Thursday, May 21, 2009

நான் அவள் அது...............

நான் அவள் அது......

(குறிப்பு: இந்த கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக
கொண்டு எழுதப்பட்டுள்ளது)

________________________________

நானும் எனது நண்பர்கள் டேவிட் , ராம் , ராஜா, சதீஷ் ஆகியோர் ஒரு மாதம்
முன்பே கொடைக்கானல் போவதாக முடிவு செய்து இன்று கொடைக்கானல் காற்றை சுவாசித்து கொண்டிருக்கிறோம் . சீசன் டைம் என்பதால் எளிதில் எங்களுக்கு ஹோட்டல் கிடைக்கவில்லை, அங்கும் இங்கும் அலைந்து கொஞ்சம் ஒதுக்கு புறமாக ஒரு அறை கிடைத்தது. நாங்கள் தங்கிருந்த இடம் ரொம்ப அமைதியாக ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.என்னை பத்தி நானே சொல்லிக்க கூடாது , நான் எவ்வளவு தான் சரக்கு அடித்தாலும் சுய நினைவோடு தான் இருப்பேன் . என் நண்பன் டேவிட் மிகுந்த இறை பக்தி உடையவன் தினமும் தூங்கும் முன் பைபிள் படித்து விட்டுதான் தூங்குவான். மீதி மூன்று நண்பர்களும் அரட்டை அடிப்பதில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.டேவிட் தவிர எங்கள் அனைவருக்கும் குடி பழக்கம் உண்டு, எல்லாம் அளவோடு தான். முதல் நாள் எங்கு போவது என்று ஒரே குழப்பம். ராம் ஒரு இடம் சொல்றான் சதீஷ் வேற இடம் சொல்றான். எங்களுக்குள் குழப்பம் அதனால் நான் ஒரு முடிவு எடுத்து, முதலில் நாம் டால்பின் நோஸ் செல்வோம் என்றேன்.


டால்பின் நோஸ் இதை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டர்கள், மரங்கள் சூழ்ந்துள்ள ஒரு இயற்கையான இடம். அங்கு நானும் நண்பர்களும் சென்று மரத்தின் மீது ஏறுவதும் குதிப்பதமாக சேட்டை செய்து எங்கள் பொழுதை கழித்தார்கள். ஒரு கட்டத்தில் ராஜா கொண்டு வந்த டிஜிட்டல் கேமெராவில் படங்களை எடுத்து மகிழ்ச்சி அடைந்தோம் . நான் படம் எடுக்க மீதி நால்வரும் போஸ் கொடுத்தார்கள், நான் எடுத்த போட்டோவை preview பார்க்கவில்லை,
ஒரு வேளை பார்த்து இருந்தால் அந்த நொடியே நாங்கள் சென்னைக்கு கிளம்பி இருப்போம் . அந்த படத்தில் என் நண்பர்களுக்கு கீழ் ஒரு சிறுமி தலவெறி கோலத்தில் உட்கார்ந்து இருந்து எங்கோ பார்த்து கொண்டு இருந்தாள். ஆனால் அந்த சிறுமி நேரில் யார் கண்ணுக்கும் தெரியவில்லை.


பொழுது சாய்ந்ததும் நாங்கள் அறைக்கு சென்றோம் , ஊர் சுற்றிய களைப்பில் அனைவரும் சோர்ந்து படுத்து இருந்தோம் . ராஜா மது பாட்டில் எடுத்ததும் அனைவரும் உற்சாகமாக ரவுண்டு கட்டி சரக்கு ஏற்ற ஆரம்பித்தோம் . டேவிட் வழக்கம் போல் பைபிள் படித்து விட்டு படுக்கைக்கு சென்றான்.மது முடிந்த பின் சிறிது நேரம் டாபிக் போட்டு பேசி அப்படியே எங்களை அறியாமல் தூங்கிவிட்டோம்.

சிறிது நேரத்தில் டேவிட் என்னை எழுப்பினான் நான்

"ஏன்டா தூக்கத்தை கெடுக்குற" என்று அலுத்து கொண்டு கேட்டேன்.


அவன் முகம் வெளிறி போய் இருந்தது. என்னடா என்றேன், அதற்க்கு அவன்
" டேய் இங்க என்னமோ இருக்குடா, யாரோ கழுத்தை புடிச்சி நெரிக்கிற மாதிரி இருக்குடா, என் மார்ல யாரோ உட்கார்ந்து அமுக்குற மாதிரி இருக்குடா" என்று
புலம்பி தள்ளினான்.


"குடிச்சது நாங்க ஆனா நீ உளர்ற அதெல்லாம் ஒண்ணும் இல்ல போய் படுத்து தூங்கு" என்று அவனை சமாதான படுத்தி நான் என் தூக்கத்தை தொடர்ந்தேன்.


டேவிட் திரும்பவும் பைபிள் எடுத்து படிக்க ஆரம்பித்தான்.திரும்பவும் அவனுக்கு யாரோ ரூமில் நடப்பது போன்று தோன்றியது. எங்களை எழுப்பினான் நான் சலித்து கொண்டே "என்னடா" என்றேன் .

"டேய் மச்சான் இந்த ரூம்ல என்னவோ இருக்கு வாங்க சென்னைக்கு போய்டலாம்" என்றான்.

டேவிட் சொன்னதை கேட்டு அனைவரும் சிரித்தனர். "டேய் தண்ணி அடிச்ச நாங்களே சும்மா இருக்கோம் உனகேன்னட ஆச்சு" என்று கேலி செய்தனர். அனைவரும் தூங்க சென்றனர்.டேவிட் அன்று இரவு தூங்கவில்லை.


மறுநாள் காலையில் டேவிட்க்கு பயங்கர ஜுரம் அடித்தது. என்னிடம் வந்து தான் திருச்சியில் இருக்கும் தன் அத்தை வீட்டுக்கு போவதாக கூறினான். நாங்களும் சரி அவனுக்கு உடம்பு சரியில்லை என்று அனுப்பிவைத்தோம்.
"சரி அவன் போன போரண்ட நாம என்ஜாய் பண்ணுவோம்" என்று சதீஷ் அனைவரையும் உற்சாக படுத்தினான்.


அன்று நாங்கள் suicide point மற்றும் சில இடங்களை பார்த்து எங்கள் அறைக்கு திரும்பினோம் . மீண்டும் மது உற்சாகம் களைகட்டியது, அறையில் இருந்த அந்த பெரிய டேபிள்லில் வட்டம் போட்டு அரட்டை அடித்து டைம் போனதே தெரியவில்லை.அப்போது ராஜா தூங்க டைம் ஆச்சுன்னு டி.வி யை ஆப் செய்தான் . அப்போது தான் அந்த வீபரிதம் ராஜாவின் கண்ணுக்கு தெரிந்தது, ஆப் செய்த டி.வி யை உற்று நோக்கினான் அதில் ஒரு சிறுமி தலை விரி கோலத்துடன் hanger மாட்டும் இடத்தில் தொங்கி கொண்டு இருந்தாள்.திரும்பி பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை,டி.வி யை பார்த்தால், அந்த சைடு சிறுமி தொங்கி கொண்டு இருந்தவள் கிழே இறங்க ஆரம்பித்தாள். ராஜாவுக்கு பயம் வந்து என்னிடம் கூறினான்.நாங்கள் ஆப் பண்ண டி.வி யை பார்த்த போது அந்த சிறுமி எங்கள் அருகில் வந்து விட்டதை பார்த்து திகில் அடைந்தோம் . அந்த சிறுமி தலைவிரித்து ஒரு சோக முக பாவனையில் இருந்தது.கண்டிப்பா அவள் மனுஷியில்லை என்று நாங்கள் அனைவரும் உணர்ந்தோம்.


அவள் அருகே வந்தாள் நண்பர்கள் அனைவருக்கும் போதை இறங்கி பயம் வந்து விட்டது,அவள் நேரே வந்து என் கழுத்தை பிடித்து

"நேத்து காலையில போட்டோ எடுத்த இல்ல அத அழி" என்றாள்.


எனக்கும் என் நண்பர்களுக்கும் எந்த போட்டோ என்று தெரியவில்லை தைரியம் வந்து சதீஷ் "முதல்ல அவன விடு" என்றான்.

அந்த சிறுமி கேட்கவில்லை, நான் அந்த சமயம் என் கையில் கிடைத்த கம்பியால் டி.வி யை பார்த்து அந்த சிறுமி இருக்கும் பக்கம் கம்பியை வீசினேன் . அந்த கம்பி அவள் மேல் பட்டு அவள் அழ ஆரம்பித்தாள். அந்த சிறுமி எங்களிடம்

'இங்க இருக்காதிங்க மொதல்ல கிளம்புங்க' என்று எச்சரிக்கை விடுத்தாள்.


நண்பர்கள் அனைவரும் அழும் நிலைக்கு வந்து விட்டனர் . நான் அந்த போட்டோவை அழித்து விட்டதாக கூறினேன் .


அப்போதும் அந்த சிறுமி "இங்க இருந்து போய்டுங்க உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்" என்றாள். நாங்கள் நால்வரும் டர்ராகி வெளியில் வந்து , யாரைவது உதவிக்கு அழைக்கலாம் என்றால் ஒரு ஆளையும் காணோம். அறையில் வேலைக்கு இருப்பவர்கள் இரவில் தங்கள் வீட்டுக்கு சென்று விடுவது வழக்கமாம் .நாங்கள் மேலும் பயம் கொண்டு ரோட்டில் ஓரத்தில் உக்காந்து இரவு பொழுதை கழித்தோம். என் வாழ்க்கையில் இந்த சம்பவம் ஓர் உண்மையை உறைத்தது அது ஆவி இருக்கிறது என்று.


மறுநாள் காலையில் வேலைக்கு வந்த நடுத்தர வயது உடைய நபரிடம் நாங்கள் இது மாதிரி ஒரு சிறுமியை கண்டதாக கூறினோம் . அதுக்கு "அவர் சும்மா தண்ணி போட்டு ஒலராதிங்க தம்பி" என்றார்.தான் அறையை போய் சுத்தம் செய்வதாக கூறி அறைக்கு சென்றார் நாங்கள் பயந்து போய் அறைக்கு செல்லவில்லை. அறைக்கு சென்ற நபர் உடனே வெளியில் வந்து

"நேத்து நைட் என்ன பண்ணிங்க" என்றார்.


"ஒண்ணும் இல்லன நாங்க பாட்டுக்கு சரக்கு சாப்பிட்டு தூங்க போனோம் அப்பதான் அந்த பொண்ணு வந்து ..." என்று இழுத்தேன் .உடனே அந்த நபர் "போய் அந்த டேபிள்அ பாருங்க" என்றார்.நாங்கள் அனைவரும் சென்று டேபிளில் என்ன என்று பார்த்தோம் . நாங்கள் அனைவரும் மூச்சடைத்து நின்றோம், அடுத்த நொடி பெட்டி பையை எடுத்து ஊருக்கு கிளம்பினோம்.

அந்த டேபிள் மீது ஒரு பெண்ணின் கூந்தல் முடி கொத்தாக இருந்தது.


முற்றும்.

(
இதை சிறுகதைன்னு சொல்லலாமா? நீங்கள் தான் சொல்ல வேண்டும்.)

16 comments:

லோகு said...

ஆஆஆஆஆஆஆஆ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

விக்னேஷ்வரி said...

நிஜமாவேவா? ரொம்ப பயம்ம்ம்ம்ம்ம்மாமாமா..... இருக்கு

தோழி said...

நிஜம்ம்ம்ம்ம்ம்மாவா

தோழி said...

நிஜம்ம்ம்ம்ம்ம்மாவா

வடுவூர் குமார் said...

ஏம்பா! தனியாக இருக்கும் என்னை இந்த கதையை படிக்க வைத்து பயமுறுத்துகிறாய்??? :-)

ஜெட்லி said...

வணக்கம் லோகு .... என்ன ஒரே எழுத்துல முடிச்சிடிங்க....

ஜெட்லி said...

விக்னேஸ்வரி ... ரொம்ப பயபடாதிங்க....

ஜெட்லி said...

வடுவூர் குமார் .... இதெக்கெல்லாம் பயபடலமா நீங்க....

ஜெட்லி said...

வாங்க தோழி என்ன வாய் அடைச்சி நின்னுடீங்களா...
இது என் நண்பனின் தம்பிக்கு நடந்த உண்மை சம்பவம்.

Kripa said...

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.

நன்றிகள் பல...

- நம் குரல்

லோகு said...

//வணக்கம் லோகு .... என்ன ஒரே எழுத்துல முடிச்சிடிங்க....//


நெறைய சொல்லலாம்னு தான் நெனச்சேன்.. பயத்துல நாக்கு ஒட்டிகிச்சு..

கடைக்குட்டி said...

யோவ்..

கிலி கெளப்பிட்டீங்கய்யா!!!

கடைக்குட்டி said...

தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்...

வாங்க..

இப்போதான் யோசிக்குறேன்..உங்க க்ரூப்ல யாரப் பத்தி போடுவீங்க???

கல்கி said...

தேவையில்லாமல் இந்த ராத்திரி நேரத்துல இத படிச்சிட்டேனே. ஒரு மு.கு போட்டிருக்கலாம்ல டெரரான கதைன்னு :-(

Suresh said...

உண்மையா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

Chitra said...

நல்லா கிளப்புராங்காய பீதியை........ halloween time கூட இப்போ இல்லையே?