Monday, November 30, 2009

ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்

ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்.

முக்கிய செய்திகள்:

# "கற்பழிப்பு காட்சியில் நடிக்க பயப்படமாட்டேன்,தொடர்ந்து
நடிப்பேன்"நடிகை கீர்த்திசாவ்லா பேட்டி.(இதுவல்லவோ வீரம்!)

சமீபத்தில் திரைக்கு வந்தவுடன் திரையை விட்டு வெளியேறிய
ஸ்வேதா என்ற படத்தில் கீர்த்திசாவ்லா அவர்கள் நன்றாக
திறமை காட்டியதாக ஊர் முழுக்க பரபரப்பான பேச்சு அடிபட்டது.
நான் கூட போனும்னு நினைச்சேன் ஆனா அதுக்குள்ள படத்தை
எடுத்து விட்டார்கள்(ச்சே...).மேல உள்ளே பேட்டி படம் வெளிவந்த நான்கு நாள் கழித்து
கீர்த்திசாவ்லா கூறியதாம்.(எப்படியெல்லாம் படத்துக்கு விளம்பரம்
செய்றாங்க!!).ஏன் இது மாதிரி ஒரு விளம்பரம் ஏதோ நான்
நடித்து தேசிய விருது வாங்குவேன் என்றாள் பாராவயில்லை
ஆனால் கீர்த்தியோ கற்பழிப்பு காட்சியில் தொடர்ந்து நடிப்பேன்
என்கிறார்...என்னமோ போங்க.....

ஆனாலும் கீர்த்திசாவ்லாவின் சேவை
தமிழ்நாட்டுக்கு தேவை.(ஹீ.. ஹீ..).

******************************************
விளம்பர இடைவேளை:

(பி.கு: தற்புகழ்ச்சிக்கு அல்ல)

போன வாரம் ஒரு அன்பர் கைபேசியில் அழைத்தார்.அவர்
கூறியதாவது தான் பப்ளிக் சர்வீஸ் தேர்வுக்கு தயார்படுத்தி
கொள்ள எனது பொது அறிவு செய்திகள் மிகவும்
பயனுள்ளதாக இருக்கிறது என்று என்னை மிகவும்
பாராட்டினார்.அப்புறம் மப்புசாமி சாரி குப்புசாமி அப்படின்னு
ஒருத்தர் நெதர்லாந்தில் இருந்து மெயில் அனுப்பி தன்
பொது அறிவு வளர நானும் ஒரு காரணம் என்று எழுதி
இருந்தார், நேரம் வரும் போது அந்த மெயில் உங்கள்
பார்வைக்கு வரும்.ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி.

***********************************************

பயம் அறியான் அப்படின்னு ஒரு படம் வரபோகுது அதில்
தற்போது உதயதாரா அவர்கள் கதாநாயகி வேஷம் கட்டுகிறார்.
புதுமுக நடிகர் கதையின் நாயகனாக நடிக்கிறார்.நமது
பொல்லாதவன் புகழ் கிஷோரும் இருக்கிறார் சரி இது அல்ல
விஷயம்....

சில பட ஸ்டில்கள் என்னை ஈர்த்தன இதோ உங்கள்
பார்வைக்கும் எல்லோரும் வாலை நீட்டாதே என்பார்கள்
ஆனால் இந்த ஹீரோவுக்கு நாக்கை நீட்டாதே என்று சொல்ல வேண்டும் போல...(ஏன்டா ஜெட்லி அவர் நாக்கு அவர்
நீட்டுராறு உனக்கு என்னடா என்று நீங்கள் கேட்பது சரிதான்
).

மனதை ஒரு நிலைப்படுத்தும் கேள்வி:

இந்த ரெண்டு படத்துக்கும் என்ன வித்தியாசம்??
ஹீரோ ஒரு படத்தில் இடது புறம் இருக்கிறார் இன்னொரு
படத்தில் வலது புறம் இருக்கிறார் என்று தயவு செய்து
சொல்லாதிங்க...படத்தை நல்லா பாருங்க வேறு வேறு
பெண்கள்.இதில் இருந்து என்ன தெரியுது கதாநாயகியை
மாற்றி விட்டார்கள்.(கதாநாயகி மாறினாலும் அதே சீனை
திரும்பவும் படம் எடுத்த இயக்குனர் வாழ்க என்று ஹீரோ
மனதில் நினைத்திருப்பார்!!)

********************

புடவையில் முமைத்கான்:

திரையில் எப்போதும் கர்சீப்பை விட சிறியதாக ஆடையை
அணிந்து வரும் முமைத்கான் பவுர்ணமி நாகம் என்ற
டப்பிங் படத்தின் பாடல் வெளியிட்டு விழாவுக்கு முழு
நீள புடவையுடன் வந்து நம்மை கண்ணீர் கடலில்
ஆழ்த்தினார்.அந்த விழாவில் நடிகர் கருணாஸ் பேசும் போது
முமைத்கானுடன் தான் நடித்தது தான் செய்த பெரும்
பாக்கியம் என்றும் அதற்காக அவர் கடவுளுக்கு நன்றி
கூறியதும் நம்மை மெய் சிலிர்க்க வைத்தது.

****************************************

இந்த வார பொது அறிவு கேள்விகள்:


# தற்போது கலைமாமணி விருது பெற்ற தளபதி யார்?

A. புரட்சி தளபதி விஷால்

B. இளைய தளபதி விஜய்

C. சின்ன தளபதி பரத்

(மினி தளபதினு யாராவது அடுத்து வர போறாங்க!!)

# அடுத்த சிம்ரன் என்று இயக்குனர் ஷங்கர் யாரை கூறினார்??

A.பறவை முனியம்மா

B.தமன்னா

C.சுனைனா

பதில் தெரிந்தால் 55540 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டாம்
மீறி அனுப்பினால் உங்கள் கைப்பேசியில் மூன்று ரூபாய்
போய் விடும்.பதில் தெரியாதவர்கள் கமெண்ட் செய்து கேட்டு
தெரிந்து கொள்ளலாம்.

இந்த பொது அறிவு செய்திகள் அனைவரையும் சென்று அடைய
ஒட்டு போடவும்....

நன்றி:
indiaglitz.com

உங்கள்
ஜெட்லி சரண்.

14 comments:

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ஜெனரல் நாலெஜ் வளர உதவியா இருக்கும் ஜெட்லி அண்ணனுக்கு ஜே!

(நாலெஜ்ன்னா இன்னாபா,
நாலு எட்ஜ் - அதாவது நாலு மூளை சீ, நாலு மூலைதானே, அது, சதுரத்துக்கு, செவ்வகத்துக்கு, வேணும், நமக்கு இன்னாத்துக்கு, நைனா?)

Cable Sankar said...

என் அறிவுகண்ணை திறந்துவிட்ட ஜெட்லி தம்பிக்கு நன்னி.. நன்னி.. வளர நன்னி..

புலவன் புலிகேசி said...

//ஆனாலும் கீர்த்திசாவ்லாவின் சேவை
தமிழ்நாட்டுக்கு தேவை.(ஹீ.. ஹீ..).//

இன்னாமா பொது அறிவ வளக்குறீங்கோ...

பித்தனின் வாக்கு said...

நல்லா முத்த ஆராய்ச்சி பாஸ்.
நல்லா ஆராய்ச்சி தலை. நல்ல கூர்மையாக ஆராய்ச்சி பண்ணியிருக்கிங்க. சரி இதுக்காக நம்ம பிளாக் பக்கம் வந்து விருது வாங்கிக்குங்க. நன்றி.

அகல்விளக்கு said...

//ஆனாலும் கீர்த்திசாவ்லாவின் சேவை
தமிழ்நாட்டுக்கு தேவை.(ஹீ.. ஹீ..).//

கரீட்டா சொன்னீங்க தல..

//போன வாரம் ஒரு அன்பர் கைபேசியில் அழைத்தார்.அவர்
கூறியதாவது தான் பப்ளிக் சர்வீஸ் தேர்வுக்கு தயார்படுத்தி
கொள்ள எனது பொது அறிவு செய்திகள் மிகவும்
பயனுள்ளதாக இருக்கிறது என்று என்னை மிகவும்
பாராட்டினார்.//

மெய்யாலுமா??

//எல்லோரும் வாலை நீட்டாதே என்பார்கள்
ஆனால் இந்த ஹீரோவுக்கு நாக்கை நீட்டாதே என்று சொல்ல வேண்டும் போல..//

அடங்கொன்னியா...
முதல்வன் படத்துக்கப்புறம் இப்பத்தான் அப்பு இப்படி பண்றாய்ங்க.

அனேகமா அடுத்து பம்பரம் எங்க விடப்போறாய்ங்களோ...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

///நடிகர் கருணாஸ் பேசும் போது
முமைத்கானுடன் தான் நடித்தது தான் செய்த பெரும்
பாக்கியம் என்றும் அதற்காக அவர் கடவுளுக்கு நன்றி
கூறியதும் நம்மை மெய் சிலிர்க்க வைத்தது.//

கிரேஸ் காதுல விடழுந்துது அம்புட்டுத்தேன்...
உண்மையாவே லொடுக்கு பாண்டி ஆய்டுவாரு.

//பதில் தெரியாதவர்கள் கமெண்ட் செய்து கேட்டு
தெரிந்து கொள்ளலாம்.//

சொல்லுங்கய்யா....

பொது அறிவுப்புகழ் ஜெட்லி வாழ்க....
பொது அறிவுப்புகழ் ஜெட்லி வாழ்க....

பிரியமுடன்...வசந்த் said...

ஜிகே சிங்கம் ஜெட்லி...

ஜிகே தளபதின்னு வேணும்னா வச்சுக்குவோமா?

:)))

D.R.Ashok said...

என்னை போன்ற இளைஞர்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. தொடர்ந்து இது மாதிரி இளமை பொங்கும் பதிவுகளைஆவலுடன் எதிர்பார்க்கும்...

ஜெட்லி said...

@ பெயர் சொல்ல விருப்பமில்லை.

ஆமா உங்க பேர் தான் என்ன??


@ கேபிள் சங்கர்

ரொம்ப நன்றினே...

ஜெட்லி said...

@ பித்தனின் வாக்கு

நன்றி தலைவரே....மக்கள்
சேவை மகேசன் சேவை

@ புலவன் புலிகேசி

நன்றி நண்பா..மேலும் வளர பாடுபடுவேன்..

ஜெட்லி said...

@ அகல்விளக்கு

அண்ணே நீங்க பச்சை மண்ணுனே
எதை சொன்னாலும் நம்புரிங்க....

சின்ன தளபதி

தமன்னா

ஜெட்லி said...

//ஜிகே தளபதின்னு வேணும்னா வச்சுக்குவோமா//

அய்யோயோ வேணாம்பா வஸந்த்

கடைக்குட்டி said...

ஹே ஹே.. நக்கல் செமங்க..

இப்போல்லாம் உங்க ஃப்லோ சூப்பர்.. மொழி விளையாடுது..

யாரோ திலைபேசியில் வந்தாங்கன்னு சொன்னதும் நான் நெனச்சேன் சீரியஸ் மேட்டர் போலன்னு அங்கயும் மொக்கயா???? :-)

கலக்குறேள்.. குத்தம் சொல்ல எதும் இல்ல..

மென்மேலும் கலாய்த்து டகுல் பாஜி வேலையை தொடரவும்/ :-)

Chitra said...

சும்மா ஏதோ சோக மூடில், உங்கள் blog பக்கம் வந்தேன். சிரித்து விட்டேன். தொடரட்டும், உங்கள் சேவை.

cheena (சீனா) said...

புஸ்தகம் போடற ஐடியா எதுவும் இருக்கா - ஜிகே புத்தகம் - போடு 0- பிச்சிக்கீட்டு போகும்