சர்வம்..... 60 ரூபாய் போச்சே.....
(குறிப்பு: என் கணினி தாய் பலகை(mother board) பிரச்சனையால் இயங்க வில்லை. அதனால் internet centreIL இருந்து டைப் பண்ணுவதற்கு மிகவும் சிரமம் ஆக உள்ளது. எழுத்தில் தவறு இருந்தால் சகித்து கொள்ளவும்)
சர்வம் திரைப்படத்தை இன்று fdfs woodlands திரையரங்கில் பார்த்தேன். சர்வம் நான் மிகவும் எதிர்ப்பார்த்த படம் பில்லாவுக்கு அப்புறம் விஷ்ணுவர்தன் இயக்கும் படம். சர்வம் படத்தின் பாடல்கள் பற்றி சொல்ல வேண்டாம் சூப்பர் ஹிட். ஆனால் படம்?
ஆர்யா த்ரிஷாவை துரத்தி துரத்தி லவ்வுகிறார். இன்னொரு ட்ராக்கில் இந்தரஜித் மகனை கொள்ள தூடுக்கிறார் சக்கரவர்த்தி காரணம் இந்தரஜித் சக்கரவர்த்யின் மகனையும் மனைவியயும் கார் விபத்தில் தெரியாமல் ஏத்தி கொன்றுவிடுகிறார்.
இதனால் சக்கரவர்த்தி இந்த்ரஜித் மகனை பழிவாங்கி அதன் வலியை இந்த்ரஜித் அனுபுவிக்க வேண்டும் என்று மகனை கொலைவெறியோடு தொடர்கிறார். ஆர்யா இங்கே த்ரிஷாவை கரெக்ட் செய்து திருமணம் முடியும் தறுவாயில் விபத்தில் இறந்துவிடுகிறார். த்ரிஷாவின் இதயம் இந்த்ரஜித் மகனுக்கு பொறுத்த படுகிறது. இதன் பின் என்ன ஆர்யா இந்த்ரஜித் மகனை சக்கரவர்த்தியிடம் இருந்து காப்பாற்றுகிறார்.
படத்தின் மிகபெரிய பலவீனம் திரைக்கதை, நம்மால் எளிதில் யூகிக்க முடிந்த சப்பை திரைக்கதை. படம் ஸ்டார்டிங் சூப்பர்ஆ இருந்தது ஆனா போக போக மொக்கை தாங்கலப்பா. முதல் பாதி முழுவதும் காதல் காட்சிகள் சில காட்சிகள் ரசிக்கும் படியாக உள்ளன சில காட்சிகள் மொக்கை தான்.
முதல் பாதியில் த்ரிஷா உயிரை விட்டு விடுவார். சரி இனிமே படம் சூப்பர்ஆ இருக்கும்னு நம்பி உக்காந்தோம் இரண்டாம் பாதி படம் பாதி பார்த்ததில் முதல் பாதி எவ்வளவோ பராவில்லை என்று தோன்றியது. த்ரிஷா படத்தில் அழகாக இருக்கிறார்.
இந்த இரண்டாம் பாதி படத்தில் த்ரில்லர் என்று நம்மை கொல்கிறார்கள். இரண்டாம் பாதி ஆரம்பித்து பத்தாவது நிமிஷத்திலே படத்தின் கதை புரிந்து விட்டது திரைக்கதையும் புரிந்து விட்டது . அதுக்கு அப்புறம் நாம நினைக்கிறது ஸ்க்ரீன்ல நடக்கும். அதுவும் அந்த சின்ன பையன் இம்சை தாங்க
முடியுல, படமே மொக்கை அதுல அவன் வேற வந்து மொக்கை போடுறான். விஷ்ணுவர்தன் இந்த மாதிரி ஒரு படம் எடுப்பார்னு நினைச்சி பாக்கல.
இதுல வேற சிம்புவை கிண்டல் செய்வார்கள் ஒரு காட்சியில் த்ரிஷாவை மடக்க ஆர்யா ஒன்பதாவது மாடியில் இருந்து குதிக்க போறதா சொல்வார்.
அப்போது அவர் நண்பர் கிருஷ்ணா போன் செய்து "டேய் சிம்பு படத்துக்கு டிக்கெட் எடுத்து வெச்சிருக்கேன் எங்கட இருக்க ?" உடனே ஆர்யா "நான் ஒன்பதாவது மாடியில் இருந்து குதிக்க போறேன்" உடனே கிருஷ்ணா பதறி "சிம்பு படம் வேணாம்டா அப்போ அஜித் படத்துக்கு போலம்ட" என்பார். இந்த காட்சியில் திரைஅரங்கில் பயங்கர கைதட்டு. அஜித் படத்துக்கு போறதுக்கு ஆர்யா
எதோ சொல்வார் என் காதில் விழவில்லை. நண்பனிடம் இடைவெளியில் கேட்டேன் அவன் அதற்க்கு "ஆர்யா பத்தாவது மாடியில் இருந்தது குதிக்க போறேன்னு சொன்னண்ட" சொன்னான். அப்ப இந்த படம் பார்த்ததுக்கு எங்க இருந்து குதிக்கறது ...........
நான் இப்பவும் சொல்றேன் மொக்கை படம் பாக்கறது என் தப்பில்லை படம் எடுக்குறவன் தப்பு. அப்புறம் இன்னொன்னு ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ் உங்களக்கு படம் பிடிச்சி இருக்கலாம் ஆனா இதுதான் நம்ம விமர்சனம்.
Tuesday, May 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
தம்பி கிருஷ்ணன், ஏற்கனவே நண்பன் படங்களை சேர்த்து draft உருவாக்கி வச்சிருந்தாரு இன்னைக்கு படம் பார்த்துவிட்டு எழுதினாரு. நீ இன்னும் வளரனும் தம்பி யாரையும் அசால்டா மரியாத இல்லாம பேசாத, உனக்கு அந்த தகுதி இருக்கானு பாரு. இது எங்க blog என்ன வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் எழுதுவோம் உனக்கு இஷ்டம் இல்லாட்டி மூடிட்டு போ.
ஜே டி சக்கரவர்த்தியின் வலியை இந்திரஜித் அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் விஷ்ணுவர்த்தன் படம் பார்த்த அனைவரையும் வலியோ வலி என வலிக்கவைத்துவிட்டார்.
pakalamnu nenachen.. nalavela kapatheetenga :-)
//அப்போது அவர் நண்பர் கிருஷ்ணா போன் செய்து "டேய் சிம்பு படத்துக்கு டிக்கெட் எடுத்து வெச்சிருக்கேன் எங்கட இருக்க ?" உடனே ஆர்யா "நான் ஒன்பதாவது மாடியில் இருந்து குதிக்க போறேன்" உடனே கிருஷ்ணா பதறி "சிம்பு படம் வேணாம்டா அப்போ அஜித் படத்துக்கு போலம்ட" என்பார். இந்த காட்சியில் திரைஅரங்கில் பயங்கர கைதட்டு//
இது ஒரு காட்சியே போதுமே தல..,
ஓட்டுக்கள் போட்டாச்சு தல..
60 ரூபாய் மிச்சம்.
நன்றி..
இன்னா தலிவா, ஒத்த படத்துக்கெ இந்தாண்ட டரியல் ஆயிட்டே?
நம்ம இயக்குனர்கள், நாம ஹாலிவுட், கொரியன் படமெல்லாம் பாக்க மாடோமுன்னு நனச்சிகிட்டு இருக்கானுங்க.
இந்த படம் கூட 7 pounds படத்த லைட்டா காப்பி அடிச்சிட்டானுங்க !
நண்பர் கிருஷ்ணன் அவர்கள் நான் draft செய்த தேதியை பார்த்து நான் பீலா உடுவதாக
கூறியுள்ளார் .... என் கணினி பிரச்சனையில் உள்ளதால் அது மாதிரி நடந்து விட்டது.
அது தெரியாமல் கிருஷ்ணன் ஓவராக பேசியதாக நண்பர் சித்து கோவப்பட்டார்.
கிருஷ்ணன் விமர்சனம் படிங்க புடிசிரிந்த அத பத்தி சொல்லுங்க.
கடைக்குட்டி போய்டாத ....மொக்கை
நன்றி சுரேஷ் தலைவரே .....
வணக்கம் வண்ணத்துபூச்சியரே .....
உங்களை போல் நண்பர்களை காப்பாற்றுவதற்கு நான் முதல் நாள் படத்துக்கு செல்கிறேன்.
ஆமாம் வான்முகிலன் .... ரொம்ப எதிர்பார்த்தேன்..
என்ன பண்றது
வாங்க தேவன் ....
படத்துக்கு பேசாம வலி ன்னு பேர் இட்டுஇருக்கலாம்.
கரெக்ட்ஆ சொன்னிங்க கலையரசன்...
Post a Comment