Thursday, December 31, 2009

புத்தகத்திருவிழா 2010 - நாள் 1

அஞ்சு மணிக்கு, ஐயா வந்து ரிப்பன் வெட்டி திறந்து, பொற்கிழி வாங்கிக்க, ச்சீ ச்சீ, கொடுக்க போறாருன்னு அழைப்பிதழ்ல போட்டிருந்ததால், ஆறு மணிக்கு தான் வீட்டை விட்டே கிளம்பினேன். ஒழுங்கா தெரிஞ்ச வழியில போகாம, கொஞ்சம் சீக்கிரம் போயிரலாம்னு நினைச்சு, கத்திப்பாராவில் திரும்பாம நூறடி சாலையில் போயிட்டேன். போனதுக்கு அப்புறம் தான் தெரியுது, எந்த இடத்தில் திரும்பி, எந்த சாலையில் போகணுங்கிறது தெரியாதுன்னு. ஒரு வழியா போனவருடம் கடைசி நாளில் அவசரமாய் சென்ற வழி நினைவுக்கு வர, சாமியார் மடம் போற சாலையில் திரும்புவதாக நினைச்சு மாம்பலம் போற சாலையிலேயே திரும்பினேன். அப்புறம் உஸ்மான் சாலை சுரங்கபாதை மகாலிங்கபுரம், லயோலா கல்லூரின்னு சுத்தி ஏழேகாலோட போய் சேர்ந்தேன். நான் போனப்போ, விழாவெல்லாம் முடிஞ்சு எல்லாம் கிளம்பி போயிட்டாங்க, நல்லவேளை தப்பிச்சேன்.(இதுவரை ஆற்றிய இலக்கிய பணியை(!) பாராட்டி எனக்கும் பொற்கிழி ஏதாவது குடுத்துட்டாங்கன்ன என்ன பண்றது, அது கூட பரவாயில்ல, தலைவரை பாராட்டி கவிதை, கிவிதை பாடச்சொன்னாங்கன்னா).

பள்ளி வளாக வாசலிலிருந்து, அரங்க நுழைவாயில் வரை காணப்படும் பதிப்பகங்களின் விளம்பரப் பலகைகள் அப்போது தான் தயாராகிக் கொண்டிருந்தன. முதல் நாள் என்பதால் நுழைவு கட்டணம் இல்லாமலேயே உள்ளே விட்டுட்டாங்க. பல ஸ்டால்களில் அப்போதுதான் கடைசிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருந்ததன. ஏற்கனவே வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் கைவசம் இருந்ததால், காலச்சுவடு ஸ்டால் எங்கிருக்குன்னு சந்தை அலுவலகத்தில் விசாரித்து சென்றேன்.

நானே சொந்தமா படிச்சு கவரப்பட்டு தொடர ஆரம்பிச்ச எழுத்தாளர்கள், புதுமைபித்தன் (தமிழ் துணைப்பாட தொகுதியில் இருந்த காஞ்சனை, செவ்வாய் தோஷம்), கல்கி (அதிர்ஷ்டவசமாய் கைக்கு கிடைத்த பொன்னியின் செல்வனின் மூன்றாம் பாகம்), சுஜாதா (கற்றதும் பெற்றதும்), எஸ்ரா (துணையெழுத்து), கசீ சிவக்குமார் (கானல்தெரு), மத்தபடி இதுவரை வாசிச்சது எல்லாம் யாராவது பரிந்துரைத்தது தான். இந்த வருட விருப்பப் புத்தக பட்டியல் உபயம், எஸ்ராவின், கதாவிலாசம். ஐம்பது எழுத்தாளர்களை அவர்களின் சிறந்த நூல்களை பற்றிய குறிப்புகளோடு அறிமுகம் செய்யும் இந்த கட்டுரை தொகுப்பில் என்னை கவர்ந்த பட்டியல்இது,
கிருஷ்ண பருந்து - ஆ மாதவன் - தமிழினி - Rs 65
அம்மா வந்தாள் - தி.ஜா - ஐந்திணை - *
என் பெயர் ராமசேஷன் - ஆதவன் - ??
கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன் -  கிழக்கு - Rs 60 **
நித்ய கன்னி - எம்வி வெங்கட்ராம் - காலச்சுவடு - Rs 100
ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன் - கிழக்கு - Rs 70 **
கடல்புரத்தில் - வண்ணநிலவன் - கிழக்கு - Rs 80 **
ஜி நாகராஜன் படைப்புகள் - காலச்சுவடு - Rs 450 **
அபிதா - லாச ராமாமிருதம் - கிழக்கு - Rs 75 (காலச்சுவடு - Rs 80) **
பசித்த மானுடம் - கரிச்சான் குஞ்சு - காலச்சுவடு - Rs 140
மதினிமார்களின் கதை - கோணங்கி - ??
பள்ளிகொண்டபுரம் - நீல பத்மநாபன் - காலச்சுவடு - Rs 225
குழந்தைகள் பெண்கள் ஆண்கள் - சுந்தர ராமசாமி - காலச்சுவடு - Rs 450 **
சுந்தர ராமசாமி சிறுகதைகள் - காலச்சுவடு - Rs 575 **
காடு - ஜெயமோகன் - தமிழினி - Rs 260 **
ரப்பர் - ஜெயமோகன் - ??
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன் - காலச்சுவடு - Rs 250
சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன் - ??

இது தவிர நீண்ட நாள் விருப்பமான சில புத்தகங்கள்,

கன்னி - பிரான்சிஸ் கிருபா - தமிழினி - Rs 260 **
வியாசர் விருந்து
- ராஜாஜி - வானதி - Rs 80 **

தலைவர் சுஜாதாவின் பரிந்துரை

வாசவேச்வரம் - கிருத்திகா - காலச்சுவடு - Rs 140 **
பொய்த்தேவு
- கநா சுப்ரமணியம் - Rs 150
தற்கால தமிழகராதி
- க்ரியா - *

காலச்சுவடுக்கு வழி விசாரித்து நேரே செல்லாமல் வழியில், கிழக்கு பதிப்பகத்தில் நுழைந்ததால், வாங்கிய இரு புத்தகங்கள்,

குண சித்தர்கள் - கசீ சிவக்குமார் - கிழக்கு - Rs 125 **
கிச்சு கிச்சு - ஜே எஸ் ராகவன் - கிழக்கு - Rs 60 **

இந்த பட்டியலில் இல்லாத, இன்றைய விசிட்டில் கண்ணை உறுத்திய புத்தகங்கள்,

குமாயுன் புலிகள் - ஜிம் கார்பெட் (தமிழில்:திஜர) - காலச்சுவடு - Rs 125
சிலிர்ப்பு (சிறு கதைகள்)- தி ஜா - காலச்சுவடு - Rs 250
வாடிவாசல் - சிசு செல்லப்பா - காலச்சுவடு - Rs 40
துப்பறியும் சாம்பு (முழு தொகுப்பு) - தேவன் - கிழக்கு - Rs 300 (அம்மாவுக்காக)
குருதிப்புனல் - இ.பா. -கிழக்கு - Rs 150
விக்கிரமாதித்தன் கதைகள் - பூம்புகார் - பரதன் (தொகுப்பு) - Rs 80

மேலே உள்ள பட்டியலில் மீதமிருக்கும் புத்தகங்களை, இனிவரும் நாட்களில் வாங்க வேண்டும். அதற்குள் கண்ணில் படுவது எத்தனை வாங்கப்போகிறேனோ தெரியவில்லை. ஹ்ம்ம்ம்.

கிழக்கு பதிப்பகத்தில் டெபிட் கார்டு இயந்தரம் காலைவாரிவிட்டதால், மீண்டும் சட்டையை கழற்றி கொடுக்கும் நிலைக்கு ஆளானேன், அப்புறம் மேல், கீழ், உள், வெளி அத்தனை பாக்கெட்டுகளில்லும் தோண்டியெடுத்து கொடுத்து வந்ததால், ஐந்து ரூபாய்க்கு கடலை மட்டும் வாங்கிக் கொறித்தபடி வெளிவந்தேன்

பின்குறிப்பு :

காலச்சுவடு பதிப்பகத்தில், மூன்று புத்தகம் வாங்கினால் ஒரு புத்தகம் அன்பளிக்கிறார்கள் (மூன்றில் எது விலை குறைவோ அது), மூன்றுக்கு மேல் வாங்க எண்ணியிருப்பவர்கள் கொஞ்சம் யோசித்து முடிவெடுத்தால் நல்லது.

மேலே உள்ளவற்றில் சில புத்தகங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பதிப்பகங்களால் வெளியிடப்பட்டிருக்கலாம். விபரம் ஏதேனும் தெரிந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடலாம்.

நீங்கள் ரசித்த புத்தகங்களையும் தெரியப்படுத்தினால், பட்டியலில் இணைத்துக்கொள்வேன்.

** - இன்று வாங்கினேன்
* - விலை தெரியவில்லை
?? - தேட வேண்டும்
 


நன்றி
சங்கர்

17 comments:

ஹாலிவுட் பாலா said...

எனக்கு துப்பறியும் சாம்பு புத்தகம் வேணுமே :( :(

புலவன் புலிகேசி said...

புத்தக விபரங்கள் நன்று

சரண் said...

அஞ்சு ரூபா நுழைவுக் கட்டணம்தான் கடலையா மாறினதா?

ஆனா ஒண்ணுப்பா. அந்த கண்காட்சிக்குள்ள போன அவ்வளவு புத்தகத்தையும் அள்ளிகிட்டு வந்துரலாமொன்னு எனக்கும் தோணிருக்கு.

பிரபாகர் said...

யே சாமி, 2610 ரூவாவுக்கு வாங்கியிருக்கீங்க! புத்தகத்துக்கு பண்ற செலவு என்னிக்குமே உறுப்படியா இருக்கும். சங்கரு, கலக்குங்க! வர்றேன், நேர்ல பாக்கும்போது புத்தகம் வாங்க போலாம்! தொடர்பு நம்பர prabhagar@gmail.com அனுப்புங்க!

பிரபாகர்.

சங்கர் said...

//ஹாலிவுட் பாலா said...
எனக்கு துப்பறியும் சாம்பு புத்தகம் வேணுமே :( :(//


கிழக்கு பதிப்பகத்துல ஆன்லைன்ல கிடைக்குது


http://thoughtsintamil.blogspot.com/

சங்கர் said...

//புலவன் புலிகேசி said...
புத்தக விபரங்கள் நன்று//

வாங்க புலவரே

பின்னோக்கி said...

நல்ல கவரேஜ். தலைவர் உங்களைத் தேடிக்கிட்டு இருந்ததா தகவல். பார்த்துக்கோங்க :).

சரிங்க. நீங்க சொன்ன மாதிரி, மோகமுள், ஜே.ஜே மட்டும் வாங்கி படிக்குறேன்.

சென்ஷி said...

நீங்க மாத்திரம்தான் புத்தகக் கண்காட்சி பதிவு போட்டிருக்கீங்கன்னு நினைக்கறேன். :)

கடைக்குட்டி said...

ம்ம்ம்..ஆனாலும் ரொம்பத்தான் படிக்கிறீங்க...

செ.சரவணக்குமார் said...

பகிர்வுக்கு நன்றி நண்பா.

குப்பன்.யாஹூ said...

thanks for sharing, visit Leka's blog- yaalisai or ilakkiay payanam, Many good books names are there.

அத்திரி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

angel said...

//அது கூட பரவாயில்ல, தலைவரை பாராட்டி கவிதை, கிவிதை பாடச்சொன்னாங்கன்னா////

அங்க வந்தவங்க தான் பாவம்

கலகலப்ரியா said...

avvvvvvvvvvv.. :((((((((...

சங்கர் said...

என்னன்னு புரியலையே, சென்னையில் இல்லியேன்னு பொறாமையோ :)

ஷங்கி said...

புத்தாண்டு வாழ்த்துகள்

சங்கர் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :)