Thursday, May 28, 2009

கவுண்டமணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
( இது எங்களது 50 வது இடுகை, இந்த இடுகையை அவரது பிறந்த நாளான மே 25 ஆம் தேதி போட முடியாததால் இன்று போடுகிறேன்,காரணம் நண்பர்களோடு ஏற்காடு பயணம். உங்கள் பேராதரவை எங்களுக்கு தொடர்ந்து வழங்கும் படி கேட்டு கொள்கிறோம் )

belated birthday wishes to கவுண்டமணி.
கவுண்டமணி, என்றதும் நம் மனதும், உதடும் நம்மை அறியாமலேயே
பூத்து குலுங்கும்.தற்போது கவுண்டமணி அவர்கள் K.S.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிக்கும் ஜக்குபாய் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார் என்பது நம் போல் ரசிகர்களுக்கு இன்பமான செய்தியாகும்.கவுண்டமணி ஓவர் சவுண்ட் விடுவார் என்று அவர் மேல் ஒரு குற்றச்சாட்டு உண்டு, ஆனால் அந்த சவுண்ட் தான் அவரை 1978 முதல் இன்று வரை அவர் தமிழ் திரையுலகில் நீங்கா இடம் பெற காரணமாக அமைந்தது. நம்ம சராசரி வாழ்க்கையில் கவுண்டமணி பேச்சுகள், நடவடிக்கைகள் நம்முள் சில சமயம் வெளிப்படும் ஏன் என்றால் அவரின் நக்கல் பேச்சுகள் நம்முள் கலந்தது தான் காரணம்.


நாங்கள் ஏற்காடு கிள்ளியூர் பால்ஸ் செல்லும் வழியில் நண்பர்கள் அனைவரும் தங்களுக்கு கவர்ந்த கவுண்டமணி வசனம் மற்றும் காட்சிகளை பேசி கொண்டே கிழே சென்றோம். அப்போது நான் அவர்களிடம் உங்களுக்கு நம் சென்னை பாஷையின் முக்கிய வார்த்தை இதை போட்டு தான் தொடங்குவார்கள் **த்த இதன் அர்த்தம் என்ன என்று தெரியுமான்னு கேட்டேன், அவர்கள் தெரியாது என்றார்கள். இதன் அர்த்தம் எனக்கும் முதலில் தெரியாது அப்புறம் கவுண்டமணி நடித்த படம் தாலாட்டு கேக்குதும்மா அதில் செந்தில் புலிபாண்டியாக வருவார். அந்த காட்சியை நீங்களே பாருங்க...............செந்தில் எந்த நேரமும் கவுண்டமணியிடம் அடி வாங்கி கொண்டிரிப்பார் இதெல்லாம் ஒரு காமெடிஆ என்ற கேட்பவர்களும் நம் ஊரில் இல்லாமல் இல்லை. செந்தில் இல்லாத எத்தனையோ படங்களில் கவுண்டமணி கலக்கு கலக்கு என்று கலக்குவார் உதாரணம்: நடிகன், பிரம்மா,புது மனிதன் , சூரியன். எனக்கு புடிச்ச காம்பினேஷன் என்றால் அது சத்யராஜும் கவுண்டமணியும் சேர்ந்து நடித்த அத்தனை படங்களும் எனக்கு பிடிக்கும். பிரம்மா படமெல்லாம் சான்சே இல்லை.அதுவும் அந்த ஹோட்டல் காட்சியில் தனக்கு பேப்பர் ரோஸ்ட் வேண்டும் என்று அவர் அடிக்கும் லூட்டி இன்னும் ஏன் கண் முன்னே இருக்கிறது. என் பல நடவடிக்கையில் கவுண்டமணி அவர்கள் நக்கல் பேச்சு என்னுள்ளும் வெளிபட்டிரிக்கிறது. உங்கள் நடவடிக்கையிலும் அவரின் நக்கல் இருக்கலாம், ஏன் என்றால் அவர் நம் வாழ்வில் இரண்டற கலந்து விட்டார்.


இப்போ இந்த ஆதித்யா, சிரிப்பொலி போன்ற காமெடி டி.வி யில் கவுண்டமணி காமெடி அவ்வளவாக ஒளிபரப்புவதில்லை அது ஏன் என்று நண்பனிடம் கேட்டதுக்கு மிச்சவன் "எல்லாம் காசு கொடுத்து போட சொல்வாண்ட" என்றான். இந்த காமெடி டி.வி களுக்கு ஒரு வேண்டுகோள் கவுண்டமணி இல்லாத தமிழ் சினிமா காமெடி இல்லை என்பதை புரிந்து மக்களின் மனம் அறிந்து கவுண்டரின் காமெடியை தயவு செய்து ஒளிபரப்புவும்.


கவுண்டமணி சிம்பு மோதல்:

சிம்புவின் மன்மதன் படத்தில் நடித்தது அவருக்கு மிகுந்த மனகசப்பை தந்தது அதற்க்கு காரணம் கவுண்டமணி நடிச்ச பல காட்சிகளை சிம்பு படத்தில் சேர்க்கவில்லை. இதை ஆதங்கமாக கவுண்டர் அவர்கள் குமுதத்தில் படம் வெளியான பின் பேட்டி கொடுத்தார்.தான் அந்த படத்தில் நடிப்பதில் இஷ்டம் இல்லை என்று கூறிய பின் சிம்பு தொடர்ந்து நீங்கள் நடித்தால் தான் நல்ல இருக்கும் என்று அடம்பிடித்தார் அதனால் தான் ஒத்து கொண்டேன்
என்றார் கவுண்டர்.

ஆனால் ஒரு சீனியர் நடிகர் என்ற மரியாதை கூட சிம்பு பின் பற்றாமல் கவுண்டரக்கு எதிராக பேட்டி அளித்தார். அதாவது கவுண்டமணியால் மன்மதன் படம் ஓட வில்லை என் திறமைக்கு படம் ஓடுகிறது என்று கவுண்டர் மேல் வாரி இறைத்தார்.


இதனால் டென்ஷன் ஆன கவுண்டமணி " இந்த வயசுல இவ்ளோ தலைகனம் கூடாது" என்று எகிறினார். மன்மதன் படம் தந்த பாடமோ என்னவோ அதில் இருந்து அவர் சின்ன பசங்க படத்தில் நடிக்க அழைத்தாலும் அவர் நடிக்க போவதில்லை.
***********

இப்போது கவுண்டமணியின் நக்கல் , அந்த டைமிங் எல்லாத்தையும் சந்தானம் பின்பற்றுகிறார். அவரும் கவுண்டமணி மாதிரி harrypotter வாயா போன்ற வசனங்களை கூறி நம்மளை சிரிக்க வைக்கிறார். ஆனாலும் கவுண்டமணி இடத்தை யாராலும் பிடிக்கமுடியாது.கவுண்டமணி அவர்கள் பத்து படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்,பல படங்களில் அவர் இரண்டாவது ஹீரோவாக வருவார். இடையில் அவரின் உடல்நிலை சரியில்லாததால் அவர் மெலிந்து காணப்பட்டார்,அவரை மீண்டும் ஜக்குபாயில் பார்க்க நான் ஆவலாக உள்ளேன்.


எனக்கு பிடித்த சில கவுண்டமணியின் வசனங்கள்:


# ஏன்டா எப்ப பார்த்தாலும் எருமை சாணியே மூஞ்சிலே அப்புன மாதிரியே திரியிற......# செந்தில்: உங்க தாத்தா புட்டுகிட்டரா?

கவுண்டர்: இல்ல நேட்டுகிட்டார்!


# கவுண்டமணி: உக்காருங்க, நான் எப்பவும் படிப்பு சொல்லி தரவங்களுக்கு ரொம்ப மரியாதையை கொடுப்பன்.


குமரிமுத்து: நான் எங்க தங்கறது?


கவுண்டமணி: ஏன் வீட்ல தங்குங்க, இல்லன ரூம்ல தங்குங்க
ஆமாம், எத்தனாவது பசங்களுக்கு பாடம் எடுக்க போறீங்க?


குமரிமுத்து: இல்லங்க நான் வாட்ச்மேன்.


கவுண்டமணி: அப்புறம் ஏன் உக்காந்து இருக்கே...!


குமரிமுத்து: நீங்கதானே உட்காரா சொன்னிங்கே


கவுண்டமணி: நான் கரண்ட் கம்பி மேல உட்காரா சொல்லுவேன்,
அதுல போய் உட்காந்துருவியா ?
இன்னும் நிறைய வசனங்கள் இருக்கு அதை எல்லாம் போட்டால் இடுகை ரொம்ப ரொம்ப பெருசா ஆயிடும். அதனால் உங்களுக்கு பிடித்த வசனத்தை பின்னூட்டமாக(கமெண்ட்) போடவும்.


உங்கள்

ஜெட்லி.

12 comments:

SUREஷ் said...

அழகான நினைவுகள் தல..


உங்க வலைப்பூவை எழுதிய பின் கீழ்பகுதியில் வெளியிட வேண்டிய நேரத்தை அமைத்துவைத்துவிட்டால் அந்த தேதியில் அந்த நேரத்தில் வெளியிடப் பட்டுவிடும்.

அதன்பின் தமிழ் மணத்தில் யார் வேண்டுமானாலும் சேர்த்துவிடலாம். ஆனால் நாகரீகம் கருதி யாரும் செய்வதில்லை. ஒருவேண்டுகோள் கொடுத்துவிட்டால் படிப்பவர்கள் அனுப்பு பொத்தானை அழுத்தி சேர்ப்பித்துவிடுவார்கள்.

தமிழீஷிலும் யார் வேண்டுமானாலும் சேர்க்கலாம். ஆனால் அவரவர் கணக்கில்தான் சேர்க்க முடியும். ஆனால் ஓட்டு உங்கள் தளத்தில்தான் விழும்.

SUREஷ் said...

ஓட்டுப் போட்டுவிட்டேன் தல..,

srinivasan said...

singaravelan comedy:
Kamal:Idhu mano veedu thane?
Kavunder: yen idha patha mano thotam mari iruka... sevuru padikattulam vachu irunda aduku per veedu than pa...

SUREஷ் said...

சென்னை மாநகரித்திலே... என்று தொடங்கும் பயணங்கள் முடிவதில்லை..

இந்தா இங்க பூசு.... காந்தக் கண்ணழகி.. சூரியன்

பத்தவச்சிடயே பரட்டை....

ஜெட்லி said...

ரொம்ப நன்றி sureஷ் தலைவரே.....


உங்கள் தகவலுக்கு நன்றி...

ஜெட்லி said...

உங்கள் நினைவில் உள்ள காமெடியை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீனிவாசன்.

லோகு said...

உன் பேர் என்ன??
சங்கீதா..
ஆமா.. சங்கூதற வயசுல சங்கீகீகீகீதா .....

ஜெட்லி said...

லோகு இதுவும் எனக்கு பிடித்த காமெடி..............
தி காமெடி கிங்.

Prasanna R said...

Koundar always evergreen

Prasanna R said...

Koundar endralae sirippudhaan, lolludhaan, timing dialog dhaan. Thala singam ya.

Rajaram said...

சூரியன்ல தலைவரு சோலோவா பண்ணிருப்பாரு பாருங்க சான்சே இல்லங்க.... அவரு டைமிங் எல்லாம் யாருக்கும் வராதுங்க..

ரொம்ப நாளைக்கு அப்புறம் தலைவரு ஜக்குபாய்ல தலைய காட்டிருக்காரு.. பாக்கலாம் எப்படி இருக்குதுன்னு..

நான் விரும்பிய வசனங்கள்

சென்னையில் முக்கிய பிரமுகர் கைது.
கவுண்டர் : ஏன் கோயம்புத்தூர்ல முக்குனா கைது பண்ண மாட்டாங்களா.

போன் வயர் அறுந்து ஒரு வாரம் ஆய்டுச்சு.
கவுண்டர் : ஹா ஹா ஹா அரசியல்ல இதெலாம் சாதாரணமப்பா

இந்த புழப்புக்கு பிச்சை எடுக்கலாம்
கவுண்டர் : போய் எடு.. யாரு வேண்டாம்னு சொன்னா...
நாராயணா கொசு தொல்லை தாங்க முடியல.. மருந்து அடிச்சு கொல்லு டா..

Venkatachala Moorthy said...

ஜென்டில்மேன் படத்தில் வரும் அனைத்து காமெடியும் சூப்பராக இருக்கும்.......