Wednesday, August 5, 2009

ஷகீலா படமும் விடாமுயற்சியும்.

ஷகீலா படமும் விடாமுயற்சியும்.


சென்னை அண்ணாசாலையில் உள்ள கெயிட்டி தியேட்டரை
ஒரு வழியாக இடித்து விட்டார்கள், அங்கே ஷாப்பிங் மால் வரபோகிறது என்று பெரிய பேனர் வைத்துள்ளனர். அந்த இடித்த
தியேட்டரை பார்க்கும் போது என் எண்ணத்தில் உதித்த சில
மலரும் நினைவுகள் உங்களுக்காக, நான் சொல்லும் செய்தி
மூலம் உங்களுக்கும் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்
மேலும் மலரும் என்று நம்புகிறேன்.

ஐந்து வருடங்கள் முன்:

நானும் என் நண்பன் ராஜ்(பெயர் மாற்றபட்டுள்ளது) கெயிட்டி
தியேட்டரில் ஓடும் மலையாள படத்துக்கு போனோம். சிட்டி சென்டர் என்பதால் அவ்வளவாக பிட் காட்சிகளை எதிர்பார்க்க முடியாது.இடைவெளி நேரம் பொதுவாக இந்த மாதிரி தியேட்டரில்
முக்கா வாசி பேர் இடைவெளியுடன் போய் விடுவார்கள், ஆனால்
நாங்கள் தன்னம்பிக்கையுடன் அடுத்த பாதியையும் பார்க்க முடிவு
செய்தோம்.

அப்போது நண்பர் ராஜ் தனக்கு சிகரட் வேண்டும் என்று,தான்
கிளாசிக் மெந்தால்(classic menthol) மட்டும்தான் அடிப்பதாக கூறி
என்னை வாங்க சொன்னார். நான் "ஐயோ என்னால் முடியாது"
என்று மறுத்து விட்டேன் இந்த மாதிரி தியேட்டரில் பில்டர்
இருந்தாலே பெரிய விஷயம் என்று எனக்கு தெரிந்தது தான்
காரணம்.

நண்பர் ராஜ் கான்டீன் சென்று கேட்டார்.....

ராஜ்(தன்னம்பிக்கையுடன்): அண்ணே கிளாசிக் மெந்தால்
ஒன்னு கொடுங்க...

கான்டீன் ஆள் ஒரு மாதிரி பார்த்து விட்டு பதில் ஏதும்
சொல்லாமல் வேறு திசை திரும்பி விட்டார்.

ராஜ்(விடாமுயற்சியுடன்): அண்ணே கிளாசிக் மெந்தால் இருக்கா?

கான்டீன் நபர்: தம்பி பில்டர் மட்டும் தான் இருக்கு, இதுக்கே
இங்கே நாறுது.... மெந்தால் வேணுமா இவருக்கு....!!!


ராஜ்: சரி எது இருக்கோ கொடுங்க........(என்னை பார்த்து)என்ன நண்பா இது ஒரு மெந்தால் கூட இல்ல... ச்சே.

போனஸ் செய்தி:

கெயிட்டி தியேட்டரில் பிட் போடுவது குறைவு என்றாலும் என்றாவது ஒரு நாள் பிட் பார்ப்போம் என்று நாங்கள் விடாமுயற்சியுடன் தொடர்ந்து சென்றது தனி கதை....

********************************************

கேட்க மறந்த கேள்வி:

நான் கல்லூரி படிக்கும் போது நடந்த சம்பவம்.

அன்று எங்கள் மேம் பாடம் நடத்தி கொண்டு இருக்கும்
போது சுற்று அறிக்கை வந்தது, அதாவது நாளைக்கு விடுமுறை
என்றும் வரும் சனிக்கிழமை அதற்காக கல்லூரி இருக்கும் என்று
மேம் அந்த அறிக்கையை வாசித்தார்.

என் பக்கத்தில் உள்ள நண்பன் "எதுக்கு மேம் நாளைக்கு லீவ்?"
என்று கேட்டான்.

"நாளைக்கு வரலட்சுமி விரதம் அதான் லீவ்" என்றார் எங்கள் மேம்.

உடனே நான் என் நண்பனின் காதில் "மேம் என்னைக்கு விரதம்
இருப்பாங்க அப்படின்னு கேளு மச்சான் நமக்கு இன்னொரு நாள்
லீவ் கிடைக்கும் இல்ல" என்றேன்.

"என்னடா உளர்றே?" என்றான் நண்பன்

"ஏன்டா வரலட்சுமி , விரதம் இருந்தா லீவ் விடுறாங்க, நம்ம
தீபலட்சுமி மேம், விரதம் இருந்தா லீவ் உடமாட்டங்களா?"
என்றேன்.

"இரு இப்பவே கேக்குறேன்" என்ற என் நண்பனின் வாயை கணினி
லேப் மார்க்கை நினைத்து பொத்தினேன்.

******************************************************

நீங்கள் படித்ததை அனைவரையும் சென்று அடைய
ஒட்டு போடுங்கள்.


உங்கள்
ஜெட்லி

2 comments:

லோகு said...

கடைசி வரைக்கும் பிட் போட்டங்களா இல்லையா..
****
தீபலட்சுமி விரதமா??? கேட்டுருந்தா தீபலட்சுமி கோபலட்சுமி ஆகி இருப்பாங்க..

பிரபாகர் said...

ஜெட்லி,

நாம்பளும் ஒரு தபா பாக்க போயி ஏமாந்து இருக்கோம்ல...

சுவராஸ்யமாய் எழுதியிருக்கிறீர்கள்...

பிரபாகர்.