Wednesday, April 8, 2009

அழகிரி உயிருக்கு ஆபத்து..........














சென்னை: அழகிரியை என்ன செய்வார்களோ ஏது செய்வார்களோ தெரியாது. அவர் எந்தத் தியாகத்துக்கும் தயாராக உள்ளார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

மதுரையில் திமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகக் கூறி அதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனி்ஸ்ட், பார்வர்டு பிளாக், பாமக, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், தேசிய லீக், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். (எங்கே
ஆ.இ.ச.ம.கமற்றும் ஆ.இ.ந.ம.க.??)

இந் நிலையில் முரசொலியில் கருணாநிதி எழுதியுள்ள கட்டுரை:
நமது அழகிரி அங்கே போட்டியிட விரும்பித் தலைமையிடம் விண்ணப்பித்திருக்கிறார் என்றதும்; ஏ யப்பா; என்ன குதி குதிக்கிறார்கள். அழகிரி; பாவம் (????) அந்தப் பிள்ளையைக் (பிள்ளையா???) கண்டு ஏன் இவ்வளவு அஞ்சுகிறார்கள்?.அழகிரியைப் பற்றி எனக்கே அல்லவா அச்சமாக இருக்கிறது! போட்டிக்கு நாள் குறிப்பதற்கு முன்பே புஜங்களைத் தட்டிக் கொண்டல்லவா, பொய்ப் புகார்களை அடுக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள்; வங்கத்தில் துப்பாக்கியேந்தி வாக்கு சேகரிக்கும் தொண்டர்கள்!.அழகிரியை என்ன செய்வார்களோ; ஏது செய்வார்களோ; அழகிரி எதற்கும்- எந்தத் தியாகத்துக்கும் தயார்-என் மகன்களில் ஒருவன்; மதுரையில் சிலரது கண்களை உறுத்துவதை இந்த மாநிலம் அறியும்."இருப்பது ஓர் உயிர்; அது போகப் போவதும் ஒரு முறை; அது ஒரு நல்ல காரியத்துக்காகப் போகட்டுமே'' (இங்கே நல்ல காரியம் என்று எதை குறிப்பிகிறார் இவர் போன பிறகு மதுரை மக்களுக்கு ஏற்படும் நன்மையையா??) என்று அறிஞர் அண்ணா சொன்ன வாசகம் நம் செவிகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டு தானிருக்கிறது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

திருமங்கலத்தில் நடந்ததை நமது தலைவர் மறந்து விட்டார் போலும், மக்கள் மரப்பார்களோ?

மேலே உள்ள படத்தில் கலைஞர் மக்களை பார்த்து சிரிப்பதாக நினைத்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

நன்றி : தட்ஸ்தமிழ்.

No comments: