Friday, August 21, 2009

கந்தசாமி - விமர்சனம்.

கந்தசாமி - விமர்சனம்.

நானும் நண்பரும் படத்தை மாயஜாலில் பார்ப்பது என்று முடிவு செய்து,
மாயஜாலை நோக்கி புறப்பட்டோம்.மதிய சாப்பாட்டு வேலை என்பதால்
வழக்கம் போல் மாயாஜால் முன்னாடி இருக்கும் ரேவதி ஹோட்டலில்
பரோட்டா மற்றும் வீச்சு சாப்பிட்டோம்.

படம் வழக்கம் போல் லேட் ஆகதான் போட்டார்கள், படம் பார்த்த பத்து
நிமிடத்திலேயே,வேகாதது பரோட்டா மட்டும் இல்லை கந்தசாமியும் தான்
என்று தெரிந்தது. இயக்கனர் சுசி அவர்களிடம் இப்படி ஒரு சுவாரசியம்
இல்லாத திரைக்கதையை நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.
ஒரு ஒரு காட்சிகளின் நீளமும் சற்று அதிகம் தான். என்னால் மூணு
மணி நேரம் உக்காந்து படத்தை பார்க்க இயலவில்லை என்பதே உண்மை.

நம் தமிழ் சினிமாவுக்கு வழக்கமான கதை தான் என்றாலும், படத்தில்
சில புதுமைகள் இல்லாமல் இல்லை.ஸ்ரேயாவுக்கு விக்ரம் ஒரு வரியில்
பதில் சொல்வது, கோழியாக வரும் கந்தசாமி எப்படி பறக்கிறார் என்று
லாஜிக் இடிக்காமல் சொல்லி இருக்கிறார் சுசி.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு
மிக அருமை. பாடல்கள் ஏற்கனவே ஹிட் என்பதால் அதை பற்றி சொல்ல
தேவை இல்லை.

இருக்கிறவன் கிட்ட எடுத்து இல்லாதவன் கிட்ட கொடுக்கும் ராபின் ஹூட்
கதை தான் கந்தசாமி. ஆனால் உப்பு சப்பு இல்லாத காட்சிகளால் நம்மளை
நோக அடிக்கிறார் கந்தசாமி. ஹை டெக் என்ற ஒரு வார்த்தையை மட்டும்
எடுத்து திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டார் இந்த சாமி.
சண்டை போடுறவன் மெக்சிகோ நாட்டுல போட்ட எனக்கென்ன திரிசூலம்
மலையில சண்டை போட்ட எனக்கென்ன, என்னா ஒரு பில்ட் அப்.

கந்தசாமியிடம் இருந்து நம்மை மீட்பவர்கள் இருவர் ஒருவர் வடிவேலு,
இன்னொருவர் ஷ்ரேயா என்றால் மிகையல்ல.படத்தின் நீளம் நமக்கு
கண்டிப்பாக கொட்டாவி வர வைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஆக மொத்தம் WATCH AT UR OWN RISK.

போனஸ் செய்தி:

கந்தசாமி பார்த்த மகிழ்ச்சியில் வீட்டுக்கு ஒன்னும் இல்லங்க 40K.M ஸ்பீட்ல
தான் வந்தேன். எங்க இருந்து வந்தான் தெரியுல ஓவர் ஸ்பீட் அப்படின்னு
சொல்லி அம்பது ரூபாய் ஆட்டையை போட்டுட்டான். கந்தசாமி நல்லா
இல்லன்னு கூட எனக்கு வருத்தம் இல்லங்க, E.C.R. ரோட்ல 40K.M ஸ்பீட்ல
வந்தது தப்பாம்......?....

ஜெட்லி பஞ்ச்:

கந்தசாமி --- ஒன்னும் சொல்றதுக்கு இல்ல சாமி.


இந்த விமர்சனம் பெரும் மக்களை சேர ஒட்டு போடவும்.

உங்கள்
ஜெட்லி.

39 comments:

Unknown said...

Thanks for the review...thought to see this weekend...but now :-(

Unknown said...

Me the first...

முரளிகண்ணன் said...

அப்போ கந்தசாமி உங்களை நொந்தசாமி ஆக்கிட்டாரு போலிருக்கே

துளசி கோபால் said...

படம் கிடக்குது விடுங்க.

அதென்ன பரோட்டா கூட வீச்சு.

வீச்சுன்னா என்ன/

Rajaraman said...

தியேட்டரில் பார்க்கும் தண்டனையில் இருந்து காப்பற்றியதர்க்கும், ஒரு 500 அல்லது 600 ருபாய் மிச்சப்படுதியதர்க்கும் ஒரு பெரிய நன்றி நண்பரே.

Jerry Eshananda said...

கந்த சாமி அப்ப "நொந்த சாமியா"?.

வரதராஜலு .பூ said...

//இயக்கனர் சுசி அவர்களிடம் இப்படி ஒரு சுவாரசியம்
இல்லாத திரைக்கதையை நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.
//

இதுக்கு எத்தினி வருஷமா படத்த எடுத்து பில்டப் கொடுக்கறாங்க?

//கந்தசாமி நல்லா
இல்லன்னு கூட எனக்கு வருத்தம் இல்லங்க, E.C.R. ரோட்ல 40K.M ஸ்பீட்ல
வந்தது தப்பாம்......?....//

கஷ்டம் ஒண்ணு மட்டும் தனியா வந்தா எப்பிடி? அதுக்குத் துணையா இது. என்ஜாய்.

இரா.விவேகானந்தன் said...

nejamaathaan solriyaa?

swizram said...

இன்னும் பாக்கல ... பாத்துட்டு வந்து சொல்றேன்

ஆனா நீங்க போட்டுருக்க விமர்சனம் படிச்சா பாக்கனும்னே தோணல பாஸ் !!!

துபாய் ராஜா said...

//கந்தசாமி --- ஒன்னும் சொல்றதுக்கு இல்ல சாமி.//

ஒரே வரியில் உண்மையை சொல்லிவிட்டீர்கள்.

http://rajasabai.blogspot.com/2009/08/50.html

Ganesan said...

pocha pocha

வழிப்போக்கன் said...

மீண்டும் விக்ரம் என்னை ஏமாற்றி விட்டார்....
:)))

வால்பையன் said...

சினிமா பாக்காம உங்களால இருக்க முடியாதா!?

shabi said...

over buit up குடுத்தா இப்படித்தான் என்னோட (50 dirhams)மிச்சம்

ஜெட்லி... said...

@ ஸ்ரீ

வருகைக்கு நன்றி..

ஜெட்லி... said...

@ முரளி கண்ணன்.

//அப்போ கந்தசாமி உங்களை நொந்தசாமி ஆக்கிட்டாரு போலிருக்கே
//

கண்டிப்பா அதில் சந்தேகேமே இல்லை....

ஜெட்லி... said...

@ துளசி கோபால்

அண்ணே, பரோட்டாவை சுத்தாமல் சப்பாத்தி மாதிரி நன்றாக
விரித்து போடுவார்கள் அது தான் வீச்சு, முட்டை போட்ட முட்டை
வீச்சு.... ட்ரை பண்ணி பாருங்க.....

ஜெட்லி... said...

nandri rajaraman

ஜெட்லி... said...

//இதுக்கு எத்தினி வருஷமா படத்த எடுத்து பில்டப் கொடுக்கறாங்க?
//
அதான்ங்க எனக்கும் புரியுல....

ஜெட்லி... said...

@jerry
கண்டிப்பா ஜெர்ரி....
வேணும்னா ஒரு வாட்டி ட்ரை பண்ணுங்க./..

ஜெட்லி... said...

@இரா.விவேகானந்தன்



என்ன இரா.விவேகானந்தன் கற்றது தமிழ் படத்துல
வர டயலாக்ஆ..... இதுல பொய் சொல்ல என்ன இருக்கு.

ஜெட்லி... said...

@கத்துக்குட்டி
தாரளமா ஒரு வாட்டி பாக்கலாம்....

ஜெட்லி... said...

nandri துபாய் ராஜா

ஜெட்லி... said...

நன்றி kaveri ganesh

ஜெட்லி... said...

@வழிப்போக்கன்
என்னையும் தான்

ஜெட்லி... said...

@வால்பையன்

ஏன் நான் விமர்சனம் எழுதவது தங்களுக்கு
பிடிக்கவில்லையா?

ஜெட்லி... said...

nandri shabi

வால்பையன் said...

//
@வால்பையன்

ஏன் நான் விமர்சனம் எழுதவது தங்களுக்கு
பிடிக்கவில்லையா? //

நீங்க ரொம்ப நாளைக்கு நல்ல ஆரோக்கியத்தோட இருக்கனும்னு அக்கறையில சொன்னேன்!

ப்ரியமுடன் வசந்த் said...

ஆஹா கந்தசாமி நொந்தசாமி ஆயிட்டாரா?

யோ வொய்ஸ் (யோகா) said...

எனக்கு படம் ஓக்கே என படுது. மத்த மொக்கைகளை பார்த்து பார்த்து, இது தேவையில்லை போல இருக்கிறது. படத்தின் பலம் கமரா லொக்கேஷன் விக்ரம் வடிவேலு (அதிலும் குஷி ஜோதிகா ஆட்டம் சூப்பர்) பின்னணி இசை தான் படத்தின் பலவீனம் என நினைக்கிறேன்.

"ராஜா" said...

போகதீங்க... போகதீங்க....
ஐயோ போய்டானே.... இனி ஒரு வாரம் அவன் தூங்க மாட்டானேயா....

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வாழ்த்துக்கள்..., ஒரே இடுகைக்கு மூவாயிரம் பக்கம் ஹிட்ஸ் விழுந்துள்ளதற்கு..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கண்டிப்பாக கந்தசாமி சூப்பர் ஹிட் சாமி

கார்க்கிபவா said...

சகா, கேமரா சூப்பரா? எனக்கு தலைவலிக்க காரணமே அதுவும் சொத்தை பிண்ணனி இசையும்..

ஷ்ரேயா.. ஓக்கே.. அவஙக்ளுக்காக பார்க்கலாம். ஆனா மியாவ் மியாவில்.. சாரியா..

நீங்க ecrல 40லதான் வந்தீங்களா? நம்பனுமா?

ஜெட்லி... said...

@கார்க்கி
//நீங்க ecrல 40லதான் வந்தீங்களா? நம்பனுமா? //

நீங்க ecrல 40லதான் வந்தீங்களா? நம்பனுமா?

ஜெட்லி... said...

@ சுரேஷ் பழனி...

நன்றி தல....

ஜெட்லி... said...

@ vasanth

என்ன பண்றது...

ஜெட்லி... said...

@ yo

ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்....

ஜெட்லி... said...

@ raja

nandri