Tuesday, December 22, 2009

என் டர்ர்ர்ர்ர்ர்ர் கவிதைகள் - 2

உன் வீடில்லாத் தெரு

பாதாள சாக்கடைக்காய்

பள்ளம் தோண்டியிருக்கவில்லை

குடிநீர் வாரியக்காரர்கள்

குழி தோண்டவுமில்லை - நேற்று

கொட்டிய மழை நீர்

கட்டிக் கிடக்கவுமில்லை

என் வீடு செல்ல

இது சுருக்கு வழி - இருந்தும்

உன் வீடில்லா இத்தெருவில்

நுழையும் முன்

மனப்பலகை சொல்கிறது

'மாற்று வழியில் செல்க'


நன்றி

சங்கர்

31 comments:

தர்ஷன் said...

ச்ச்ச் சா சா
பார்த்து அந்தப் பக்கம்தான் குன்றும் குழியுமா இருக்கப் போகிறது

பிரபாகர் said...

அப்போ அங்கேயேதான் சுத்திகிட்டிருப்பீங்க போலிருக்கு...

நல்லாருக்குங்க...

பிரபாகர்.

பேநா மூடி said...

இதுவல்லவோ கவிதை..,

சங்கர் said...

@தர்ஷன்

வாங்க வாங்க, முதல்தடவையா முதல் ஆளா வந்திருக்கீங்க, நன்றி

//ச்ச்ச் சா சா//

இது என்னன்னு புரியலையே, எதிர்க்கவிதையோ?


//பார்த்து அந்தப் பக்கம்தான் குன்றும் குழியுமா இருக்கப் போகிறது //


குழியில் குப்புற விழுந்தாலும், அத வச்சே அங்க அனுதாபம் தேடுவோம்ல

சங்கர் said...

//பிரபாகர் said...
அப்போ அங்கேயேதான் சுத்திகிட்டிருப்பீங்க போலிருக்கு...//

இதவிட முக்கியமான வேற வேலை இருக்கா என்ன?

சங்கர் said...

//பேநா மூடி said...
இதுவல்லவோ கவிதை.., //

நல்லா சொல்லுங்க, நாலு பேர் காதுல விழட்டும்

வெற்றி said...

கை கொடுங்க பாஸ்...நீங்க நம்ம செட்டு..

சங்கர் said...

//வெற்றி said...
கை கொடுங்க பாஸ்...நீங்க நம்ம செட்டு.. //

உன்னைத்தான் எதிர்பார்த்துக்கிடிருந்தேன்,


ஆமா, நான்தான் வேற வழி இல்லாம தெருவுல சுத்துறேன், நீ தான் காலேஜில பாக்குறல்ல, பத்தலையா, எதுக்கு தெருவுல சுத்தற?

மகா said...

ஆகா கவிதை அருவியா கொட்டுதே பாஸு .....

பின்னோக்கி said...

சுத்தி..சுத்தி வீடு போய் சேர்ந்திட்டா நல்லது :). அழகான கவிதை. அப்புறம், பாதாள சாக்கடைக்காய்
குடிநீர்வாரியம் தானே செய்யும் ?

சங்கர் said...

//மகா said...
ஆகா கவிதை அருவியா கொட்டுதே பாஸு ..... //

ஏற்கனவே மழை கொட்டி தெருவெல்லாம் வெள்ளக்காடா இருக்கு, இதுல இது வேறயா

சங்கர் said...

//பின்னோக்கி said...
சுத்தி..சுத்தி வீடு போய் சேர்ந்திட்டா நல்லது :)//


யார் வீட்டுக்குன்னு சொல்லலியே?


//அப்புறம், பாதாள சாக்கடை,
குடிநீர்வாரியம் தானே செய்யும் ?//


பொதுப்பணித்துறைன்னு நினைக்கிறேன், சரியா தெரியலீங்க,

Chitra said...

மனப்பலகை சொல்கிறது

'மாற்று வழியில் செல்க' ...............அரசாங்கத்துக்கு ஏன் இப்படி ஐடியா எல்லாம் கொடுக்குறீங்க?

சங்கர் said...

//Chitra said...
அரசாங்கத்துக்கு ஏன் இப்படி ஐடியா எல்லாம் கொடுக்குறீங்க?//

அக்கா, என்னை ரொம்ப பாராட்டாதீங்க, கூச்சமா இருக்கு

பிரியமுடன்...வசந்த் said...

சின்ன மேட்டர்தான் ஆனா யோசிச்சு பார்த்தா வரும் நினைவு சூப்பர்ப் நல்லாருக்கு சங்கர்...!

சங்கர் said...

@பிரியமுடன்...வசந்த்

வாங்க கவிஞரே, நன்றி

வேலன். said...

நல்லாஇருக்கு சங்கர் சார்....
நீங்கள் பாலோ செய்யும் நபர்களின் பதிவுகளை படிப்பதற்கே உங்களுக்கு நேரம் சரியாகஇருக்கும் என நினைக்கின்றேன்(எனக்கு தெரிந்து நீங்கள்தான் அதிகம் என நினைக்கின்றேன்)

வாழ்க வளமுடன்,
வேலன்.

சங்கர் said...

//வேலன். said...
நல்லாஇருக்கு சங்கர் சார்....
நீங்கள் பாலோ செய்யும் நபர்களின் பதிவுகளை படிப்பதற்கே உங்களுக்கு நேரம் சரியாகஇருக்கும் என நினைக்கின்றேன்(எனக்கு தெரிந்து நீங்கள்தான் அதிகம் என நினைக்கின்றேன்)//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி,

ஆபிஸ்ல ஆணி கொஞ்சம் குறைவுதான், அதனாலத்தான் பாலோ பண்ற வலைப்பூக்கள் கொஞ்சம் அதிகமா இருக்கு, ஹிஹிஹி

இராகவன் நைஜிரியா said...
This comment has been removed by the author.
இராகவன் நைஜிரியா said...

அது வேறு ஒருவருக்கு போட வேண்டியதை உங்க இடுகையில் போட்டுவிட்டேன். அதான் டெலீட் பண்ணிட்டேன் சாரி.

இராகவன் நைஜிரியா said...

// உன் வீடில்லா இத்தெருவில்

நுழையும் முன்

மனப்பலகை சொல்கிறது

'மாற்று வழியில் செல்க' //

அப்படி சொல்லுங்க.... மனம் சொல்லுவதை கேட்காவிட்டால் விபரீதமாகுமல்லவா?

குறும்ப‌ன் said...

//பள்ளம் தோண்டியிருக்கவில்லை//
//குழி தோண்டவுமில்லை//
//மழை நீர் கட்டிக் கிடைக்கவுமில்லை//

அப்போ நீங்க‌ சென்னையிலேயே இல்லை!

சங்கர் said...

//இராகவன் நைஜிரியா said...
அப்படி சொல்லுங்க.... மனம் சொல்லுவதை கேட்காவிட்டால் விபரீதமாகுமல்லவா?//

மனம் சொல்றத கேட்டு போய் இது வரை அடி எதுவும் வாங்கலை, இனிமேலும் நடக்காதுன்னு நம்புறேன்

சங்கர் said...

//குறும்ப‌ன் said...
அப்போ நீங்க‌ சென்னையிலேயே இல்லை!//

:))

வெற்றி said...

//ஆமா, நான்தான் வேற வழி இல்லாம தெருவுல சுத்துறேன், நீ தான் காலேஜில பாக்குறல்ல,//

கம்பெனி சீக்ரெட்ட அடிக்கடி வெளில சொல்லாதீங்க பாஸ்..

//எதுக்கு தெருவுல சுத்தற? //

அது ஒரு கனாக்காலம்..இப்ப எதுக்கு அதெல்லாம்..

நாஸியா said...

ஒகே ரைட் ரைட்!

சங்கர் said...

//நாஸியா said...
ஒகே ரைட் ரைட்! //

வாங்க வாங்க, தொடர்ந்து வாங்க

சுசி said...

//'மாற்று வழியில் செல்க'//
அவங்கள பாக்க வேணா தாராளமா வழிய மாத்துங்க.

கவிதை இந்த வழியிலேயே போகட்டும். சூப்பரா இருக்கு.

சங்கர் said...

//சுசி said...
அவங்கள பாக்க வேணா தாராளமா வழிய மாத்துங்க.//

என்னத்த போய் என்ன பண்ணுறது, வீட்டை விட்டு வெளிய வந்தாத்தானே பார்க்க முடியும்

நினைவுகளுடன் -நிகே- said...

கவிதை அழகு .
சுகமான உணர்வை தந்த வரிகள் சிறப்பு

சங்கர் said...

//நினைவுகளுடன் -நிகே- said...
கவிதை அழகு .
சுகமான உணர்வை தந்த வரிகள் சிறப்பு //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, தொடர்ந்து வாங்க