Thursday, December 24, 2009

ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்

ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்(24.12.08)
(பாதி உடான்ஸ்)

முக்கிய செய்திகள்:

"நமீதாவை பாவாடை தாவணியுடன் பார்க்க வேண்டும்" என்று
பாடலாசிரியர் சினேகன் பரபரப்பு பேச்சு.

சமீபத்தில் ஒரு பட விழாவில் பாடலாசிரியர் சினேகன் அவர்கள்
நமீதாவை பாவாடை தாவணியில் பார்க்க ஆசையாக இருக்கிறது
என்று கூறினார்.இதனால் நமீதா ரசிகர்கள் நெஞ்சில் பூகம்பம்
உண்டானது.அதை பற்றி ரசிகர் ஒருவர் நம்மிடம்

" என்னங்க இது அநியாயமா இருக்கு,நாங்களே நமீதா இன்னும்
கம்மியா டிரஸ் போடுவாங்களான்னு பார்த்துட்டு இருக்கோம்
சினேகன் என்னன்னா பாவாடை தாவணி போட சொல்றாரு.
இதை கண்டித்து விரைவில் உலகம் முழவதும் உள்ள நமீதா
தொண்டர் படை உண்ணாவிரதத்தில் குதிக்க உள்ளோம்.."
என்று அவர் அழுது கொண்டே கூறியது கல் நெஞ்சையும்
கரைத்து விடுவது போல் இருந்தது.

அந்த விழாவில் நமீதா வந்த உடை மற்றும் இன்னொரு
விழாவில் நமீதா.....******************************************************

சிறப்பு பார்வை:

வேட்டைக்காரன் படம் சில முன்னணி தியேட்டர்களில் முன்
பதிவு மூலம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி கொண்டிரிக்கிறது
என்ற செய்தி மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதை பற்றி ஒரு சிறப்பு பார்வை(சாதாரண கண்ணில் பார்த்ததுதான்!).


நம் சிறப்பு நிருபர் சமீபத்தில் கேட்ட F.M நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட
கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்தால் ஆளுக்கு ரெண்டு
வேட்டைக்காரன் டிக்கெட் தரப்படும் என்று கூறி இருக்கிறார்கள்.
ஆனால் அந்த கேள்வியை கேட்ட பின் நம் சிறப்பு நிருபர் இப்போது இருப்பது ராயபேட்டை அரசு மருத்துவமனையில்.

கேள்வி இது தான்,

வேட்டைக்காரன் படத்தில் இடம் பெற்றுள்ள பாடலின் முதல்
வரி எது?

A. புலி உறுமுது

B. எலி உறுமுது.

(அப்புறம் ஏன் படம் புல் ஆகாது....)

இப்படி கேள்வி கேட்டு டிக்கெட் கொடுப்பதற்கு பதில் தியேட்டர்
வாசலில் இருந்து அனைவருக்கும் டிக்கெட் இலவசமாக தரலாம்
என்பது மக்களின் ஏகபோகமான கருத்தாக இருக்கிறது என்றால்
அது மிகையில்லை....

******************************************
வேலு பிரபாகரனின் புது படம்.

ஏற்கனவே காதல்(காம) கதை என்ற ஹிட்டு(அட்டு) படத்தை
நமக்கு அளித்த பிரபாகரன் அவர்கள் தன் அடுத்த படத்தின்
வேலையை துவக்கி விட்டார்.படத்திற்கு பெயர் கடவுளும்
காதலும் இயக்குனர் அவர்கள் இந்த படத்திலும் தன் கொள்கையை
நிலை நாட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தை
காண இப்போதே ஆவலாய் இருக்கும் ஒருவரின்(நான் இல்லிங்கோ)
பேட்டி இதோ

" காதல் கதை ஒரு அற்புதமான படம்.ஒவ்வொரு மனுசனும்
பார்க்க வேண்டிய படம்.படம் புல்லா சீனை காட்டிட்டு கடைசி
ரீலில் வந்து இதெல்லாம் தப்பு ஒன்னும் இல்ல என்று இயக்குனர் பேசுவது ரொம்ப டச்சிங்கா இருந்தது.அடுத்த படத்தில் நாங்க இன்னும் நேரிய(சீனை) எதிர்ப்பார்க்கிறோம்.எங்கள் தேவையை பூர்த்தி செய்வாரா இயக்குனர்.....".

இந்த ரசிகரின் கேள்விக்கு விடை கிடைக்கும் நாள் வெகு
தொலைவில் இல்லை என்பதை இங்கு தெரிவித்து கொள்கிறோம்.

***********************************************************

நடிகை நீது சந்திரா பிரச்சாரம்:

நடிகை நீது சந்திரா(யாவரும் நலம் புகழ்) சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றுடன் கைகோர்த்து சைவ உணவின் அவசியத்தை வலியிறுத்தி பிரசாரம் செய்ய இருக்கிறார்.

(அம்மணியை பார்த்தா சைவ உணவு சாப்பிடுற மாதிரி தெரியலையே...சரி அதெல்லாம் நமக்கு எதுக்கு!!)

அம்மணி எங்களுடன் கைகோர்க்க ரெடியாக இருந்தால் நாங்கள்
அசைவ உணவை சாப்பிடுவதை நிறுத்தி கொள்ள தயார் என்று
முனியாண்டி விலாஸ் நண்பர்கள் வட்டம் அறிக்கை விட்டுள்ளது
குறிப்பிடதக்கது.

******************************************************

மேலும் தங்களுக்கு இது போன்ற பொது அறிவு செய்திகளை வழங்க
குப்புற படுத்து யோசித்து கொண்டிருக்கும்

உங்கள்
ஜெட்லி சரண்.
நன்றி : indiaglitz

20 comments:

பிரபாகர் said...

எலெக்சன்ல காச கொடுத்து கன்பார்மா ஜெயிக்கிறவங்களுக்கு இதெல்லாம் ஜுஜூபி மேட்டர் நண்பா... ஒவ்வொரு வீட்டுக்கும் இலவச டிக்கெட் கொடுத்து கூட ஓட்டிடுவாங்க! நமீதா இப்பல்லாம் பாக்க நல்லாவே இல்லல்ல!

பிரபாகர்.

புலவன் புலிகேசி said...

தல தாவனிதான் இந்த ஆடையை விட கிக்கா இருக்கும்...எலிதான் உறுமுது

Chitra said...

நான் லீவில் போகும் முன் என் அறிவை வளத்துட்டீங்க...... ரொம்ப சந்தோஷம். செய்திகள் அருமை. அதை விட நீங்கள் தொகுத்து வழங்கி விதம் சூப்பர் அப்பு.

Cable Sankar said...

காதல் க்தை ஹிட்டானதால் என் வாழ்க்கையில் லேசாக ஒரு ஆட்டம் ஆட்டி விட்டது ஜெட்லி
:((

Cable Sankar said...

என்னது புல் ஆவுதா வேட்டைக்காரன்.. ஃபிரியா கொடுத்தா பினாயில் சாப்ட்ரவன் கூட ஓட,, ஓடு,ஒடுன்னு.. திங்கட்கிழமையில் இருந்து செம கலெக்‌ஷன் ட்ராப்.. ரிப்போர்ட் சொல்லுது அதுக்குதான் விஜய் பூச்செண்டு கொடுத்தாரு.. கப்ப கொடுத்தாருன்னு பீலாவெல்லாம்

ஜெட்லி said...

@ பிரபாகரன்


//நமீதா இப்பல்லாம் பாக்க நல்லாவே இல்லல்ல!
//

நீங்க சொல்றது சரிதான்
அண்ணே ஆனாலும் நம்ம நமீதா அண்ணே

ஜெட்லி said...

@ புலவன்

நீங்க சொல்றது சரிதான்...ஆனா
நமிதாவை தாவணியில் ஏற்கனவே ஏய் படத்தில்
பார்த்தாச்சு.....

ஜெட்லி said...

@ சித்ரா

மிக்க நன்றி...மேலும் உங்கள் பொது அறிவை
வளர்க்க என்னால் முடிந்த சேவைகளை செய்வேன்.

ஜெட்லி said...

@ கேபிள் தலைவர்

எனக்கும் காதல் கதை ஹிட் ஆனதில் ஆச்சரியம் தான்
தான் தலைவரே....வேட்டைக்காரன் நியூஸ் சும்மா
ஒரு பில்ட் அப் தலைவரே...

பேநா மூடி said...

உங்களின் போது அறிவு செய்தியை படிப்பதன் மூலம் என்னுடைய அறிவு கண்ணா பின்னா என்று வளர்ந்து விட்டது...

கலையரசன் said...

எனக்கு அறிவு மட்டும் வளரவில்லை தலைவரே!!

தண்டோரா ...... said...

அறிவு அளித்திட்ட களஞ்சியமே..ஆமாம்..துவரம்பருப்பு விலை குறைஞ்சிடுச்சா?

ஜெட்லி said...

@பேநா மூடி

நன்றி....கொஞ்சம்
பொத்தி வச்சுக்குங்க கண்ணு பட்டுற போது

ஜெட்லி said...

@ கலையரசன்

தொடர்ந்து மூணு மாசம்
நம்ம பொது அறிவு செய்திகளை படிங்க...
வளர வாய்ப்பிருக்கு

ஜெட்லி said...

@ தண்டோரா

கொஞ்சம் குறைஞ்சிருக்கு தலைவரே....

பின்னோக்கி said...

:-).

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஜெட்லி..

விரைவில்.. மிக விரைவில்.. தியேட்டர்களைவிட்டு வேட்டைக்காரன் வேட்டையாடப்படுவான் என்பதுதான் சினிமா செய்திகள்..!

படம் ரிலீஸான மறுநாளில் இருந்து ஒரு ஷோகூட அரங்கம் நிரம்பவில்லை என்பதுதான் சென்னை தியேட்டர்களின் நிலைமை..!

ஜெட்லி said...

சிரிப்புக்கு நன்றி பின்னோக்கி

ஜெட்லி said...

@ உண்மை தமிழன்

ரைட்...நல்ல தகவல்
தலைவரே

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

நம்ம வலைப்பூவில ஒரு திரை விமரிசனம் எழுதியிருக்கேன், வந்து பாருங்க, பாஸ்!