Monday, November 16, 2009

யார் விதைத்த விதை??.

யார் விதைத்த விதை??.


"எனக்கு தலையே வெடிச்சிரும் போல இருக்கு,எனக்கு தலையே வெடிச்சிரும்
போல இருக்கு" என்று கடந்த வாரம் தினத்தந்தி பேப்பரை பார்த்ததிலிருந்து
எஸ்.ஜே.சூர்யா மாதிரி இருந்தேன்.(செயலில் அல்ல அவர் வசனம் மட்டும் தான்).காரணம் ஒன்றல்ல இரண்டு விஷயம்

#
அந்தோனி யார்?? என்ற திரைப்படத்தின் 101 வது நாள் விளம்பரம்,
அப்புறம் நாலு நாள் கழித்து 105 வது நாள் விளம்பரம்
.

#
மலை மலை (சுமாரான )படத்தின் நூறாவது நாள் விளம்பரம்.

அந்த படத்தின் விளம்பரத்தால் உனக்கு என்ன பிரச்சனைன்னு

கேக்குறிங்களா?? வரலாறு தப்பா போய்டும்ங்க.நமக்கு அடுத்த
தலைமுறை வந்து நாம பார்த்த நூறாவது நாள் படத்தை பார்க்க
ஆசைப்பட்டு அந்தோனி யார்,அழகர் மலை,தோரணை(50),சிவகிரி(50)
போன்ற படங்களை நம் அடுத்த தலைமுறை பார்த்தால் நம்மை
பற்றி என்ன நினைப்பார்கள் என்று சிறிது யோசித்து பாருங்கள்.
கடந்த மாதம் நான் சந்திரலேகா முதல் சந்திரமுகி வரை என்று சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன்.
அங்கே திரு.ஆனந்தன் அவர்கள் தமிழ் திரைப்படங்கள் பற்றி
ஒரு அரங்கு அமைத்து இருந்தார் அதில் நம் முதல் சினிமா படத்திலிருந்து இன்று வரை ஓடிய மற்றும் வெளியான படங்களின்
தொகுப்புகளை மிக அழகாக அமைத்திருந்தனர்.அதெல்லாம் நம்
தமிழ் சினிமா வரலாறின் தொகுப்பு.இன்னும் ஒரு நூப்பது வருடம்
கழித்து அதில் அந்தோணி யார்??, சிவகிரி,அழகர் மலை, குருவி,
தோரணை,சத்யம் போன்ற படங்கள் வெற்றி பெற்ற படங்களாக
கண்டிப்பாக இடம்பெறும்.


பதினைந்து வருடங்கள் முன்பு நம் தமிழில் நல்ல படங்கள் இருநூறு
நாள் கூட ஓடியுள்ளது,அது மக்கள் கொடுத்த வெற்றி.அதன் பின்
இப்போதெல்லாம் நல்ல படங்கள் கூட நூறு நாள் ஓடுவதே கடினமாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
இப்போது நூறு நாள் என்று சொல்லி கொள்ளும் மலை மலை,
அந்தோணி யார் போன்ற படங்கள் நாடோடிகள்,ஈரம்,வெண்ணிலா, யாவரும் நலம் போன்ற படங்களின் வெற்றியின் அருகில் கூட வரமுடியாது.


இந்த ஓடாத அட்டு படங்களை நூறு நாள் விளம்பரம் செய்து ஓட
வைத்தது யார்?? யார் விதைத்த விதை??

சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களின் அருணாச்சலம் படம் ரொம்ப
சுமார்தான் என்று அனைவருக்கும் தெரிந்ததே...இருந்தாலும் அந்த
படத்தை நூறு நாள் ஒட்டினார்கள்.அதே போல் பாபா நம் மனசை
கவரதாதால் அதையும் நூறு நாட்கள் ஒட்டினார்கள்.கிட்டத்தட்ட
150 படத்திற்கு மேல் நடித்தவர் அவர் ஓட்டலாம் ஆனால் அவர்கூட
போட்டிபோட்டு சச்சின் என்ற படத்தை இருநூறு நாட்கள் ஓட வைத்தது யார்?? ரஜினி அவர்கள் சினிமாவின் மாபெரும் ஜாம்பவான். ரஜினி என்ற பெயருக்கே படத்தை நூறு நாள் ஓட்டலாம் என்பது என் கருத்து.சச்சின் படத்தை நான் பார்க்கவில்லை.இருந்தாலும் உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்ல!!. சச்சின் படத்த விடுங்க குருவி என்ற படத்தை 150 ஒட்டினார்கள்,குருவி படத்தின் தரம் நமக்கு தெரியாதது அல்ல.அந்த மாபெரும் காவியத்தை நான் பார்க்க நேர்ந்தது காலத்தின் கொடுமை என்றே சொல்ல வேண்டும்.இது போல் வீண் ஜம்பம் அடித்து தங்கள் பெயரை திரைப்பட வரலாற்றில் பதித்து கொள்கிறார்கள்.இதுக்காக என்னை விஜய் எதிர்ப்பாளன் என்று நினைக்க வேண்டாம்!!.நான் ஒரு சராசரி சினிமா ரசிகன் அவ்வளவே.


இனிமே வர போகிற நல்ல படங்கள் கூட நூறு நாள் ஓடுவது கடினம்,
சில படங்கள் தவிர.ஏன் என்றால் ரிபீட் ஆடியன்ஸ் கிடைப்பது
இப்போது கஷ்டம் ஆகிவிட்டது.ஒரு ஷோ போட்டு நூறு நாள் இருநூறு

நாள் ஓட்டும் படங்களின் தியேட்டர்கள்,காதலர்களின் கூடாரமாக
மட்டுமே இருக்கிறது என்பது நம்மில் பலருக்கு தெரிந்ததே.


கடைசியா ஒன்னு ஏற்கனவே சொன்னது தான்...

நூறு நாள் ஓடுவதெல்லாம் நல்ல படமும் அல்ல
முப்பது நாள் ஓடுவதெல்லாம் மொக்கை படமும் அல்ல....

உங்க கருத்து குத்துகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்....
முடிஞ்ச ஓட்டும் போட்டு போங்க
.

உங்கள்
ஜெட்லி சரண்.

13 comments:

சங்கர் said...

இந்த நாள் கணக்கு, வாரக்கணக்கு எல்லாம் நம்ம தமிழ் சினிமாவுல தான், ஹாலிவுட் படங்களுக்கெல்லாம் பண கணக்கு தான், விக்கிபீடியால இங்கிலீஷ் படத்துக்கெல்லாம் இவ்வளவு செலவாச்சி, இவ்வளவு வருமானம்னு புட்டு புட்டு வைக்கிறாங்க, தமிழ் படத்துக்கு நடிச்சவுங்க பேரு, டைரடக்கர் பேரு போட்டாலே பெரிய விஷயம். நம்ம ஊருலயும் அப்படி ஒரு நிலைமை வரும்போது இந்த குப்பை எல்லாம் காணாமல் போயிடும்.

புலவன் புலிகேசி said...

வீரசாமிக்கே 100 வது நாள் ஒட்டுனவங்க தான இவங்கலாம்....

லோகு said...

//சச்சின் என்ற படத்தை இருநூறு நாட்கள் ஓட வைத்தது யார்?? //
//சச்சின் படத்த விடுங்க குருவி என்ற படத்தை 150 ஒட்டினார்கள்,//

ஹா... ஹா.. ஹா.. எதுக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு...

யோ வொய்ஸ் (யோகா) said...

விடுங்க தல, ரஜனி செஞ்ச பிழையான விடயம் பலருக்கு உதாரணமாக போய்ட்டது

Chitra said...

ிஜமா, யாரு சார் நூறு நாட்கள் இந்த மாதிரி படத்தை ஒட்டி யாரு பாக்குறாங்க. ஒரு curiosity, எனக்கு எப்பவும் உண்டு.

வெண்ணிற இரவுகள்....! said...

ஆம் தோழரே உண்மை கருத்து .....நூறு என்று பூ சுத்துகிறார்கள் ...........
வசுலே முக்கியம் விஜய் படங்களை விட தல படங்கள் பத்து நாள் ஓடினாலே வசூல் புரியும் ......

நாஸியா said...

கந்தசாமி நூறு நாள் ஒடுச்சா?

ஜெட்லி said...

@ சங்கர்

நீ சொல்வது உண்மை தான் நண்பா!!@புலவன் புலிகேசி

வீராசாமி நூறு நாளா?? எப்போ??

ஜெட்லி said...

@ லோகு

தெரியிலப்பா....


@ யோ

எல்லாம் மார்க்கெட் படுத்தும் பாடு...

ஜெட்லி said...

@ சித்ரா

நானும் அதை தான் கேட்டேன்.....


@ வெண்ணிற இரவுகள்

தல,தளபதி விளையாட்டுக்கு நான் வரவில்லை ...
ஆளை விடுங்கள்

ஜெட்லி said...

@ நாஸியா

விரைவில் தொட போகுது ...

என்ன கொடுமை நாஸியா இது !!

கடைக்குட்டி said...

”வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...”

இந்த வரிதான் நியாபகம் வருது இந்த இடுகைய படிக்கும் போது.. :-)

ஜெட்லி said...

@ கடைக்குட்டி

மிக்க நன்றி