Thursday, January 14, 2010

ஆயிரத்தில் ஒருவன் - விமர்சனம்

ஆயிரத்தில் ஒருவன் - விமர்சனம்

ஆயிரத்தில் ஒருவனை காலையில் எட்டு மணி ஸ்பெஷல் ஷோவில் ஆல்பர்ட் தியேட்டரில் பார்த்தேன்.சில மாதங்கள் ஆகவே பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட படம்.காலையில் சாப்பிட்ட ரத்னா கபே பொங்கலும் சரி படத்தின் முதல் பாதியும் சரி தாறுமாறாக இருந்தது.கண்டிப்பா ஆயிரத்தில் ஒருவன் தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான படம் என்று அடித்து கூறலாம்.





சோழர்களின் வம்சத்தை தேடி போகும் பயணம் தான் கதை. கார்த்தியின் அறிமுக காட்சியில் கையில் பீர் பாட்டிலுடன் அவர் அடிக்கும் ரவுசுக்கு அளவே இல்லை.அதே போல் காட்டுவாசிகள் தாக்கும் காட்சியில் அவர் போய் சண்டைபோடும் போது கிரேன் மனோகர் கார்த்தி மேல் விழுந்து காப்பற்றும் காட்சியில் கார்த்தி பார்வையாலேயே கலக்கி இருக்கிறார்.படத்தின் முதல் பாதியில் கார்த்தி தான் ராஜா...சும்மா மனிதர் வுடுக்கட்டி பூந்து விளையாடுகிறார்.கார்த்தியை பற்றி சொல்லி கொண்டே போகலாம்.கார்த்தியின் உழைப்பு படத்தில் நன்றாகவே தெரிகிறது.


ரீமாவை தவிர இந்த கதையில் அவரின் கதாப்பாத்திரத்தை யாராலும் ஈடுகட்டமுடியாது என்று நிருபித்துள்ளார்.காட்டுவாசிகளை பயப்படாமல் சுடும் காட்சி ஆகட்டும்.கார்த்தியை மிரட்டும் காட்சியில் ஆகட்டும், பார்த்திபனோடு டான்ஸ் ஆடும் காட்சியில் ஆகட்டும்...இன்னும் நெறைய இருக்கு.இந்த படத்தில் ரீமா அவர்கள் அளவுக்கு அதிகமாகவே திறமை காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.. ரீமா ராக்ஸ்.

முதல் காட்சியில் ஒருத்தரை காட்டுவாங்க...நான் உட்ப்பட சில
பேர் இவர் தான் பார்த்திபன் என்று நினைத்தோம்.பின்பு தான்
இடைவேளைக்கு பின் பார்த்திபன் தர்பார் ஆரம்பம்.அவரின்
அறிமுக காட்சி சூப்பர்,பின்பு ரீமாவோடு டான்ஸ் காட்சி
கொஞ்சம் அலுப்பு தட்டுகிறது.ரீமா செய்த துரோகத்தை நினைத்து
பார்த்திபன் அழுது கொண்டே நடக்கும் காட்சி,உண்மையிலேயே
நெகிழ வைத்தது...பார்த்திபனும் கார்த்தியும் ஒன்றாக ஆடும்
காட்சி செம குத்து.

ஆண்ட்ரியாவை பற்றி சொல்ல ஒன்றும் பெரிதாக இல்லை,
அவுங்க வர பார்ட்டை சொன்னேங்க...அந்த மாலை நேர மயக்கம்
பாட்டு கூட வந்த மாதிரி நினைவில் இல்லை.அழகம் பெருமாள் தன் பங்கை கச்சிதமாக செய்துள்ளார்.

ஒளிப்பதிவு எல்லாம் சான்ஸ்ஏ இல்லை.ஒரு சில காட்சிகளில் கிராபிக்ஸ் சரி இல்லையென்றாலும் அதை பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை. பாடல்கள் ஏற்கனவே ஹிட் பின்னணி இசையும் ஓகே.


செல்வராகவன், உண்மையிலே இவரு வித்தியாசமான பிலிம் மேகர்.
படத்தின் முதலிலேயே கற்பனை கதையென்று கூறிவிடுகிறார்.
படத்தை பார்க்கும் போது இதெல்லாம் நாம் இங்கிலீஷ் படத்தில்
பார்த்த மாதிரி இருந்தாலும் எனக்கு பிரெஷ் ஆகவே இருந்தது.
படம் பார்க்கும் போது அனைவரின் உழைப்பும் நன்றாகவே
தெரிகிறது.

படத்தின் முதல் பாதி ஜெட் வேகம் இரண்டாம் பாதி கொஞ்சம்
விறுவிறுப்பு கம்மி.இரண்டாம் பாதியில் ஆங்காங்கே படம் சில இடங்களில் தொய்வு காண்கிறது என்பது மட்டும் உண்மை. லாஜிக் மீறல்கள் இருந்தாலும் குறிப்பாக ரீமா தங்கள் பகைக்காக அதிரடி படையை சோழர்களுடன் மோத விடுவது இடிக்கிறது.என்ன இருந்தாலும் தமிழ் படத்தில் இது போன்ற ஒரு
வித்தியாசமான முயற்சி, ஊக்குவியுங்கள்....தயவு செய்து படத்தை தியேட்டரில் பாருங்கள்..


தியேட்டர் நொறுக்க்ஸ்:


# இரண்டாம் பாதியில் வரும் தூயதமிழை கேட்ட பின் சீட்டு
நண்பர் "என்ன மொழி பேசுகிறார்கள்" என்று அவர் நண்பனிடம்
கேட்டதை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

#"ஒழுங்கா தமிழில் பேசு" என்று தூயதமிழை கேட்ட சில பேர்
கமெண்ட் செய்தனர்.

# பார்த்திபனை நியுடாக ஆண்ட்ரியா பார்ப்பது போன்று காட்சி
இருக்கும் அப்போது பார்த்தியின் வசனம் செம கிளாப்,செம கத்து
"என்னை லிங்க தரிசனம் செய்து விட்டாள்".
(இது மட்டும் நம்ம
ஆளுங்களுக்கு நல்லா புரியுது!!)


# படம் முடிந்தவுடன் வெளியே வரும் போது கருப்பு கலர் காரில்
கார்த்தி இருப்பதாக கூறினார்கள்...காரின் கருப்பு கண்ணாடி வழியாக
பார்க்க ஒரே கூட்டம்.என் அருகில் உள்ளவன் ரீமா காரின் உள்ளே இருப்பதாக கூறினான்.சரி படத்திலே ரொம்ப தெறமை காட்டி இருக்காங்களே சும்மா பாப்போம் என்று முன்னாடி இருந்தவனை "உள்ளே யாரு இருக்காங்க" என்று கேட்டதற்கு தீவிரமாக கண்ணாடி மேல் மூஞ்சை வைத்து பார்த்து கொண்டே இருந்தான்.நானும் விடா முயற்சியுடன் கொஞ்சம் நகரு நானும் பார்க்கிறேன் என்றேன்.ஹ்ம் அவன் நகர்ற மாதிரி தெரியில......எனக்கு என்ன டவுட்னா கார் உள்ளே யாரும் இருந்தாங்களா இல்லை அவன் சும்மா பார்த்தானா என்பது தான்.(ரொம்ப முக்கியம்!).


ஜெட்லி பஞ்ச்:

ஆயிரத்தில் ஒருவன் - முதல் பாதி மின்னல் இரண்டாவது பாதியில்
சில இடங்களில் இன்னல்.


இந்த விமர்சனம் பல பேரை சென்று அடைய உங்கள் ஓட்டை
குத்துங்கள்.....பின்னூட்டம் போட்டால் நன்று....

உங்கள்
ஜெட்லி சரண்.

40 comments:

கடைக்குட்டி said...

1 st??

கடைக்குட்டி said...

ஆயிரத்தில் ஒருவனை காலையில் எட்டு மணி ஸ்பெஷல் ஷோவில் ஆல்பர்ட் தியேட்டரில் பார்த்தேன்.//

நாளைக்கு நான் போறேன்...

//தமிழ் படத்தில் இது போன்ற ஒரு
வித்தியாசமான முயற்சி, ஊக்குவியுங்கள்....தயவு செய்து படத்தை தியேட்டரில் பாருங்கள்..//

கண்டிப்பா..

கடைக்குட்டி said...

படத்தின் முதல் பாதி ஜெட் வேகம் இரண்டாம் பாதி கொஞ்சம்
விறுவிறுப்பு கம்மி.//

அப்ப ஒகேங்க.. ரொம்ப பேசுறாய்ங்களே சுத்தமா சொதப்பிடுமோன்னு நெனச்சேன்..

உங்க விமர்சனத்துக்காக காலைலேர்ந்து வெயிட்டிங்கி... :-)

கதையை முழுதாக சொல்லாமல் .. இந்த அளவில் விமர்சித்ததற்க்கு ஒரு சபாஷ்..

சேவை தொடர்க...

பாவக்காய் said...

விமர்சனத்திற்கு காத்து இருந்தேன் !! நன்றி !!
இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!

வெற்றி said...

படம் பாக்குறவரை எந்த விமர்சனமும் படிக்க கூடாதுன்னு நெனச்சேன்..ஏதோ ஒரு உந்துதல்ல இத படிக்க வந்தேன்..

நல்ல வேளைங்க..நீங்க கதைய முழுசா சொல்லல..
பாஸிடிவா சொன்னதால சனிக்கிழமை படத்துக்கு போறேன்.. :)))

ரமேஷ் கார்த்திகேயன் said...

நானும் அதே ஷோ தன அந்த தியேட்டரில் பார்த்தேன் .
படத்தில நிறைய ஓட்ட இருந்தாலும் படம் நல்ல தான் இருக்கு .
இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!

பின்னோக்கி said...

சொல்ல மறந்துட்டேங்க. விமர்சனம் பண்றேன்னு கதை சொல்லாம, அருமையான விமர்சனம். நன்றி.

cheena (சீனா) said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ஜெட்லி - படம் பாத்துட்டுச் சொல்றேன்

ராஜ நடராஜன் said...

//காரின் கருப்பு கண்ணாடி வழியாக
பார்க்க ஒரே கூட்டம்//

நேரா பின்னூட்டத்துக்கு வந்துடலாம்!நாமெல்லாம் ரஜனியவே சட்டை செய்யாம கடற்கரையில அரை மல்லாக்க அந்தி வானத்த பார்த்துட்டு இருந்த ஆட்கள்.

Prathap Kumar S. said...

//தமிழ் படத்தில் இது போன்ற ஒரு
வித்தியாசமான முயற்சி, ஊக்குவியுங்கள்....தயவு செய்து படத்தை தியேட்டரில் பாருங்கள்..//

சரியாச்சொன்னீங்க பாஸ்... இல்லன்னா இன்னொரு வேட்டைக்காரனையெல்லாம் தமிழ்நாடு தாங்காது.

//எனக்கு என்ன டவுட்னா கார் உள்ளே யாரும் இருந்தாங்களா இல்லை அவன் சும்மா பார்த்தானா என்பது தான்//

நாட்டுக்கு இது இப்ப ரொம்ப தேவதான்...

தர்ஷன் said...

//தமிழ் படத்தில் இது போன்ற ஒரு
வித்தியாசமான முயற்சி, ஊக்குவியுங்கள்....தயவு செய்து படத்தை தியேட்டரில் பாருங்கள்..//

ஆமோதிக்கிறேன்

நானும் இன்றுதான் படம் பார்த்தேன் குறைகளைத் தாராளமாக மன்னிக்கலாம் நேரமிருந்தால் இதையும் வாசித்துப் பாருங்கள்
http://sridharshan.blogspot.com/2010/01/blog-post_2761.html

Paleo God said...

ஆயிரத்தில் ஒருவனை காலையில் எட்டு மணி ஸ்பெஷல் ஷோவில் ஆல்பர்ட் தியேட்டரில் பார்த்தேன்.//

இந்த சுதந்திரத்தை நான் வெறுக்கிறேன்..::))

//தமிழ் படத்தில் இது போன்ற ஒரு
வித்தியாசமான முயற்சி, ஊக்குவியுங்கள்....தயவு செய்து படத்தை தியேட்டரில் பாருங்கள்..//

இந்த சுதந்திரத்தை நான் வெறுக்கிறேன்-பார்ட்-2..::))

--------------


கார்த்தி கார்த்தி ன்னே..இருக்கு..

ஷோல்டரை உயர்த்தி கார்க்கி எங்கிருந்தாலும் உடனடியாக மேடைக்கு வரவும்..ஓவர்..ஓவர்..:))

---

நன்றி ஜெட்லி::)

ப்ரியமுடன் வசந்த் said...

லிங்கதரிசனம் படிக்கும்போதே இம்புட்டு சிரிப்பு வருது தியேட்டர்ல கேக்கவா வேணும்

பார்த்திபன் என் இரத்தமே வாழ்க....

நல்ல விமர்சனம்

ரீமா ரீ எண்ட்ரியா?

ஸ்ரீராம். said...

ரீமா படம் டாப்.

காருக்குள்ளே பார்த்துக் கொண்டே இருந்தவனை கூப்பிட்டு என்ன தெரியுது நகர் நானும் பார்க்கிறேன் என்றால் அவன் "நான் ஒன்றரை மணி நேரமா பார்க்கறேன்.. எனக்கே தெரியலை...உனக்கெப்படித் தெரியும்"னு கடுப்போட கேட்டிருப்பான்

பாலா said...

//// படம் முடிந்தவுடன் வெளியே வரும் போது கருப்பு கலர் காரில் கார்த்தி இருப்பதாக கூறினார்கள்...///

இன்னுமா????!! கஷ்டங்க..!! :( :( :(

:) :)

Chitra said...

அருமையாக விமர்சிப்பதில், ஆயிரத்தில் ஒருவனையா நீர்.

ஜெட்லி... said...

@ கடைக்குட்டி

பார்த்துட்டு சொல்லுப்பா...

Ashok D said...

ரொம்ப சந்தோஷமாயிருக்கு படம் நல்லாயிருக்குன்னு கேக்கறதுக்கு.. நல்ல கிரேயட்டர் தோக்ககூடாது.... தாங்கஸ் ஜெட்லி பகிர்வுக்கு

ஜெட்லி... said...

@ பாவக்காய்

வாழ்த்துக்கள்..நன்றி நண்பரே...

ஜெட்லி... said...

@வெற்றி

நான் எப்போவோ முடிவு எடுத்துட்டேன் அதாவது
இனிமே விமர்சனம் என்கிற பேரில் கதை சொல்ல கூடாது
என்று.....

ஜெட்லி... said...

@ரமேஷ் கார்த்திகேயன்

மீட் பண்ணி இருக்கலாமே தெரிஞ்சா.....

ஜெட்லி... said...

@ பின்னோக்கி

நன்றி நண்பரே....

ஜெட்லி... said...

@ சீனா

பாத்துட்டு சொல்லுங்க ஐயா....

hasan said...

hai jetli!
they have not shown what happen to andrea right?
wheather u can guess!

hasan said...

watch PORKKALAM AND ADD REVIEW SOON

ஜெட்லி... said...

@ராஜ நடராஜன்

அப்படியா... நல்ல விஷயம் பாஸ்...

Kumky said...

:--(((

ஜெட்லி... said...

@நாஞ்சில் பிரதாப்

//இல்லன்னா இன்னொரு வேட்டைக்காரனையெல்லாம் தமிழ்நாடு தாங்காது.//

நான் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல பாஸ்

Kumky said...

என்னய்யா இது ரெண்டு கமெண்ட்ட காக்கா தூக்கிடுச்சா..?

ஜெட்லி... said...

@ பலா பட்டறை

அண்ணே கார்க்கி வந்தா நிறைய கேள்வி கேப்பாரே....

ஜெட்லி... said...

@ தர்ஷன்

நன்றி நண்பரே

Jackiesekar said...

தம்பியே.. சொல்லிட்ட...அப்ப பார்த்துட வேண்டியதுதான்..

butterfly Surya said...

வித்தியாசமான முயற்ச்சிக்கு பாராட்டு. படத்தை பார்த்து விட்டு சொல்றேன்.

ரீமாவுக்கு நிறைய பாராட்டுகள்.... ம்ம்ம்ம்

Starjan (ஸ்டார்ஜன்) said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஜெட்லி

படம் தேறுமா ..

நல்லாருக்கா ..

உங்க சொந்த ஊரு எது ...

Priya said...

//தியேட்டர் நொறுக்க்ஸ்:// nice!

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

Good Review for Great Movie!! Latest news i heard that there should be subtitle (In tamil) for pure tamil portion. Tamilnadu vilangidum..

க. தங்கமணி பிரபு said...

கதைய முழுசா சொல்லாம, நாசுக்கா காட்சிகள் சொல்லி, சுவாரஸ்யமா விமர்சனம் மட்டும் எழுதிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!

250WcurrentIsay said...

Idha solli solli bore adichipochee... as usual good blog.... I knew ya would have liked this movie.... au contraire, I didn't .....

shhhhhh

Actually I was expecting Kutty Review from Ya... its nowhere to be scene ... y wat happened..

btb did ya notice that ya blog is taking quite a time to load in internet explorer

Kazhudhai said...

நீங்கள் சொல்வது போல் இது ஒரு சிறந்த படம் என்பதில் எனக்கு வேறு கருத்து இல்லை. ஆனால், கிளைமாக்ஸ் சொதப்பி விட்டதாகவே படுகிறது. உண்மை இப்படித்தான் இருக்கும் என்றாலும், ஜேம்ஸ் கேமரூன் அவதாரில் கொஞ்சம் சமரசம் செய்து கொண்டது போல செல்வாவும் வியாபாரக் காரனங்களுக்காவது சமரசம் செய்திருக்கலாம்.