Tuesday, July 14, 2009

இந்திரவிழா என்னும் திரைக்காவியம்.

இந்திரவிழா விமர்சனம்.

இந்திரவிழா படத்துக்கு போனதுக்கு ஒரே காரணம் நமீதா.
தியேட்டரில் என்னையும் என் நண்பனையும் சேர்த்து சுமார்
இருபது பேர் படம் பார்த்தோம்.இது போன்று படங்கள் எடுப்பதில்
இயக்குனர்க்கு என்ன லாபமோ என்று தெரியவில்லை(இரண்டு
கதாநாயகிகள் தவிர).சில சுவையான சம்பவங்கள் படத்தின்
உள்ளேயும் வெளியேயும்:

********************************
# தியேட்டர் உள்ளே செல்லும் போதே செக்யூரிட்டி அங்கிள்
ஒன்னுக்கு ரெண்டு வாட்டி சொன்னாரு "தம்பி இந்திரவிழா
இந்திரவிழா படம் தான் ஓடுது வாமனன் காலையலே மட்டும் தான்"."இந்திரவிழா படத்துக்கு தான் வந்தோம், படம் போடுறிங்க
இல்ல, ஒரு வண்டியையும் காணோம்" என்று கேட்டேன் நான்.
"போங்க தம்பி இன்னும் படம் ஆரம்பிக்கல" என்றார்.

#படம் பார்த்த பத்தாவது நிமிடத்திலேயே படம் தேறாது என்று
தெரிந்த பின்னும் கனவு நாயகி நமீதா இன்னும் வரவில்லை
என்ற ஒரே காரணத்தால் படத்தை விழித்து கொண்டு
பார்த்தோம்.

#என்கிட்டே ஒரு கெட்ட பழக்கம்ங்க படம் மொக்கையா
இருந்துச்சுன்னா கொஞ்சம் கமெண்ட் அடிப்பேன். இந்த படத்துக்கு
சொல்லவே வேணாம். ஆனால் நான் கமெண்ட் அடிப்பதால்
முன்இருக்கை நபருக்கு கோபம் வந்து விட்டது.அது ஒன்னும்
இல்லைங்க மேல ஒரு நமீதா படம் இருக்குல அதுக்கு நான்
ஒன்னும் பெருசா சொல்லலங்க ,பக்கத்துல என் நண்பன்கிட்ட
தான் சொன்னேன்

"மேல பாருடா புலி தோலு, நடுவுல வரிக்குதிரை தோலு,
கிழே கறுப்பாடு தோலு. ஒரு தோலை மறைக்க எத்தனை
தோலு மச்சான்"(ஜெட்லி தத்துவம் நெ:356)

#ஒரு வழியா இன்டெர்வல் முடிஞ்சு வெளியே வந்தோம்,
திரும்பவும் நம்ம செக்யூரிட்டி அங்கிள் என்னை பார்த்து
புன்முறுவல் செய்தார்.
"அண்ணே நீங்க டிக்கெட் எடுக்கும் போதே இந்திரவிழா
இந்திரவிழான்னு சொல்லும் போதே நான் உஷார் ஆகிரிக்கணும் தப்பு பண்ணிட்டேன் தலைவா" என்று அவரிடம் சொன்னேன்.

"இந்த படத்துக்கு வாமனன் எவ்வளவோ மேல்ப்பா"
என்றார் செக்யூரிட்டி.

"படம் எத்தனை மணிக்கு அண்ணே முடியும்" அவரிடம்
கேட்டேன்.

"9.20 க்கு தம்பி"

"இன்னும் ஒரு மணிநேரம் இந்த கொடுமையை பாக்கணுமா?"

"இந்த படம் பரவா இல்லை தம்பி இதுக்கு முன்னாடி ஞாபகங்கள்
அப்படின்னு ஒரு படம் ஒடிச்சு , தொடர்ந்து மூணு நாள் நைட்
ஷோ படம் ஒட்டல.யாரும் தியேட்டர் பக்கம் எட்டி கூட
பாக்கல"

# வழக்கம் போல் அரைமணி நேரம் பின்னாடி (தள்ளிட்டு)
வருபவர்களும்,அரைமணி நேரம் முன்னாடி போறவங்களுக்கும் இந்த படம் ஒரு வரபிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.

# விவேக்கின் மொக்கை காமெடி மேலும் படத்தை மொக்கை
ஆக்குகின்றது.சில காட்சிகள் ரசிக்கலாம்.

# ஸ்ரீகாந்த் பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்ல, இனிமே அவரு
டான்ஸ் ஷோல மட்டும் தான் பாக்க முடியும்.

#கடைசி அரைமணி நேரம் நான் வீட்டுக்கு போய்விடலாம்
என்று எழுந்தேன் பார்த்த கரெக்ட்ஆ ஒரு நமீதா பாட்டு
அப்படியே உட்கார்ந்தேன், ஒன்னும் சொல்ற மாதிரி இல்ல
அந்த பாட்டுல.

#இந்திரவிழா ரொம்ப நாளாக படம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது,
படத்தை பார்த்த பின் படம் ரிலீஸ் ஆகாமலேயே இருந்திருக்கலாம்
என்று நினைத்தேன்.

ஜெட்லி பஞ்ச்:

டப்பா படம் பாக்கறது என் தப்பு இல்ல படம் எடுத்தவன்
தப்பு.

நீங்கள் படித்து ரசித்ததை அனைவரும் படிக்க ஒட்டு போடுங்கள்.
உங்கள் சின்னம் tamilish .



உங்கள்
ஜெட்லி.

12 comments:

சரவணகுமரன் said...

நீங்க எப்ப விமர்சனம் எழுதுவீங்கன்னு எதிர்பார்த்திட்டு இருந்தேன்... :-)

இதுதான் இந்த படத்துக்கான முதல் & கடைசி விமர்சனம்'ன்னு நினைக்குறேன்...

ரெட்மகி said...

_ _

Unknown said...

மேல பாருடா புலி தோலு, நடுவுல வரிக்குதிரை தோலு,
கிழே கறுப்பாடு தோலு. ஒரு தோலை மறைக்க எத்தனை
தோலு மச்சான்"(ஜெட்லி தத்துவம் நெ:356)


சூப்பர்..

ஜெட்லி... said...

பின்னூட்டம் இட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும்
நன்றி.....

VISA said...

ஏழைகளின் வயாகரா, வருங்கால வார்டு கவுன்சிலர் நாராச நங்கை நமீதாவின் படத்தை கிண்டலடித்திருக்கும் நமீதாவின் இட்லியை சாரி பாஸ் ஜெட்லியை நமீதா நான் ஸ்டாப் ஸ்ட்ரிப் டீஸ் குழு சார்பாக கண்டிக்கிறோம்.

//மேல பாருடா புலி தோலு, நடுவுல வரிக்குதிரை தோலு,
கிழே கறுப்பாடு தோலு. ஒரு தோலை மறைக்க எத்தனை
தோலு மச்சான்"(ஜெட்லி தத்துவம் நெ:356)//

So black sheep innum keezha thaan irukunnu solreengala thaleeva.

VISA said...

:)

உண்மைத்தமிழன் said...

அப்ப நமீதாவுக்காக பார்க்கலாம்ன்றீங்களா..?

ஜெட்லி... said...

//பாஸ் ஜெட்லியை நமீதா நான் ஸ்டாப் ஸ்ட்ரிப் டீஸ் குழு சார்பாக கண்டிக்கிறோம்.
//
உங்கள் குழுவில் என்னையும் சேர்த்துகுங்க பாஸ்.

ஜெட்லி... said...

//அப்ப நமீதாவுக்காக பார்க்கலாம்ன்றீங்களா..?
//
ரிஸ்க் எடுக்கறது உங்களுக்கு ரஸ்க் சாப்படிற மாதிரினா பாருங்கோ...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நமீதாவும் விவேக்கும் சமமா தல..,

ரெண்டு பேருக்கும் ஒரேமாதிரி படம்கொடுத்து இருக்கீங்க..,

கடைக்குட்டி said...

ரொம்ப ரசிச்சேன்ங்க...

டரியலாய்ட்டீங்க போல... :-)

<< நாம ஒரு படம் சேந்து பாப்போம் தியேட்டர்ல...>>

கரிகாலா said...

இந்த மொக்கையை "download" செய்து பார்த்தவன் என்கிற முறையில்.... உங்கள் சோகத்தில் பங்கு கொள்ள விழைகிறேன்.