Friday, December 18, 2009

வேட்டைக்காரன் - அலசல்(பிற்சேர்க்கையுடன்)

வேட்டைக்காரன் - அலசல்(பிற்சேர்க்கையுடன்)

வில்லு படத்தின் தோல்விக்கு பிறகு விஜய்க்கு வந்திருக்கும் படம்
வேட்டைக்காரன்.பாபு சிவன் இயக்கத்திலும் விஜய் அன்டோனி இசையிலும் கோபிநாத் ஒளிப்பதிவிலும் வேட்டைக்காரன் உண்மையிலேயே செம ஒபெநிங்.
விஜய்யுடன் அனுஷ்கா,ஸ்ரீஹரி,சத்யன்,சாயாஜி சிண்டே,ஸ்ரீநாத்
மற்றும் ரெட் படத்தில் வில்லனாக வருவாரே அவரும் இருக்கிறார்.
வேட்டைக்காரன் படத்தின் கதை என்ன என்றால் போலீஸ்ஆக
துடிக்கும் ஒருவனது கதை என்று சொல்லலாம்.படத்தின் முதல்
பாதி செம ஜாலியா போச்சு.விஜயின் குறும்பான நடிப்பு மற்றும்
முதல் பாட்டுக்கான ஆட்டம் செம.குறிப்பா சத்யனுக்கு கல்யாணம்
பண்ணிவைக்க இவங்க பண்ற அலைப்பறை சூப்பர்.விஜய்க்கு இந்த படத்தில் முதல் பாதியில் ஒரு பைட்தான் என்ன அதிசியம் ஒபெநிங் பைட் இல்ல.அப்புறம் ஆ ஊனு கத்தாமல் கொஞ்சம் சாந்தமா வருகிறார்.

விஜய் இதில் ப்ளஸ் டூ(நாலு வருஷம் கோட்) முடித்து கல்லூரியில்
சேரும் மாணவராக(ஒன்னும் சொல்றதுக்கு இல்ல!!) வருகிறார்.
அனுஷ்கா, வழக்கான விஜய் படத்தில் வந்து போகும் கதாநாயகி
தான் என்றாலும் அனுஷ்கா ஜூப்பர்.சத்யன் மற்றும் ஸ்ரீநாத்தின்
காமெடி ஓகே.அப்புறம் இந்த காலேஜ் சீனில் ஒரு மரத்துக்கிட்ட
அனுஷ்காவா கூட்டிட்டு போய் விஜய் கொடுக்கும் முகபாவங்கள்
நல்லா இருந்தது.அப்ப படம் சூப்பர்ஆ? என்று நீங்கள் கேட்டால்
இருங்க சொல்றேன்!!

படத்தின் கதை ஒன்றும் புதிதல்ல என்றாலும் முதல் பாதி ஓரளவுக்கு வேகமாவே போகிறது.இன்டெர்வல்க்கு கொஞ்சம் முன்னாடி இருந்து தான் விஜயின் விஸ்வரூபம் எட்டி பார்க்கிறது. அந்த பெரிய அருவியிலிருந்து குதிக்கிறார் அதெப்படிங்க கரெக்ட்ஆ குருவியிலும் அந்த ரயிலை பறந்து புடிக்கும் போது இன்டெர்வல் விடுவாங்க இந்த படத்திலும் அருவியில் இருந்து குதிக்கும் போது இன்டெர்வல்.ஆனா ஒண்ணுங்க அவரு குதிக்கும் போதும் ஒரே ஸ்டில்லில் தான் நிற்கிறார்.


ஜெட்லி சரண்

விஜய்க்கு சட்டை தைக்கும் போது பட்டன் இல்லாம தச்சிட்டாங்க
போல எப்போவும் சட்டை தொறந்தே இருக்கு.அது ஏன் விஜய்
படத்தில் மட்டும் ரவுடிங்க போது மக்களுக்கு ரொம்ப தொந்தரவு
கொடுக்குராங்கனு தெரியல.அப்புறம் அந்த கையை கிழே
இறக்கியவுடன் காப்பு மேலே ஏறுமே அது ஏறுன மட்டும்
பரவாயில்லை ஒரு பெரிய கல்ல உடைப்பாரு பாருங்க கேட்டா ஹீரோயிசம்னு சொல்வாங்க!!

ரெண்டாவது பாதி, சத்தியமா முடியுல!
அந்த வில்லன் தொல்லை ரெட் படத்திலயே தாங்காது இதுல
வேற வந்து கதை சொல்லி மொக்கை போட்டுட்டு இருப்பான்,
ரொம்ப பலவீனமான வில்லன் என்றே சொல்லவேண்டும்.
அப்புறம் விக்ரமன் படத்தில் ஒரு பாட்டில் பணக்காரன் ஆவது
போல் இதில் விஜய் ஒரு பாட்டில் நல்ல தாதாவாக ஆகிறார்.
விஜய் ஒரே பாட்டில் வளர்வது,வில்லன் படிக்கட்டில் உட்கார்ந்து
கவலைப்படுவது,சாயாஜி மாறுவது என்று பல அதுகள் இருக்கின்றன.
அதே போல் நண்பனை கொல்வது,அனுஷாவை யார் என்று
தெரியாது சொல்வது என்பதையெல்லாம் பல படத்தில்
பார்த்த நினைவு.

ஒரு நிமிஷம் இருங்க போன் வருது...

ஜெட்லி: சொல்லு முருகா...

முருகா : படம் எப்படி இருக்குனு கேக்கமாட்டேன் எனக்கு ஒரு சந்தேகம்??

ஜெட்லி: கேளு

முருகா: ட்ரைலர்ல சின்ன தாமரை பாட்டுக்கு ஒரு விக் வச்சிட்டு
விஜய் வராரே எதுவும் மாறு வேஷத்தில் வராரா?

ஜெட்லி : டேய் நீ வேற சும்மா இருடா ஒரு பாட்டுக்கு மட்டும்
வாராரு மச்சி....சரி வை நான் அப்புறம் பண்றேன்.


எதுல உட்டேன்..ரைட்,
(பிற்சேர்க்கை)
நான் ஒரு வேளை விஜய் ரசிகனாக இருந்தால்:

படம் செம மாஸ்.என்ன பைட் கொஞ்சம் கம்மி.
விஜய் டான்ஸ் நோ சான்ஸ்.விஜய் காமெடி எல்லாம்
சூப்பர்.அந்த காப்பு கையில் ஏறுரா சீன்லாம் கலக்கல்.

நான் ஒரு வேளை அஜித் ரசிகனாக இருந்தால்:

என்னயா படம் இது, கையாள குத்தி கல் எல்லாம்
உடைக்கிறாரு.அதுவும் அந்த அருவியில் இருந்து
குதிக்கிற சீன் செம காமெடி அதை விட காமெடி
விக் போட்டுட்டு ஒரு பாட்டுக்கு வர்றது.சாமிக்கிட்ட
மட்டும் சந்தாம பேசுவாராம் எனக்கு என்னமோ போன
படத்துல கொடுத்த ஆப்பு தான் சாந்தமா பேச வச்சிருக்குன்னு
தோணுது!!!

நான் ஒரு சராசரி சினிமா ரசிகன் என்பதால்:
இரண்டாவது பாதி முழம் முழம்ஆக பூ சுற்றி கொண்டே இருக்கிறார்கள்.படம் வேற மூணு மணி நேரம் முடியல..
நான் போக்கிரி படத்தை கிளைமாக்ஸ் தவிர பத்து தடவை
மேல பார்த்து இருக்கிறேன் ஆனால் வேட்டைக்காரன்
எங்கையோ தேங்கிடுச்சு.முதல் பாதி கதை இல்லை என்றாலும்
போர் அடிக்காம போச்சு ஆனால் ரெண்டாவது பாதியில் சில
இடங்களில் முக்கியமா வில்லன் வரும் இடம் ரொம்ப போர்.
சில காட்சிகளை நம்ப மனம் மறுக்கிறது.

ஜெட்லி பஞ்ச்:

வேட்டைகாரனுக்கு இரண்டாவது பாதியில் எந்த
மிருகமும்(சுவாரசியமும்) சிக்கவில்லை....


கொசுறு செய்தி:

மிர்ச்சி சிவா நடிக்கும் தமிழ் படத்தின் ட்ரைலர் போட்டாங்க
நன்றாகவே இருந்தது.....


நன்றி
indiaglitz

இந்த விமர்சனம் பல பேரை சேர ஒட்டு போட்டு பின்னூட்டம் போடுங்க மக்களே.

நன்றி
உங்கள்
ஜெட்லி சரண்

58 comments:

venkat said...

நல்ல விமர்சனம்...பெரியதாக யாரையும் புண்படுத்தாத உங்கள் விமர்சனம் அருமை

அத்திரி said...

நல்ல விமர்சனம் பாக்கலாம் போல...................

பிரியமுடன்...வசந்த் said...

தாங்க்யூ மச்சான்...

டேமேஜ் பண்ணாத விமர்சனத்துக்கு...

பிரபாகர் said...

கண்டிப்பா பாக்க முடியாதுன்னு சொல்லாம சொல்றீங்க...

பிரபாகர்.

kanagu said...

nalla vimarsanam.... nalaiku paaka poren thala... :) :)

Avatar paatheengala??/

D.R.Ashok said...

துவைக்காம நல்ல அலசல் :)

Subankan said...

நல்ல விமர்சனம்.

//கண்டிப்பா பாக்க முடியாதுன்னு சொல்லாம சொல்றீங்க//

ரைட்டு

உங்கள் தோழி கிருத்திகா said...

நடுனிலயா இருக்கு....பாக்கலாம் போலவே...இப்போ இருக்கர சின்ன பசங்களுக்கு விஜய்னா உயிரா இருக்கு...

Priya said...

நல்லா விமர்சனம் செய்திருக்கீங்க‌!

angel said...

///பிரபாகர் said...
December 18, 2009 5:10 PM
கண்டிப்பா பாக்க முடியாதுன்னு சொல்லாம சொல்றீங்க...///

repeatttttttt

ஜெட்லி said...

இதை விட என்னால வேட்டைக்காரனை நல்லா
விமர்சனம் பண்ணா முடியாது...அப்பவும்
மைனஸ் ஒட்டு....இதை யார் போட்டுருப்பா
அஜித் ரசிகரா?? இல்லை விஜய் ரசிகரா??

புலவன் புலிகேசி said...

ம் விமர்சணம் சூப்பரு..ஆனா ஒரு உப்பு சப்பில்லாத படத்துக்கு...

senthils said...

அரைத்த மாவையே திரும்ப அரைக்கும் வேட்டைக்காரன் அட்டர் பிளாப்பு.

வில்லு,குருவி லிஸ்டுல வேட்டைக்காரன்.


விஜய் மாறவில்லை. மாறவும் போவதில்லை.
படமும் ஓட போவதில்லை.

உங்க வாழ்க்கைல பொக்கிஷமாய் இருக்கும் 3 மணி நேரத்தயும் விலை மதிப்புள்ள பணத்தயும் வேட்டைக்காரனுக்காக செலவளிக்க வேண்டாம்.

பூங்குன்றன்.வே said...

பாஸ்..ஒண்ணும் இல்ல..எதோ சொல்ல வந்தேன்..மறந்து போச்சு,நெக்ஸ்ட் மீட் பண்லாம்.
என்னா?கருத்தா? விஜய் படத்துக்கா? அடபோங்க பாஸ் :)

Arun Kumar said...

//மிர்ச்சி சிவா நடிக்கும் தமிழ் படத்தின் ட்ரைலர் போட்டாங்க
நன்றாகவே இருந்தது.....//

இந்த படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது நடுவுல எதை காட்டினாலும் நல்லா தான் இருக்கும்

நாஞ்சில் பிரதாப் said...

//ம் விமர்சணம் சூப்பரு..ஆனா ஒரு உப்பு சப்பில்லாத படத்துக்கு... //

ரிப்பீட்டே... விஜய்க்கு மற்றொரு பிளாப்... ஏய் டண்டனக்கா....

Chitra said...

நல்லா அலசி காய போட்டுட்டீங்க. சூப்பர். அதிலும் பிற்சேர்க்கையும் ஜெட்லி பஞ்சும் சூப்பெரோ சூப்பர்!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான விமர்சனம் நல்லாருக்கு தலைவரே !!

குறும்ப‌ன் said...

விஜ‌ய் பிர‌மாத‌ப்ப‌டுத்தியிருக்கிறார், ர‌சிக்க‌வைத்திருக்கிறார், ர‌சிக‌ர்க‌ளை விசில் அடிக்க‌வைக்கிறார், ஆட்ட‌ம் போட‌ வைக்கிறார், தன்னுடைய‌ வெற்றி வெறும் அதிர்ஷ்ட‌த்தினால் அல்ல‌ என்ப‌தை மீண்டும் ஒரு த‌ட‌வை நிரூபித்திருக்கிறார்!

அட‌, நான் விஜ‌ய் ஆன்ட‌னியை ப‌த்தி சொன்னேன் பாஸ்!

Mohan Kumar said...

வித்யாசமான ஸ்டைல்ல விமர்சனம் எழுதி இருக்கீங்க. Fine . அனுஷ்கா அடுத்த தலைவி???

Mohan Kumar said...

யப்பா. படத்தை விட உங்க விமர்சனம் நல்லா இருக்கும் போல் தோணுது

மீன்துள்ளியான் said...

//வேட்டைகாரனுக்கு இரண்டாவது பாதியில் எந்த
மிருகமும்(சுவாரசியமும்) சிக்கவில்லை....
//

நாம தான் படம் முழுவதும் சிக்கிட்டமே ..

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

♠ ராஜு ♠ said...

ஐ லைக் தட் பிற்சேர்க்கை.

சரண் said...

//படத்தின் கதை ஒன்றும் புதிதல்ல என்றாலும் முதல் பாதி ஓரளவுக்கு வேகமாவே போகிறது.இன்டெர்வல்க்கு கொஞ்சம் முன்னாடி இருந்து தான் விஜயின் விஸ்வரூபம் எட்டி பார்க்கிறது. அந்த பெரிய அருவியிலிருந்து குதிக்கிறார் அதெப்படிங்க கரெக்ட்ஆ குருவியிலும் அந்த ரயிலை பறந்து புடிக்கும் போது இன்டெர்வல் விடுவாங்க இந்த படத்திலும் அருவியில் இருந்து குதிக்கும் போது இன்டெர்வல்.ஆனா ஒண்ணுங்க அவரு குதிக்கும் போதும் ஒரே ஸ்டில்லில் தான் நிற்கிறார்.\\

ஒருவேளை அவர கட்டில்ல படுக்க வெச்சு ஸ்டில் எடுத்து எல்லா படத்துலயும் பேக் ரவுண்ட மட்டும் மாத்திடுறாங்களோ?

முன் சேர்க்கை பின்சேர்க்கை எதுவா இருந்தாலும் தலைவலிக்கு வேட்டைக்காரன் கியாரண்டி அதுதானே நீங்க சொல்ல வந்தது.?

நான் சின்ன குழந்தையா இருக்குறச்சே (15 வயசு) தியேட்டர்ல வேலை பார்த்தேன். பூவே உனக்காக படத்தை எல்லாம் திகட்டாம பார்த்திருக்கேன். என்ன பண்றது...அது ஒரு கனாக் காலம். கடைசியா நான் தியேட்டர்ல பார்த்த விஜய் படம் கில்லி.

இப்பெல்லாம் ஏன் போகலைன்னுதானே கேட்குறீங்க...

எனக்கு கடைசி படமாயிடக்கூடாதுல்ல.

ஏன்னா நான் வீட்டுக்கு ஒரே புள்ள...என்னைய விட்டுடுங்க பிளீஸ். - இது பூவே உனக்காக படத்துல வர்ற வசனம்தான்.

சரண் said...

//விஜ‌ய் பிர‌மாத‌ப்ப‌டுத்தியிருக்கிறார், ர‌சிக்க‌வைத்திருக்கிறார், ர‌சிக‌ர்க‌ளை விசில் அடிக்க‌வைக்கிறார், ஆட்ட‌ம் போட‌ வைக்கிறார், தன்னுடைய‌ வெற்றி வெறும் அதிர்ஷ்ட‌த்தினால் அல்ல‌ என்ப‌தை மீண்டும் ஒரு த‌ட‌வை நிரூபித்திருக்கிறார்!

அட‌, நான் விஜ‌ய் ஆன்ட‌னியை ப‌த்தி சொன்னேன் பாஸ்! //

படத்துல வர்றதெல்லாம் என்ன பன்ச் டயலாக்கு..., குறும்பன விட்டா இந்த மாதிரி வசனம் எழுதி இம்சை அரசன் மாதிரி ஓட வெச்சுடுவார் போலிருக்கே...

ஜெட்லி said...

@ வெங்கட்

நன்றி நண்பரே....தொடர்ந்து இது போல் முயற்சி செய்வேன்.

ஜெட்லி said...

@ அத்திரி

அது உங்க இஷ்டம் பாஸ்...படம் ஓரளவு பொழுதுபோக்காக தான்
உள்ளது...

ஜெட்லி said...

@ ப்ரியமுடன் வஸந்த்

நன்றி மாமே,
பல பேர் என்கிட்டே இதான் கேட்டாங்க ஏன் டேமேஜ் கம்மியா இருக்குனு.....என் பதில் இதோ "நான் படம் சுத்த மொக்கையா
இருக்குனு நினைச்சேன் ஆனா ஏதோ டைம் பாஸ் ஆச்சு
அவ்வளவுதான்".

ஜெட்லி said...

@ பிரபாகர்

உலக படங்களை எதிர்ப்பார்ப்பவர்களுக்கு இது ஏற்ற படம்
படம் இல்லை என்பதை சொல்ல வருகிறேன்.....
அக்மார்க் மசாலா பிரியர்களுக்கு மட்டும் வேட்டைக்காரன்.

ஜெட்லி said...

@ கனகு

பார்த்துட்டு சொல்லுங்க பாஸ்....
அவதார்க்கு திங்கக்கிழமை போறேன்....

ஜெட்லி said...

@ அசோக்

நன்றி டாக்டர் அசோக் :)).

ஜெட்லி said...

@சுபாங்கன்

ரைட்...

ஜெட்லி said...

@ கிருத்திகா

விஜய் டான்ஸ் சூப்பர்..அதுவும் அவர் பையன் வேற
ஆடுறார்....பார்க்க நல்லாவே இருக்கு...

ஜெட்லி said...

@ பிரியா

மிக்க நன்றி...

@ ஏஞ்சல்

ரீப்பீட்டுக்கு நன்றி...

ஜெட்லி said...

@ புலிகேசி

விமர்சனம் பண்றதுன்னு ஆயிபோச்சு எந்த
படமா இருந்த என்ன புலவரே....
நமக்கெல்லாம் ரிஸ்க் எடுக்கறது ரஸ்க்
சாப்புடுற மாதிரி...ஹி ஹி...

ஜெட்லி said...

@ செந்தில்

என்ன நீங்க அஜித் ரசிகரா??

ஜெட்லி said...

@பூங்குன்றன்.வே

அது சரிதான்....

ஜெட்லி said...

@நாஞ்சில் பிரதாப்

ஏன் பாஸ் அவ்ளோ சந்தோசம்??
ரொம்ப பாதிப்பு அடைஞ்சு இருக்கீங்க போல!!

ஜெட்லி said...

@ சித்ரா

ரொம்ப நன்றி...முதல்லா பிற்சேர்க்கை
எழுத டைம் கிடைக்கில நைட் வந்து தான்
எழுதுனேன்...

ஜெட்லி said...

@ ஸ்டார்ஜன்

நான் தலைவரா...சின்ன பையன் அண்ணே....
நன்றி...

ஜெட்லி said...

@ குறும்பன்

நடத்துங்க பாஸ்....

ஜெட்லி said...

@ மோகன் குமார்..

நன்றி அண்ணே

//அனுஷ்கா அடுத்த தலைவி??? //

யாருக்கு உங்களுக்கா, அப்போ தமன்னா வாழ்க்கை
என்ன ஆகறது....?..

நமக்கெல்லாம் அனுஷ்காவை தெலுங்கில் நடிக்கும்
போதே பிடிக்கும்...நீங்கள் தெலுங்கு பில்லா பார்த்து
இருக்கிங்களா?? செம....

ஜெட்லி said...

@ மீன்துள்ளி செந்தில்

அப்புறம் படம் புல்லா பார்த்திங்களா??...

ஜெட்லி said...

@ ராஜு

நன்றி ராஜு.....

ஜெட்லி said...

@ சரண்

//எனக்கு கடைசி படமாயிடக்கூடாதுல்ல//

ஹி..ஹி..அது சரி தான்...
இப்ப என்ன பாஸ் பண்றீங்க??

லோகு said...

உன் எழுத்துநடை நாளுக்கு நாள் மெருகேறி கொண்டே இருக்கு மாப்ள.. வாழ்த்துக்கள்...

ஜெட்லி said...

@ லோகு

நன்றி மாமே

சரண் said...

//எனக்கு கடைசி படமாயிடக்கூடாதுல்ல//

ஹி..ஹி..அது சரி தான்...
இப்ப என்ன பாஸ் பண்றீங்க?

கதாசிரியர்.

நீங்க வந்த படத்துக்கா வராத படத்துக்கான்னு கேட்குறது புரியுது.

வானொலி தொகுப்பாளராகனும்னு என் குரலை நானே பதிவு பண்ணி பழகிக்கிட்டு இருக்கேன். என்னால பெரும்பாலான பத்திரிகையை நுனிப்புல் மேயாம இருக்க முடியாது பாஸ். பேசுனத வானொலியில பேசுனா காசும் கொடுப்பாங்க. படிச்சவங்க படிக்காதவங்க எல்லாருக்கும் அவங்க நேரத்தை வீணடிக்காம கருத்து கந்தசாமியா ஆயிடலாம்.

உள்ளத்தை அள்ளித்தா முதல் ஆனந்தப் பூங்காற்றே வரைதான் இந்த வேலை பகுதி நேரமா.
காலேஜ்ல பி.காம் சேர்ந்ததும் தியேட்டர் வேலையை எல்லாம் விட்டாச்சுங்க. காலேஜ்ல சில வாத்திங்க போடுற மொக்கை தாங்காம தியேட்டர்லயும் சிக்கனுமான்னுதான் விட்டுட்டேன்.

சென்னை வரை வந்து அக்கவுண்ட்ஸ் வேலை பார்த்தாச்சு. ஆனா மனசு எழுத்து துறைய விட்டு நகர மாட்டேங்குது.
எதோ பிழைப்பு ஓடிகிட்டு இருக்கு.

என்னோட வலைப்பக்கத்துல followers விட்ஜெட் எப்படி சேர்க்குரதுன்னு சொல்லுங்களேன். இந்த ஆப்ஷன் வைக்க சொல்லி நிறைய பேர் கேட்குறாங்க.

rajaram said...

Maple romba nalla iruntuchi...Yen neenga second Half la entha mirugamum sikkalanu sonneenga.. Athan theaterla romba per siki irunthaangala...

pokkiri said...

Machan naan dan da. Your review is ok da.

ஜெட்லி said...

@ சரண்

தங்களை பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி....
followers விட்ஜெட் சேர்க்க தளவமைப்பு
சென்று gadget சேர் என்று கிளிக் செய்து அதில்
வரும் ஆப்சன் தேர்ந்து எடுத்து செய்யவும்...
எனது மெயில் jetliidli@gmail.com....

ஜெட்லி said...

@ ராஜாராம்

மாமே நம்ம பக்கம் வந்து பின்னூட்டம் போட்டதுக்கு
மிக்க நன்றி...

ஜெட்லி said...

@ போக்கிரி

மிக்க நன்றி அரவிந்த்....

vinodp said...

120 i paid in Jyothi theatre, definetely it worth only for Aayirathil oruvan trailer...

250WcurrentIsay said...

as usual... good review

ஜெட்லி said...

@ வினோத்

ஆஹா நீங்க ஆயிரத்தில் ஒருவன் ட்ரைலர் பார்த்திங்களா....
நான் குட்டி மற்றும் தமிழ் படம் ட்ரைலர் பார்த்தேன்...
உங்களுக்கு 120 எனக்கு 100 ... அட விடுங்க பாஸ்

ஜெட்லி said...

@ 250WcurrentIsay

நன்றி நண்பரே

தேவன் மாயம் said...

விமரிசனம் அருமை!!