Friday, July 3, 2009

நாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு.....

நாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு.....
*******************************************
நம் ஊர்களில் பேருந்துகளின் அவல நிலை....

கடந்த வாரம் நானும் எனது நண்பர்களும் ஒரு மினி பயணமாக மாம்மலபுரம் தாண்டி கடலூர்க்கு முன் இருக்கும் ஒரு இடத்துக்கு சென்றோம்.

(நாங்கள் இந்த பஸ்சில் செல்லவில்லை, வேற பஸ் படம் கிடைக்கவில்லை)


நாங்கள் ஏறிய பேருந்தில் இருக்கைகள் நிறைந்துவிட்டதால்
நாங்கள் அனைவரும் நின்று கொண்டே பயணித்தோம்.
அன்பு நண்பர் சின்ன தம்பி எனப்படும் சரவணன் அவர்கள்
பயண கழிப்பால் கண்டக்டர் அவர்களிடம் அனுமதி வாங்கி
டிரைவர் அருகே உக்காந்து கொண்டு வந்தார்.

நாங்கள் நின்று கொண்டே வந்தோம், E.C.R ரோட்டில் பஸ்
பறக்கும் என்று பார்த்தால். ஷேர் ஆட்டோகாரன் கூட எங்களை ஓவர்டேக் செய்து விட்டு போனான். எங்கள் பின்னாடி வந்த
அனைத்து பஸ்களும் எங்களை ஓவர்டேக் செய்து கொண்டு முன்னால் போனது.தீடிரென்று சரவணனிடம் இருந்து நண்பர் ராம் அவர்களுக்கு ஒரு sms ,

"டேய் டிரைவர்க்கு பஸ்ல ஆறாவது கீர் இருக்கிறது இப்பதாண்டா தெரியுது. இவ்வளவு நேரம் அஞ்சாவது கீர்லதான் வண்டி ஓட்டிட்டு வந்துருக்கார், அதை வேற டிரைவர் சிரிச்சிகிட்டே சொல்லி மாத்துறார் டா".

அவன் sms வந்த அஞ்சாவது நிமிஷத்தில் நாங்கள் இறங்க வேண்டிய பஸ் நிறுத்தம் வந்து விட்டது.

போனஸ் செய்தி:

பாவம் டிரைவர் இதுவரை ஐந்து கீர் உள்ள வண்டிதான் ஒட்டி
பழக்கமாம், அவரிடம் தீடிரென்று இந்த வண்டியை கொடுத்து உள்ளனர். அதுவும் இல்லாமல் வண்டி அடிக்கடி ஹீட் ஆகுதாம்.

(உங்க(டிரைவர்) குத்தமா அரசு குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல)

******************************

டிராபிக் போலீஸ்

(இன்னைக்கு எவனும் சிக்கலையே.....சுழ்நிலை பாட்டு:காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி)


நீங்கள் பைக்கிலோ அல்லது காரிலோ போகும் போது உங்கள்
முன் ஆறு அல்லது எட்டு சக்கரம் கொண்ட லாரி சென்று
கொண்டிரிக்கலாம், அப்படினா அப்படியே பிரேக் போட்டு மெதுவா போங்க.தயவு செய்து அந்த லாரி பின்னால் போகாதிங்க, அது ஆட்டோ பின்னால் போவதற்கு சமம்.


ஏன்னா கண்டிப்பா அந்த ஸ்பீடாக வரும் லாரியை டிராபிக்
போலீஸ்காரர் கடமை உணர்ச்சியோடு கண்டிப்பாக நிறுத்துவார்.
ஆம் சென்னை நகரத்தில் காலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை அந்த லாரிகளுக்கு உள்ளே வர அனுமதியில்லை.


சரி அந்த போலீஸ்காரர் நிறுத்தி பைன் போடுவார்ன்னு மட்டும்
நினைக்காதிங்க, எல்லாம் இருபது,முப்பது வாங்கத்தான் நிறுத்துவார். இந்த மாதிரி லாரி ஓட்டுனர்கள் காசை கொடுப்பதை
நான் தினமும் பார்த்து கொண்டு தான் இருக்கேன். முக்காவாசி
காலையில் தான் இது நடக்கும், டிராபிக் போலீஸ்காரர் அந்த
லாரி பின்னால் எந்த வண்டி வருகிறது அல்லது சைடில் எந்த
வண்டி வருகிறது என்று எதுவுமே அவர்கள் பார்ப்பதில்லை.
அந்த லாரியை பார்த்தாலே கை போட்டு விடுவார்கள் பின்னாடி
வரவன் எவ்வளவு பாஸ்ட் வரான் என்றெல்லாம் பார்க்காமல்
அவர்கள் பாட்டுக்கு நிறுத்துவதால் பல விபத்துக்கள் நடப்பதற்கு
டிராபிக் போலீஸாரே காரணம் ஆகி விடுகின்றனர் என்பது
கசப்பான உண்மை.அவர்கள் அந்த லாரியை மடக்கி நிறுத்தும்
கொஞ்ச நேரத்தில் டிராபிக் ஜாம் ஆகி விடும்.


(நம்புங்க... இவங்க லாரியை மடக்க நிற்கவில்லை)


நான் அனைவரையும் சொல்லவில்லை, சில நல் உள்ளம் கொண்ட டிராபிக் போலீசாரும் நம் ஊரில் உள்ளனர். இந்த மாதிரி லாரியை
கண்டால் தூரத்தி கொண்டு போய் பணம் பிடிங்கிவிட்டு தான்
மறு வேலை பார்க்கும் போலீஸாரும் உள்ளனர்.

சரி மக்களே பார்த்து வண்டி ஒட்டுங்கோ......

(ராஜா வசூல் ராஜா, மாமூல் வாங்க போவது யாரு... நீதான்).

இது போல் உங்களுக்கும் அனுபவம் இருந்தால், கமெண்ட்ல
எழுதி எங்க கூட பகிர்ந்துக்கலாம்.

உங்கள்
ஜெட்லி.

6 comments:

லோகு said...

போலீஸ் அன்பர்களுக்கு கப்பம் காட்டாத வாகன ஓட்டிகளும் இருப்பார்களா என்ன??

தப்பு நம்ம மேல இருந்தாலும் அவங்க லஞ்சம் வாங்கிட்டு விட்டரதால தான் நான் எல்லாம் இன்னும் லைசென்ஸ் இல்லாம வண்டி ஓட்டிட்டு இருக்கேன்..

நையாண்டி நைனா said...

என்னையா...இது... நீங்க போன பஸ் படமும் கிடைக்கலே... அதுலே உங்கக்கு இடமும் கெடைக்கலே... ஆன்னா உங்களுக்கு பதிவு போடுறதுக்கு தடம் கெடச்சிருக்கு...???...

இராகவன் நைஜிரியா said...

என்னத்த சொல்லி, என்னத்த செஞ்சு, ஓன்னும் பண்ண முடியலீங்க... எந்த பக்கத்தில் இருந்து யார் வருவாங்கன்னே புரியலை...

வண்டி ஓட்டிட்டு, வீட்டுக்கு பத்திரமா திரும்பி வந்தா நாம செஞ்ச புண்ணியம் அப்படின்னு நினைக்க வச்சுட்டாங்க..

(தற்போது சென்னையில்..)

சித்து said...

லோகு நீ பேரம் பேசி லஞ்சம் குடுத்து நேரத்தையும் பணத்தையும் வீனடிக்கரத விட மொத்தமா தண்டம் அழுது ஒரு License வாங்கிடு.

சித்து said...

வாங்க ராகவன், நாம செஞ்ச புண்ணியம் மட்டும் பத்தாது. நம்ம முன்னோர்கள் செஞ்ச புண்ணியத்தையும் செத்தாத்தான் வீடு வந்து சேருவோம், முழுசா.

சித்து said...

மச்சி இதுக்கே இப்படியா, இந்த கதையும் கேளு. போன வாரம் என் தம்பி கூட கார்ல ஒரு சின்ன ரோடு வழிய போனோம். அங்க ஒரு கம்னாட்டி சரியாய் நடு சென்டர்ல நிக்கவா நடக்கவானு யோசிச்சிட்டு இருந்தான். எந்த பக்கமும் போக வழி இல்ல. அதனால ஒரு தடவ ஹோர்ன் அடிச்சோம், அவ்வளவு தான் எங்க பக்கம் திரும்பி முன் கண்ணாடியில ஒரே அடி அப்புறம் "ஓத்தா என்ன %&^%^(*& டா ஹோர்ன் அடிக்கற?? $^%$*&(& ஓரம் போடா ^%&^(*&*(&. மவனே அவ்ளோ தான் காலி பண்ணிடுவேன்." தல புல் போதை. ஏங்க ஹோர்ன் அடிக்கிறது அவ்ளோ பெரிய குத்தமா?? எல்லா புகழும் நம்ம இந்நாள் முன்னாள் ஆட்சியாளர்களுக்கே.