Monday, July 27, 2009

வதந்திகள் இப்படித்தான் பரவுமோ...?

வதந்திகள் இப்படித்தான் பரவுமோ...?

வதந்தி என்னும் தீ பரவுவது அவ்வளவு நல்லதில்லை.
ஐயோ! மேல உள்ளே வரி ரொம்ப சீரியஸ் ஆக இருக்கோ.
ரைட் மேட்டர்க்கு வரேன். நான் அப்போ எம்.சி.ஏ படிச்சிட்டு
இருந்தேன்(போன வருஷம் தாங்க).என்னோடைய சில
நண்பர்கள் மிக நல்லவர்கள். எப்போதும் ஒன்றை பத்தாக
திரித்து கூறும் நல்ல பழக்கம் உடையவர்கள்.

முக்கியமா தெரியாதவங்க யாரும் சிக்குனா டின் கட்டிரிவானுங்க.
சில உதாரணங்கள் கிழே....

கல்லூரி இடைவெளி போது நாங்கள் வழக்கமாக எதிரில்
இருக்கும் கடைக்கு சென்று டீ , சமோசா, பஜ்ஜி சாப்பிடுவது
வழக்கம்.ஒரு நாள் நண்பர்களுடன் செல்லும் போது டீக்கடையில்

சமோசா தட்டில் இருந்து ஒரு சமோசா கிழே விழுந்துவிட்டது, அந்த சமோசாவை மாஸ்டர் தட்டில் வைத்து கடைக்கு வந்த இன்னொரு பையனிடம் கொடுத்து விட்டார்.

இதை நான் பார்த்து விட்டேன்.நான் சும்மா இருந்தாலும்
என் வாய் சும்மா இருக்காது.....

"அண்ணே இரண்டு சமோசா, கிழே விழாததா கொடுங்க"
என்று கூறினேன்.

நண்பர் அனைவரும் சிரித்துவிட்டார்கள், மாஸ்டர்
கொஞ்சம் கடுப்பு ஆயிட்டார்.

இதே சம்பவத்தை ஆறு மாதம் கழித்து வேற ஒரு புது
நண்பனிடம் இப்படி கூறினார்கள் என் நண்பர்கள்:

# என்ன அண்ணே டீ கேட்டா பாதி டீ குடிச்சிட்டு
கொடுக்கிறிங்க, இவ்ளோ கம்மியா இருக்கு.

# என்னங்க பஜ்ஜி சுடுற எண்ணையே எப்போ
மாத்துவிங்க,பல வருஷமா ஒரே எண்ணையலேயே
சுடுரிங்க.

# ஏன்பா தேங்காய் சட்னி கேட்டா சுண்ணாம்பு தண்ணி
உத்துற?.....இப்படியெல்லாம் நான் சொன்னேனாம்...

யாரும் என்னை நம்பாமல் நீ சொல்ல கூடியவன் தாண்ட
என்று கலாய்ப்பார்கள்.

***************************************
என் வாழ்க்கையில் நான் கேட்ட சில உண்மை வதந்திகள்:

# சுனாமி வந்த அன்று.....

நாங்கள் இருப்பது திருவான்மியூர் தியாகராஜா தியேட்டர்
எதிரே, அன்று எனக்கு தெரிந்த ஒருவர் வந்து

"பார்த்துப்பா வண்ணாந்துறை பக்கம் போகதே கடல் தண்ணி இடுப்புக்கு மேல நிக்குதுப்பா... நான் போக முடியாம திரும்பி வந்துட்டேன்" என்றார்

வண்ணாந்துறை இருப்பது பெசன்ட் நகர் கடலில் இருந்து
ஒரு கிலோ மீட்டர் தள்ளி.... எனக்கு டவுட், அது எப்படி
அவளோ தூரம் தண்ணி வரும் என்று. நான் என் வண்டியை
எடுத்து கொண்டு போய் பார்ப்போம் என்று சென்றால்
ஒரு சொட்டு தண்ணி கூட பெசன்ட் நகர் பீச் மணலை
தாண்டி ரோட்டுக்கு வரவில்லை.ஆனா உண்மையில் பீச்
ஒட்டி உள்ள மக்கள் கஷ்டபட்டர்கள், பீச் முழுவதும் ஏதோ
போர் ஓய்ந்தது போல் இருந்தது.

# பூகம்பம் வந்த சமயம்:

அதே மாதிரி வேற ஒரு நாதாரி வந்து
" தம்பி அடையார் பிரிட்ஜ் வந்த பூகம்பத்துல்ல உடைஞ்சி
போச்சாம்ப்பா"

இந்த வாட்டி நான் உஷாராக

நீங்க போய் பார்த்திங்களா என்றேன்

இல்லப்பா அந்த பீடா கடைக்காரன் சொன்னான் என்றார்

சரி ரைட் அப்பவே புரிந்தது இதுவும் வதந்தி தான் என்று,
வதந்தி பரப்புவர்களின் நோக்கம் என்ன? அவர்களுக்கு
என்ன லாபம்? யாரவது தெரிந்தால் சொல்லுங்கள்....!!!
உங்களுக்கும் இது போல் அனுபவம் இருந்தால் பகிர்ந்து
கொள்ளுங்கள்......

முடிஞ்சா ஒட்டு போடுங்க......

கேள்வியோடு ??
ஜெட்லி




4 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

படத்த மாதிரி தாங்க கண்ணு காது மூக்கு ஒட்ட வச்சு வதந்தி பரவுது படம் நல்ல செலக்சன்

லோகு said...

அந்த மாஸ்டர் இன்னும் தொழில் நடத்தறாரா...
மாப்ள உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா.. தமிழ்மணம் சைட்டை யாரோ ஹேக் பண்ணிட்டாங்களாம்..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

போலியோ சொட்டு மருந்து கொடுத்த அன்னைக்கு நடந்த சமாச்சாரம்.............,

Bala De BOSS said...

மச்சி இந்த மாதிரி இடுகை போடுறவங்கள எல்லாம் குண்டர் சட்டத்தில் உள்ளே போட சட்டம் கொண்டு வராங்களாம்.....