Wednesday, August 26, 2009

கற்றது தமிழ் ரீமிக்ஸ்....

கற்றது தமிழ் ரீமிக்ஸ் ....
எனக்கு கற்றது தமிழ் படம் ரொம்ப பிடிக்கும் அதுவும் இந்த
பாட்டு எதற்கும் நிகர் இல்லை, இந்த பாட்டை நான் ரீமிக்ஸ்
செய்வது சும்மா ஒரு ஜாலிக்கு தான் யாரும் கோபித்து கொள்ள
வேண்டாம்.,,,

முன்னுரை:

பிரபாவுக்கு ஆனந்தி தான் சரக்கு ஸ்பான்சர், தீடிர்னு ஆனந்தி
ஊருக்கு போனதுனாலே பிரபாவுக்கு யாரும் ஓசியில் சரக்கு
வாங்கி கொடுக்குல.....இதோ சாங்....

ஒரிஜினல் வீடியோ இங்கே.........என் வாழ்க்கையில் நான் காசு கொடுத்து சரக்கு வாங்கினது
மூணே மூணு தடவை....

பிரபா நீ என்னை தேடி இருப்பனு தெரியும்,
நானும் அம்மாவும் பாண்டில இருக்கிற ஒன்னு விட்ட மாமா
வீட்ல இருக்கோம், நீ இங்கே வந்து சரக்கு அடிக்க ஏத்த நேரம்
வரும் போது சொல்றேன்....

நேரத்துக்கு சரக்கு அடி
சரக்குல நெறைய தண்ணி உத்து
வாரத்துல மூணு வாட்டிக்கு மேல (சரக்கு)அடிக்காதே
சைடு டிஷ் கம்மியா சாப்பிடு
போதையில ரோட்ல படுக்காத....

சரக்கே எங்கே இருக்கிறாய்
அடிக்கவே என்னை அழைக்கிறாய்
பாண்டி வைன் ஷாப் தேடி வருகிறேன் மப்பே.....

அடி என் பூமி தொடங்கும் இடம் எது ராயல் stag தானே....
அடி என் பாதை இருக்கும் இடம் டாஸ்மாக் தானே....

பார்க்கும் டாஸ்மாக் கடை யாவையும் பாவை முகம் வருமே,
சரக்கு ஒரிஜினல்ஆ டுப்ளிகட்ஆ என்று தெரிவதில்லை
அதை கண்டு சொல்ல யாருக்கும் தூணிவில்லை....
நீ வாங்கி கொடுத்த சரக்கு இன்னும் மனதில் மறையவில்லை
அதில் மிதந்தேன் நானும் ஒரு படகாக.......(சரக்கே)

உன்னோடு நானும் சரக்கடிக்கும் வேளை
இது நீளாதோ.... teachers scotch rate போலவே
கதை பேசி கொண்டு வா வைன் ஷாப் போவோம்
சைட் டிஷ் தீர்ந்தாலும் உன் சரக்கு மட்டும் போதும்

இந்த half அடிச்ச போதை இன்னைக்கு போதாத
இனி நம்மூர் டாஸ்மாக் முழுவதம் அழகாய் மாறதா????

முதல் முறை ராயல் stag half கிடைத்ததே
முதல் முறை பக்கத்துக்கு டேபிள் சைடு டிஷ் கிடைத்ததே
முதல் முறை கட்டிங் சாப்பிட்டு மப்பு தாறுமாற ஏறுதே....

முதல் முறை வாந்தி வர மாதிரி கொமட்டுதே
முதல் முறை ஆப்பாயில் போட்டனே
முதல் முறை டேபிள் தூடைத்தேனே..... மப்பே......

*********************************************

ஆனந்தியை பாண்டியில் உள்ள வைன்ஷாப் கடை பக்கத்தில்
பார்த்த உடன்....

பிரபா: ஆனந்தி இங்க தான் ராயல் stag புல் கிடைக்குதாம், அதான்
அப்படியே உன்னை பார்த்துட்டு போலாம்னு வந்தேன்....

ஆனந்தி: நான் வரலைனா என்ன பண்ணி இருப்ப...?

பிரபா: என்ன ரெண்டு புல் ராயல் stag வாங்கிட்டு அடுத்த பஸ்ல
கிளம்பி இருப்பேன், இப்ப தான் உன்னை பார்த்துட்டேனே நீதான் ஸ்பான்சர்....

ஆனந்தி: நிஜமாத்தான் சொல்றியா?...

*************************************************

ஏழை... சரக்கு.... டாஸ்மாகில் இருக்கிற அறுபது ரூபாய்
மொக்கை சரக்கு....
(சரக்கு அடித்த பின்)
மண்ணில் விழுந்து ஒரு காயமின்றி
உடையாமல் உருண்டோடும் சரக்கு பாட்டில் போல...
இதோ இதோ இந்த பயணத்திலே
இந்த half பாட்டில் போதும் கண்மணி
வேறு என்ன நானும் கேப்பேன்
சரக்கு காலியானாலும் தண்ணி ஊத்தி
பாட்டில் கழுவி குடிப்பேன்...
இந்த மப்பு இப்படியே தான் தொடராதா
என் தணியாத போதை இன்றுடன் தீராதா...


முதல் முறை ராயல் stag half கிடைத்ததே
முதல் முறை பக்கத்துக்கு டேபிள் சைடு டிஷ் கிடைத்ததே
முதல் முறை கட்டிங் சாப்பிட்டு மப்பு தாறுமாற ஏறுதே....

முதல் முறை வாந்தி வர மாதிரி கொமட்டுதே
முதல் முறை ஆப்பாயில் போட்டனே
முதல் முறை டேபிள் தூடைத்தேனே..... மப்பே......

பிரபா : ஆனந்தி ஆனந்தி சரக்கு காலி ஆயிடுச்சு,
இன்னொரு குவாட்டர் சொல்லேன்....

புடிச்சா ஒட்டு போடுங்க.....
உங்கள்
ஜெட்லி.

11 comments:

சூரியன் said...

போதை வாசம் உங்க ரீமிக்ஸ்.. சூப்பர் சுள்ளுனு ஏத்துது..

யோ வாய்ஸ் said...

:) நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் அப்புறம் தெரியும் தானே...

வால்பையன் said...

ஹாஹாஹா!

எதிர் கவுஜய அடுத்த கட்டத்துக்கு கொண்டு போயிட்டிங்க தல!

Ram said...

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக்
செய்யுங்கள்

லோகு said...

அழுமையான பழிவு மாப்ள.. சாரி போதைல வாய் கொலளுது.. அருமையான பதிவுன்னு சொல்ல வந்தேன்..

பிரியமுடன்...வசந்த் said...

-போதையில எழுதுனதா ஜி

?????????????????????????

அப்பொதான் இதுமாதிரி புதுசுபுதுசா தோணுமாமே

ஜெட்லி said...

@சூரியன்

@ yo

நன்றி

ஜெட்லி said...

@ வால்பையன்
எல்லாம் உங்கள் ஆசீர்வாதம் தல...

ஜெட்லி said...

@லோகு
என்ன மச்சி மப்பா????

ஜெட்லி said...

@ வஸந்த்

போதையா??? அப்படின்னா என்ன வஸந்த்...
நான் சின்ன புள்ள....

Sathya said...

good remix but the orginial songs is tragic melody u have done it a comedy still i like your post keep it up

sathya