அயன் சூர்யாவின் இன்னொரு அதிர்வேட்டு, இந்த படம் சூர்யாவுக்கு செம தீனி
தன் அத்தனை திறமையும் வெளிப்படுத்தி உள்ளார். சூர்யாவின் ரசிகர்களுக்கு அயன் படம் செம விருந்து. இப்பொழது சூர்யாவும் தத்துவ ஒபெநிங் பாடல் பாட ஆரம்பித்து இருக்கிறார் இதோடு நிறுத்தி கொண்டால் பரவாஇல்லை. தமன்னாவுக்கு அதிக வேலை இல்லை டூயட்க்கு வருவார் அவ்வளவுதான். ஐயோ காதல் காட்சிகள் ஒன்றும் சொல்லும் படி இல்லை. பிரபு தன் வேலையை கட்சிதமாக செய்து இருக்கிறார். மற்றபடி கருணாஸ் இருக்கிறார். ஜெகன் நடிப்பும் நன்றாக இருந்தது. சூர்யாவின் அம்மாவாக வரும் ரேணுகாவிற்கு சென்னை தமிழ் சரி வரவில்லை.
அயன் இதுவரை தமிழ் திரையுலகில் வராத கதை என்று திரு.கே.வி.ஆனந்த் அவர்கள் பல பேட்டிகளில் கூறினார், நானும் அத நம்பி படத்துக்கு போனேன். ஆனா உண்மையல இந்த மாதிரி தமிழ் படம் நமக்கு புதுசு ஆனா ஹாலிவுட் க்கு இது பழசு. பல ஹாலிவுட் படத்த பார்த்து நம்ப சுபா அவர்கள் கதை அமைத்து உள்ளனர். படத்தின் பலம் பாட்டும், ஒளிப்பதிவும். சரி படத்தின் கதைக்கு வருவோம் பிரபு வைர கடத்தல் வியாபாரி அவருக்கு குருவியாக சூர்யா விதம் விதமாக ஏர்போர்ட் கஸ்டம்ஸ் அதிகாரிகளை ஏமாற்றி சரக்குகளை பிரபுவிடம் சேர்ப்பது சூர்யாவின் வேலை. என்ன இந்த படத்துல வித்யாசமா ஆப்ரிக்கா போய் வைரம் வாங்கி கடத்துகிறார் சூர்யா. படம் முதல் பாதி ஜெட் வேகம். பர்மா பஜார் போலி அயிட்டங்களை தயாரிப்பது எப்படி என்று நம் கண் முன்னே காட்டுகிறார்கள்.
புதுசா வில்லன் அறிமுகம் ஆகி உள்ளார். இந்த மாதிரி ஒரு மொக்கை வில்லன்ஐ நான் பார்த்ததில்லை. வில்லன் சாய்ஸ் சரி இல்லை டைரக்டர் சார்.
ஜெகனின் நட்பு தமிழ் சினிமாவுக்கு புதுசு ஏன் என்றால் தம்மனா ஜெகனின் தங்கச்சி , தம்மனாவை சூர்யாவுக்கு லாவங்கி பண்ண வைக்கிறார், ஆதாவது கூட்டி கொடுக்கிறார். ஆனா இந்த விஷயம் கேவலமா இருந்தாலும் ஏதோ ரசிக்கலாம். ஆனால் இந்த மாதிரி அண்ணன் எவனுக்கும் கிடைக்க மாட்டான்.
ஜெகன் துரோகம் செய்து விட்டான் என்று சூர்யாவுக்கு தெரிய வரும்போது அடுத்து வரும் காட்சிகள் விறு விறுப்பு. "நீ உன் முதலாளிக்கு விசுவாசம்மா இருக்க நான் என் முதலாளிக்கு விசுவாசமா இருக்கேன், ஆனா நம்ம நட்பு உண்மை" ன்னு jegan சொல்ற வசனம் சூப்பர். தமிழ் படத்தில் முதல் முறையாக வில்லனின் அடியாட்கள் ஆபரேஷன் செய்து ஜெகன் வயிற்றில் இருந்து போதை மருந்தை மிட்கின்றனர் ,ஆனா இது கொஞ்சம் ஓவர் .
2 comments:
Ada paavingala Tamannavukkaga paaka koodatha??
உங்க விமர்சனமும் என் விமர்சனமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பது போன்ற ஒரு பிரமை...
Post a Comment