Tuesday, November 17, 2009

சூரியனுக்கே டார்ச் அடிப்போம் - இன்னுமொரு ஆராய்ச்சிக் கட்டுரை

இப்போது எங்கு பார்த்தாலும், உலகம் வெப்பமயமாகிறது, பனிமலை உருகுது, கடல் நீர்மட்டம் உயருதுன்னு தான் பேச்சு. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், வளர்க்கப்படும் நாய்கள், ச்சே, நாடுகள்னு, எல்லா நாட்டு தலைவர்களும் கூடிக் கூடி பேசறாங்க. இதே நிலைமை நீடிச்சா முதலில் கடலுக்குள் போகும்னு நம்ம விஞ்ஞானிகள் ஜோசியம் சொல்லி இருக்கும் மாலத்தீவு மக்களோ, 'எவனோ தூங்கறதுக்கு, நாங்க எதுக்கு கண் முழிக்கணும்னு', கேட்டுக்கிட்டிருக்காங்க. நாமோ, வீட்டுக்குள்ள சுனாமி வரும்வரை எங்களுக்கு கவலை இல்லை என்று சுற்றித் திரிகிறோம். எப்படியும் இருநூறு வருஷத்துக்குள்ள வேறு இடம் தேடவேண்டி இருக்கும், அது ஒரு நூறு வருஷம் முன்னாடியே நடந்தா ஒண்ணும் தப்பில்லை. எந்த சிக்னலிலும் வண்டிய ஆப் பண்ண வேண்டாம், இருக்கற ஏரி, குளமெல்லாம் வீடு கட்டலாம், இருக்கும் கொஞ்ச நஞ்ச காட்டையும் வெட்டி விற்றுவிடலாம், ஆளுக்கு ஒரு கடப்பாரை எடுத்து ஓசோன் மொத்தத்தையும் ஓட்டையாக்கி விடலாம், இன்னும் ஒரு அம்பது வருஷம் முன்னாடியே இடத்தை காலி செய்துவிடலாம், ஒண்ணும் தப்பில்லை.சூரியனிலிருந்து வரும் புறா ஊதா (UV) கதிர்கள் பூமியை தாக்காமல் தடுக்க இயற்கை அமைத்த குடைதான் இந்த ஓசோன் படலம் (ஆறாம் வகுப்பிலேயே படித்த விஷயம்னு கூறுவது காதில் விழுகிறது), எத்தனையோ கோடி ஆண்டுகளாய் சூரியனாலேயே தாண்ட முடியாத அந்த படலத்தை, வெறும் நூறாண்டு விஞ்ஞான வளர்ச்சி மூலம் கிழித்தெறிந்தது, மனித குலத்தின் மகத்தான சாதனை தான். வட அமெரிக்கா முழுவதையும் விழுங்கும் அளவு விரிந்துவிட்ட ஓட்டையை பார்த்தபின்தான், விஷயம் கை மீறி செல்வதற்குள் ஏதாவது செய்தாகவேண்டும் என்று முடிவு செய்த உலக விஞ்ஞானிகள், ஏசி ரூம் போட்டு யோசித்து ஒரு புது வழி கண்டுபிடித்திருக்கிறார்கள், அதன் ஒரு வரிச்சுருக்கம் தான் இந்த கட்டுரை தலைப்பு.


சூரிய கதிர்கள் எவ்வளவு அதிகமாய் ஓசோன் ஓட்டை வழியே வருகிறதோ அவ்வளவுக்கவ்வளவு வேகமாய் பூமியில் பனிப்பாறைகள் உருகும், வெப்பநிலை உயரும். இந்த கதிர்களை வரும் வழியிலேயே மடக்கி திருப்பி அனுப்பிவிட்டால், பாதிப்பின் அளவு குறையும். இந்த திட்டத்தின்படி பூமியின் காற்றுமண்டலத்தின் மேலடுக்கான ஸ்டரடோஸ்பியரை (stratosphere), பல்லாயிரம் டன் எடை கொண்ட, எதிரொளிக்கும் தன்மை உடைய, சல்பேட் (sulfat) போன்ற வேதிபொருட்களை சிறுசிறு துகள்களாக செய்து நிரப்புவதன் மூலம் சூரிய ஒளியை எதிரொளித்து வெப்பத்தின் அளவை குறைக்கலாம் என கண்டறிந்திருக்கிறார்கள். கடந்த 1991-ஆம் ஆண்டு பிலிப்பைன்சின் பினாடுபோ (pinatubo) எரிமலை நெருப்பை கக்கிய போது வெளிவந்த சல்பர் புகை சில ஆயிரம் சதுர கிமீ பரப்பை வானம் தெரியாத அளவு மூடிவைத்தது. ஆனால் இந்த வெடிப்பின் மூலம் நிகழ்ந்த ஒரு பெரும் நன்மை, புவியின் வெப்பநிலை ஒரு பாரன்ஹீட் அளவு குறைந்தது. இந்த நிகழ்வுதான் மேலே சொன்ன யோசனையை விஞ்ஞானிகள் மத்தியில் தோற்றுவித்தது. இந்த மாபெரும் யோசனையின் நடைமுறை சாத்தியங்கள் குறித்ததான விவாதங்கள் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன.
சமீப காலமாய், இந்த ஆய்வை செயல்படுத்துவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இதன் மேல்விவரங்கள் குறித்து கம்பேனி மேற்கொண்ட ஆய்வில், சில ஆச்சரியம் தரும் உண்மைகள் வெளிவந்துள்ளன. இந்த ஆண்டு ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் நாசா விஞ்ஞானி ஒருவரும் இடம்பெற்றுள்ளார். இந்தியாவின் சார்பில் ஒருமனதாய் பரிந்துரைக்கப்பட்டுள்ள "மதுரை சம்பவம்" எனும் திரைக்காவியத்தை இவர் பார்க்க நேர்ந்திருக்கிறது. அந்த படத்தில் எங்கள் நாயகன் ஹரிக்குமார் பேசிய "நாங்கல்லாம் சூரியனுக்கே டார்ச் அடிப்போம்ல" எனும் வசனம் தான், கடந்த சில ஆண்டுகளாய் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தத் திட்டத்தை உலகின் பார்வைக்கு மீண்டும் கொண்டுவர காரணமாய் இருந்திருக்கிறது. இதனையடுத்து நாயகன் ஹரிக்குமாருக்கு ஆஸ்கர் விருது கொடுப்பது போதாதென்று கருதிய தேர்வுக்குழு, அடுத்த ஆண்டிற்கான 'உலக சமாதனம் மற்றும் மக்கள் நல்வாழ்வுக்கான' நோபல் பரிசுக்கு இவரை பரிந்துரை செய்துள்ளது. ஆனால் நோபல் பரிசுக்குழுவில் சிலரோ இந்த ஆண்டே இவருக்கு இப்பரிசை வழங்க வேண்டுமென விரும்புவதாய் அறிகிறோம். இதனால் ஒபாமாவிடமிருந்து பிடுங்கப்பட்டு ஹரிக்குமாருக்கு வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் வசனகர்த்தாவின் பெயர் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்குபரிந்துரைக்கப்பட்டுள்ளது.


புதுமுக நடிகரின் படத்தில் ஒருவரி பன்ச் டயலாகுக்கே, இரண்டு நோபல் பரிசுகள் கிடைக்குமென்றால், நமது தலைகளும், தளபதிகளும் இன்னும் பலரும் பேசும் வசனகளுக்கெல்லாம் என்னென்ன கிடைக்குமென்று எண்ணிப்பாருங்கள். இது போன்ற அறிவியல் அல்லது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வசனங்கள் உங்களுக்கு நினைவில் வந்தால் மறக்காமல் பின்னூட்டத்தில் கூறவும். இந்த பதிவுக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து, இப்பதிவையும் இன்னும் சில திரைக்காவியங்களையும் நாசாவுக்கு பரிந்துரைக்கலாம் என எண்ணுகிறேன், தமிழ்மண்ணின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திப்பிடித்திட, அனைவரும் வாரீர், ஆதரவு தாரீர்.

நன்றி
சங்கர்

படங்கள் நன்றி : galatta.com, ngm.nationalgeographic.com

மேல் விவரங்களுக்கு இங்கு செல்லவும்,

http://ngm.nationalgeographic.com/big-idea/01/shading-earth
http://www.theozonehole.com/ozoneholehistory.htm
http://ozonewatch.gsfc.nasa.gov/

20 comments:

பிரபாகர் said...

தகவலோடு நல்ல ஆராய்ச்சி. கடலுக்கே தண்ணி காட்டுவோம், மலையையே மார்பால மோதுவோம், காத்தோட கபடியாடுவோம், மின்னலுக்கே வெளிச்சம் காட்டுவோம்.... இன்னும் ஆராய்ச்சி பண்ணுங்க பாஸ்...

பிரபாகர்.

புலவன் புலிகேசி said...

நல்ல தகவல் தான்..ஏ.சி அறையில் அமர்ந்து யோசித்தவர்களுக்கே தெரியும் அதனால்தான் அந்த ஓட்டை என்று.....

யோ வொய்ஸ் (யோகா) said...

;))

சித்து said...

சும்மா டாப் கியர் போட்டு தூக்குறியே மச்சி, கலக்கு கலக்கு.

@ஊடகன்@ said...

உண்மையை உலகறிய புகுத்தினாலும் , எவனும் திருந்துருதா இல்ல...........

என்னிக்கோ ஒரு நாள் சாவ போறோம், அதனால உலகம் அழிவு நாளை தைரியமாக எதிர்கொள்வோம்..............

தேவையான பதிவு தான்...........

விக்னேஷ்வரி said...

ரொம்ப நல்ல விஷயம் சொல்றீங்களேன்னு படிச்சிக்கிட்டே வந்தேன். கடைசில காட்டிட்டீங்கள்ல. நல்லா இருங்க. வாழ்க உங்கள் ஆராய்ச்சி.

சங்கர் said...

//பிரபாகர் said...
தகவலோடு நல்ல ஆராய்ச்சி. கடலுக்கே தண்ணி காட்டுவோம், மலையையே மார்பால மோதுவோம், காத்தோட கபடியாடுவோம், மின்னலுக்கே வெளிச்சம் காட்டுவோம்.... இன்னும் ஆராய்ச்சி பண்ணுங்க பாஸ்...//

பேரரசுக்கு போட்டி ஒன்று வலையுலகில் உண்டாகிவிட்டது, வாழ்த்துக்கள் பிரபா

சங்கர் said...

//புலவன் புலிகேசி said...
நல்ல தகவல் தான்..ஏ.சி அறையில் அமர்ந்து யோசித்தவர்களுக்கே தெரியும் அதனால்தான் அந்த ஓட்டை என்று.....//

வாங்க, ரொம்ப சரியாய் சொன்னீங்க

சங்கர் said...

//யோ வொய்ஸ் (யோகா) said...

;)) //

வாங்க யோ, கருத்து எதுவும் சொல்லலியே

சங்கர் said...

//சித்து said...
சும்மா டாப் கியர் போட்டு தூக்குறியே மச்சி, கலக்கு கலக்கு.//

எல்லாம் நீ தருகிற உற்சாகம்தான் நண்பா

சங்கர் said...

//@ஊடகன்@ said...

உண்மையை உலகறிய புகுத்தினாலும் , எவனும் திருந்துருதா இல்ல...........

என்னிக்கோ ஒரு நாள் சாவ போறோம், அதனால உலகம் அழிவு நாளை தைரியமாக எதிர்கொள்வோம்..............

தேவையான பதிவு தான்...........//

கொஞ்சம் சந்தோஷமா சாகலம்னுதான் இந்த பதிவு

சங்கர் said...

//விக்னேஷ்வரி said...
ரொம்ப நல்ல விஷயம் சொல்றீங்களேன்னு படிச்சிக்கிட்டே வந்தேன். கடைசில காட்டிட்டீங்கள்ல. நல்லா இருங்க. வாழ்க உங்கள் ஆராய்ச்சி.//

திட்டப்போறீங்களோன்னு நினைச்சேன், கடைசில வாழ்த்திட்டீங்க, இது போன்ற நல்வாழ்த்துக்கள் கம்பேனியின் ஆராய்ச்சிகளை வளர்க்கும், நன்றி,நன்றி

Chitra said...

"ுதுமுக நடிகரின் படத்தில் ஒருவரி பன்ச் டயலாகுக்கே, இரண்டு நோபல் பரிசுகள் கிடைக்குமென்றால், நமது தலைகளும், தளபதிகளும் இன்னும் பலரும் பேசும் வசனகளுக்கெல்லாம் என்னென்ன கிடைக்குமென்று எண்ணிப்பாருங்கள். "
ha,ha,ha,..... comedy dilaogues, punch dialogues aanadhil ulla sirippu.....

சங்கர் said...

//Chitra said...
ha,ha,ha,..... comedy dilaogues, punch dialogues aanadhil ulla sirippu.....//


அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த வசனத்தை கிண்டல் செய்த உங்களை வன்மையாக கண்டிக்கிறோம்

நோபல் நாயகன் ஹரிகுமார் தொண்டர் படை
1847வது வட்டம்,
சென்னை

venkat said...

நல்லாயிருக்கு

சுசி said...

//"நாங்கல்லாம் சூரியனுக்கே டார்ச் அடிப்போம்ல" // படிச்சதும் வேற எந்த வசனமும் ஞாபகம் வரல.. அதனால என்னோட ஓட்டும் இதுக்குத்தான்.

உங்க ஆராய்ச்சி இன்னும் வளர்க வளர்க....

venkat said...

நல்லாயிருக்கு

குறை ஒன்றும் இல்லை !!! said...

நண்பரே.. நீண்ட நாள் கழித்து ஒரு பதிவு வலுக்கட்டாயமாக எழுதி இருக்கிரேன்.. படித்து கருத்து சொல்லவும்!!

பேநா மூடி said...

நா டைநோசருக்கே டவுசர் கலட்ரவண்டா ... உபயம் தோரணை
இதுக்கு உயிரியல் நோபல் பரிசு கிடைக்கும்ல...

சங்கர் said...

//நா டைநோசருக்கே டவுசர் கலட்ரவண்டா ... உபயம் தோரணை
இதுக்கு உயிரியல் நோபல் பரிசு கிடைக்கும்ல... //

உங்களுக்கு குடுக்க முடியாது, வேணும்னா விஷாலுக்கு குடுத்துடலாம்,