Saturday, January 30, 2010

தமிழ் படம் - பார்வை

மச்சான் காக்க காக்க, பாட்ஷா மாமா, டேய் போக்கிரிடா, இது நாயகன், அது பில்லா. இதெல்லாம் தமிழ் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது, முன், பின் சைடு இருக்கைகளில் இருந்தவர்கள் பேசிய வாசகங்கள். நாடோடிகளுக்குப் பிறகு இவ்வளவு கொண்டாட்டங்களுடன் பார்த்த படம் இது தான்.




நம்ம ஊரிலிருந்து யாராவது சினிமாவில் ஹீரோவாக நடிக்கப் போனா, அவுங்க குடும்பத்தை ஊரை விட்டு தள்ளி வைக்கணும், அவுங்களோட பழகுறவுங்க, அதுக்கு தண்டனையா, விரல் சுத்துற தம்பி படத்தை நூறு தடவை பார்க்கணும், என்ற நாட்டாமையின் தீர்ப்புடன் படம் தொடங்கும்போதே, அதகளம் ஆரம்பமாகிவிடுகிறது. அதன் பின் பாரபட்சமே பார்க்காமல் சகட்டுமேனிக்கு கலாய்த்திருக்கிறார்கள்.

பல படங்களின் பிரபலமான காட்சிகளை அப்படியே எடுத்துக் கொண்டு, முடிவில் மட்டும் ஒரு வேட்டு வைத்திருக்கிறார்கள். ட்ரைலரில் பச்ச, மஞ்ச தமிழன் பாட்டுப் போடும்போது, இந்தப் பாடலைப் பாடியவர் உங்கள் சிவா என்று போடுவார்கள், படத்தில், சில நொடிகளுக்குப் பின் அடுத்த வரி வருகிறது, என்று அவர் போடச் சொன்னதால் போடுகிறோம்.

சந்தானம் நடிச்சிருக்கலாமோன்னு சில இடங்களில் தோணினாலும் அவரோட நக்கலான உடல் மொழியும் குரலும் அதைக் கெடுத்துவிடும் என்றும் தோன்றியது. படத்தில் அங்கங்கே கொஞ்சம் லொள்ளு சபா வாசனை அடித்தாலும், ஒவ்வொரு காட்சியையும் முடிக்கும் விதத்தில் சிரிப்பில் கண்களில் நீர் நிறைகிறது.

முதல் முதலாய் பார்க்கும் மகன், தந்தையின் உரையாடல்
அப்பா : மெட்ராசில என்ன பண்ற
சிவா : நான் பெரிய தளபதியா, ஸ்டாரா ஆயிட்டேன்,
அப்பா : இதுக்கு தான் அப்பவே சொன்னேன், கள்ளிப்பால் கொடுத்து கொன்னுடலாம்னு

சிவாவின் கல்லூரி நண்பர்களாய் வரும், வெ..மூர்த்தியும், பாஸ்கரும், மனோபாலாவும், ஒவ்வொரு காட்சியிலும், மச்சான், மச்சி என்று அழைத்துக் கொள்ளும்போது, சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
சமீபகாலத்து படங்களை கொத்துக்கறி போட்டவர்கள், ஏனோ சிவாஜி, எம்ஜியாரை விட்டுவிட்டார்கள். நாயகன், மவுன ராகம் தவிர்த்து எல்லாமே, கடந்த பதினைந்து ஆண்டுகளில் வந்த படங்கள் தான். இவ்வளவு பெரிய தயாரிப்பாளர் இருக்கும் போது, இன்னும் கொஞ்சம் காரம் தூவியிருக்கலாம் என்றும் தோன்றியது.

சுவாரஸ்யமான காட்சிகள் பற்றி அதிகம் சொல்ல ஆரம்பித்தால் முழுத் திரைக்கதையையும் சொல்ல வேண்டிவரும் என்பதால்கடைசியாக ஒன்றே ஒன்று, இவர்களிடம் ஆற்காடு வீராசாமியும் தப்பவில்லை (காட்சி எது என்பதை படம் பார்த்துக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்)

முக்கிய குறிப்பு
படம் பார்க்க தனியாக செல்ல வேண்டாம், சிரித்து வயிற்று வலி வந்தால் மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லக்கூடிய தக்க நண்பர்கள் துணையுடன் படத்தை பார்க்கவும்

பின்குறிப்பு
இதுவரை சினிமா விமர்சனம் எழுதிப் பழக்கம் இல்லை, எனவே கொஞ்சம் முன்னே பின்னே இருந்தால் பொறுத்துக்கொள்ளவும்.

கடைசிக் காட்சி : படம் முடிந்து வரும்போது நண்பன் கேட்டான், இதுக்கு அப்புறமும் தல,தளபதி எல்லாம்  இப்படி படம் எடுப்பாங்கன்னு நினைக்கிறியா? நான் கேட்டேன், எடுத்தால் நீ போய் முதல் நாள் முதல் காட்சி பார்க்காமல் இருக்கப்போறியா?

நன்றி
சங்கர்

22 comments:

சங்கர் said...

சோதனை மறுமொழி

CS. Mohan Kumar said...

ஜெட் லி கோவா; நீங்க தமிழ் படமா? ஒரு டீமா தாம்பா வேலை செய்றீங்க!! நீங்க எஸ்கேப்பு; ஜெட் லி தான் பாவம். கோவாவுக்கு வரும் reviews மோசமா இருக்கு.

தமிழ் படம் நல்ல காட்சிகளை விமர்சனம் எழுதுறவங்க explain பண்ணாமல் இருந்தால் நல்லது. அப்போதான் மத்தவங்க ரசிக்க முடியும்

சங்கர் said...

சரி தான் தல, ஆனால் நிறையப் படங்களை போட்டுத் தாக்கி இருப்பதால், சில காட்சிகளில் உன்னிப்பாக கவனித்தால் தான் புரியும்.

எறும்பு said...

Same happiness..

சங்கர் said...

ரொம்ப நாளாச்சு, இப்படி ஒரு படம் பார்த்து :)

Raju said...

என்னாது வ்.ஆ.மூர்த்தியும் எம்.எஸ்.பாஸ்கரும் கல்லூரு நண்பர்களா..?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
வயிற்றில் பாலிடாயில் வார்க்கிறார்களே..!
:-)

மீன்துள்ளியான் said...

சங்கர் விமர்சனம் அருமை .அப்போ இந்த வாரம் படம் பாத்துட வேண்டியது தான்

சங்கர் said...

அது மட்டுமில்லை, மொத்தப் படத்திலும் அவர்கள் ஒரே ஒரு தடவைதான் கல்லூரிக்குப் போவார்கள் :))

சங்கர் said...

@மீன்துள்ளியான்

கட்டாயம் பார்த்திடுங்க

இன்னிக்கு மீண்டும் போனாலும் போவேன்

கார்க்கிபவா said...

ஷங்கர், அந்த பேர் போடும் காட்சியை பரிசல் எப்படி எழுதி இருக்கிறர என்று பாருங்கள். விரைவில் நீங்களும் நல்ல விமர்சகர் ஆக என் வாழ்த்துகள்..

:))

சங்கர் said...

நானும் பார்த்தேன், அதிலிருந்து கொஞ்சம் வித்தியாசம் காட்டலாம் என்று தான், ஹி ஹி

நன்றி

படம் பார்த்துட்டீங்களா, உங்கள் கருத்தை அறிய ஆவல் :))

சீக்கிரம் எழுதுங்க

வெற்றி said...

மூணு படம் மூணு பதிவர்கள்..கலக்குங்க..

அடுத்து ஜக்குபாய் - சித்து வா?

சித்து said...

@வெற்றி

அண்ணே ஏன் உங்களுக்கு ஏன் மேல இந்த காண்டு?? நான் அந்த பக்கம் கூட தலைவச்சு படுக்க மாட்டேன்.

Cable சங்கர் said...

சங்கர்.. சீன்களை சொல்லாமலிருந்திருக்கலாம் இருந்தாலும் நலல் விமர்சனம்

துபாய் ராஜா said...

கடுப்பில் உள்ள தமிழ் பட ரசிகர்களை கலகலப்பாக்க வந்த படம். விமர்சனம் அருமை.

பின்னோக்கி said...

படம் சன் டிவி ஹிட் இல்லை போல. உண்மையாலுமே ஹிட் மாதிரி இருக்கு.

இது http://www.amitjain.co.in/pageview.php

இல்லைன்னா இது
http://blogspot.100webspace.net/pageviews.php

லோடு ஆகுறத்துக்கு ரொம்ப லேட் ஆகுறதால, உங்க பதிவுகள் லோட் ஆவதற்கு ரொம்ம்ம்ம்ம்ம்ப லேட் ஆகுது. இந்த பிரச்சினைனால தான் என் பதிவுகளில் இருந்து அந்த counter ரை எடுத்து விட்டேன்.

வெற்றி said...

பாஸ் படம் இரண்டாம் பாதி படு மொக்கை..பதிவர்கள் ஓவராய் ஒரு படத்தை ஏத்தி விடுவது சரியல்ல..

பயங்கர எதிர்பார்ப்புகளுடன் சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வந்தேன் !

Menaga Sathia said...

அப்போ படம் பார்க்கலாமா?

அத்திரி said...

இந்த வாரம் பாத்துரலாம்......நல்ல விமர்சனம்

கடைக்குட்டி said...

கண்டிப்பா பாக்கனும்.. வர்ற வாரம் பாத்துரலாம்...

படத்தோட ட்ரைலர நெனச்சு நெனச்சே சிரிச்சிக்கிட்டு இருக்குற க்ரூப்பு நாங்க..


“அதில்ல நகுல்னு”.. சொல்வாரே சிவா.. யப்பா... :-)

ப்ரியமுடன் வசந்த் said...

பதிவர்கள் எல்லாரையும் கலாய்ச்சு ஒரு பதிவர் பதிவெழுதுனா எப்பிடி ஹிட்டடுக்குமோ அதேபோல இந்த படமும் ஹிட்டுன்னு சொல்லுங்க சங்கர்...

Dinesh said...

Tamizh Padam nejamave Super Padam..Padam parthu neram pogaradhe therila..