Tuesday, July 7, 2009

இதென்ன ரோடா இல்ல..........

நான் பெரும்பாலும் ஞாயிறு அன்று என் நண்பர்களுடன் பீச் ரோடு வழியாக மெரினா பீச் அல்லது பெசன்ட் நகர் பீச் செல்வது வழக்கம், அப்பொழுது நான் சாலைகளில் கண்டதை இங்கு கூறுகிறேன். சமீப காலமாக அதுவும் குறிப்பாக ஞாயிற்று கிழமைகளில் சாலைகளில் வாகனம் ஓட்டி சென்றோ அல்லது நடந்து சென்றோ விட்டு பத்திரமாக வீடு வந்து சேர்ந்தால் அது நம் முன்னோர் செய்த புண்ணியம் தான். இதற்கு முக்கிய காரணம் இரு சக்கர வாகனஓட்டிகள் தான், ஏதோ ரேஸ் ஓட்டுவது போல் இவர்கள் செய்யும் அட்டூழியத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.


பொதுவாக இந்த சாலையில் சிக்னல் ரொம்ப கம்மியாக இருக்கும், அதனால் நல்ல வேகமாக செல்ல தூண்டும். ஆனால் நல்லா கூட்டமாக இருக்கும் (பெண்கள் கூட்டத்துக்கு கேட்க வேண்டுமா??) இதனால் ஒரு சவாலாக நல்லா வேகமா ஓட்டுறாங்க. இதில் மூன்று வகையாக பிரிக்கலாம்.

1. கூட ஒரு பொண்ணு இருந்தா இவனுங்க போற வேகம் இவர்களுக்கே தெரியாது, இவர்கள் வேறு ஒரு லோகத்தில் பறந்துகொண்டிருப்பதாக தான் ஒரு எண்ணம், அப்படியே கண்ட எடத்துல பிரேக் போடுறதும் பள்ளம் மேடு பாத்து பாத்து வேணும்னே ஏற வேண்டியது. பாவம் அந்த புள்ள ஒரு ஷேர் ஆட்டோ பயணம் தான், பெரும்பாலும் இவர்கள் காதலர்களாக தான் இருப்பார் அதனால் ஒரு வயசு முறுக்குல கொஞ்சம் வேகம் போவாங்க ஆனா ரொம்ப வேகம் போன பொண்ணு நல்லா பயத்துல தட்டுவா அதனால் இவர்களால் ஆபத்து கொஞ்சம் கம்மி தான்.

2. நம்ம பய தன நண்பன் கூட ஏதாவது வெட்டி கதை பேசிட்டே போவான், ஆனா வேற ஒருத்தன் சல்லுனு முந்திட்டா போதும் அவ்வளவு தான் சும்மா ஜல்லிக்கட்டு காளை மாதிரி வீறு கொண்டு எழுவான் இவன், உடனே இதை உணர்ந்து பின்னால இருக்கும் நண்பன் கெட்டியா புடிச்சிகிட்டா உண்டு, இல்லைனா அப்புறம் பாப்போம் மச்சினு ரேஸ் கெளம்பிடுவான் நம்ம ஆளு. இவங்களுக்கு ஈகோ தான் பிரச்சனை அதெப்படி karizma பெரிசா இல்லை Pulsar பெரிசா அப்படின்னு சோதனை பண்ண ஆரம்பிச்சுடுவானுங்க.



3. இந்த மூணாவது குரூப் தானுங்க டெர்ரர் குரூப் (அவரு மாதிரி டெர்ரர் கிடையாது (:P ). இவனுங்க எப்பவுமே பன்னி மாதிரி, ஒரு கூட்டமா தான் சுத்துவானுங்க இது வந்து ஒரு Gang War மாதிரி. இரண்டு மூன்று குழுக்கள் ஒரு ஏரியால இருப்பானுங்க ஒரு குழுவுக்கு குறைந்தது பத்து நபர் இருப்பானுங்க. ஒரு நபர் 150 ருபாய் கொடுக்கணும் ஆகா 1,500/- பெட் கட்டி ரேஸ் ஆரம்பம் ஆகும். அதாவது பாரிமுனை தொடங்கி லைட் ஹவுஸ் அல்லது பெசன்ட் நகர் வரை யார் அல்லது எந்த குழு முதலில் செல்கிறதோ அவர்களுக்கு தான் அந்த முழு தொகையும். இதற்காக இவர்கள் வண்டியில் பல்வேறு மாற்றங்களை செய்து வைத்திருக்கின்றனர். இந்த வெறி தான் பேய் மாதிரி இவர்கள் செல்வதற்கு காரணம், பத்து பதினைந்து வண்டிகள் தொடர்ச்சியாக நூறு KM வேகத்தில் ரோட்டில் சென்றால் எப்படி இருக்கும்?? இதனால் பெண்களும் குழந்தைகளும் மனதளவில் பாதிக்கபடுகின்றனர். கரணம் தப்பினால் மரணம், சரி இவர்கள் இவ்வாறு சென்று செத்து தொலைத்தால் சரி, தான் செய்த தவறுக்கு தண்டனையாக எடுத்துக்கொள்ளலாம் ஆனால் இவர்கள் குடும்பத்தினர்?? இவர்களால் ஏற்படும் விபத்தில் பாதிக்கப்படும் அப்பாவிகள்?? யோசிப்பார்களா?? அப்படி ஜெயிக்கும் பணமும் நேராக TASMAC தான் செல்லும்.



இந்த இடத்தில ஒரு சம்பவத்தை நான் கண்டிப்பாக கூற வேண்டும். அதாவது இந்த குழு ஒரு முறை சாந்தோம் சர்ச் எதிரில் ஒரு பேருந்தை முந்தும் பொழுது அங்கு ரோட்டை கடக்க முற்பட்ட ஒரு பெண்னை ஏற்றியதில் அந்த பெண் அங்கேயே இறந்து போனார், இவர்கள் ஒரு நொடி நின்னு கூட எந்த உதவியும் செய்யவில்லை. அந்த பெண் யாரோ அவர் குடும்பம் இன்று என்ன ஆச்சோ?? அது எனக்கு தெரியாது ஆனால் அந்த பெண்னை கொன்றனவனின் நிலை என்ன தெரியுமா?? சரியாக இரு மாதங்களுக்குள் அதே இடத்தில அதே மாதிரி ஒரு பேருந்தை முந்தும் பொழுது எதிரே வந்த பேருந்தில் அடி பட்டு அதே போல் செத்து போனான். இதை என்னவென்று சொல்வது?? விதியா?? அந்த பெண்ணின் ஆவி அடித்துவிட்டதா?? அவளின் குடும்பத்தாரின் சாபமா?? கடவுள் தண்டித்து விட்டாரா?? அதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். இதில் ரொம்ப கொடுமையான விஷயம் என்னவென்றால் அவனை அவன் நண்பர்கள் நின்று உதவவில்லை அதே போல் சரியாக இரண்டே வாரங்களில் மீண்டும் தங்கள் வேலையே தொடங்கிவிட்டனர். இதை நம்புவதும் விடுவதும் உங்கள் இஷ்டம்.


இதுங்க வளர்ந்து கெட்டுபோனதுங்க இதுங்கள பாத்து வளர்ற பசங்க என்ன பண்ணுறாங்க தெரியுமா?? நம்ம மன்றோ சிலை இருக்குல, அந்த பக்கம் போகும் பொழுது ரொம்ப ஜாக்ரதையா போங்க. அங்க ஸ்கூல் பசங்க சைக்கிள்ல பண்ற வித்தை இருக்கே யப்பப்பா, இப்படி தான் நான் ஒரு நாள் வேலைய முடிச்சிட்டு இரவு ஒரு 08:30 மணிக்கு அந்த பக்கம் வந்துட்ருந்தேன் கரெக்டா அந்த சிலைய தாண்டியவுடன் நாடு ரோட்டில் ஒரு பத்து பசங்க சைக்கிள்ல முன் சக்கரத்த தூக்கிட்டு ஒரு சக்கரத்துல வேகமா ஓட்டிட்டு எனக்கு எதிர் திசைல வரானுங்க. கொஞ்சம் கூட பயம் இல்லை "இவனுங்க என்ன இடிசிடுவானுங்களா என்ன??" இப்படி ஒரு எண்ணம், சரியா அருகில் வந்தவுடன் அந்த மிலிடரி ரோடுக்குள் ஓடிட்டானுங்க. ஏதாவது கார் வேகமா வந்து இடிச்சா சட்னி தான்.

இந்த வித்தை காட்டுறது வேகமா போறது இதெல்லாம் பண்றதுக்கு தான் ஸ்ரீபெரும்புதூர் அருகே ரேஸ் கோர்ஸ் இருக்கே அங்க போய் பண்ண வேண்டியது தான?? யாரு வேண்டாம்னு சொன்னாங்க?? நம்ம காவல் துறையும் பாவமுங்க இதை ஒன்னும் பண்ண முடியல, முதல்ல இவங்க போற வேகத்துல ஏதாவது தடை பண்ணி அத பாக்காம இடிச்சி செத்து போனா பாவம் இவுங்க தலை தான் உருளும். அப்படியே புடிச்சிட்டா பெரிய எடத்துல இருந்து போன் வரும் உட்டுடுவாங்க.

நீங்க என்ன வேணும்னாலும் பண்ணுங்க அடுத்தவங்களுக்கு தொந்தரவு குடுக்காதீங்க.

நன்றி.

சித்து.

1 comment:

தேவன் மாயம் said...

இரு சக்கர வாகனஓட்டிகள் தான், ஏதோ ரேஸ் ஓட்டுவது போல் இவர்கள் செய்யும் அட்டூழியத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.
//
உண்மைதான் நண்பரே!!