ஷிஞ்சுகு இன்சிடென்ட் (Shinjuku Incident) - விமர்சனம்.
நான் ஜாக்கிசானின் தீவிர ரசிகன் என் புனை பெயர் ஜெட்லி
என்றாலும் எனக்கு பிடித்தது ஜாக்கிசான் தான். ரொம்ப நாள்
கழித்து ஜாக்கி படம் வெளிவருவதால் வெள்ளியன்றே பார்க்க
வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் நண்பர்கள் சதி செய்து
என்னை கந்தசாமி படத்தை ரெண்டாவது தடவை பார்க்க
வைத்து விட்டார்கள்.
சீனாவில் இருந்து திருட்டு தனமாக ஜப்பான் வருபுவர்களை
பற்றி தான் கதை.ஜப்பான் கேங் லீடர்கள் நடத்தும் வன்முறைகள்,
மற்றும் சீனாவில் இருந்து வந்தவர்களை கிள்ளு கீரைகளாக
நினைத்து அடித்து உதைக்கிறார்கள். இடையில் ஜாக்கி ஜப்பான்
கேங் லீடர் ஒருவரை காப்பாற்றி ஜாக்கியும் ஷிஞ்சுகு என்ற
இடத்தில் கேங் லீடர் ஆகிறார்.
ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு என்பதே கதையும் கரு.
பணம் இல்லாத போது ஜப்பானில் ஒன்றாக இருந்த சீனர்கள்,
பணம் வந்தவுடன் தவறான வழிகளில் ஈடுபட்டு தங்களை
அழித்து கொள்கிறார்கள்.
பேப்பரில் விளம்பரத்தில் ஜாக்கி நடித்த மாறுப்பட்ட படம் என்ற
போதே எனக்கு சில விஷயங்கள் புரிந்தது.படத்தில் வன்முறை
காட்சிகள் அதிகம் இருந்தாலும் ஜாக்கி ஸ்டைல் பைட் மிஸ்ஸிங்.
அதுவும் ஏன் என்று புரிந்தது, படத்தில் ஜாக்கி வேடம் ஒரு
சராசரி மனிதன் வேடம் ஆதலால் martial பைட் எதிர்பார்க்க முடியாது.
நாம் எப்படி நம்மை தற்காத்து கொள்ள கட்டையும் கம்பையும்
விசுருமோ அது போல் தான் ஜாக்கி இந்த படத்தில் செய்கிறார்.
ஜாக்கி இந்த படத்தில் சிரிக்கிறார்,உணர்ச்சி வசபடுகிறார், சேரன்
மாதிரி அழுகிறார்.படம் அவ்வளவாக போர் அடிக்கவில்லை,
ஆனால் இன்டெர்வல் டைம் அனைவரும் என்னப்பா ஒரு பைட் கூட
இல்லை என்று முணுமுணுத்தார்கள்.இது ஒரு நல்ல ட்ராமா, த்ரில்லர்
வகையை சேர்ந்த படம்.சும்மா ஒரு வாட்டி பாக்கலாம் ஜாக்கிசானுக்காக....
புடிச்சா ஒட்டு போடுங்க அப்பதான் பலதரப்பட்ட மக்களை போய் சேரும்.
உங்கள்
ஜெட்லி.
Monday, August 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
என்னாது சண்டையில்லாத ஜாக்கிசான்படமா?
ஜாக்கி பையன் ஹீரோ ஆயிட்டார் தல.., அதனால எம்ஜியார் ஸ்டைலிருந்து சிவாஜி ஸ்டைலுக்கு மாறிட்டார்..,
உங்களோட கந்தசாமி விமர்சனம் பயங்கர ஹிட் ஆனதற்கு வாழ்த்துக்கள்
ஆமாம் வஸந்த்... ஆனால் படம் சுவாரிசியமாக போகுது
தங்கள் வாழ்த்துக்கள்க்கு நன்றி டாக்டர்.
ஜாக்கிசான் பக்கத்து பில்டிங்கல இருந்து ஓடுற ரயிலுக்குள்ள தாவுவாரா?????
ஹீரோயின் பத்தி சொல்லவே இல்ல???
******
அருமையான விமர்சன பதிவு.. :)
அப்ப ஜாக்கியோட நகைச்சுவை இந்த படத்தில இல்லையா? நான் அவரது காமெடி கலந்து சண்டைகளுக்கு ரசிகன்.
லோகு ஜாக்கி என்ன விஜய் ஆ.....
நாயகி பற்றி கூற ஒன்னும் இல்லை நண்பா.,,,
ஆமாம் யோ.. நகைச்சுவை கொஞ்சம் கம்மி தான்...
/* எனக்கு முதல் பாடல் வந்த உடன் உச்சா செல்ல எழுந்து
நடந்தேன், என் செருப்பு வழுக்கியது. ஜீத்தை அப்போது தான்
கவனித்தேன் பின்பு தான் புரிந்தது செருப்பு வழுக்கியதற்கு
காரணம் ஜீத்தின் வாய்ஜாலம் என்று. */
யோசித்துபார்த்து சிரித்தேன்.. நல்ல நடை..
Post a Comment