Tuesday, August 11, 2009

இரத்த தானம்.

இன்று எனது தூரத்து உறவினர் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்ய இரத்தம் தேவைப்பட்டது. ஆனால் அந்த மருத்துவர் (முதல் நாள் தானே ஏற்பாடு செய்வதாக கூறினார் பிறகு காலையில் வந்து நீங்கள் தான் ஏற்பாடு பண்ண வேண்டும் அதுக்கு அப்புறம் தான் சிகிச்சை என்று கூறிவிட்டார்), ஏற்கனவே எடுக்கப்பட்ட இரத்தம் செலுத்த முடியாது (ஏதோ மருத்துவ காரணம் சொன்னார்கள்) எனவும் இங்கு வந்து தான் இரத்ததானம் தரவேண்டும் எனவும் கடைசி நேரத்தில் கூறிவிட்டனர். அதுவும் அவரின் இரத்தம் ரொம்ப அரிதான A1B+ve வகையை சேர்ந்தது, அதனால் அவர்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. உடனே தான் நான் WWW.INDIANBLOODDONORS.COM என்ற தளத்தில் சென்று இந்த வேண்டுகோள் வைத்தேன். நானும் இந்த தளத்தின் மூலம் ஒரு குழந்தைக்கு என்னுடைய B+ve இரத்தம் தந்துள்ளேன், அதை இன்று நினைத்தாலும் உள்ளூர ஒரு சந்தோஷம். அவர்கள் நமக்கு பல்வேறு தானம் தருபவர்களின் செல் என் தந்தனர், ஒருவர் மாறி ஒருவராக தொடர்பு கொண்டு இறுதியாக திரு.பத்ரி நாராயணன் என்ற அன்பர் உடனே வந்து தானம் தருவதாக சம்மதம் தெரிவித்து நேரில் கிளம்பி வந்து விட்டார். அவர் தென்சென்னையில் ஒரு முன்னணி பன்னாட்டு கணிப்பொறி நிறுவனத்தில் வேலை செய்கிறார், ஆனால் அவர் வந்தவுடன் இந்த மருத்துவர்கள் இன்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் இரு தினங்களுக்கு பிறகு பார்க்கலாம் என்று கூறிவிட்டனர். இது என்ன நியாயம்??? ஒரு மனுஷன் வேலை வெட்டிய விட்டுபுட்டு மனிதாபிமானத்தோட வராரே இப்படி செஞ்சா அவரு மனசு எவ்வளவு சங்கடப்படும்?? இத்தனைக்கும் சரியா ஒரு மணி நேரம் முன்னாடி தான் இரத்த தானம் பண்ண ஒருத்தர் வராருன்னு சொல்லியாச்சு அப்ப சொல்லாம் இல்லையா?? மருத்துவர்களே கொஞ்சம் யோசிங்கப்பா................

இது போல் உங்களுக்கும் அவசரமாக இரத்தம் தேவைப் பட்டால் WWW.INDIANBLOODDONORS.COM அல்லது http://lionsbloodbank.net/new/ ஆகிய தளங்களில் மூலம் தேடி தொடர்பு கொண்டால் கை மேல் பயன் உடனே கிடைக்கும். அல்லது எழும்பூரில் உள்ள அரிமா சங்க இரத்த வங்கிக்கு நேரில் சென்று கூட கேட்கலாம். நீங்களும் இரத்த தானம் செய்ய முயலுங்கள்.

நன்றி.
சித்து.

9 comments:

கோவி.கண்ணன் said...

//A1B+ve //

பெரிய எழுத்துக்களில் போடுங்கள் !

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம், மருத்துவர்கள் கடைசியில் தான் கூறுகின்றனர். சொந்தக்காரர்களின் ரத்தம் என்றால் நல்லது என்று சில டாக்டர்கள் கூறுகின்றனர்.

யோ (Yoga) said...

நானும் இரு முறை இரத்த தானம் செய்துள்ளேன், ஆனால் நான் 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டேன். அதன் பின் சிறிது காலத்துக்கு என்னை இரத்த தானம் செய்ய வேண்டாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். நான் திரும்ப எப்போது இரத்ததானம் செய்யலாம் என தெரிந்தவர்கள் சொல்லுங்களே!

லோகு said...

உபயோகமான பதிவு..

இராகவன் நைஜிரியா said...

// இத்தனைக்கும் சரியா ஒரு மணி நேரம் முன்னாடி தான் இரத்த தானம் பண்ண ஒருத்தர் வராருன்னு சொல்லியாச்சு அப்ப சொல்லாம் இல்லையா?? மருத்துவர்களே கொஞ்சம் யோசிங்கப்பா................ //

அடுத்தவங்க கஷ்டத்தைப் பற்றியெல்லாம் யோசிக்கின்ற அளவுக்கு இன்னும் மனிதாபமானம் வளரவில்லை.

இராகவன் நைஜிரியா said...

// இது போல் உங்களுக்கும் அவசரமாக இரத்தம் தேவைப் பட்டால் WWW.INDIANBLOODDONORS.COM அல்லது http://lionsbloodbank.net/new/ ஆகிய தளங்களில் மூலம் தேடி தொடர்பு கொண்டால் கை மேல் பயன் உடனே கிடைக்கும். அல்லது எழும்பூரில் உள்ள அரிமா சங்க இரத்த வங்கிக்கு நேரில் சென்று கூட கேட்கலாம். நீங்களும் இரத்த தானம் செய்ய முயலுங்கள். //

தகவல்களுக்கு நன்றி

சித்து said...

@அமுதா கிருஷ்ணா
அவரின் மகளும் அதே இரத்த வகையை சேர்ந்தவர் தான் ஆனால் அதை உபயோகிக்க முடியாது என்று கூறிவிட்டனர். ஒன்னும் புரியல மேடம் ஒவ்வொரு மருத்துவரும் ஒவ்வொரு மாதிரி கூறுகின்றனர்.

சித்து said...

நன்றி லோகு. :)

சித்து said...

ஆமா ராகவன் சார் எனக்கு ரொம்ப கஷ்டமாவும் அசிங்கமாவும் போச்சு, பாவம் அவரு அலுவலகத்தில் சொல்லிவிட்டு கிட்டத்தட்ட இருபது km தூரம் வந்துள்ளார்.