Monday, July 13, 2009

பொடிமாஸ்....(13.7.09)

பொடிமாஸ்....

கடந்த சனிக்கிழமை நம்ம ப்ளாகை ஓபன் செய்ஞ்சா
எவனோ ஒருத்தன் ஹாக்(HACK) பண்ணி வச்சிரிக்கான்.
நான் கொஞ்ச நேரம் குப்புற படுத்து யோசிச்சேன்,
ஒன்னும் பிடிபடல.தீடிர்னு பார்த்தா இன்னைக்கு சரியாயிடிச்சு.
ஆனா சனிக்கிழமை வந்த 424 VISITORS என் மேல ரொம்ப
காண்டு ஆயிருப்பாங்க.... அது என் தவறில்லை, தொடர்ந்து
ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்.


******************************

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பாடல்களில் ஹோ ஈஸா
மற்றும் உன்மேல ஆசைதான் பாடல் வேறு பாடல்களை
நினைவு படுத்தினாலும் கேட்பதற்கு நன்றாக தான் இருக்கிறது.
செல்வராகவன் படத்தை பற்றி சொல்லவேண்டாம் அவரின்
சில படங்களில் வக்கிர காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது.

ஆயிரத்தில் ஒருவன் பாட்டில் இருந்து சாம்பிள் பாடல் வரிகள்.....

# நான் படைப்பேன் உடைப்பேன் உன் போல கோடி செய்வேன்....

#ஒரு நாளில் என்னுள் அடங்கும் தூசி நீ உன்னை கொன்று என்னை
யாசி........

#என் எதிர ரெண்டு பாப்பா கை வச்சா என்ன தப்பா.....

என்ன இருந்தாலும் போங்க... முதல் நாள் படம் பாக்குறோம்.


***********************************
ஜெட்லியின் தத்துவம் :

# என்னதான் கலர் கலரா சாம்பு இருந்தாலும்
தலையில போட்ட அது வெள்ளையாதான் நுரை வரும்.

***********************************

ஜோக்:

ஒரு மருத்துவமனையில் நான்கு நர்ஸ்கள் பேசி கொண்டிரிந்தனர்.

முதல் நர்ஸ்: நம்ம டாக்டர் வர வர ரொம்ப டார்ச்சர் பண்ரார்ப்பா
சம்பளம் வேற ஒழுங்கா தரதில்ல. அதனால நான் அவரோட
ஸ்டேட்ஸ்கோப்ல ஒரு சின்ன ரிப்பேர் பண்ணி வச்சிட்டேன்.

இரண்டாம் நர்ஸ்: நான் அவரோட தெர்மாமீட்டர்ல தப்பு தப்ப
டிகிரி காட்ற மாதிரி மாத்திட்டேன்.

மூன்றாம் நர்ஸ்: நான் டாக்டர் டேபிள் டிராயர்யில் உள்ள
condomல ஊசி வச்சி ஓட்டை போட்டுடேன்.

நான்காம் நர்ஸ் மயங்கி விழுகிறார்.

****************************

கடந்த வாரம் நெருங்கிய நண்பனின் அறைக்கு சென்று
இருந்தேன்.சும்மா கொஞ்ச நேரம் ப்ளாக் பத்தி பேசினோம்.
நான் அவன் கிட்ட சும்மா கில்மாவா டைட்டில் சொல்லு
மச்சி என்றேன்.

உடனே அவன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டான்.

"பிட்டு படம் பார்க்கும் போது நம் உடம்பில் மிகவும்
உணர்ச்சியுள்ள பகுதி எது
? என்றான்.

நான் "டேய் என்னடா கேள்வி இது" என்றேன்.

"உனக்கு தெரியுமா தெரியாதா" என்றான்.

"அடப்பாவி ஊருக்கே தெரியும்டா" என்றேன்.

"நீ ஏன் எப்பவும் தப்ப நினைக்கிற" என்று தொடர்ந்தான்.
"காது தான் மச்சான் பதில் அதுக்கு". அவனே விளக்கம்
வேற சொன்னான் "இப்போ வீட்ல பிட்டு படம் பார்த்தன்னு
வை, நீ யாரவது வந்துடுவாங்கோல என்ற பயத்தில் உன்
காது தான் பயங்கர உணர்ச்சியா இருக்கும்" என்றான்.

சே தப்பா நினைச்சிடேனே......(நீங்க???)

************************************

கேட்டது:

நேற்று நண்பர்கள் ராமும் அருளும் போன் பண்ணி நீ இதை பத்தி
கண்டிப்பா எழுதி ஆகணும்டா என்றார்கள். மேட்டர் கிழே

சென்னை புரசைவாக்கம் சொர்ண சக்தி அபிராமி தியேட்டருக்கு சென்ற நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர் காரணம் உள்ளே படம் பார்ப்பவர்களின் படத்தை வெளியே
பெரிய ஓடும் படமாக காட்டுகிறார்களாம். நண்பர்கள்
இருவரும் அனைத்து காதலர்களும் இதை தெரிந்து
கொள்ள வேண்டும் என்று நல் எண்ணத்தோடு என்னிடம் தெரிவித்தனர் அதை நான் உங்களிடம் சொல்லிவிட்டேன்
பார்த்து பண்ணுங்க....

(பி.கு:
என் நண்பர்கள் கூட வேறு யாரும் செல்லவில்லை
என்று நம்புவோம்
)

ஜெட்லி பார்வை:

கண்டிப்பா இது ஒரு நல்லா விஷயம்ன்னு நினைக்கிறேன்,
இந்த மாதிரி தங்களை ஒருத்தர் MONITOR பண்றாங்கன்னு
தெரிஞ்சா தியேட்டர் உள்ளே இருப்பவர்கள் எச்சில் தூப்பாமல்
இருப்பார்கள்.வேற எதுவும் சொல்வதற்கு இல்லை.

****************************


எதிர் பதிவு போடும் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை:

(சும்மா ஒரு பப்ளிசிட்டிக்குதாங்கோ)

சில பேர் பதிவுலகத்தில் எதிர்ப்பதிவு போடுவதே வேலையாக
திரிந்து கொண்டிரிக்கின்றனர். இனிமே யார் எதிர்ப்பதிவு போட்டாலும் அவர்களுக்கு ஞாபகங்கள் படத்தின் டிக்கெட்
அனுப்பி வைக்கப்படும்.அது மட்டும் இல்லாமல் தியேட்டரில்
DROP செய்ய INNOVA காரும் கூட இரு அடியாட்களும் அனுப்பப்படுவார்கள்.(படத்துக்கு வரமாட்டேன் என்று முரண்டு பிடித்தால்,உங்கள் மேல் விழும் குத்துக்கு கம்பெனி பொறுப்பல்ல).இது தவிர எங்கள் அண்ணன் தங்க கம்பி
சாம் ஆண்டர்சன் நடித்த யாருக்கு யாரோ பட டிவிடி
உங்களுக்கு தினமும் போட்டு காட்டப்படும்.

***********************

புடிச்சா ஒட்டு போடுங்க....

உங்கள்
ஜெட்லி.


7 comments:

Anonymous said...

பொடிமாஸ் நல்லா இருக்கு!!

நையாண்டி நைனா said...

எனது கடையை திவாலாக்கும் எண்ணமுடன்.... தம்பி ஜெட்லி அந்த கடைசி அறிவிப்பை வெளி இட்டுள்ளார்... அவரது சவாலை முறி அடித்து எங்கள் கம்பினி வெற்றிக் கொடி நாட்டும். அவரது அறை கூவலை எங்கள் கம்பினி "ஓல்ட் மங்கேஷ்வரன்" துணையுடன் முறி அடிக்கும்.

உங்களோட இந்த நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.....

கடைக்குட்டி said...

கலக்கல்..

கொஞ்சநாளா இந்தப் பக்கம் வராட்டியும் நீங்க கலக்குறீங்க தொடர்ந்து.. வாழ்த்துக்கள் நண்பா...

வந்தியத்தேவன் said...

என்னவோ உலகம் சுற்றுவதாக் அறிந்தேன் அப்படியிருந்தும் ஞாபகங்கள் பாத்திருக்கிறீர்கள். எனக்கு 2 ரிக்கெட் அனுப்பவும் இரண்டுபேருக்கு கொடுக்கவேண்டும்.

வால்பையன் said...

//சில பேர் பதிவுலகத்தில் எதிர்ப்பதிவு போடுவதே வேலையாக
திரிந்து கொண்டிரிக்கின்றனர்.//

அதுல தானே பொழப்பு ஓடுது!

வால்பையன் said...

மொக்கை மன்னா!

சப்ராஸ் அபூ பக்கர் said...

///சே தப்பா நினைச்சிடேனே......///

ஏங்க?... ஆன்னா... ஊன்னா.... தப்பா நினைக்க ஆரம்பிச்சிட்றீங்க?.....

நல்ல இருந்தது.... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.....