Thursday, August 13, 2009

திரைப்பட உலகில் நம் சகபதிவர்கள் இருந்தால்.....

திரைப்பட உலகில் நம் சகபதிவர்கள் இருந்தால்.....

இது எங்களது நூறாவது பதிவு என்பதால் கொஞ்சம் வித்தியாசமா
இருக்க நினைத்து, நம் பதிவுலக நண்பர்கள் பற்றி என் பார்வையில் என்று எழுதியுள்ளேன். யாரையும் நோகடிக்கும் எண்ணமில்லை
எல்லாம் காமெடிக்கு தான்.அனைத்து பதிவர்களிடமும் அனுமதி
வாங்கிய பின் தான் போடுகிறேன்...அனுமதி வாங்கியதை விட ஒரு வரி எக்ஸ்ட்ரா இருக்கும் அவ்வளவுதான்.

********************************************************************

வால்பையன்.

எங்கள் அண்ணன் நெப்போலியன் வால்பையன் அவர்கள்
திரைப்பட உலகில் நுழைந்திருந்தால் எந்நேரமும் அவருக்கு
8p.m தான். வால் ஒரு royal stag என்பது உங்களில் பல பேருக்கு
தெரிந்திருக்கும். வால் நமக்கு எப்போதும் ஒரு teacher தான்.

வாலின் படத்தை பார்த்தாலே அவர் எவ்வளவு பெரிய
பலசாலி என்று உங்களுக்கு தெரியும், தன் ஒற்றை கையால்
புகைவண்டியை நிறுத்தியவர் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்!!
(இப்போது புகைப்படத்தை மேலும் வெட்டி புகைவண்டியை
மறைத்துவிட்டு தன் தன்னடக்கத்தை நிருபித்துள்ளார்).
ஹாலிவுட் படம் சூப்பர்மேன் மாதிரி இங்கு வால் நடித்தால்
அது வால்மேன்!!!!!

போனஸ் செய்தி:

படத்தில் ஒரு காட்சியில் வால் அவர்கள்,தன் ஆள்காட்டி விரலால்
ராக்கெட்டை நிறுத்துகிறார்.

வால் பஞ்ச் டயலாக்:

"யாரு மொதல்ல குவாட்டரை குடிக்கிறாங்கனு முக்கியமில்லை
கடைசி வரைக்கும் யாரு வாந்தி எடுக்காம குடிக்கிறாங்கான்றது தான் முக்கியம்."
********************************************************************
நர்சிம்:

நர்சிம் ஸ்டில்லை பார்த்தா இவரு ஏன் இன்னும் படஉலகில்
வரவில்லை என்று கேள்வி எழுகிறது. உள்ள வந்தார்னு வைங்க
கமல், அஜித் எல்லாம் காலி.

கமல் பாதி


அஜித் பாதி


கலந்த ஸ்மார்ட் மேன் தான் நர்சிம்.(இதாண்டா ஐஸ்!!)

போனஸ் செய்தி:


பில்லா படத்தில் சில காட்சிகளில் அஜித்துக்கு பதில் நர்சிம்
அவர்கள் டூப் போட்டதாக வதந்திகள் உண்டு....

நர்சிம் பஞ்ச்:

புயலடிச்சு பொழச்சவன் கூட இருக்கான்
ஆனா இந்த நர்சிம் கலாய்ச்சி,பொழச்சவன் யாரும் இல்லடா....

********************************************************************

கேபிள் சங்கர்:

பேரை கேட்டாலே சும்மா உதறது இல்ல.... கடந்த 35 வருடங்களாக நான் யூத் யூத் என்று கூறி கொள்ளும் அண்ணன் சங்கர் அவர்கள்
வில்லன் கேரக்டர்க்கு சூட் ஆவருன்னு மேல உள்ள படத்தை பார்த்தால் தெரிகிறது , ஆனால் அவரை ஜெயா டி.வி யில் பார்த்த போது டெல்லி கணேஷ் போல் ரவுண்டு வர வாய்ப்பு இருக்கு, அதாவது ஒரு அழகான நாயகிக்கு அப்பாவாக நடிக்கும் தகுதி.

படத்தில் நடிக்க கேபிள் சங்கரின் நிபந்தனைகள்:

# படத்தில் நாயகி மூன்று முறை அழும் காட்சி இருக்க வேண்டும்.
(அப்பதானே கேபிள் அண்ணே கட்டி பிடிச்சி தேத்துவாறு).

# அண்ணனுக்கு ஜோடியாக அதாவது நாயகிக்கு அம்மாவாக
சிம்ரன் அல்லது நதியா நடித்தால் கேபிள் அண்ணனின் கால்ஷீட்
ஊறுதி.

********************************************************************

கார்க்கி:

நம்ம இளைய தளபதி, புரட்சி தளபதி இருவருக்கும் சரியான போட்டி
நம்ம கார்க்கி மட்டும் தான். ச்சே என்ன மாதிரி ஒரு ஸ்டில் அவரு
கொடுத்து இருக்காரு. இவரு சினிமாவுல நடிக்கலைனா இழப்பு
கார்க்கிக்கு இல்ல, சினிமாவுக்கு தான்.என்கிட்டே பல 'C'கள் இருந்தா
இவரை வச்சி படம் எடுப்பேன், நான் இங்க சில 'H'க்கே தடுமாறும்
போது நான் என்ன பண்றது........

போனஸ் செய்தி:

இவருக்கு படத்துல பைட் சீன்லாம் இல்ல,வில்லனை மொக்கையை
போட்டு போட்டு திருத்தி விடுவார்.

படத்தில் கார்க்கியின் பஞ்ச் டயலாக்:

கார் கீ வச்சிரிக்கிற எல்லாரும் கார்க்கி ஆக முடியாது டா.....

********************************************************************
தல சுரேஷ்(பழனி):


மொதல்ல இவரை தான் நம்ம பேரரசு பழனி படத்துக்கு புக் பண்ணாரு,அப்புறம் சுரேஷ் அவர்களுக்கு டைம் கிடைக்காததால் நடிக்க முடியவில்லை. அவருடைய லூக்கை பாருங்கள், இவரு
இந்த வசனத்தை சொல்லி இருந்தா எப்படி இருக்கும்,

நீ வெட்டறதுக்கு நான் இளனி இல்லடா பழனி.!!!

போனஸ் செய்தி:

அடுத்து பேரரசு இயக்க போகும் திருத்தணியில் அண்ணன் சுரேஷ்
தான் ஹீரோ என்று ஒரு பேச்சு அடிபடுகிறது.... ஊருக்குள்ள பார்த்து
இருந்துக்குங்கப்பா......

********************************************************************
செந்தழல் ரவி:


ரவி ஜி செம டெர்ரர் ஆன ஆளு என்று அவரின் புகைப்படத்தை
பார்த்தால் தெரிகிறது. ரவி இம்சை கொடுப்பதில் பெரிய ஆள் என்பதாலும் ,கையில் க்ளவுஸ் அணிந்து இருப்பாதலும் இவருக்கு வில்லன் ரோல் தான் சூட் ஆகும் என்பது என் கணக்கு.
வெளிநாட்டில் வில்லன் இருப்பது போல் படம் இருந்தால்
இவர் தான் முதல் சாய்ஸ். ரவி படத்தின் பின்னே பாருங்கள்
உலக மேப் எல்லாம் தெரிகிறது. ஒரே இடத்தில் இருந்து உலகத்தை
கலக்கும் ஒசாமாவுக்கு அடுத்து நம்ம ரவி தான்.

போனஸ் செய்தி:

செந்தழல் ரவி அவர்கள் படத்தில் மூன்று கற்பழிப்பு காட்சிகள் இருந்தால் இலவசமாக நடித்து கொடுப்பதாக ஒரு செய்தி கோடம்பாக்கத்தை சுற்றி வருகிறது.....

படத்தின் டைட்டில் கார்டு
ரேப் நாயகன்
செந்தழல் ரவி
கிழிக்கும்
ஜன்னல் வச்ச ஜாக்கெட். DTS RDX

********************************************************************
ஜாக்கி சேகர்:


மேல உள்ள படத்தை பார்த்தா உங்களுக்கு தோணும் எண்ணம்,
யாருப்பா இவரு முகத்தில் பால் வடியுது என்று கேட்க தூண்டும்
ஒரு ஸ்டில்..... ஆனால் சேகரின் இடுகைகள் முக்கியமா சாண்ட்விச்
அண்ட் நான்-வெஜ் பயங்கரமா இருக்கும்.அண்ணன் பாக்க தான்
இந்த பூனையும் பால் குடிக்குமா என்று இருப்பார், ஆனா ஆள்
ரொம்ப விவகரமானவர்.அதனால சேகர் அண்ணனுக்கு
ஆன்டி ஹீரோ கேரக்டர் தான் செட் ஆகும்.

சேகர் அண்ணனுக்கு:

aunty ஹீரோ இல்ல அண்ணே anti ஹீரோ.

சேகர் அண்ணனின் பஞ்ச் டயலாக்:

அதிகமா ஆன்டி கூட சுத்துற பையனும்,
அதிகமா பசங்க கூட சுத்துற ஆன்டியோட பொண்ணும்
விளங்கனதா சரித்தரமே இல்லை.....

********************************************************************
சித்து:

இவரு வேற யாரும் இல்ல நம்ம ப்ளாக் குழு உறுப்பினர் தான்,
கொஞ்ச காலம் எழுதாம இருந்தாரு இப்போ திரும்பி எழுத ஸ்டார்ட் பண்ணிட்டார். சித்து போட்டோவை பார்த்தால் தெரியவில்லையா??. சித்துவே பெரும் தொழிலதிபர், அவர் நினைத்தால் எந்திரன் போன்ற மெகா பட்ஜெட் படத்துக்கு தயாரிப்பு செய்யலாம்.

நாங்கள் ஏர்காடு சென்ற போதே அவருக்கு ஒரு கதை ரெடி
பண்ணி அவரே தயாரிப்பதாய் ஒத்துக்கொண்டார், ஆனால்
அந்த கதையை மெருகேத்த நாங்கள் பகோடா பாயிண்ட்
சென்ற போது அந்த கதை பிட்டு படம் ரேஞ்க்கு சென்றதால்
அதோடு கைவிடப்பட்டது. ஒரு நல்ல இயக்குனரை சித்து
தேடி கொண்டு இருக்கிறார் என்பது மட்டும் உண்மை.

சித்து கண்டிஷன்:

# படத்தில் குறைந்தபட்சம் மூணு ஹீரோயின்கள் இருக்க வேண்டும்.

# படத்தில் மழையில் ரெண்டு பாட்டாவது இருக்க வேண்டும்.

# வெளியூர் படபிடிப்பின் போது நாயகிகள் தன் அறையில் மட்டுமே
தங்க வேண்டும்.....

********************************************************************
ப்ரியமுடன் வஸந்த்:வஸந்த் படத்தை பார்த்தால் பெரிய உட்டு புள்ளை ,மாதிரி தெரியுது, அதுவும் ரோலேக்ஸ் வாட்ச் கடை முன்னாடி ஸ்டில்
வேற கொடுக்கிறாரு...என்ன ஒரு மரியாதை.... பேசாம விஜயகாந்த்
நடிச்ச மரியாதை படத்தில் இவரு ஹீரோவா நடிச்சிரிக்கலாம்....

மரியாதை படத்தில் வரும் வசனம்:

மீன் பிடிக்கிறவன் சில நேரத்துக்கு தூங்கிகிட்டே வலை விரிப்பான்,
ஆனா முழிச்சிகிட்டு இருக்குற மீன் மாட்டிக்கும் அது விதிப்பா..


அதுவே வஸந்த் சொன்னா :

ப்ளாக் எழுதுறவன் சில நேரத்துக்கு தூங்கிகிட்டே எழுதுவான்,
ஆனா அவனுக்கு விசிட்டர்ஸ் அதிகமா வருவாங்க அதுக்கு பேரு
விதிப்பா...........

********************************************************************

தொடரும்....,,,


புடிச்சா கண்டிப்பா ஒட்டு போடுங்க, தவறு ஏதும் இருந்தால் திட்டுங்கள் வாங்கி கொள்வான் இந்த ஜெட்லி.

உங்கள்
ஜெட்லி. :)

35 comments:

jackiesekar said...

வஞ்சக புழ்ச்சிக்கு எனது நன்றிகள் ஜெட்லீ.. தொடரும் வேற போட்டு இருக்க??? இன்னும் எத்தனை பேரோ????
நல்ல நக்கல் பதிவு வாழ்த்துக்கள்

முரளிகண்ணன் said...

கலக்கல்

www.narsim.in said...

கலக்கல் நண்பா..எல்லா கமெண்ட்டுகளுமே புன்னகையை வரவழைத்தது.

கலக்குங்க.கேபிள் கலக்கலோ கலக்கல்

நர்சிம்.

செந்தழல் ரவி said...

Terrrrrorrr aaa Irukku :)

ஜெட்லி said...

@ jackie sekar
பதிவர்களின் படம் கிடைத்தால் கூடிய விரைவில்
அடுத்த இடுகை போட்டுருவோம்.....

ஜெட்லி said...

@ முரளிகண்ணன்

நன்றிகள் பல....

ஜெட்லி said...

@ narsim
//கலக்கல் நண்பா..எல்லா கமெண்ட்டுகளுமே புன்னகையை வரவழைத்தது//

நன்றி அண்ணே...

கார்க்கி said...

ரைட்டு.. உனக்காக ஃப்ரீயா நடிச்சு தரேம்ப்பா..

100க்கு வாழ்த்துகள்..

ஜெட்லி said...

@ செந்தழல் ரவி

நன்றி ரவி ஜி.....

ஜெட்லி said...

@கார்க்கி

எனக்கு ஒரு கார் வாங்கி கொடுத்துடுங்க...
கதை விவாதத்துக்கு வரதுக்கு கொஞ்சம் வசதியாக இருக்கும்....

SUREஷ் (பழனியிலிருந்து) said...

பெருந்தலைகளோடு நானா...?

நன்றி தல........,

விரைவில் ஆயிரமாவது பதிவினைப் போட்டுக் கலக்கவும்..........,

பிரபாகர் said...

விதவிதமா யோசிக்கிறாங்கப்பா!

நூறாவது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.... மேலு பல நல்ல பதிவுகளை எழுதுங்கள். இருநூறில் வெகு சீக்கிரம் உஙளை சந்திக்க வேண்டும் நண்பா....

பிரபாகர்.

டக்ளஸ்... said...

செம கலக்கல்..
கார்க்கிகிட்ட பார்த்து இருங்கப்பா..!
அப்பறம், நடிக்கும் போது மூக்குல குடுத்துருவாரு..+
:)

யோ (Yoga) said...

அதாவது ஒரு அழகான நாயகிக்கு அப்பாவாக நடிக்கும் தகுதி

அப்ப கேபிள் நம்மள போல யுத்துகளுக்கு மாமாவா?

வண்ணத்துபூச்சியார் said...

கலக்கல்.

ரேப் நாயகன் -- இது ஓவர்.. பாவம் செந்தழலார்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்

shortfilmindia.com said...

/அதாவது ஒரு அழகான நாயகிக்கு அப்பாவாக நடிக்கும் தகுதி

அப்ப கேபிள் நம்மள போல யுத்துகளுக்கு மாமாவா//

அலோவ்.. இந்த யோவோட பின்னூட்டத்தை அழிங்க.. இல்லாட்டி நான் நடிக்க வரமாட்டேன்.. நம்ம இமேஜை கெடுக்குறாரு..

கேபிள்சங்கர்

இராகவன் நைஜிரியா said...

கலக்கிட்டீங்க.... (அப்பாடா நான் இல்ல தப்பிச்சுட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்)

கேபிளாரை இப்படி வாரிட்டீங்களே...அவ்....அவ்...அவ்.

தண்டோரா ...... said...

ஏ அப்பா..நானும் ரவுடிதான்ப்பா..

தேவன் மாயம் said...

படு ஸ்பீடா இருக்கே லீ!!!
பன்ச்செல்லாம் புரூஸ்லீ மாதிரி செம ரகளை!!!

ஜெட்லி said...

//விரைவில் ஆயிரமாவது பதிவினைப் போட்டுக் கலக்கவும்.........., //

nandri suresh thala

ஜெட்லி said...

@ பிரபாகர்

நன்றிகள் பல....

ஜெட்லி said...

@ டக்ளஸ்

ரைட் சொல்லிடிங்க இல்ல... சூதானமா இருக்கேன்...

ஜெட்லி said...

@ யோ..
பார்த்து யோ கேபிள் அண்ணன் கைல மாட்டிடாத....
கைமாதான்... நானும் தான்.

ஜெட்லி said...

@வண்ணத்துபூச்சியார்
//ரேப் நாயகன் -- இது ஓவர்.. பாவம் செந்தழலார்.. அவ்வ்வ்வ்வ்வ்வ் //

சும்மா காமெடிக்கு தான் ஜி... ரவி ரொம்ப நல்லவரு...

ஜெட்லி said...

@ கேபிள்

சும்மா காமெடி ஜி...
நீங்க யூத்ங்கறது யாராலும் மறுக்க முடியாத
உண்மை...ஹீ ஹீ.

ஜெட்லி said...

@ இராகவன் நைஜிரியா
உங்க படம் கிடைக்கில கிடைச்சா நீங்களும் காலி...

ஜெட்லி said...

@தண்டோரா
அடுத்தது நீங்க தான் ஜி.... விரைவில்...

ஜெட்லி said...

@தேவன் மாயம்

nandri doctor...

வால்பையன் said...

அந்த பஞ்ச் டயலாக் உண்மையிலேயே நான் சொல்லியிருக்கேன்!

வேகமாக குடிப்பவர்களை பார்த்து, ஏன்னா நான் ரொம்ப ஸ்லோ ஆனா ஸ்டெடி!

சித்து said...

என்னடா இது, இம்மாம் பெரிய தலைங்க இருக்குற இடத்துல நம்ம குந்திகினுகீரோமா அப்படினா நாமளும் பிரபல பதிவர் ஆகிட்டோமா?? சொல்லவே இல்ல!!!!!. ஹே நல்ல பாத்துக்கோ நானும் பிரபல பதிவர் ஆகிட்டோம்ல............. :)

சித்து said...

மச்சி அண்ணன் கேபிள் அவர்களின் படம் மட்டும் நீ அவர் கிட்ட கேட்டு வாங்குன மாதிரி தெரியலையே, ரொம்ப டெர்ரர்ஆ இருக்குல..........

kgjawarlal said...

"நீ வெட்டறதுக்கு நான் இளனி இல்லடா பழனி.!!!"

நல்லாருக்கு. பளனின்னு சொல்லியிருந்தா அட்டகாசமா இருந்திருக்கும்!

http://kgjawarlal.wordpress.com

லோகு said...

//
சித்து கண்டிஷன்:
# வெளியூர் படபிடிப்பின் போது நாயகிகள் தன் அறையில் மட்டுமே
தங்க வேண்டும்.....//

இந்த கண்டிசன் மட்டும் புரியல.. ஒரு வேளை இவர்தான் தயாரிப்பு அப்படிங்கறதால சிக்கன நடவடிக்கையா..

பிரியமுடன்.........வசந்த் said...

பிரபலங்களோட இந்த பொடியனுமா?

எல்லாமே கலக்கல்.. ஜெட்லிஜி

Bala De BOSS said...

நூறாவது படைப்புக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா. விரைவில் ஆயிரமாவது படைப்பை வெளியிட்டு "ஆயிரத்தில் ஒருவன்" என்ற பட்டத்துக்கு சொந்தக்காரனாக வேண்டும்.