Tuesday, December 8, 2009

ஒரு நாள் விடுப்பும் நான்கு டெஸ்ட் போட்டிகளும்
பத்து நாட்களுக்கு முன், கொஞ்சம் ஆணி அடிக்க வேண்டிய வேலை இருந்ததால் அலுவலகத்துக்கு மட்டம் போட்டுவிட்டு வீட்டில் இருந்தேன். அடிக்க வேண்டிய ஆணிகள் அனைத்தையும் முடித்ததால் ஒவ்வொரு சானலாக மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்தேன். கண்ணில்பட்டது நான்கு டெஸ்ட் போட்டிகள், அவை

NEO Cricket - இந்தியா - இலங்கை இரண்டாவது போட்டி (கான்பூர்)
STAR Cricket - ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டிஸ் முதல் போட்டி (பிரிஸ்பேன்)
TEN Sports - நியுசிலாந்து - பாகிஸ்தான் முதல் போட்டி (டுனெடின்)
NEO Sprots - ஹைதராபாத் - ஒரிசா ரஞ்சி போட்டி (ஹைதராபாத்)

இந்த நான்கு போட்டிகளையும் வெவ்வேறு அடிப்படைகளில் எப்படி வரிசைப்படுத்துவது என யோசித்துக்கொண்டிருந்தபோது மனதில் தோன்றிய சில கருத்துக்கள் இங்கே,


அணிகளின் பேட்டிங் தரத்தின் அடிப்படையில்

1. NEO Cricket - உலகின் மிகச்சிறந்த ஆட்டக்காரர்கள் பலரை கொண்டிருக்கும் இந்தியா - இலங்கை போட்டி முதலிடத்தை பெறுகிறது

2. STAR Cricket - Chris Gayle மட்டுமே நம்பி இருக்கும், வெஸ்ட் இண்டிஸ் பேட்டிங் வரிசை, ஆட்டத்தின் தரத்தை கீழே இழுக்கும் போதும், புதுசா வருபவனும் கூட ஒரு அம்பதோ, நூறோ அடித்துவிட்டு போகும் ஆஸ்திரேலிய பேட்டிங் இப்போட்டிக்கு இரண்டாமிடத்தை தருகிறது.

3. TEN Sports - 'நாங்க அடிப்போம், ஆனா அடிக்கமாட்டோம்' அப்படின்னு இரண்டு அணிகளும் விளையாடுவதால் இந்த போட்டிக்கு மூன்றாவது இடம்தான்.

4. NEO Sports - எங்களில் யாரையும் தேசிய அணிக்காக தேர்ந்தெடுப்பதை பற்றி தேர்வாளர்கள் கனவிலும் கூட நினைத்து விடக்கூடாது என கங்கணம் கட்டி இரு அணிகளும் விளையாடுவதால், நான்காவது இடம்.


அணிகளின் பவுலிங் தரத்தின் அடிப்படையில்

1. STAR Cricket - மிட்செல் ஜான்சனின் புஜ வலிமைக்க்காகவே (அது கையா, உலக்கையா என்பது இன்னும் தொடரும் சந்தகம்) நான் இதற்கு முதலிடம் கொடுப்பேன்.

2. TEN Sports - 'சண்டை முன்னப்பின்ன இருந்தாலும் சத்தம் அதிகமா இருக்கும்' என்பதுபோல், மொக்கையா பேட்டிங் பண்ணினாலும் ஷேன் பான்ட், வெட்டோரி, ஆசிப், உமர் குல் அடங்கிய சிறந்த பந்துவீச்சு படையை இரு அணிகளும் வைத்திருக்கும் இப்போட்டி இரண்டாமிடம் பெறுகிறது.

3. NEO Cricket - என்னதான் ஜாகிர்கான் பார்முக்கு வந்துவிட்டார், முரளிதரன் கண்ணாடியில் கூட பந்தை திருப்புவார்னு சொன்னாலும், மொக்கை பவுலிங்குக்கு மூன்றாமிடம் தான்.

4. NEO Sports - இந்திய அணியில் இடமில்லாமல் அனுப்பபட்ட, 2003 உலககோப்பையில் விளையாடிய மொஹந்தி (ஞாபகம் இருக்கா?), மற்றும் ஒரு கிலோமீட்டர் ஓடிவந்து போட்டாலும் 120 KM தாண்டாத பல பாஸ்ட் (??) பவுலர்கள் விளையாடும் இப்போட்டி நான்காமிடம் பெறுகிறது.


ஆடுகளத்தின் தரத்தின் அடிப்படையில்1. STAR Cricket - இருபது மீட்டர் தள்ளி நிற்கும் கீப்பருக்கே, இடுப்புயரம் பந்து செல்லும் அற்புதமான Swing மற்றும் Bounce கொண்ட நியுசிலாந்து மைதானத்திற்கே முதலிடம்

2. TEN Sports - நியுசிலாந்து மைதானதிற்கு கொஞ்சமும் குறைவில்லாதபோதும் கடைசி நாளில் காணமல் போன Bounce இந்த மைதானத்தை இரண்டாமிடத்திற்கு இழுக்கிறது

3. NEO Cricket - முக்கி முக்கி பந்து வீசினாலும் முட்டிக்கு மேல் எழும்பாத கான்பூர் மைதானம் மூன்றாமிடம் பெறுகிறது

4. NEO Sports - சர்வதேச போட்டியில் பந்தை உருட்டிவிளையாடிய சேப்பல் பயிற்சியாளராய் சிறிதுகாலம் இருந்த ஒரே காரணத்தினால் ஆடுகளங்களை எல்லாம் நலுங்கு உருட்டும் இடமாய் மாற்றிய BCCI யின் சாதனை இந்த போட்டியை நான்காமிடதிற்கு தள்ளுகிறது.

ஒளிப்பதிவு மற்றும் வர்ணனை

1. அட்டகாசமான ஒளிப்பதிவு, அருமையான வர்ணனை, அற்புதமான ஆங்கிலம் என்ற STAR Criket இன் தாரகமந்திரம் முதலிடம் பிடிக்க செய்கிறது.

2 & 3. ஸ்கொயர் லெகில் அடிக்கப்பட்ட பந்தை லாங் ஆனில் தேடும் காமெரா, என்ன சொல்ல வருகிறோம் என்பதில் ஒரு தெளிவில்லாமல் எங்கோ ஆரம்பித்து எதிலோ முடிக்கும் வர்ணனையாளர்கள், பெரும்பாலும் ஒருத்லைபட்சமாகவே அமையும் வர்ணனைகள் NEO Cricket மற்றும் TEN Sports இடையே 2 & 3 ஆம் இடங்களுக்கு கடும் போட்டியை உண்டாக்கினாலும், சுஜாதா சொல்வதுபோல், தப்புத்தப்பாய் ஆங்கிலம் பேசி முதுகு வலியை அதிகமாக்கும் போட்டியில் வெல்லும் TEN Sports மூன்றாமிடம் பிடிக்கிறது.

4 . தண்டவாளத்தில் தலை வைத்தாலும் சரி, மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறினாலும் சரி, (காமெடி பண்ணாதேன்னு நீங்க சொல்வது காதில் விழுகிறது), காங்கிரசுக்கு தமிழ்நாட்டு அமைச்சரவையில் இடம் கொடுத்தாலும் சரி, (எந்த கோஷ்டிக்கு என்று அப்புறம் முடிவுசெய்யலாம்) நாங்கள் ஹிந்தியை மட்டும் தான் ஆட்சிமொழியாக கருதுவோம் எனும் தூர்தர்ஷனின் கொள்கையை அப்படியே பின்பற்றும் NEO Sports நான்காவது இடம் பெறுகிறது.

ஒரு தனிப்பட்ட வீரரின் அடிப்படையில்

1. என்றும் ஆட்டநாயகன், கிரிக்கெட்டில் எங்கள் தெய்வம், சச்சின் இருக்கும் ஒரே காரணத்தினால் NEO Cricket முதலிடம் பெறுகிறது.

2. ஒற்றை ஆளாய் நின்று அணியை வழிநடத்தி செல்லும் வெட்டோரியை எனக்கு பிடித்த காரணத்தால், எனக்கு பிடிக்காத அப்ரிடி இருந்தபோதும், TEN Sports இரண்டாமிடம் பெறுகிறது

3. இரு அணிவீரர்களில் யாரையும் பற்றி எனக்கு தெரியாது என்ற போதிலும் கீழே கூறியுள்ள காரணத்தினால் NEO Sports மூன்றாமிடம் பெறுகிறது.

4. கிரிஸ் கெயில், சந்தர்பால் போன்ற எனக்கு பிடித்த பல வீரர்கள் இருந்த போதிலும், நான் வெறுக்கும் ஒரே ஆட்டக்காரரான பாண்டிங் இருக்கும் ஒரே காரணத்தால், STAR Cricket கடைசி இடம்பெறுகிறது


நன்றி சங்கர்

8 comments:

shabi said...

nalla thoguppu

Chitra said...

நடு நிலைமையா (?????!!!!) என்ன ஒரு ranking. லீவு போட்டு ரூம் போட்டு யோசிச்சு .........

சுசி said...

ஓ... கிரிக்கெட்டா..

ஹிஹிஹி..

புலவன் புலிகேசி said...

நீங்க ஏன் ஐ.சி.சி உலக கிரிக்கெட் தரவரிசை நிறுவனத்தில் வேலை கேட்க கூடாது....

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ஒரே நேரத்தில் நான்கு கிரிக்கெட் போட்டிகளை பார்க்க முடியாவிட்டாலும், ஒரே பதிவில் இந்நான்கு போட்டிகளையும் விமரிசித்த சங்கருக்கு ஜே!

உங்கள் தோழி கிருத்திகா said...

நான் வெறுக்கும் ஒரே ஆட்டக்காரரான பாண்டிங் இருக்கும் ஒரே காரணத்தால், STAR Cricket கடைசி இடம்பெறுகிறது////

அவனை வெறுக்கும் பல காரணங்களில் இதுவும் ஒன்று...எங்க பாத்தாலும் எச்ச துப்பி துப்பி வெப்பான்..கருமம் புடிச்சவன்..பாத்தாலே கொமட்டும்..அந்த கையோடவே எல்லாருக்கும் கை குடுப்பன்...உவேக்க்க்க்

கலையரசன் said...

நல்ல தொகுப்பு + பகிர்வுக்கு நன்றி தலைவா!!

// ...எங்க பாத்தாலும் எச்ச துப்பி துப்பி வெப்பான்..கருமம் புடிச்சவன்..பாத்தாலே கொமட்டும்..அந்த கையோடவே எல்லாருக்கும் கை குடுப்பன்...உவேக்க்க்க் //

சில டைம் அவன் மேல அவனே எச்சி துப்பிப்பான்... பிக்காலி!!

முகிலன் said...

//நான் வெறுக்கும் ஒரே ஆட்டக்காரரான பாண்டிங் //

சேம் ப்ளட்