Monday, April 6, 2009

காட்பாதர் - ஒரு பார்வை


நண்பர்களே வணக்கம், பலர் இந்த காட்பாதர் படத்தை பற்றி ஆஹா ஓஹோவென பேசியும் புகழ்ந்து எழுதியதையும் படித்துள்ளேன். பல ஆங்கில படங்களை பார்த்து ரசித்த எனக்கு இந்த படம் பார்காதது ஒரு பெரிய குறையாகவே இந்நாள் வரை இருந்து வந்தது. சரி அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்த்துவிட முடிவு செய்து டவுன்லோட் செய்ய ஆரம்பித்தேன். மூன்று பாகங்களும் சேர்ந்து பொறுமையாக இரண்டரை நாட்கள் டவுன்லோட் ஆனது. முதல் பாகத்தை பார்க்க ஆரம்பிக்கும் பொழுது இரவு மணி பத்துக்கும் மேல் ஆகிவிட்டது, அதனால் சும்மா கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு தூங்க செல்லுவதாக திட்டம். ஆனால் படம் ஆரம்பித்தது முதல் என்ன ஒரு விறுவிறுப்பு, என்ன ஒரு அசாத்திய நடிப்பு திறமை ஒவ்வொருவரிடமும். (சர்க்கார் மற்றும் நாயகன் படம் நான் ஏற்கனவே பார்த்து விட்டதால் சற்று மெதுவாக தான் செல்கிறது அந்த காலத்து படம் என்பதால் சற்று மெதுவாக தான் செல்கிறது). நாயகன் மார்லன் பிராண்டோ படத்தில் நடிக்கவில்லை அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் (நம்புங்கள், நம்மூர் நடிகர்கள் கூறுவது போல் அல்ல) , சும்மா என்று காட்டு கத்து கத்துவதில்லை , கத்தி துப்பாகி சகிதம் குண்டர் படையுடன் அலம்பல் பண்ணுவதில்லை, ரத்தம் அழுகை எதுவும் இல்லா ஒரு தாதா படம் (நாயகன் சர்கார் உட்பட) இதுவரை கண்டதில்லை. ஒரு தாதாவாக அவரின் பார்வை ஒன்றே போதும் எதிரிகள் அலறுகிறார்கள். அவரது ஒவ்வொரு அசைவும், பாவனையும் மிக சிறப்பாக இருக்கிறது, இன்றும் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் எத்தனையோ நடிகர்கள் இதை பின்பற்றி நடிப்பது இதற்கு சிறந்த எடுத்துகாட்டு. (மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியன், ரெட், நாயகன் வேலு நாயக்கர், சர்கார்அடுத்ததாக குறிப்பிட பட வேண்டிய முக்கிய நபர் நாயகனின் மகன் மைக்கல் என்ற அல் பசினோ, (மேலும் இவரது நடிப்பை பார்க்க Dog Day Afternoon, Scarface போன்ற படங்களை பார்க்கவும்). தந்தை செய்யும் காரியங்கள் பிடிக்காமல் ராணுவத்தில் சேர்கிறார். மருத்துவமனையில் அவர் தந்தையை காப்பதற்கு செய்யும் காரியங்கள் மிக விறுவிறுப்பாக செல்கிறது. பிறகு தந்தையை தாக்கியவர்களை துவம்சம் செய்யும் காட்சிகளில் இவரா அது என்று என்ன தோன்றுகிறது. யாரும் எதிபாரா வண்ணம் தடால் என்று முடிவெடுத்து செயல் படுவார். தனது சகோதரன் படுகொலை செய்யப்பட்டதும் தந்தையின் உத்தரவின் பேரில் இவர் அடுத்த காட்பாதராக மாறும் பொழுது அவரது முகத்தில் ஒரு வித கம்பீரம் தோன்றும் பாருங்கள் அது மிக சிறப்பான நடிப்பு. 

என்ன தான் இவர் சிறப்பாக நடித்தாலும் நம்மை மிகவும் கவர்பவர் மார்லன் பிராண்டோ தான் அதனால்தான் முதல் பாகத்தில் அவரை பற்றி முழுமையாக காட்டாமல் விடுவது ஏதோ ஒரு குறையாகவே மனதில் படுகிறது. நம்முடைய இந்த குறையை புரிந்து கொண்ட இயக்குனர் இரண்டாம் பாகத்தில் அவரின் சிறு வயதில் ஆரம்பித்து அவர் காட்பாதர் ஆகும் வரை மிக அழகாக காட்டியிருப்பார். நடு நடுவில் அல் பாசினோ தொழிலில் அந்தஸ்தில் எப்படி வளருகிறார் என்று காட்டப்படும். இதை எடுத்தது ரொம்பவும் ஸ்வாரஸியமாக இருக்கும். அந்த காலத்து அமெரிக்கா எப்படி இருந்தது என்று பார்க்கும் பொழுது நமக்கு ஏமாற்றமே மிஞ்சும், அப்பொழுதே எவ்வளவு வானுயர் கட்டிடங்கள், எவ்வளவு செல்வசெழிப்பு இன்று கூட நம் சென்னையில் அப்படி கட்டிடங்களை பார்க்க இயலவில்லை. மூன்றாம் பாகம் எனக்கு பெரும் ஏமாற்றமும் முடிவில் அதிர்ச்சியும் தந்தது. இதில் அடுத்த தலைமுறை உருவாவதையும் இந்த தலைமுறை எப்படி அழிந்து போகிறது என்று கதையை எடுத்து செல்கின்றனர். நம் அல் பாசினோவுக்கு ரொம்ப வயசாகிடுச்சு தனது மகனோ இதில் நாட்டம் இல்லாமல் சங்கீதம் கற்க சென்று விடுகிறார்.அடுத்து யாரிடம் குடும்ப மற்றும் வியாபார பொறுப்பை ஒப்படைப்பது என்று நினைக்கும் பொழுது இவரின் அண்ணன் மகன் வருகிறார் (ஆண்டி கார்சியா) , ஒரு முரட்டு காளையை போல் திமிருகிறார். முதல் இரண்டு பாகங்களை பார்த்த நமக்கு இந்த பாகத்தில் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கிறது, ஆனால் மிஞ்சுவது என்னமோ ஏமாற்றம் மட்டுமே. இன்னொரு அதிர்ச்சியடைய வைத்த விஷயம் என்னவென்றால் தனது சொந்த சித்தப்பா மகளையே ஆண்டி கார்சியா காதலிப்பதாகவும் இருவரும் கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதும் தான், இது நாள் வரை இப்படி ஒன்றை நாம் கேள்வி பட்டதில்லை. ஆனால் அங்கே இது சட்டப்படி செல்லுமாம். சும்மா வாடிகன் சர்ச் பாவ மன்னிப்பு என்று நம் காட்பாதர் பரிதாபமாக காட்சியளிப்பது ஏனோ அலுப்பு தட்டுகிறது. சிங்கம் போல் இருந்தவரை இப்படி பார்க்க நமக்கு என்னவோ போல் இருக்கிறது. ஆனால் வயதான தாதாக்கள் நிலை உண்மையில் இது தானாம். அதை படம் பிடித்ததில் தத்ரூபமாக செய்துள்ளார் இயக்குனர். 

சிறு குறைகள் இருந்தாலும் காட்பாதர் படம் அனைவரும் பார்க்க வேண்டிய மிக அருமையான படம் என்பதில் மாற்று கருத்து இல்லை.


6 comments:

பிரகாஷ் துரைசாமி said...

i like this movie very much, have u seen "lock stock and two smoking barrels? this is also good movie .
1.lock stock and two smoking barrels
2.Road to Perdition
these two are good movies

சித்து said...

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி பிரகாஷ் துரைசாமி.

நீங்கள் சொன்ன இரு படங்களும் நான் பார்த்திருக்கிறேன், நல்ல படங்கள். பொதுவாக Tom Hanks, Richard Gere, John Travolta, Nicholas Cage, Brad Pitt இவர்கள் நடித்த படங்கள் அனைத்துமே அருமையாக இருக்கும்

Phone Booth பாருங்க.

பிரகாஷ் துரைசாமி said...

நன்றி, phone booth பார்த்து விட்டேன் , அதுவும் அற்புதமான படம்தான் .

பிரகாஷ் துரைசாமி said...

நன்றி, phone booth பார்த்து விட்டேன் , அதுவும் அற்புதமான படம்தான் .

பிரகாஷ் துரைசாமி said...

நன்றி, phone booth பார்த்து விட்டேன் , அதுவும் அற்புதமான படம்தான் .

the rajarajan ultimatum said...

even i saw this movie recently..... i find no similarity between this n nayagan... it was so original... but Thevar Magan is the one which is srongly inspired by this..