இது எங்க ஏரியா பார்ட்:2
போன பகுதியில் எங்க திருவான்மியூர் ஏரியாவில்
அமைந்துள்ள தியேட்டர் பற்றி சொன்னேன்,
இந்த வாரம் E.C.R ரோட்டில் உள்ள
தியேட்டர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
பிரார்த்தனா மற்றும் ஆராதனா தியேட்டர்.
பிரார்த்தனா தென்னகத்தின் முதல் டிரைவ்-இன் தியேட்டர்.
இங்கே படம் பார்த்தால் தரையில் மெத்தை விரித்து கொண்டு
கூட பார்க்கலாம்(படத்தை சொன்னேன்!!).காருக்கு டிக்கெட்
அம்பது ரூபாய், ஒரு ஆளுக்கு 120 ரூபாய் கொஞ்சம் காஸ்ட்லி
தான்.நாம உன்னிப்பா படம் பார்த்துட்டு இருப்போம் தீடிர்னு
ஒரு நாய் உடால ஓடும் அதெல்லாம் நீங்க கண்டுக்கபிடாது.
சவுண்ட் பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்ல, ஓபன் தியேட்டர்
என்பதால் சவுண்ட் தரம் கம்மியாக தான் இருக்கும்.மிச்சபடி
நீங்க கார்ல உள்ள வந்துட்ட யாரும் உங்களை தொந்தரவு
செய்யமாட்டாங்க. நீங்க படம் பாக்கலாம் இல்லன என்ன
வேணா பண்ணலாம்.
கேலேரியில் உட்கார்ந்து பார்ப்பது சுத்த வேஸ்ட், டிக்கெட்
விலை அறுபது ரூபாய் தண்டம். பிளாஸ்டிக் நாற்காலி,
மொக்கை சவுண்ட் இது தான் கேலேரி. காரில் வந்து பார்ப்பதே
சால சிறந்தது, வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
ஆராதனா:
இந்த தியேட்டர் இது வரைக்கும் என் வாழ்வில் மர்மமாவே
இருக்கும் ஒரு புதிரான இடம். தியேட்டர் உள்ளே போன
கடைசியில் இருட்டாகவே இருக்கும் அந்த இடம் முழுவதும்
காதல் ஜோடிகள் தான்.
இங்கு இருக்கும் ஆபரேட்டர் கொஞ்சம் கல் நெஞ்சுகாரர், நான்
இது வரை பார்த்த படங்களில் ஒன்றிரண்டை தவிர அனைத்து படங்களையும் இருபது நிமிஷம் ஒருக்கா நிறுத்தி நிறுத்தி போடுவார்.
போனஸ் செய்தி:
ஒரு நாள் 11.30 படம்ன்னு டிக்கெட் எடுத்துட்டேன்,மணி
கரெக்ட்ஆ 11.30 ஆச்சு. செக்யூரிட்டி கிட்ட டிக்கெட் கொடுத்து
படம் போட்டாச்சா என்று கேட்டேன்.
அதற்கு அவர் " அதோ அங்கே லுங்கி கட்டிட்டு வெளியே
உட்கார்ந்து இருக்காரே அவர் தான் ஆபரேட்டர், அவர்
போய்த்தான் படம் போடுவார்" என்றார்
உள்ளே போய் உட்கார்ந்தேன் மணி 11.45 என்னடா இன்னும்
படம் போடல அப்படின்னு யோசிக்கும் போது ஆபரேட்டர்
உள்ளே வந்து சீட்இல் கொஞ்சம் நேரம் உட்கார்ந்தார். கொஞ்ச
நேரம் வெறும் ஸ்க்ரீனை மட்டும் பார்த்தார்.அப்புறம் ஒரு பத்து
நிமிஷம் கழிச்சு போய் படத்தை போட்டார். (என்ன ஒரு வில்லத்தனம்!!)
படத்தை ரசித்து பார்ப்பவர்கள் இங்கே வந்தால் கண்டிப்பாக
டென்ஷன் ஆவார்கள். படத்தை அடிக்கடி நிறுத்தி அல்லது
சவுண்ட் சரியில்லாமல் போடுவதை திருத்தி கொண்டால்
கோடி புண்ணியமாக போகும்.
காதலர்களுக்கு எச்சரிக்கை:
படம் ஓடிட்டு இருக்கும் போது தீடிரென்று செக்யூரிட்டி டார்ச்
லைட் அடித்து அப்போ அப்போ செக் பண்ணுவார்... அதனால
கொஞ்சம் காதலர்கள் உஷாராக இருப்பது நல்லது.
மாயாஜால்:
காதலர்களின் சொர்க்க பூமி என்று சொல்லப்படும் மாயாஜாலில் இருப்பது
பத்து தியேட்டர்கள். ஸ்க்ரீன் ஆறுக்கு மேல் அனைத்தும் கொஞ்சம் புதியவை.
சீட்கள் எல்லாம் நல்ல இருக்கும்.படத்தை ரசித்து பார்க்கவேண்டும்
என்றால் மாயாஜால் தான் வர வேண்டும்.ஏன் என்றால் ஒரு
பத்து பேர் தான் படம் பார்ப்பாங்க,யாரும் யாரையும் தொந்தரவு
செய்ய மாட்டாங்க,கத்த மாட்டங்க, காதலர்கள் அவர்களின் வேலையில்
குறியுடன் இருப்பதால் படத்தை ரசித்து பார்க்கலாம்.
கிழே உணவாக தளம் இருக்கிறது இரண்டு பேருக்கு குறைந்தது
நானுறு ரூபாய் இருந்தால் அரை வயிறு சாப்பிடலாம். படத்துக்கே
இரண்டு பேரின் டிக்கெட் 240 வாங்கி விடுவதால் அரை வயிறு
தான் சாப்பிட முடியும்.
மிச்ச படி சவுண்ட், ஏ.சி எதையும் குறை சொல்ல முடியாது.
இன்டெர்வல் டைம் வெறும் அஞ்சு நிமிஷம் தான், இந்த ஒரு
விஷயம் மட்டும் தான் எனக்கு அவர்களை பிடித்ததற்கு காரணம்.
கந்தசாமி இங்கே தான் போலாம் என்று ப்ளானில் இருக்கிறேன்.
ஏன் என்றால் வேறு எங்கையும் எளிதாக டிக்கெட் கிடைக்காது.
போனஸ் செய்தி:
மாயாஜால்க்கு முன்னாடி ரேவதி ஹோட்டல் அப்படின்னு ஒரு
பக்கா லோக்கல் ஹோட்டல் இருக்கு. வீச்சு அருமையாக இருக்கும்
விலையும் குறைவு சிக்கன் குழம்பும் சுவையாக இருக்கும்.
அந்த பக்கம் போன ட்ரை பண்ணி பாருங்க......
இது எங்க ஏரியா பார்ட்:ஒன்று படிக்க கிளிக் செய்யவும்.
முடிஞ்ச ஒட்டு போடுங்க இல்லனா கருத்துரை கூட போடலாம்.
உங்கள்
ஜெட்லி
Monday, August 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
நல்லா பதிவு தல..
/* மாயாஜால்க்கு முன்னாடி ரேவதி ஹோட்டல் அப்படின்னு ஒரு
பக்கா லோக்கல் ஹோட்டல் இருக்கு. வீச்சு அருமையாக இருக்கும் */
ஆமோதிக்கிறேன்.. சரக்கு சாப்டு அங்க போய் சாப்டா.. உம்ம்.. அருமை..
காதலர்களுக்கு தான் நிறைய யோசனை சொல்ற.. சொந்த அனுபவமா மாப்ள??
மிகவும் gadget பயனுள்ளது ஒன்றை gadget உருவாக்கி உள்ளேன் இதில் தமிழ் தமிழிஷ்தமிழ்மணம் திரட்டி போன்ற வலைபூக்களை ஒரே இடத்தில் பார்க்க இந்த gadget பயனுள்ளதாக இருக்கும் இந்த உங்கள் வலைப்பூவில் gadget இணைக்க இங்கே கொடுக்கப்பட்ட இணையத்தளத்துக்கு சென்று அங்கே code கொப்பி செய்து உங்கள் இணையத்தளத்தில் இணையுங்கள் www.tamil.com
நன்றி
ஈழவன்
//படம் ஓடிட்டு இருக்கும் போது தீடிரென்று செக்யூரிட்டி டார்ச்
லைட் அடித்து அப்போ அப்போ செக் பண்ணுவார்... அதனால
கொஞ்சம் காதலர்கள் உஷாராக இருப்பது நல்லது.//
அடப்பாவிகளா?
மாயாஜால்க்கு முன்னாடி ரேவதி ஹோட்டல் அப்படின்னு ஒரு
பக்கா லோக்கல் ஹோட்டல் இருக்கு. வீச்சு அருமையாக இருக்கும்
விலையும் குறைவு சிக்கன் குழம்பும் சுவையாக இருக்கும்.
அந்த பக்கம் போன ட்ரை பண்ணி பாருங்க......//
நான் ரேவதியை டிரை பண்ணி பார்த்துட்டு சொல்லறேன்... பதிவு அருமை..
@ கார்த்திக்
நன்றி... இனி நாமெல்லாம் ரேவதி ஹோட்டல் நண்பர்கள்..
@லோகு
//காதலர்களுக்கு தான் நிறைய யோசனை சொல்ற.. சொந்த அனுபவமா மாப்ள??
//
லோகு நான் வெறும் பார்வையாளன் மட்டுமே...
@ வஸந்த்
உண்மைதான் வஸந்த்....
@jackiesekar
உங்கள் பதிலுக்கு காத்து இருக்கிறேன் அண்ணே...
Post a Comment