Wednesday, July 1, 2009

பில்ட்-அப் ஆசாமிகள்.

உங்கள நண்பர் பில்ட்-அப் ஆசாமியா?

சில பில்ட்-அப் படங்கள்:



நாம் இதுவரை வாழ்வில் சந்தித்த நபர்களில் எவரேனும்
ஒருவரையாவது, அதாவது பில்ட்-அப் பார்ட்டிகளை
சந்திக்கமால் இருந்திருக்க வாய்ப்பில்லை. பில்ட்-அப்
பார்ட்டிகளின் நோக்கம் தாங்கள் நண்பர்கள் மத்தியில்
மதிப்போடு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களுக்கு தெரியாதவற்றை பயங்கர பில்ட்-அப் செய்து கூறுவதே
இவர்களின் வேலை.

அது என் வாழ்வில் நான் சந்தித்த என் நெருங்கிய நண்பனின்
சில பில்ட்-அப்கள் இங்கே
,

எனக்கு கல்லூரியில் முதல் நாள் கிடைத்த முதல் நண்பன்
குமார்(பெயர் மாற்றபட்டுள்ளது).கல்லூரி காலத்தின்
ஆரம்பத்தில் அவன் எந்த ஒரு விஷயத்தையும் மிகையாக
தான் சொல்லுவான், அப்போது எங்களுக்கு தெரியாது அவன்
பில்ட்-அப் பார்ட்டி என்று.முதல் முதலில் அவன் சிக்கியது
விஜய் நடித்த பகவதி படத்தால். எனக்கு கொஞ்சம் சினிமா
நியூஸ் அத்துபடி. அந்த டைம் பகவதி டிரைலர் டி.வி.யில்
காண்பித்தார்கள்.ஆனா பாடல்கள் ரிலீஸ் ஆகவில்லை.

குமார்: மச்சி பகவதி பாட்டு கேட்டியா? செமையா இருக்குடா...

ஜெட்லி: ஆமாண்டா டிரைலர்ல பார்த்தேன்.

குமார்: டேய் நான் பகவதி பாட்டு சி.டி வாங்கிட்டேன் டா....
எல்லாமே சூப்பர் பாட்டு.

ஜெட்லி: உன்கிட்ட பகவதி பாட்டு சி.டி இருக்குதா மச்சான்?,
இல்ல விஜய் , தேவா உங்க மாமாவா?

குமார்: சீ..நேத்து தாண்ட நானும் வீட்டாண்ட பசங்களும் போய்
வாங்கிட்டு வந்தோம்.

ஜெட்லி: டேய் யார்கிட்ட கதை உடுற, இன்னைக்கு பேப்பர்ல
பாட்டு அடுத்த வாரம் தான் ரிலீஸ் ஆகும்னு
போட்டுருக்கான்.....

குமார்: மச்சான் எப்படிடா கண்டுபிடிச்ச.... ச்சே .சாரி ஸ்மால்
மிஸ்டேக்.

அன்னைக்கு மாட்டினவன் என் நண்பன். அவனை ஒட்டுரத
கேக்கவா வேணும்.
**************************************************
இன்னும் சில சாம்பிள்:
(கிட்ட தட்ட தலைநகரம் வடிவேலு மாதிரி ஆனா இது நடந்து ஆறு
வருடங்கள் மேல் ஆகி விட்டது)

குமார்: நாங்கெல்லாம் அசோக் நகர்ல பெரிய ரவுடி பிளஸ்2
படிக்கும் போதே சாரை(வாத்தியாரை) கிணத்துல கயிறி கட்டி
இறுக்கி விட்ருவோம்.

நாங்கள் நண்பர்கள் அனைவரும் அப்படியா என்று வியப்போம்.

குமார்: ஒரு வாட்டி இப்படி தான் மச்சி, ரோட்ல சின்ன பிரச்னை
ஆச்சி. வடபழனி சிக்னல்ல கல்ல விட்டு சிக்னலை உடைசிட்டோம்.



குமார் இதை கூறியது முதல் வருடத்தில், எனக்கு குமாரின்
நண்பன் அசோக் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கடைசி வருடத்தில்
தான் கிடைத்தது.அசோக்கும் குமாரும் ஒன்றாகவே பள்ளி படிப்பை முடித்தனர்.அவனிடம் இதை பற்றி கேட்டேன்

ஜெட்லி: என்ன +2 படிக்கும் போது சாரை கயித்துல கட்டி கிணத்துல விட்டானாமே?

அசோக்: நாங்க படிக்கும் போது சொன்னாங்க, எப்பவோ எங்க
ஸ்கூல்ல நடந்தது.

ஜெட்லி: அப்ப அவன் இல்லையா ஸ்பாட்ல?.... அவன் இருந்த மாதிரி
சொன்னான்.

அசோக்:யாரு அவனா, ஸ்கூல்க்கு வந்தா முடிட்டு உட்கார்ந்துட்டு
வீட்டுக்கு வந்துடுவான்.

ஜெட்லி: அப்புறம் ஏதோ பிரச்சனையில் வடபழனி சிக்னல் உடைச்சிடனாமே?

அசோக்: ஹ ஹ.. நல்ல காமெடி. இந்த மாதிரி கதையெல்லாம் உங்ககிட்ட வேற சொல்றானா. அந்த சிக்னல் உடைஞ்சது உண்மை
ஆனா அதை அவன் உடைக்கல.



இன்னும் பல விஷயங்கள் நண்பனை பற்றி சொல்லலாம்.
ஆனால் அவன் பழகுவதற்கு இனிமையனவான், அன்பனாவன்.
நட்புக்காக உயிர் கொடுப்பன் மேலும் நட்புக்காக படத்தை
பத்து தடவை மேல் பார்த்தவன்.(சிம்ரனுக்காக பார்க்கவில்லை).
இன்னும் சில பேர் இருக்காங்க படம் போஸ்டர்
பார்த்துட்டு படம் பார்த்த மாதிரி கதை சொல்வாங்க.
உங்களுக்கும் ஏதாவது இந்த மாதிரி அனுபவம் இருந்தா
கமெண்ட் பண்ணுங்க.....

உங்கள்
ஜெட்லி

10 comments:

லோகு said...

இது மாதிரி 'நாங்கெல்லாம் டெரர் தெரியுமான்னு' சில பில்டு அப் பார்ட்டிகள் ஊருக்குள்ள சுத்துது மாப்ள.. அவனுங்கள லூஸ்ல விடு..

காமெடியான பதிவு..

சித்து said...

சரியாய் சொன்ன லோகு, கொசு மருந்து அடிச்சு தான் கொல்லனும் அந்த ஜந்துக்கல.

சப்ராஸ் அபூ பக்கர் said...

கடைசியில் யார் முதலில் பகவதி பாடல் கேட்டது? நீங்களா உங்கள் நண்பரா?? (என்ன குழப்பமா????...........ஹி...ஹி......)

அப்படியே என் வலையையும் கொஞ்சம் பாருங்கோவன்.....

பரமார்த்தகுரு said...

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாதவர்கள்


நான் சில வருடங்களுக்கு முன்பு பெங்களூரில் இருந்த போது என்னோடு படித்த நண்பனின் அறையில் சில மாதங்கள் தங்க நேர்ந்தது..
ஒரு முக்கியமான விசயம் என்னவெனில் எப்போதும் முன் எச்சரிக்கை பெருவழி என்று நினைத்துக்கொண்டு முடிந்த அளவு காதில் பூ சுற்றுவார் என் காதில் அல்ல...

என்ன விசயம் என்றலில் அவரால் ஒரு நாள் கூட உற்சாக பானம் இல்லாமல் உறங்க மாட்டார்.
சில சாம்பிள் களுக்கு
அவருடைய தாத்தா அந்த காலத்திலேயே ஊட்டி போய் டீ குடிப்பவராம். 60 களிலேயே 6~7 கார் காள் வைத்திருந்தவராம்..சரி அவர் மிகப்பெரிய பண்ணையாரோ அல்லது ஜாமினோ அல்ல. ஏதோ ஒரு Factory இல் மேஸ்திரி...!!

இடையில் ஏதாவது சந்தேகம் வந்து நாம் கேட்டா..போச்சு...!! ஆரம்பம் ஒரு ஏழரை!!!


ஸ்பெக்ட்ரம் என்றாள் என்ன? சந்தேகம் வந்தால் அவரிடம் இன்னொரு நண்பன் கேட்கபோக " அது சீன செல் கம்பனியின் ஸெல்லுலர் டவர்" என்று சொல்ல ஆரம்பிப்பார்.
Internet கண்டு பிடித்தவர் தனது பக்கத்து ..
அட அட அடடா!!!

நீங்கள் எந்த தலையங்கம் சொன்னாலும் அதற்கு கண் கை மூக்கு வைத்து ஏதாவது உளறிக்கொண்டு இருப்பார்.. முடிந்த அளவு மொக்கை என்றா என்ன என்பதனை அவரிடம் தான் கற்றுக்கொண்டேன்


முன்பெல்லாம் ஏதாவது விசயம் என்றா முடிந்த அளவு சொல்லி புரிய வைத்து பார்த்தேன். இப்போதெல்லாம் அவரை பேச வைத்து வேடிக்கை பார்த்தால் என்னுடைய நேரத்தை எப்படி எல்லாம் கழிக்கலாம் என்பதனை நன்கு புரிந்து கொண்டேன்

வால்பையன் said...

ரொம்ப நாள் கழிச்சி என் கூட படிச்சவன் ஒருத்தனை பார்த்தேன்!
ரெண்டு பேரும் ஆளுகொரு பீர் அடிச்சிட்டு ஜுராசிக்பார்க் சினிமாவுக்கு போனோம்,

ஒரு சீன்ல ஹெலிகாப்டர் மேலேயிருந்து கீழே இறங்கும்.

அந்த இடம் அவுங்க விட்டுக்கு பக்கத்துல தான் இருக்குதுன்னு சொன்னான், அதுக்குப்பறம் அவன எங்க பார்த்தாலும் ஒரே ஓட்டம் தான் நானு!

ஜெட்லி... said...

நீ சொல்றது சரிதான் லோகு....

ஜெட்லி... said...

@அபு பக்கர்

நீங்க தான் என் பதிவை படிச்சு
கொஞ்சம் குழம்பி போய் இருக்கீங்க....

ஜெட்லி... said...

@ குரு

தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு
நன்றி.....
நம்ம நண்பனை விட உங்க நண்பன் பயங்கர
தில்லாலங்கடி போல......

ஜெட்லி... said...

@ வால் பையன்

தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு
நன்றி.....
பார்த்து கொஞ்சம் உஷாரா இருங்க வால்,
விட்டா அனகோண்டா பாம்பை அவுங்கதான்
ஷூட்டிங்க்கு வாடகைக்கு விட்டேன்னு
சொல்வார் போல....

Bala De BOSS said...

என்ன நண்பா, 2 கதையோடு நிறுத்திட்ட? மற்ற சுவாரஸ்யமான கதைகளையும் எடுத்து விடு நண்பா. நாம் பெற்ற இன்பத்தை எல்லோரும் பெற வேண்டும். அப்போதான் நம்மள பத்தி ஏரியால "அப்படி இப்படி" பெருசா பேசுவாங்க.