நமக்கு அடுத்து வரப்போகும் தலைமுறைகளுக்கு நாமேஅழிவை தேடி தரும் செயல் தான் பிளாஸ்டிக் பொருட்களை
உபயோகிப்பது. நம் அன்றாட வாழ்க்கையின் ஒன்றாகி விட்ட
பிளாஸ்டிக் என்னும் பொருளை ஒழிப்பது அவ்வளவு எளிதல்ல.
நான் இதை எழுதுவதற்கு காரணம் இதை படித்த நம் சக
பதிவர்கள் மற்றும் என் நண்பர்கள் பத்து பேரவாது சிந்திப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான்.
பிளாஸ்டிக்கை, அதாவது மனிதன் தயாரித்த செயற் பிளாஸ்டிக்
1855 ஆண்டு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. பல வித மாற்றங்களுக்கு பிறகு நாம் முக்கியமாக உபயோகிக்கும் கேரி
பேக் வடிவமைக்கப்பட்டது.
நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாத தேவையாகி விட்டது
கேரி பேக்.கடைக்கு போனால் ஒரு பாக்கெட் பால் வாங்குனா
கூட கேரி பேக் கேக்குறோம்,துணி கடைக்கு போன ஒரு ஒரு
மாடிக்கும் மூணு நாலு கேரி பேக் தருகிறார்கள்.வீட்டுக்கு
வந்தவுடன் நாம் கேரி பேகை குப்பை தொட்டியில் வீசி எறிகிறோம்
அல்லது ரோட்டில் தூக்கி போடுகிறோம்.அந்த பிளாஸ்டிக் பேக் மக்காது என்று நமக்கு தெரியும் இருந்தாலும் அதை வைத்து
என்ன பண்ணுவது என்று தூக்கி எறிகிறோம். அந்த பிளாஸ்டிக்
பேக் அனைத்தும் மக்கமால் மண்ணோடு மண்ணாக அப்படியே
இருக்கும். மழை வந்தால் தண்ணீர் உள்ளே போகாமல் பிளாஸ்டிக்
பேக்கால் தடுக்க பட்டு தடுக்க பட்டு இப்போதே நாம் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறோம்.
காலம் தவறி பெய்யும் மழை யாருக்கும் உதவாது, முக்கியமா விவசாயம் பண்றவங்க ரொம்ப கஷ்ட படுவாங்க. போன வாரம்
திருவண்ணாமலை சென்ற போது பாக்கம் என்ற ஊரில் பாதி
விவசாய நிலங்கள் பிளாட் போட்டு விற்று விட்டார்கள் எல்லா ஊரிலும் இதே கதி தான். இதற்கு நான் பிளாஸ்டிக் மட்டுமே
காரணம் என்று சொல்லவில்லை பிளாஸ்டிக்கும் ஒரு காரணம்,
அதை உபயோகிக்கும் நாமும் ஒரு முக்கிய காரணம்.
சரி இவ்ளோ பேசுறியே ஜெட்லி, நீ சொல்ற மாதிரி தூணி
கடைக்கு அல்லது மளிகை கடைக்கு போன எல்லாத்தையும்
கையுல எடுத்துட்டு வர முடியுமா? என்று நீங்கள் கேட்பது எனக்கு
புரிகிறது. தூணி கடையில் கூட அந்த கட்டை பேக் கொடுப்பார்கள்
அதை வாங்கி கொள்ளலாம், ஆனால் மளிகை கடையில் ஒவ்வொரு பொருளும் பிளாஸ்டிக் பையால் தான் கட்டப்பட்டு அதை ஒரு
பெரிய பிளாஸ்டிக் பையில் தருவார்கள். மளிகை கடை வைத்திருப்பவன் என்ற முறையில் எனக்கே தெரியும் நாங்கள் செய்வது தவறு என்று, ஆனா என்ன பண்றது பத்து வருஷம்
முன்னாடி அரிசி, பருப்பெல்லாம் பேப்பரில் கட்டி தான் கொடுப்போம்.
எங்கள் வாடிக்கையாளர்கள் தான் "என்னங்க இன்னும்
பேப்பரில் கட்டிட்டு இருக்கீங்க?" என்று எங்களை மாற வைத்தார்கள்.
அப்புறம் இந்த கேரி பேக் தான் பேரும் பிரச்சனை, சின்ன பிஞ்சு குழந்தைகள் கூட ஒரு பால் அல்லது இட்லி மாவு வாங்கினால்
கூட கேரி பேக் வேண்டும் என்பார்கள் அவர்களிடம் கையில்
எடுத்து போக சொன்னால் அதெல்லாம் முடியாது எனக்கு மாவு
வேணாம் என்பார்கள். எனக்கு தெரிந்து ஒரு மூணு நாலு பேர் மட்டுமே பிளாஸ்டிக் பை வேண்டாம் என்பார்கள். கையில் எடுத்து
கொண்டு போய் விடுவார்கள் அல்லது வீட்டில் உள்ள பழைய
பிளாஸ்டிக் பையை எடுத்து வந்து வாங்கி போவார்கள்.
அதிலும் ஒரு பெரியவர் என்னிடம் "யாருக்கும் பிளாஸ்டிக் பேக்
கொடுக்காதிங்க, நீங்க மொதல்ல நிறுத்துங்க" என்பார்.
நான் கேரி பேக் கொடுப்பதை நிறுத்தினால் என் வாடிக்கையாளர்கள் என்னிடம் வாங்குவதை நிறுத்தி விடுவார்கள் என்று தெரிந்த காரணத்தால்,ஏதோ வருபவர்களிடம் முடிஞ்ச வரைக்கும்
பிளாஸ்டிக் பையை யூஸ் பண்ணாதிங்க என்று சொல்வதோடு சரி. சில பேர் எதிர் கேள்வி வேறு கேட்பார்கள் "அப்புறம் எப்படி இதெல்லாம் எடுத்துட்டு போறது" என்று. அவர்கள் கேட்பதிலும் தப்பு இல்லை.இவ்ளோ வருஷம் பழகியாச்சு நிறுத்தறது கொஞ்சம் கஷ்டம் தான், முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை.
கூடிய விரைவில் நாங்களும் பேப்பர் பேக் உபயோகிக்க எல்லாம் முயற்சிகளும் எடுத்து வருகிறோம். பேப்பர் பேக் விலையும்
அதிகம் மற்றும் அதிக பொருள்கள் எடை தாங்குமா என்று
தெரியவில்லை. என்னால் முடிந்த வரை கடைக்கு வரும் மக்களிடம் பிளாஸ்டிக் பையால் ஏற்படும் தீமையை
எடுத்து கூறுவேன். நாமும் இனி முடிந்த வரை பிளாஸ்டிக்
பொருட்களை உபயோகிப்பதை தவிர்ப்போம். நம் அடுத்த தலைமுறையினருக்கு ஒரு நல்லதை செய்வோம்.
எல்லா மக்களையும் சென்று அடைய முடிஞ்ச ஒட்டு போடுங்க இல்லனா கருத்துரை போடுங்க ஜி...
ஜெட்லி.
6 comments:
சமூக அக்கறையுள்ள நல்ல பதிவு மாப்ள.. முடிந்த அளவுக்கு உபயோகிப்பதை குறிப்போம்.. தவிர்ப்போம்..
பிடிக்காதவங்க கடைக்கு வந்தா சென்னை 28 பிரேம்ஜி மாதிரி கலாய்பிங்களா??
நல்ல கருத்து, இலங்கையில் தற்போது பிலாஸ்டிக் பாவனை அரசாங்கத்தின் சட்டத்தால் குறைக்கப்பட்டுள்ளது.
வரவேற்க்கத்தகுந்த பதிவு ஜி வாழ்த்துக்கள்
நன்றி லோகு...
நான் கொஞ்சம் நல்ல பையன் அப்படின்னு ஊருக்குள்ள
பேசிகிறாங்க.....
நன்றி யோ...
அது போல் இந்தியாவிலும் செய்வார்களா என்று
தெரியவில்லை....
சரியா சொன்ன ஜெட்லி, நான் என் மனசுல போட்டு குமுறிட்டு இருந்தத நீ தெளிவா சொல்லிட்ட.... நாம எவ்வளவு தான் காட்டுக்கத்தல் கத்தினாலும், நம்ம தமிழகமக்கள தலய ஆட்டிக்குவாங்க, ஆனா அடுத்த நாள் ஏதாவது இலவசம்னு டிவில போட்டுட்டான், இத மறந்துட்டு ஃபிரிய தேடி ஓடுவான், தமிழனோட தேசிய வியாதி இந்த "மறதி". வாழ்க தமிழகம்......
Post a Comment