Saturday, July 25, 2009

எனக்கு பிடித்த பத்து ஓடாத படங்கள்.

எனக்கு பிடித்த பத்து ஓடாத படங்கள்.

இப்பவும் என் நெஞ்சை விட்டு நீங்காத சில படங்கள்
உள்ளன, அவற்றில் சில படங்கள் வணிக ரீதியாக வெற்றி அடையாதவை(சில உண்மையாகவே மொக்கை படங்கள்).

உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு
பிடித்த ஓடாத படங்கள் பற்றி நீங்கள் கமெண்ட் அனுப்பலாம்

சாமுராய்:

காதல் படத்தின் டைரக்டர் பாலாஜியின் முதல் படம் இது.
தன் குருவை(ஷங்கர்) போல சர்ச்சையான மற்றும் அதிக
பட்ஜெட்டில் எடுத்த படம். பல பிரச்சனையால் படம் மிக
தாமதமாக வெளிவந்தது. படத்தின் தோல்விக்கு காரணங்கள்
திரைக்கதை, எடிட்டிங், மற்றும் அதே சமயத்தில் வெளிவந்த
அதே கதையை உடைய சிட்டிசன் படமும் ஆகும்.
எனக்கு இந்த படத்தில் விக்ரமின் கேரக்டர் ரொம்ப பிடிக்கும்,
பிளஸ் பாடல்கள் அதுவும் மூங்கில் காடுகளே பாட்டுக்கு நான்
அடிமை. முக்கியான விஷயம் வசனம் சூப்பர்.

கற்றது தமிழ்:

ஜீவாவிற்கு இந்த படம் கண்டிப்பா ஒரு மைல்கல் தான் படம்
வெற்றி அடைந்து இருந்தால். நல்ல உழைப்பு, தமிழ் உச்சரிப்பு
இருந்தாலும் இந்த படம் மென்பொருள் வேலைக்கு செல்பவர்களையும் பி.பி.ஒ வேலைக்கு செல்பவர்களையும்
தாக்கி நிறைய வசனம் இருந்ததால் அதுவே படத்தின் தோல்விக்கும் வழி வகுத்தது. நான் இந்த படத்தை சாந்தம்
தியேட்டரில் பார்க்கும் போது பாதி பேர் இடைவெளியிலே
சென்று விட்டனர் அவர்கள் அனைவரும் பி.பி.ஒ,மென்பொருள்
வேலை செய்பவர்களே. படத்தில் என்னை கவர்ந்தவை
பாடல்கள், வசனம், ஜீவாவின் வாய்ஸ் மொடுலேசின்
போன்று சொல்லி கொண்டே போகலாம்.


பட்டியல்:

இந்த படம் வெளி வந்த சமயத்தில் டி.வி களுக்கு காட்சிகள்
மற்றும் பாடல்கள் கொடுக்க கூடாது என்று தடை போட்டு
இருந்தனர், அந்த தடையே இந்த படத்தின் தோல்விக்கு
முக்கிய காரணம்(உண்மை தாங்கோ).மிச்ச படி படம் சூப்பர்
பாடல்கள் ஹிட்.

நேபாளி:

துரை எனக்கு பிடிக்காத இயக்குனர்களில் ஒருவர், ஏன்
என்றால் ஓவர் பந்தா பார்ட்டி.(நான் அந்நியன் படம்
பார்க்க ஆல்பர்ட் தியேட்டர் சென்ற போது என் முன்
இருக்கையில்(பாக்ஸ்) துரை இருந்தார். அவரோட
உதவியாளர் அப்படின்னு நினைக்கிறேன், அவரை
புடிச்சு என்ன வேலை வாங்குறாரு, திட்றாரு. உதவியாளர்
காண்டு ஆனானோ இல்லையோ நான் காண்டுயிட்டன்.
இதுல வேற துரை அந்நியன் படத்தை நக்கல் செய்தார்).

நேபாளி பல குறைகள் இருந்தாலும் படத்தின் திரைக்கதை
என்னை மிகவும் கவர்ந்தது.படத்தின் ஓவர் வன்முறையால்
மக்கள் இடைய சேராமல் போய்விட்டது.

காதல்னா சும்மா இல்லை:

இந்த படத்தை பார்த்தது ஒரு விபத்து, வேறு படங்களுக்கு
டிக்கெட் கிடைக்காததால் இந்த படத்துக்கு போக நேர்ந்தது.
படம் உண்மையிலே நல்லா இருந்தது(என்னை பொறுத்தவரை
போர் அடிக்காம டைம் பாஸ் ஆனா போதும்
). ஓரிரு பாடல்கள்
கூட நன்றாக இருந்தது, அருமையான ஒரு பயண படம்.
கூடிய விரைவில் ராஜ் டி.வி யில் போடுவாங்க டைம் கிடைச்சா பாருங்க.


பொம்மலாட்டம்:

நானா படேகர், இவரின் நடிப்பை பார்த்து அசந்து விட்டேன்.
படம் டப்பிங் தான் என்றாலும் அந்த குறை அவ்வளவாக
தெரியவில்லை.அதவும் நானாவுக்கு நிழல்கள் ரவியின்
குரல் கனகச்சிதம். பாரதிராஜாவா இயக்குனர் என்று வியக்கும்
அளவுக்கு படம் சூப்பர். படத்தின் உயிரே அந்த கிளைமாக்ஸ்
காட்சி தான். சரியான விளம்பரம் இல்லாததால் படம் பெட்டியில்
படுத்து கொண்டது.

ஏகன்:

நான் முன்னாடியே சொன்னேன் என்னை பொருத்தவரைக்கும்
மொக்கை போடாம டைம் பாஸ் ஆகுதா அது போதும் அது
படம். அந்த வகையில் ஏகன் படம் எனக்கு பிடிக்கும். மொத்தமே
இரண்டு மணி நேரம் தான் படம் ஓடும். நல்ல காமெடி, பாட்டு.
அஜித் இந்த படத்தில் கொஞ்சம் கலகலப்பா இருப்பார்.
(பரமசிவன், ஆழ்வார் போன்ற படங்களை நினைத்தால்...?)


எவனோ ஒருவன்:

நல்ல கருத்து சொல்ல வந்த படம், ஆனால் திரைக்கதை
பயங்கர சொதப்பல். பாடல்கள் இல்லாத படமென்பதால்
இந்த படம் பிடிக்கும்.


அலிபாபா:

அருமையான திரைக்கதை + பிரகாஷ் ராஜ் இருந்தும் ஏன்
இந்த படம் ஒடலைன்னு எனக்கு டவுட். ஆனா அப்புறம்
தான் தெரிஞ்சது ஹீரோன்னு ஒருத்தன் எப்படி இருக்கான்
அப்படின்னு நம்ம மக்கள் பார்த்துட்டு தான் உள்ளே வாருவாங்கன்னு...!.

மிச்ச படி பாடல்கள் செம மொக்கை
ஆனா படத்தில் உண்மையா கடைசியில் செம ட்விஸ்ட்.


குளிர் 100 டிகிரி:

பாட்டு ஒன்னு போதுங்க இந்த படத்துக்கு, அப்புறம் கேமரா
சூப்பர். படம் கொஞ்சம் மெதுவா தான் போகும். மிச்ச படி
ஹீரோ சஞ்சீவ் நல்லா ஸ்மார்ட் ஆக இருக்கிறார். படத்தின்
கிளைமாக்ஸ் நச்.


நன்றி
indiaglitz

உங்கள் ஓட்டை தமிழிஷ்யில் போட்டு விட்டு செல்லுங்கள்.

பாசமுடன்
உங்கள்
ஜெட்லி.

21 comments:

யோ வொய்ஸ் (யோகா) said...

ஓரளவுக்கு நானும் உங்களோட உடன் படுகிறேன் மத்த படி இந்த எல்லா படமும் எனக்கு பிட்டிகும் என்பது இல்லை

ஜெட்லி... said...

நன்றி யோ....
ஒவ்வொரு ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு
பீலிங்க்ஸ்...

payapulla said...

உங்கள் பட்டியலில் "பட்டியல்" தான் எனக்கு பிடிக்கும்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஊட்டின்னு ஒரு படம் பார்த்திருக்கீங்களா தல..,

Admin said...

ஓகே ஓகே நானும் ஒரு பத்து போடத்தான் வேணும்...

கிரி said...

"பட்டியல்" நல்ல வசூல் பார்த்த படம் தான்..நஷ்டம் இல்லை

ப்ரியமுடன் வசந்த் said...

முதம் மூன்று மட்டும் ஒகே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Anabe Sivam, Paandavar Boomi, Vaseekaraa

ஜெட்லி... said...

பின்னூட்டம் ஈட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...

ஜெட்லி... said...

@சுரேஷ் பழனி தல

அண்ணே ஊட்டி அப்படின்னு ஒரு படம்,
சத்தியமா எனக்கு பிடிக்காது தல...

ஜெட்லி... said...

nandri little boy

ஜெட்லி... said...

nandri சந்ரு

ஜெட்லி... said...

@பிரியமுடன்.........வசந்த்

nandri

ஜெட்லி... said...

@கிரி

நல்ல வசூல் தான் ஜி...
ஆனா படம் தோல்வியை தலிவியது உண்மை.

ஜெட்லி... said...

vaseegara???? ayyo saami

சரவணகுமரன் said...

நல்ல பதிவு

Karthik said...

பொம்மலாட்டம் ஓடாத படம்னு எவன் சொன்னான்???

ஜெட்லி... said...

தியேட்டர் ஊழியர்....வேற யாரு சொல்லணும்????

தினேஷ் said...

பத்தும் பொருத்தமான படம் ..

Tech Shankar said...

பட்டியல் பார்த்துட்டேன்.

பின்னோக்கி said...

கற்றது தமிழ் - லொகேசன், பாட்டு
பட்டியல் - பரத் நடிப்பு. வாய்,காது கேட்காததை பாடி லேங்க்வேஜ்ல அற்புதமா கொண்டுவந்ததுக்காக
பொம்மலாட்டம் - டிவிஸ்ட்

எவனோ ஒருவன் - திரைக்கதைன்னா என்னான்னே தெரியாம..என்னய படம் எடுக்க சொன்னா..நான் இப்படித்தான் படம் எடுப்பேன். நல்ல வேளை இந்த படம் ஓடலை.

நல்ல படங்கள்