் பார்த்து முடிக்கும் பொழுது ஏதோ ஒரு சுகமான அனுபவமாக இருக்கிறது நமக்கு. தன் தந்தையின் ஒரு சிறிய ஆசையாய் நிறைவேற்ற அவர் படும் இன்னல்கள் தான் எத்தனை. அனைவரும் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும், இல்லையேல் ஏதோ ஒன்றை நீங்கள் இழக்கிறீர்கள்.


 

7 comments:

Desperado said...

Titanic was directed by James Cameron.

The Terminal is a good movie.

சித்து said...

தவறான தகவலுக்கு வருந்துகிறோம்.

Subash said...

முன்னர் பார்த்து பிடித்த படம். ஞாபகப்படுத்தியதற்கு மிக்க நன்றிகள்

Terminator உம் James Cameron தான் தல

சித்து said...

வருகைக்கும் தவறை சுட்டிக் காட்டியதற்கும் நன்றி சுபாஷ்.

butterfly Surya said...

அறிமுகத்திற்கு நன்றி நண்பரே.

இந்த படம் இன்னும் பார்க்கவில்லை. பார்த்து விட்டு வருகிறேன்.

kailash,hyderabad said...

It is Excellent movie.Madras police paththi oru dialague (lanjam)varum.
hoom ! namma maanam ulagamellam naaruthu.

'Rain Man' mudinthal paarungal.
Dustin Hoffmen,Bruce Wills acting superaga irukkum.

Dinesh said...

நீங்கள் கண்டிப்பாக shawshank redemption படம் பார்க்கணும் .
டெர்மினல் படம் மாதிரி ஒரு அற்புதமான கதை