Friday, July 10, 2009

வாமனன் --- விமர்சனம்.

வாமனன் --- திரை விமர்சனம்.

சுப்ரமணியபுரம் படத்துக்கு பின் ஜெய் நடித்து அஹ்மத் இயக்கத்திலும் யுவனின் இசையிலும் அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவிலும் வெளிவந்திருக்கும் படம் வாமனன்.வாமனன் படம் கொஞ்சம் அலிபாபா,கொஞ்சம் லாடம்,
நிறைய முத்திரை நிரப்பிய ஒரு காக்டெயில். ஆதிகாலத்து
கதை ஒரு அரசியல் பதவி கொலை அதை டேப் செய்வது
பின்பு ஹீரோ சிக்குவது இதுதான் வாமனன். முத்திரை
இரண்டுமே ஒரே ஒன் லைன் கதை, இரண்டுமே மொக்கை.

ஜெய், ஒபெநிங் சாங் வந்தவுடன் ஆரம்பிச்சுடாங்கப்பா என்று
நினைத்தேன் ஆனால் அதன் பின் ஜெய் படம் முழுவதும்
கொஞ்சம் அடக்கி வாசித்திரிக்கிறார்.ஜெய் அதே சென்னை
-28 பையன் இன்டெர்வல் முன் வரை ரசிக்கலாம்.

படத்துக்கு பெரிய பிளஸ் சந்தானம் காமெடி. சந்தானம்
இல்லையென்றால் அவனவன் இன்டெர்வெல் விட்டவுடன்
வீட்டுக்கு கிளம்பிடுவாங்க.புது நாயகி ஒன்னும் வேலை
இல்லை.அப்புறம் லட்சுமி ராய், கவர்ச்சி இதற்க்கு மட்டுமே
படத்துக்கு யூஸ் ஆனவர். படத்தில் லட்சுமி ராயின் குரல் அவர்
சொந்த குரல் மாதிரி தெரிகிறது கேக்கவே கேவலமா இருக்கு.

படத்தில் நடக்கும் முதல் கொலையிலே கதை எதை நோக்கி
போகிறது என்று எளிதாக யூகிக்கும் திரைக்கதையும், கொட்டாவி
வரவைக்கும் காட்சிகளும் அலுப்பை தவிர வேற எதுவும்
தரவில்லை. சிட்டி கமிஷனர் ஒரு ரவுடி மாதிரி ஜெயை
தூரத்துவது மொக்கை.அஹ்மத் ஏதோ புதுசா படம் இருக்கும்னு
சொன்னார் ஆனா படத்துல்ல ஒன்னும் புதுசா இல்ல என்பதே
உண்மை. ஏதோ செய்கிறாய், ஒரு தேவதை இரண்டு பாடல்கள்
தான் தூக்க கலக்கத்தை கலைத்தது.


ஜெட்லி டவுட்:

ஜெய் தன் படங்களில் வாமனன் தவிர வேற எதுவும் ஒரு வாரம்
கூட ஓடாது என்று பேட்டி அளித்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். வாமனன் படமே மொக்கை ஒரு வாரம் கூட தாங்காது
அப்போ மிச்ச படமெல்லாம்.........????????

ஜெட்லி பஞ்ச்:

மொக்கை படம் பாக்கறது என் தப்பு இல்ல அது படம் எடுத்தவன்
தப்பு.

முடிஞ்சா TAMILISHஇல் ஒட்டு போடுங்க அப்பதான் இந்த கெட்ட விஷயம் வெகுஜன மக்கள் இடையே போய் சேரும்.

நன்றி:indiaglitz
உங்கள்
ஜெட்லி

8 comments:

shabi said...

னல்ல வேளை 30dhirham மிச்சம் thanks பா

shabi said...

me the first

Personal said...

திரை அரங்கத்துக்கு laptop உடன் சென்று விடுவீர்கல? anyway Thanks for saving my money.Let me pass it on to all my friends circle

Anonymous said...

இதுவும் ஊத்திகிச்சா...

வால்பையன் said...

மொக்கை தானே!
டீவீயில் போடும் போது பார்க்கலாம்!

gulf-tamilan said...

இதுவும் மொக்கையா?? ம் :(((

Keith Kumarasamy said...

இதில இதத்தவிர மத்த படமெல்லாம் ஓடாதுன்னு பேட்டி வேற...இவென்லாம் சுப்ரமணியபுரம் தன்னோட நடிப்புக்காவத்தான் ஓடிச்சுன்னு நினைக்கிறானோ என்னவோ... நம்ம அசின் கஜினி வெற்றிக்கு தன்னை நினைக்கிற மாதிரி..

sharevivek said...

Vimarsanathuku nandri.