Wednesday, April 22, 2009
இந்திய மக்களின் அபிமான நட்சத்திரம்!
ஐபிஎன் லைவ் இணைய தளத்தில் (வெப் 18 குழும தளம் in.com) இப்போது நடைபெற்று வரும் ஓட்டெடுப்பு இது. இந்திய அளவில் ரசிகர்களின் அபிமானம் பெற்ற நட்சத்திரம் யார் என்ற ஓட்டெடுப்பில் அமிதாப் உள்ளிட்ட 161 நட்சத்திரங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இவர்களில் முதலிடம்... சந்தேகமே இல்லாமல் நம்ம சூப்பர் ஸ்டாருக்குதான்.
இதுவரை 197817 வாக்குகள் பதிவாகியுள்ளன. 24 மணி நேரத்தில் மட்டும் 9000 பேர் ரஜினியை தங்கள் விருப்ப நட்சத்திரமாக தேர்வு செய்துள்ளனர். ரஜினிக்கு எதிராகப் பதிவாகியுள்ள வாக்குகள் 3288.
அவருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் மிதுன் சக்கரவர்த்தி. அவருக்குக் கிடைத்துள்ள வாக்குகள் 133247. எதிர்ப்பு வாக்குகள் 239. அமிதாப்புக்கு மூன்றாவது இடம். அவருக்கு கிடைத்துள்ள வாக்குகள் 69268. எதிர்ப்பு வாக்குகள் 2527.
ஷாரூக்கானுக்கு ஐந்தாவது இடம். இவருக்கு ஆதரவாகக் கிடைத்துள்ள வாக்குகளை விட எதிராகக் கிடைத்துள்ள வாக்குகளே அதிகம். 52942 பேர் ஆதரித்தும் 71218 எதிர்த்தும் வாக்களித்துள்ளனர்.
கமல்ஹாசனுக்கு 3255 பேர்தான் வாக்களித்துள்ளனர். அவருக்கு எதிராக 615 பேர் வாக்களித்துள்ளனர். இவருக்கு கிடைத்துள்ள இடம் 29.
இந்தப் பட்டியலில் 10 வது இடத்திலிருக்கிறார் அஜீத் (ஆதரவு 43394 , எதிர்ப்பு 1219). சூர்யாவுக்கு 13வது இடம் (ஆதரவு 17930 , எதிர்ப்பு 725) .
இது ஒரு ஒப்பீடல்ல. முழுக்க முழுக்க ரசிகர்களின், நடுநிலை பார்வையாளர்களின் விருப்பத்தின் பிரதிபலிப்பே இது.
உலகமெங்கிலும் உள்ள தமிழ், இந்தி திரைப்பட ரசிகர்களும் வாக்களித்திருப்பார்கள்.
நடிகர்கள் தவிர, அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பல்வேறு பிரிவினரில் மக்களின் அபிமானம் பெற்றவர்கள், எதிர்ப்பைப் பெற்றவர்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
நீங்கள் செய்யவேண்டியது.... கீழே உள்ள லிங்க்-ஐ சொடுக்கி உங்கள் வாக்குகளை செலுத்தவும்...
லேபிள்கள்:
சினிமா கட்டுரை,
ரஜினிகாந்த்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
சும்மா அதிருதில்ல...
தமிழ்மணத்தின் முதல் ஓட்டு என்னோடது
உங்கள் ஓட்டுக்கு நன்றி சுரேஷ்
Ajith is wonderful human.
Leaders made not by born, Leaders made by quality of characters.
so the people calling Ajith as Thala.
Super Star is always rocking....
இந்த இடத்தில நீங்க விஜய் பற்றி சொல்லவே இல்லை.
அவர் பற்றிய தகவல் அளித்தால் நன்றாக இருக்குமே..
Post a Comment