Wednesday, April 22, 2009

திருநங்கைகளா அல்லது முர(திரு)ட்டு நங்கைகளா ??????????????????????

  
இது யார் மனதையும் புண் படுத்த எழுதப்பட்டது அல்ல புண் பட்ட ஒருவனின் குமுறல்கள்.

இயற்கை என்னும் படைப்பாளி செய்யும் சில தவறுகளால் உலகில் எத்தனை பிரச்சனைகள் எத்தனை தொல்லைகள் எந்தனை துன்பங்கள். எத்தனை கண்ணீர்கள் எத்தனை ஏமாற்றங்கள் எத்தனை அனுதாபங்கள் எத்தனை எகத்தாளங்கள்??? யார் செய்த பிழைக்கு யாருக்கு தண்டனை?? பிறவியிலேயே ஆணாக பிறந்து பருவ மாற்றங்களால், சுரபிகளின் மாற்றங்களால் ஒருவர் தன்னையே பெண்ணாக பாவித்து கொண்டு பிறகு பெண்ணாகவே மாறுவதும் பிறகு அவர்கள் இந்த சமூகத்தில் படும் அவலங்களும் எத்தனை?? ஆனால் இதெல்லாம் அந்த காலம், நான் கூட இவர்களை பார்த்து பரிதாபமும் அனுதாபமும் கொண்டதுண்டு,. தனக்கு வந்தால் தான் தெரியும் வாந்தியும் ............ என்று கூறக்கேட்டதுண்டு அதை நேற்று தான் அனுபவித்தேன். இவர்கள் மேல் நான் கொண்ட ஒரு வித அனுதாபம் இரு சம்பவங்களால் தொலைந்தது. இவர்களிடத்தில் அனுதாபம் கொள்ளத் தேவையில்லை, ஒன்று நம்மால் முடிந்தால் அவர்களுக்கு வேலை வழங்கலாம் அல்லது அவர்கள் வரும் திசைக்கு எதிர் திசையில் தலை தெறிக்க ஓட வேண்டும்.

காலம் இன்று எவ்வளவோ மாறி விட்டது, இன்று இவர்களைப் போன்றுள்ளவர்களுக்கு மருத்துவ வசதிகள், வேலை வாய்ப்பு வழங்க பல நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் முன் வருகின்றனர். ஆனால் இவ்வழியே நல்வழியே செல்ல விரும்பாத ஒரு பிரிவினர் செய்யும், செய்த அட்டூழியங்களை எனக்கு நேர்ந்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். கடந்த பொங்கல் விடுமுறையில் நண்பர்களுடன் மும்பை செல்லும் ரயிலில் சென்றுக் கொண்டிருந்தோம் அப்பொழுது இரண்டு பேர் வந்தனர், அதில் ஒருவர் நேராக எங்கள் நடுவில் வந்து இடித்து கொண்டு மேலும் சில அனாவசிய Censor பிரச்சனைக்குரிய வார்த்தைகளும் செயல்களும் அங்கே அவர்களால் அரங்கேற்றப்பட்டது. இத்தனைக்கும் அவர்கள் வந்து நின்றவுடனேயே இருபது ரூபாய் குடுத்து விட்டோம் பத்தவில்லையாம் எட்டு பேர் சென்றோம் ஆளுக்கு இருபது கொடுக்கணுமாம். இதைப் போல் அன்று மட்டும் சுமார் பத்துக் குழுக்கள் வந்தன (இரண்டு நபர் மட்டும் கொடுத்ததை வாங்கிக் கொண்டு வாழ்த்திச் சென்றனர்). இதில் எல்லை தகராறு வேறு. நாங்கள் அந்த பயணத்தின் பொழுது மட்டும் (சென்று வருவது சேர்த்து) செலவு செய்தது ஐநூறு ரூபாய்க்கு மேல். 

அடுத்தது நேற்று நடந்த மிகவும் கேவலமான சம்பவம். நாங்கள் எங்களது அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, இரு நபர் நேரே உள்ளே வந்து விட்டனர், உற்சாக பானம் (அதாங்க சரக்கு) மிகுதியில் தட்டு தடுமாறி வார்த்தை குழறி அதிரடியாக நின்றனர். என்னவென்று கேட்டதற்கு ரூபா குடு என்றனர், பொதுவாக இவர்களுக்கு ஒரு ருபாய் தான் கொடுப்பார் அதுவும் கையில் கொடுக்க மாட்டார் மேஜையில் அந்த நாணயத்தை தட்டி விட்டு வைத்து விடுவர். ஆனால் நான் அவர்கள் கையில் ஐந்து ருபாய் கொடுத்தேன். அவ்வளவு தான் "என்ன இது?? ஒழுங்கா 101 ருபாய் குடு பாவப்பட்டவங்க நாங்க", நல்ல குடிக்க பணம் இருக்கு இவர்கள் பாவப் பட்டவர்களா?? பிறகு சேலை முந்தானைய வேற நீக்குகிறார்கள், பணம் கொடுத்த தான் போவேன் பாத்துக்கோன்னு மிரட்டல் வேறு. "பொட்டைங்க கிட்ட சாபம் வாங்காதடா ......" என்று வசைமாரி பொழிந்தார்கள். பிறகு எனக்கும் கோபம் வந்து நானும் எகிற ஆரம்பித்தேன் பிறகு சற்று அமைதி ஆகினர். பிறகு பத்து வாங்கிக் கொண்டு இன்னும் சில சாபங்களை பொழிந்து விட்டு சென்றனர். எங்கள் ஊழியர்கள் யாரும் அருகில் கூட வரவில்லை, கேட்டால் இவர்கள் சாபம் விட்டால் அவ்வளவு தானாம். இந்த ஒழுக்கம் கெட்ட மதுவில் மூழ்கிய இவர் கொடுக்கும் சாபம் என்ன செய்யப் போகிறது?? எதற்கு இவர்களுக்கு நாம் இந்த பத்து ருபாய் குடுக்க வேண்டும்?? எதற்கு இவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டும்?? 

சென்ற மாதம் நாளேடுகளில் பரபரப்பாக ஒரு செய்தி அடி பட்டது, கிழக்கு கடற்கரைச் சாலையை சேர்ந்த ஒரு பையனை புனே நகருக்கு கடத்தி உறுப்பு மாற்று சிகிச்சை செய்து புனேயில் பிட்சை மற்றும் பாலியல் தொழிலில் விட்டனராம் இவர்களை போன்ற திருநங்கைகள், இதற்கு ஒரு பரதேசி மருத்துவன் உடந்தை. இரண்டையும் வைத்து பார்த்தால் நான் கடவுள் படத்தில் பிட்சைக்காரர்கள் எப்படி உருவாக்கப்பட்டு பிட்சை எடுக்கிறார்களோ அதே போல் இந்த திருட்டுநங்கைகள் அப்பாவிகளை வைத்து இது போன்ற தொழிலில் விட்டு பிழைக்கின்றனரோ????????  இதற்கும் அரசியல் பின்னணி இருந்தால் நாம் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. 

நண்பர்களே இதைப் போன்று அனுபவங்கள் உங்களுக்கு ஏதேனும் உண்டென்றால் அதை பகிர்ந்து கொள்க, மேலும் இது போன்ற நேரங்களில் எவ்வாறு நாம் நடந்து கொள்வது நமக்கு நல்லது என்று கூறுங்கள். நன்றி.

13 comments:

லோகு said...

நல்ல பதிவு..

இது போல் பெரும்பான்மையானோருக்கு நடந்திருக்கு.. ஆனாலும் ஏனோ யாரும் அவர்களை எதிர்ப்பதில்லை..

சித்து said...

வாங்க லோகு, எல்லாம் பயம் தான். மானம் போற மாதிரி இவங்க நடந்துக்குராங்கலே, அதுவும் இல்லாம எங்க சபிச்சிடுவாங்கலோனு வேற பயம்.

ஜெட்லி... said...

மச்சி இப்போ எங்க பார்த்தாலும் இது போல நடக்குது. இந்த பிரச்சனைக்கு அரசு தான் முடிவு எடுக்கணும்....

கார்த்திகைப் பாண்டியன் said...

எனக்கும் இது போன்ற அனுபவம் ட்ரைனில் நிகழ்ந்தது உண்டு.. உங்கள் கோபம் புரிகிறது.. சில நேரங்களில் நாம் பாவம் பார்ப்பதே நமக்கு தொல்லை ஆகி விடுவது உண்டு.

Raju said...

நண்பா,
100% சதவிகிதம் உண்மை இது..!
என்னைப் போல வடக்கில் இருப்பவர்களுக்கோ அல்லது வடக்குப்பக்கம் வந்திருப்போர்க்கு அவர்கள்
ரயிலில் பண்ணும் அராஜகம் அணுபவப்பட்டிருக்கும்..!
அரவாணிகளில் பலர் நல்ல நிலையில் இருந்து ஏன் அவர்களைப் போல் உள்ளவர்கள் (ரயிலில் அராஜகம் செய்பவர்கள்)
முன்னேற உதவாதது ஏன்? என்றுதான் எனக்கு புரியவில்லை..!
இதுதான் அவர்களை மக்கள் வெறுப்பதற்கு முக்கிய காரணம் நண்பா..!
நானும் ரயிலில் இது போன்ற சம்பவங்களை பலமுறை அணுபவித்துள்ளேன் சகா..!

சித்து said...

சரியாச் சொன்னீங்க கார்த்திகை பாண்டியன். பாவம் பார்த்தால் பாவம் தான் புடிக்கும்.

சித்து said...

இப்படிப்பட்டவர்களுக்கு யார் தான் உதவ முன்வருவர்?? அது தொல்லை தான் குடுக்கும் என்று ஒதுங்கி விடுவர் நண்பர் டக்லஸ்.

Anonymous said...

நான் டெல்லியில் இருந்து என் நண்பனுடன் திரும்பி வந்தபோது நிகழ்ந்த சம்பவம் இது. எங்கள் கூபெவில் தமிழ் பேசும் குடும்பத்தினர் அமர்ந்திருந்தனர். நான் பக்கவாட்டு இருக்கையிலும் என் நண்பன் மூன்று பேர் அமரும் இருக்கையிலும் அமர்ந்து இருந்தான். அவனுக்கு எதிரே நாற்பத்தைந்து வயது மதிக்க தக்க ஒருவர்,அவரது மனைவி மற்றும் 16 வயது மதிக்க தக்க மகள் அமர்ந்திருந்தனர். அவர்கள் தமிழ் ஆதலால் அவர்களுடன் இவனும் நன்றாக பேசி நட்புடன் பழகினான். அப்போது விஜயவாடா அருகே வந்த போது ரயிலில் ஏறிய திருநங்கைகள் இருவர் என்னிடம் வந்து காசு கேட்டனர். நான் ஏதும் பேசாமல் 5 ரூபாயை கொடுத்துவிட்ட்டேன். பின்னர் என் நண்பனிடம் சென்றனர். அவன் தர மறுத்ததால் அசிங்கம் அசிங்கமாக அவனை திட்டியதோடு இல்லாமல் தங்கள் புடவையை வேறு தூக்கி காட்டிவிட்டனர். எதிரிலே குடும்பத்தினரோடு வந்த சக பயணிக்கும் தர்ம சங்கடம் என் நண்பனுக்கும் தர்ம சங்கடம் நேர்ந்த விஷயம் இது.

சித்து said...

எங்களுக்கும் கிட்ட தட்ட அது போன்ற அனுபவம் தான் நண்பரே.

நாஞ்சில் பிரதாப் said...

இது போன்று மும்பையில் நிறைய பார்த்திருக்கிறேன். மும்பையில் சிறிது நாள் தங்கினால் எல்லாம் பழகி விடும். புதியவர்களக்கு உங்களைப்போலத்தான் மனம் பாதிக்கப்படுவர்.

UMA said...

நாங்களும் ஒரு முறை சென்னையிலிருந்து மும்பை போகும்போதும் திரும்பி வரும்போதும் இதே போல் சந்தித்துள்ளேன். பலரும் செய்வதுபோல் நாங்களும் ஒரு பத்து ரூபாய் நோட்டை கொடுத்ததுடன் போய் விட்டார்கள். கொடுக்காவிட்டால் அவர்கள் நடந்துகொள்வது மிகவும் அருவருக்கத்தக்கது. ஆனால் பயணம் செய்யும் பலரும் அதை எதிர்பார்த்தே உள்ளனர். நாங்கள் தான் முதல் முறையாக சென்றதால் ஆச்சரியபட்டோம். மற்றவர்கள் சொன்னவுடன் நாங்கள் இது சகஜம் தான் என்று பணம் கொடுத்தோம்.

பட்டாம்பூச்சி said...

எனக்கும் இது போன்ற அனுபவம் நிகழ்ந்தது உண்டு.. உங்கள் கோபம் புரிகிறது..

Sasirekha Ramachandran said...

இதுபோன்ற மக்களுக்கு அழகிப் போட்டிஎல்லாம் நடத்த முன் வருபவர்கள்தான் இவர்களை நல்வழிப் படுத்தவேண்டும்!!!