Sunday, January 10, 2010

புத்தகத்திருவிழா - நாள் 6, 10, 11 மற்றும் பதிவர் கொண்டாட்டம்

புத்தகத் திருவிழாவுக்கு  செல்லும் ஆர்வம் அணை மீறி   போய்விட்டதனால், இந்த வாரம் முழுதும், வழியில் உள்ள சிக்னல்களை எல்லாம் கண்டபடித் தாண்டிக் கொண்டிருந்தேன். ஆறாவது நாள் செல்லும்போது தேனாம்பேட்டை சிக்னலை, மஞ்சளுக்கு மாறும் கடைசி நொடியில் தாண்டினேன், கடமை தவறாத காவலர் ஒருவர் பாய முயன்று, குறுக்கே வந்த மாநகர பேருந்தினால் மனம் மாறினார். பத்தாவது நாளில், அதே சிக்னல், அதே காவலர், அவர் ஏற்கனவே வேறு ஒரு பெரிய வேட்டையில், பிசியாக இருந்ததால்என்னைக்  கவனிக்கவில்லை. பதினொன்றாவது நாளில், நூறடி சாலையில் செல்ல முடிவு செய்ததால், கோயம்பேடு சிக்னலில் சாகசத்தை செய்தேன், ஆனால், எனக்கு முன்னால் சென்ற வெளிமாநில லாரியில், வசூல் சாத்தியங்கள் அதிகமானதால்,  நான் தப்பினேன்.



நாள் 6 (04-Jan-10, திங்கள்)



பத்து நாள் விடுமுறைக்குப் பின், அழுதுகொண்டே அலுவலகம் சென்றேன். ஆணிகள் கொஞ்சம் அதிகமாய் சேர்ந்துவிட்டதால், நினைத்தபடி நினைத்தபடி நாலரை மணிக்கு கிளம்ப முடியவில்லை, சரியாக நாலே முக்காலுக்கு துளசி  டீச்சர் போன் பண்ணிட்டாங்க. உடனே கிளம்பி அஞ்சரையோட போய் சேர்ந்தேன். டீச்சரையும், வல்லி அம்மாவையும் சந்தித்தேன். ஜெட்லியும் வந்து சேர, ஒரு பத்து நிமிடம் பேசிவிட்டு கிளம்பினோம். சுற்றி வந்தபோது எழுத்தாளர் பிரபஞ்சனை பார்த்தோம், ஜெட்லி சென்று பேச விரும்பினார். கூட்டம் அதிகமாய் இருந்ததால், முடியவில்லை.


நானும் ஜெட்லியும் ( டீச்சர் பதிவில் சுட்டது )



டீச்சரும் வல்லியம்மாவும்



நாள் 10 (08-Jan-10, வெள்ளி) (அ) காலச்சுவடில் எட்டிப்பார்த்த எழுத்தாளர்
 

வண்டி கொஞ்சம் பிரச்னை செய்ததால், மூன்று நாட்கள் புத்தகக்  காட்சிக்கு லீவு போட்டுவிட்டேன். வெள்ளிக்கிழமை காலையிலேயே RomeoBoy போன் செய்துவிட்டார். நேரத்தோடு கிளம்பி விட்டாலும், ஆறு மணியோடு தான் போய் சேர முடிந்தது. ஏற்கனவே வந்துவிட்ட Romeo ரசிகைகள் புடைசூழ நின்றிருந்தார் (இப்போ சந்தோஷம் தானே :))). அவரை ஒருவழியாய் கூட்டிக்கொண்டு உயிர்மை பக்கம் சென்று பார்த்துக்கொண்டிருந்தபோது ஒருவர் வந்து கேட்டார் "நீங்க சங்கர் தானே?". இந்தக்  கேள்விக்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன் என்று நினைத்தபடி "ஆமாம், நீங்க" என்றேன், அவர் தான் 'எறும்பு' ராஜகோபால். எங்க ஊர்க்காரரான அவரிடம், அம்பாசமுத்திரத்துக் கதைகள் பேசிக்கொண்டிருந்தபோது, காலச்சுவடில் ஏதோ கூட்டம் தெரிந்தது.




என்னவென்று சென்று பார்த்தபோது, சிவக்குமாரும் சல்மாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். வெளியே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது, உயிர்மையிலிருந்து வந்தார் அந்த எழுத்தாளர், காலச்சுவடின் இலவச திட்டத்தைப் பற்றி, தன் தளத்தில் கேலி செய்திருந்தவர், இப்போது என்ன செய்யப்போகிறார் என பார்த்தபோது, அவரும் கூட்டத்தில் முண்டியடித்து எட்டிப் பார்க்க ஆரம்பித்தார், ஆனால் அவரால் உள்ளே நுழையவும் முடியவில்லை, யாரும் அவரை கண்டு கொள்வதாகவும் தெரியவில்லை, நான் எடுத்த புகைப்படத்தில் அவரின் முதுகுப்புறம் மட்டுமே சிக்கியது, யார் இந்த எழுத்தாளர் என சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு, அவர் எழுதிய 'முட்டைக் கோணம்' புத்தகம் பரிசளிக்கப்படும் (குலுக்கல்முறையில்) . இந்த சம்பவத்தினால், அண்ணன் சிவராமனின் சமீபத்திய பதிவின் பின்குறிப்பு, தவறோ என்று எண்ணத்தோன்றுகிறது.


Romeoவும், ராஜகோபாலும்




நாள் 11 (09-Jan-10, சனி) (அ) பதிவர் கொண்டாட்டம் 

காலையில் கேபிளாரின் அறிவிப்பைப் பார்த்தவுடனே கொண்டாடத் தொடங்கி விட்டேன். மூன்று மணிக்கே வீட்டைவிட்டுக்  கிளம்பிவிட்டாலும், மின்கட்டணம் செலுத்த கடைசி நாளில் முண்டியடிக்கும், மக்களின் மனோபாவம் புத்தகச் சந்தையிலும் வெளிப்பட்டதால் (சொன்னவர் நர்சிம்), நாலே முக்காலுக்கு தான் போய் சேர்ந்தேன். போதாக்குறைக்கு கலியுக கிருஷ்ணரின் (!!!) கீதா உபதேசம் வேறு, எதிரே இருக்கும் பச்சையப்பனில் நடந்ததால், ஏகப்பட்ட கூட்டம். பார்க்கிங்குக்கு உள்ளே இடம் கிடைக்காமல், இரண்டு தெரு தள்ளி வண்டியை விட்டுவிட்டு வரும்போது நர்சிம்மும் நான்கு தெரு தள்ளி காரை நிறுத்திவிட்டு வந்தார். நடைபாதை கடையில் அரைமணி நேரம் தேடிவிட்டு உள்ளே நுழைந்தேன்.


கேபிள், தண்டோரா, சர்புதீன், Romeo



ஏற்கனவே நிலா ரசிகனும், கென்னும் இன்னும் சில பதிவர்களும் இருந்தார்கள்.  கொஞ்சம் கொஞ்சமாய் கூட்டம் சேர ஆரம்பித்தது. கேபிளும், தண்டோராவும் பதிப்பாளர் சார்புதீனுடன் வந்து சேர்ந்தார்கள். பதிவர்களுக்காக தன் தொடங்கி உள்ள பத்திரிகை "வெள்ளி நிலா" குறித்து சார்புதீன் விளக்கினார். கூட்டம் கூட தொடங்கியவுடன், ஆங்கங்கே சிறு சிறு குழுக்களாக இலக்கிய விவாதங்கள் ஆரம்பித்தன.


எந்த நிலைமையிலும் ஒரே பார்வை, அண்ணன் தண்டோரா 





கேபிள், குகன், ஜாக்கிசேகர்,


கடந்து சென்ற மூன்று இளைஞர்கள், "அவர் தான் கேபிள் சங்கர்" என்று கிசுகிசுத்தபடி சென்றனர்.


வாசகி ப்ரியா, மற்றும் ஒரு பதிவர் (ராஜா என்று நினைக்கிறேன்)



நடுவில் ஒரு அறிவிப்பு,  "அரங்கு எண் 265 இல் புத்தகம் வாங்கிய ஒருவர், பில் புத்தகத்தையும் எடுத்துச் சென்றுவிட்டார், தயவு செய்து திருப்பி தரவும்", இதற்கு தண்டோராவின் கமென்ட் "நான் இவ்வளவு புத்தகம் வாங்கி இருக்கேன் பாருன்னு சொல்வதற்காக எடுத்துட்டு போயிட்டனோ".

 நிலா ரசிகன் அல்லது அவிங்க ராசா (சரியா தெரியலைங்க), பலா பட்டறை சங்கர்   


கேமெராமென் ஆக மாறிய டைரக்டர்


பாதியில் வந்து பாதியிலே கிளம்பிய கார்க்கியும்,  ராஜகோபாலும்


பட்டறை போட்ட பதிவர்கள்,  திரும்பி பார்ப்பவர் புலவன் புலிகேசி




காவேரி கணேஷ், ஜெட்லி




வண்ணத்துப்பூச்சி சூர்யா


லேட்டாக வந்த அப்துல்லா


அதைவிட லேட்டாக வந்த D.R அசோக் 


கேபிளும், ஜெட்லியும்



ஜாக்கிசேகர், ஜெட்லி


வெளியில் வந்தபிறகும் நீண்ட பேச்சு,


கேலியும் கிண்டலுமாய் கழிந்த மூன்று மணி நேரங்களுக்குப்  பின் பிரிய மனதின்றி கிளம்பி வந்தேன்.

நன்றி
சங்கர்

படங்களை கிளிக்கி பார்க்கவும் 

32 comments:

Paleo God said...

சந்தித்ததில் மகிழ்ச்சி நண்பர்களே...:)

எறும்பு said...

:))

மணிஜி said...

நேர் கொண்ட பார்வை...உங்கள் பதிவை சொன்னேன்.
மொக்கை பதிவர்களை பற்றி நாளை மானிட்டர் பக்கங்களில் படிக்கவும்.

வெற்றி said...

முகம் தெரியாத பல பதிவர்களை புகைப்படங்கள் மூலம் அறிந்தேன்..நன்றி!

வெற்றி said...

நீங்க மாலை யாருக்கு போட்டுருக்கீங்க?

திருவாரூர் சரவணா said...

கண்காட்சிக்கு வரமுடியாமல் வருத்தப்பட்டதற்கு இந்த புகைப்படங்கள் ஒரு ஆறுதல். பெட்டர் லக் நெக்ஸ்ட் இயர். நான் எனக்கு சொன்னேன்.

திருவாரூர் சரவணா said...

கண்காட்சிக்கு வரமுடியாமல் வருத்தப்பட்டதற்கு இந்த புகைப்படங்கள் ஒரு ஆறுதல். பெட்டர் லக் நெக்ஸ்ட் இயர். நான் எனக்கு சொன்னேன்.

சங்கர் said...

@தண்டோரா

படிச்சிடுவோம்

சுப தமிழினியன் said...

முட்டைக்குள்(நீங்கள் போட்டிருக்கும்) இருக்கும் முட்டைகோணம் எழுதிய எழுத்தாளர் “சாரு நிவேதிதா”

நம்ம யூத்து கேபிள் அவர் பையனோட டீஷர்ட்ட எடுத்து போட்டுட்டு வந்துட்டாரா?

பாலா said...

/////மொக்கை பதிவர்களை பற்றி நாளை மானிட்டர் பக்கங்களில் படிக்கவும். ////

ஐய்யய்யோ....!! நாளைக்கு எனக்கு சங்கா......

பிரபாகர் said...

சங்கர்,

உங்களுடைய புத்தக ஆர்வம் எனக்கு வியப்பாயிருக்கிறது. வாங்கி வந்த புத்தகங்களை படித்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

எனக்கு பக்கத்து வீட்டாரை பிடிக்காது. ஒரு நிமிஷம் அங்கு எதோ தருகிறார்கள் பூஜை முடித்து, பார்த்துவிட்டு வருகிறேன் எனக்கு கிடைக்குமா என! என் கோணம் சரிதானே?

பிரபாகர்.

Chitra said...

தொகுப்புக்கு நன்றி, சங்கர். போட்டோக்கள் அருமை. பதிவர்கள் சந்திப்பு நண்பர்கள் சந்திப்பாக மாறி வருவது குறித்து மகிழ்ச்சி. இந்தியா வரும்போது எல்லோரையும் சந்திக்க ஆவலை தூண்டுகிறது.

சங்கர் said...

@பலா பட்டறை

எங்களுக்கும் தான் தலைவரே

@ராஜகோபால் (எறும்பு)

என்னா சிப்பு

சங்கர் said...

//வெற்றி said...
நீங்க மாலை யாருக்கு போட்டுருக்கீங்க?//

சபரிமலைக்கு போறேன்

சங்கர் said...

@சரண்

பெட்டர் லக் நெக்ஸ்ட் இயர் :))

சங்கர் said...

@சுப தமிழினியன்

அப்போ புத்தகத்தை அனுப்பிடவா?

சரி சரி அழாதீங்க, உங்களுக்கு ராகுல்ஜியோட 'மனித சமுதாயம்' அல்லது 'ஊர் சுற்றி புராணம்' தரேன் ஓகேவா?

சங்கர் said...

@ஹாலிவுட் பாலா

அவரு யாரை சொல்றாருன்னு எனக்கு கொஞ்சம் புரியுது, எப்படியும் நாளைக்கு தெரிஞ்சிடும் :))

சங்கர் said...

//பிரபாகர் said...
வாங்கி வந்த புத்தகங்களை படித்து பகிர்ந்து கொள்ளுங்கள்.//

நிச்சயமாய் செய்கிறேன்,

//எனக்கு பக்கத்து வீட்டாரை பிடிக்காது. ஒரு நிமிஷம் அங்கு எதோ தருகிறார்கள் பூஜை முடித்து, பார்த்துவிட்டு வருகிறேன் எனக்கு கிடைக்குமா என! என் கோணம் சரிதானே?//

:)))))))))

சங்கர் said...

@Chitra

நிச்சயமாய் சந்திப்போம்

சுப தமிழினியன் said...

//அப்போ புத்தகத்தை அனுப்பிடவா?

சரி சரி அழாதீங்க, உங்களுக்கு ராகுல்ஜியோட 'மனித சமுதாயம்' அல்லது 'ஊர் சுற்றி புராணம்' தரேன் ஓகேவா?//

என்னது நிஜமா தற்ரீங்களா? மனித சமுதாயம் படிச்சிருக்கேன்.

சங்கர் said...

ஊர் சுற்றி புராணம் ஓகேவா?

Cable சங்கர் said...

சங்கர்.. எங்கே அந்த காலண்டர் போட்டோ..?

CS. Mohan Kumar said...

அருமையான படங்கள் சங்கர். ஜெட்லியின் படம் அதிகம் போடுவதே இல்லை. இம்முறை நிறைய போட்டுட்டீங்க

வல்லிசிம்ஹன் said...

உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சங்கர்.
ஜெட்லீ பேருக்கு ஏத்த மாதிரி ஒரே பரபரப்பு. :)

சுப தமிழினியன் said...

ஊர் சுற்றி புராணம் சரிதான் தோழா

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு நண்பா. புகைப்படங்கள் அருமை.

சங்கர் said...

@Cable Sankar said...
சங்கர்.. எங்கே அந்த காலண்டர் போட்டோ..? //

அடுத்த பதிவில் போடுறேன்

புலவன் புலிகேசி said...

உங்களையும் ஜெட்லி மற்றும் அனைத்து நண்பர்களையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி தல...பகிர்வுக்கு நன்றி.

சங்கர் said...

@மோகன் குமார்

@வல்லிசிம்ஹன்

@செ.சரவணக்குமார்


நன்றி

சங்கர் said...

@சுப தமிழினியன்

உங்க நம்பரை sanrv1f at gmail dot com அனுப்புங்க

Romeoboy said...

\\ஏற்கனவே வந்துவிட்ட Romeo ரசிகைகள் புடைசூழ நின்றிருந்தார்//

ஏலே மக்கா இந்த வரிய மட்டும் என் வைப் பார்த்த நான் காலி..

சங்கர் said...

@Romeoboy

பாக்கணும்னும் தானே போட்டது, அவுங்க மெயில் ID குடுங்க, நானே அனுப்புறேன்