Thursday, April 23, 2009

கடையடைப்பு வடசென்னை நிலவரம்.

ஈழத்தில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழகத்தில் இன்று தமிழர்களின் தானைத் தலைவன் மு.கருணாநிதி அறிவித்துள்ள முழு கடையடைப்பு தொடங்கி இனிதே நடந்து கொண்டிருக்கிறது. பிரதான சாலைகளில் உள்ள பெட்டிக் கடை டீ கடை உணவகங்கள் உட்பட அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன, சின்ன சின்ன சந்துகளில் அங்கொன்று இங்கொன்றுமாக டீ கடைகளும் உணவகங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன (நல்ல கூட்டம் நல்ல வருமானம்) காலை முதல் அணைத்து பகுதிகளிலும் பேருந்து மற்றும் ஆட்டோக்கள் இயங்கவில்லை. நம் முதன்மை செயலர் கூறினார் பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாவண்ணம் பேருந்து மற்றும் ரயில் சேவை இயங்கும் என்று ஆனால் பேருந்து எங்கே ஓடுகின்றது என்று தெரியவில்லை, இதனால் ஷேர் ஆட்டோக்கள் ஏழு ரூபாய் வாங்கிய இடத்தில இன்று ஈழத் தமிழர்களுக்காக வெறும் 20-25 வரை வசூல் வேட்டையில் இறங்கியுள்ளனர். மருந்து கடைகள் மற்றும் வங்கிகள் மட்டும் வழக்கம் போல் இயங்குகிறது, மற்ற அத்தியாவசிய கடைகள் ஏரியாவைப் பொருத்து இயங்குகிறது. நான் நேற்று இரவு சில கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் பேசினேன், அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தாக தேர்தல் நேரம் ஆளுங்கட்சி எதற்கு வம்பு கடையை மூடிவிடுவோம் என்றே கூறினர்.

ஆனால் ஒரு சந்தேகம் முழு கடையடைப்பு என்றால் ஏன் TASMAC கடைகள் மூடப்படவில்லை?? உணவகம் கூட திறக்கவில்லை ஆனால் அரசு கட்டுப்பாட்டில் உள்ள இது ஏன் திறந்திருக்கணும்?? ஒரு வேலை கலைஞர் ஆட்சியில் மது அத்தியாவசிய பொருள் ஆகிவிட்டதோ?? அல்லது ஈழத் தமிழர்கள் படும் துயரத்தை மறப்பதற்காக அனைவரும் உணவு அருந்தாமல் சரக்கு அடிங்கடா முட்டாள் தமிழர்களே என்று கூறுகிறாரோ?? எனக்கு இந்த பகுத்தறிவு இல்ல பாருங்க அதனால தான் புரியல, யாராவது பகுத்தறிவாளர்கள் இதைப் பற்றி விளக்கினால் மகிழ்ச்சி.

சன் டிவியில் இன்று காலை பத்து மணிக்கே திருடா திருடி போட்டதாக கேள்விப்பட்டேன், அலுவலகத்தில் இருப்பதால் மத்த சேனல்கள் பற்றி சரிவர தகவல் இல்லை, ஆனால் கண்டிப்பாக சிறப்பு திரைப்படம் போட்டிருப்பார்கள். ஏன் இதற்கு விலக்கு?? உங்களுக்கு பொழுது போகலைனா கடையடைப்பா??

இன்னும் எத்தனை முறை தான் தந்தி அடிப்பாரோ (ஆனால் இந்த விஷயத்தில் தலைவர் அடித்த அந்தர் பல்டிகளை விட தந்திகள் குறைவு தான் என்று நினைகிறேன்) இவர் இப்படி செய்வதை விட திரு.பாஸ்கரன் சுப்ரமணியன் அவர்கள் தன் பதிவில் (http://bashkaran.blogspot.com/2009/04/2.html) கூறியது போல செய்யலாம் இப்பொழுது வருவது போல் விரக்தியும் எரிச்சலும் கோபமும் வராமல் நமக்கு சிரிப்பாவது வரும் .









என்ன கொடும கலைஞர் இது????????

1 comment:

www.mdmkonline.com said...

பிசு பிசுத்து கொண்டிருக்கும் கருணாநிதியின் கபட நாடக வேலை நிறுத்தம்.

காலை பத்து மணிமுதல் நமது குழு சென்னையை சுற்றி நிலவரத்தை சொன்னார்கள்.

1. ஆளும் கட்சி யின் அழைப்பு என்பதால் (அல்லது மிரட்டப்பட்டதால், அல்லது எந்த ஆளும் கட்சி அழைப்பு கொடுத்தாலும்) பஸ்கள் ஓடவில்லை. அதன் காரணமாகவே பஸ் இல் பயணிக்கும் மக்கள் கூட்டம் கொஞ்சம் குறைந்து இருந்தது.
2. வழக்கம் போல் ஆட்டோ ஓடுகின்றது.
3. வழக்கம் போல் மகிழுந்து இன்ன பிற தனியார் வாகனங்களுக்கு குறைவில்லை.
4. ரோட்டோர கடைகள் அனைத்து திறந்து உள்ளன.
5. யார் அழைப்பு விடுத்தாலும் கடைகளை மூடும் வியாபாரிகள் கடைகளை மூடி உள்ளனர்.
6. அரசாங்கம் நடத்தும் மது பானகடைகளுக்கு எந்த விடுமுறையும் இல்லை. வழக்கத்தை விட மிக நன்றாய் வியாபாரம் நடக்கிறது. இது அரசாங்கத்தின் அல்லது கருணாநிதியின் கேவலமான நடத்தையை காட்டுகிறது.திமுகவின் உண்மையான தொண்டனை கேவலப்படுத்துகிறது.
7. நாம் பேசியவரையில் திமுக வில் எழுபது சதவீதம் பேர் கருணாநிதியின் இந்த நாடகத்தை விமர்சனம் செய்கிறார்கள் . அதன் வெளிப்பாடே நேற்று கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் தாக்கப்பட்டது.
8. இன்றைய முடிவு திமுகவின் உண்மையான தொண்டர்கள் கருணாநிதியை விட்டு விலகியே , எதோ ஒரு நிர்பந்தத்திற்காக கட்சியில உள்ளார்கள்
9. சென்னையின் அனைத்து சாலைகளிலும் வாகன நெருக்கம் உள்ளது. போக்குவரத்து நன்றாய் உள்ளது.
10. கருணாநிதியின் நாடக பந்த் பிசுபிசுத்து கொண்டிருக்கிறது.


-பதினோரு மணி நிலவரம் . முழு விவரத்தோடு மாலை சந்திப்போம்.
www.mdmkonline.com