ஜெட்லியின் முன்னுரை :
முதல் நாளே இந்த படத்தை பார்க்க பல பிளான்கள் போட்டு
அனைத்துமே நாசமா போச்சு....அடுத்த ரெண்டு நாளில் பல பேர் என்னிடம் இன்னும் படம் பார்க்கலியா??? என்று கேட்டு அதிசிய பட்டார்கள் என்பது மட்டும் உண்மை.ரைட் நாம படத்துக்கு வருவோம்....
சரண் படம்னாலே நாடகம் மாதிரி இருக்கும் என்பது எல்லோருக்கும்
தெரிந்த ஒன்று தான் அதில் இது மட்டும் என்ன விதிவிலக்கா?....
படத்தை ஒரு பில்லா ரேன்ஜ்க்கு எடுக்கனும்னு நினைச்சார் போல
நான் சொல்றது stylish மற்றும் ஒளிப்பதிவில்,ஆனா ஒபெநிங்
நல்ல தான் இருந்தது ஆனா பினிஷிங் சரி இல்லையே.
வினய் தன் சொந்த குரலில் பேசி நம்மை காதை மூட
வைக்கிறார். மற்ற படி வினய் நடிப்பு ஓகே ரகம்.
காஜல் அகர்வால், இந்த அனகோண்டா படத்துல பாம்பு
வந்து வெளியே தலையே நீட்டுமே அந்த மாதிரி அடிக்கடி
பார்க்கிறார். வினய் வீட்டில் காஜல் வேலை செய்வதெல்லாம்
சுத்த அக்மார்க் நாடகம்.
அடுத்து சந்தானம், கண்டிப்பா சிரிக்க வைக்கிறார் இவருக்கு
இன்னும் காட்சிகள் கொடுத்து இருந்தால் நன்றாக இருந்துருக்கும்.
கலாபவன் மணி பெரிய தொழில் அதிபர், ஆனால் செய்வது
எல்லாம் கேடிதனங்கள். இவரு படத்துல அடிக்கடி புல்ஷிட்(bull shit)
என்கிற வார்த்தையை பயன்படுத்துவார், உண்மையிலேயே
படத்தின் கடைசி நூப்பது நிமிடங்கள் தான் புல்ஷிட்.
ஹரிஹரன் இசையில் பாதி காதல், மோதி விளையாடு
ரெண்டும் கேக்கும் ரகம். படத்தில் காட்சிகளில் ஒரு
காட்சிதொடர்பு(continuity) என்பதே இல்லை, வீடு அடையார்
போட் கிளப் என்று காட்டுவார்கள் தீடிரென்று மலேசியாவில்
கார் சேசிங் நடக்கும், அப்புறம் அப்படியே பாண்டியை காட்டுவார்கள்.
மற்றபடி பெரிய குறை ஒன்றும் இல்லை, கத்தி பேசும் வசனம்
இல்லை, அரிவாள் சண்டை இல்லை, ஒருத்தர் நூறு பேரை
அடிப்பது போல் காட்சி இல்லை, முகம் சுளிக்கும் காட்சிகள்
இல்லை. சரண் அடிக்கடி படத்துல வேற தல(அஜித்) புராணம் பாடுறாரு... படம் என்னை பொறுத்த வரை சுமார் சுமார் ரகம்.
அவ்வளவு மொக்கையில்லை.....
இந்த விமர்சனம் பல மக்களை சென்று அடைய ஒட்டு போடுங்கள்.
நன்றி
indiaglitz
உங்கள்
© The content is copyrighted to JETLI and may not be reproduced on other websites.
3 comments:
நல்ல விமர்சனம்...ஆனால் சரணிடம் இன்னும் எதிர்பார்த்தேன்... :(
என்னோட பதிவு இங்கே...
http://tamilsam.blogspot.com/2009/07/blog-post_24.html
// புல்ஷிட்.//
இது புனிதப் பொருள் இல்லையா..,
/*உண்மையிலேயே
படத்தின் கடைசி நூப்பது நிமிடங்கள் தான் புல்ஷிட்.*/
எல்லாத்துலையும் கடைசியில் "ஷிட்" தான் இருக்கும், இதப்போய் பெருசா ஆராச்சி பண்ண மாதிரி சொல்லி இருக்கீக
Post a Comment