Monday, December 14, 2009

இது எங்க ஏரியா(எலியட்ஸ் பீச்)

இது எங்க ஏரியா(எலியட்ஸ் பீச்) : பார்ட் 3.


சிறு தகவல்:

அண்மையில் புதிதாக திறக்கப்பட்ட நந்தனம் டர்ன்புல்
மேம்பாலத்தில் அண்ணாசாலை செல்பவர்கள் ஏறும்
போதும் கோட்டூர்புரத்தில் இறங்கும் போதும் பார்த்து
நிதானமாக மெதுவாக ஒட்டவும் காரணம் அங்கு வளைவு
கொஞ்சம் அதிகமாவே இருக்கிறது....

எலியட்ஸ் பீச் சென்னையில் இருப்பவர்களுக்கு ஒரு சொர்க்கபூமி
என்றே சொல்ல வேண்டும்.எலியட்ஸ் பீச் அமைந்திருக்கும்
பெசன்ட் நகருக்கு பல சிறப்புக்கள் உள்ளன என்பது உங்களுக்கு
தெரியாதது அல்ல,அதனால் அதை பற்றி சொல்லி மொக்கை
போட விரும்பவில்லை என்பதால் நான் சந்தித்த,சுவைத்த,
பார்த்த சில விஷயங்களை மட்டும் பகிர்கிறேன்.


பெசன்ட் பாஸ்ட் புட்:

எலியட்ஸ் பீச்சுக்கு வந்து இந்த பாஸ்ட் புட்டில் சுவைக்காத
நாக்கு மிகவும் குறைவாகவே இருக்கும் என்பது என் கருத்து.
நான் ப்ளஸ் ஒன் படிக்கும் காலத்தில் இருந்து இங்கே
சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன்.பல பேரை இந்த கடைக்கு
அறிமுகமும் படுத்தியுள்ளேன் காரணம் சுவை.வறுத்த
அரிசி(fried rice) ,பீப், சிக்கன் மஞ்சுரியன் அருமையாக இருக்கும்.

இப்போது இந்த பாஸ்ட் புட்டை சிறு ரெஸ்டாரென்ட் ஆக்கி உள்ளார்கள்.அவர்கள் இந்த அளவுக்கு பெருத்ததுக்கு(தொழிலில்) நானும் ஒரு சிறு காரணம் அதே போல் நானும் இந்த அளவுக்கு பெருத்ததுக்கு(உடம்பில்) அவர்களும் ஒரு காரணம் என்பதை மறுப்பதருக்கில்லை.ஓரிரு மாதங்கள் முன் சென்று இருந்தேன் பழைய மாஸ்டர்களை
காணோம்.சுவை ஒன்றும் சொல்லி கொள்ளும் படி இல்லை.
அதன் பின் அங்கு செல்லவில்லை.யாராவது சமீபத்தில் போய்
இருந்தா கொஞ்சம் சொல்லுங்கப்பா....

karl Schmidt நினைவு சின்னம்:

பல படங்களில் இந்த நினைவுச்சின்னத்தை பார்த்து இருப்போம்.
நான் ஏதோ காதல் நினைவு சின்னம் என்று நினைத்தேன் ஆனால் கடந்த வாரம் நெட்டில் மேய்ந்த போது தான் உண்மை தெரிந்தது. டட்ச் மாலுமி karl Schmidt அவர்கள் கடலில் தத்தளித்து கொண்டு இருந்தவர்களை காப்பாற்ற போகும் போது தன் உயிரை இழந்தார் அதன் நினைவாக இந்த நினைவு சின்னம் கட்டப்பட்டது.


ஆனா இப்போ இந்த நினைவு சின்னம் இருக்குற நிலைமையை
பார்த்து அவர் எலும்பு கூடோடு கடலில் இருந்து எழும்பி வந்து
நம் அரசிடம் "தயவு செய்து இடித்து விடுங்கள்" என்று மனு
கொடுத்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை!
கிழே படங்களை பார்க்கவும்..
இப்போதைக்கு நம்ம ஆளுங்க இதை ஒரு உச்சா போகும் இடமாக
மட்டுமே வைத்து இருக்கிறார்கள்.

போனஸ் செய்தி:

நான் போட்டோ எடுக்கும் போது ஒருத்தர் அவசரமா பக்கத்தில்
வந்து நின்றார்..நாம படம் புடிக்கிறத கூட ஒருத்தன் வந்து
பார்க்குறனே என்று பீல் பண்ணி என் பாக்கெட்டில் செல்லை
வைத்தேன்..கொஞ்ச தூரம் போய் திரும்பி பார்த்தேன்.
அப்போதான் தெரிஞ்சது அவனும் உச்சா போக தான்'
வந்திருக்கான் என்று.

காலையில் கிடைக்கும் மூலிகை ஜூஸ்,பிளானெட் யம்(planet yum),
முருகன் இட்லி ஷாப் என்று நிறைய இடங்கள் உள்ளன.
அதை எல்லாம் பற்றி வேறு ஒரு பதிவில் பார்ப்போம்.


முக்கிய அறிவிப்பு:

காலையில் ஐந்து மணிக்கெல்லாம் பீச்சுக்கு போக நேர்ந்தால்
மணலில் உள்ள பஜ்ஜி கடை பக்கம் பார்க்காமல் போங்க இல்லனா
காலையிலேயே கண்ணு கேட்டு போய்டும்(லவ்வர்ஸ் தான்).
இதெல்லாம் நான் சொன்னா சில பேரு என்னை பார்த்து பல் இருக்குறவன் பகோடா சாப்பிடுறான் உனக்கென்ன என்பார்கள்.


ஜெட்லி கருத்து:

பகோடா சாப்பிடுங்க தப்பில்ல, அதுக்குன்னு இடம் நேரங்காலம்லாம் இருக்குனு தான் சொல்றேன்.

பழைய பாகங்களை படிக்கச் இங்கே கிளிக்அவும்

இது எங்க ஏரியாஅடர்த்தி பார்ட் 1

இது எங்க ஏரியா பார்ட் 2

நன்றி
உங்கள்

ஜெட்லி சரண்.

21 comments:

துளசி கோபால் said...

தினம் பீச் நடைக்குன்னு வீடு எடுத்துட்டு, நொந்துபோய்க்cகிடக்கேன்.

எல்லாம் yuck (-:

சித்து said...

அட நம்ம பெசன்ட் பாஸ்ட் புட், மச்சி கல்லூரி கட் அடிச்சி எத்தனை முறை இங்கு சென்றிருப்போம். அது ஒரு பொற்காலம் டா. இப்ப அங்க ஒன்னும் சரி இல்ல மச்சி செம மொக்க சாப்பாடு.

அப்புறம் பீச் ரோட்டில் உள்ள குல்பி கடை பத்தி சொல்லலையே, "Punjab Ki Mashroor Kulfi:" அப்படின்னு பேரு நெறைய இடத்துல ஆட்டோ மேல வச்சி விப்பானுங்க, ரொம்ப நல்லா இருக்கும், ட்ரை பண்ணுங்க.

Chitra said...

ஜெட்லி, நினவு சின்னம் பற்றி படிக்கும் போது, அழவா சிரிக்கவா என்று தெரியவில்லை. உங்க ஸ்டைலில் நல்லா எழுதியிருக்கீங்க.

மீன்துள்ளியான் said...

ஜெட்லி பதிவு சூப்பர் ... என்ன பண்றது பீச் பக்கம் toilet கட்டி விடவேண்டியது அரசங்கத்தின் வேலை .. இல்லேன்னா மக்களும் எதாவது ஒதுக்குபுறமத்தான் போகணும் .. அங்கே இருக்கிறது நினவு சின்னம் .. அவசரத்துக்கு அங்கே போறாங்க . நம்ம மேலயும் தப்பு இருக்கு இல்லை என்று சொல்லலை . அவ்ளோ நீள அண்ணா சாலைல ஒரு toilet கூட கிடையாது .. ஆனா சுவர் எல்லாம் படம் வரஞ்சு அழகுபடுத்துறாங்க ... இதே பத்தி தனி பதிவே போடலாம் .

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

Mrs.Menagasathia said...

நல்ல பதிவு!!.பழைய பதிவுகளை ஊருக்கு போய்ட்டு வந்து படிக்கனும்...

நினைவுகளுடன் -நிகே- said...

பதிவு சூப்பர் ...

ஜெட்லி said...

@ துளசி கோபால்

இப்ப பீல் பண்ணி என்ன பண்றது...

ஜெட்லி said...

@ சித்து

குல்பியை பத்தி சொல்ல மறந்துட்டேன் நண்பா

ஜெட்லி said...

@ சித்ரா

மிக்க நன்றி ....

ஜெட்லி said...

@மீன்துள்ளியான்

கரெக்ட்ஆ சொன்னிங்க...
வசதி செய்ஞ்சு கொடுக்கணும் பாஸ்.

ஜெட்லி said...

@ மேனகா

நன்றி, படிச்சுட்டு சொல்லுங்க

ஜெட்லி said...

@ நினைவுகளுடன் -நிகே

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

Arul said...

ஆமா பாஸ் இப்போ Besant fast food அவ்வளவா சரி இல்ல ... ஆனா Chilly Beaf இன்னும் நல்லா இருக்கு ...

பிரியமுடன்...வசந்த் said...

//காலையில் ஐந்து மணிக்கெல்லாம் பீச்சுக்கு போக நேர்ந்தால்
மணலில் உள்ள பஜ்ஜி கடை பக்கம் பார்க்காமல் போங்க இல்லனா
காலையிலேயே கண்ணு கேட்டு போய்டும்(லவ்வர்ஸ் தான்).
இதெல்லாம் நான் சொன்னா சில பேரு என்னை பார்த்து பல் இருக்குறவன் பகோடா சாப்பிடுறான் உனக்கென்ன என்பார்கள்.
//

மச்சி ஏன் இப்டி வீட்டுடுங்கப்பா பாவம் வேற இடமும் அரசங்கம் இன்னும் ஒதுக்கித்தரலை இதுல உங்க தொல்லைக வேற பாவம் அவங்க...

புலவன் புலிகேசி said...

அட எலியாட்ஸ் நம்ம ஏரியாப்பா...எனக்குப் புடிச்ச எலியாட்ஸ் பத்தி சோக்கா சொன்னீங்க..நம்ம ஊரு தலைவருன்னா எதாவது கட்சிக் காரனுங்க ஆதரவுல புதுப்பிச்சிருப்பாங்க...

Veliyoorkaaran.. said...

Periya annen....Besant nagarla sundakanjiya vituteenga...broken bridgea vitutenga...punjabi singu kadaiya vituteenga....fruit shop figurungala vituteenga...enna vathyaare..ungala nambi areava vitutu vantha ipdiya panrathu..konjamaachum porupu venam...ithu niyaayam illa...

பிரபாகர் said...

ஜெட்லி,

கொஞ்சம் வேலை... அதான் இந்த பக்கம் வர முடியல...

பிரபாகர்..

ஜெட்லி said...

@ அருள்

நான் பீப் சாப்பிடுவதை விட்டு ரொம்ப நாள் ஆச்சு...

ஜெட்லி said...

@ வஸந்த்..

நீ ஏன் இப்படி சொல்றேன்னு புரியுதுபா.,, நடக்கட்டும்.

ஜெட்லி said...

@ புலவன் புலிகேசி

கரெக்ட்ஆ சொன்னிங்க...


@வெளியூர்க்காரன்

அண்ணே சொல்றதுன்னா சொல்லிட்டே போலாம்ணே அவ்ளோ இருக்கு..
படிக்க மாட்டங்க அண்ணே..அடுத்த பதிவில் போட்டுடுவோம்..

ஜெட்லி said...

@ பிரபாகர்

வேலை தான்ணே முக்கியம்.