வணக்கம் புரட்சி தளபதி விஷால் அவர்களே,
இப்பதான் உங்க தோரணை படம் பார்த்து விட்டு வந்தேன்,
பொதுவா நான் விமர்சனம் தான் எழுதுவேன் ஆனா என்னமோ தெரியுல இன்னிக்கு உங்களுக்கு கடிதம் எழுதுனும்னு தோணிச்சு. இந்த கடிதம் உங்கள் பார்வைக்கு வருமான்னு எனக்கு தெரியாது ஆனா நம்ம ப்ளாக் படிக்கும் அனைவரையும் சென்று அடைந்தால் போதும்.
படத்துக்கு வருவோம், முதல் பாதி படம் உங்களுக்கு காமெடி
வரும்னு தூள் கிளப்பிட்டிங்க. நீங்களும் சந்தானமும் அடிக்கும்
லூட்டியில் என் வயிறு வலிக்கும் அளவுக்கு நான் சிறிது மகிழ்ந்தேன், திரைஅரங்கம் முழவதும் சிரிப்பு சரவெடி தான் போங்க. அதுவும் மயில்சாமியும் சந்தானுமும் பறவை முனியம்மாவிடம் அந்த புது பில்டிங்கில் நடக்கும் கூத்து சூப்பர் சூப்பர் சூப்பர்.
படத்தில உங்க ஒபெநிங் என்னை நிமிர்ந்து உட்கார வைத்தது,
ஆனால் அதுக்கு அடுத்த காட்சியே உங்களுக்கு ஒரு ஒபெநிங் சாங், நீங்களே உங்களுக்கு பில்ட் அப் கொடுத்துட்டு அதை நீங்களே கிண்டல் பண்ணிகிரிங்க( எங்களுக்கு முன்னால நீங்களே முந்திகிட்டிங்க). உங்க தோரணை படத்தோட போஸ்டர் எல்லாம் சண்டைகோழி ஸ்டில் மாதிரி இருந்தது, படத்தை பார்த்த தான் தெரியுது தோரணை உங்கள் எல்லா படத்தையும் சேர்த்த ஒரு கலவை என்று.
ஸ்ரேயா, இவரின் தாராள மனம் படத்துக்கு பலம் சேர்க்கவில்லை, பாடல் காட்சிகள் தவிர இவருக்கு ஒண்ணும் பெருசா வேலை இல்லை. படத்தின் பின் பாதியில் நீங்களும் ஸ்ரேயாவும் போடும் மொக்கை தாங்க முடியவில்லை.
நீங்க வேற படத்துல உங்க அண்ணனை தேடிட்டு சென்னைக்கு வரிங்க, நான் படம் ஆரம்பிக்கும் போதே நினைச்சேன் ஒண்ணு பிரகாஷ்ராஜ் அல்லது கிஷோர் தான் உங்கள் அண்ணன் என்று. நீங்க நடுவுல ஸ்ரீமனை காட்டி என்னை குழப்பிவிட்டதாய் எண்ண வேண்டாம். அதுவும் திடிர்னு நீங்க ஆந்திரா காரை காட்டுவதும், ஆந்திரா எழுத்தில் உள்ள கடைகளை காட்டுவதை
உங்கள் குழுவின் அலட்சியத்தை காட்டுகிறது.
இரண்டாம் பாதி முழுவதும் மனதில் ஒட்டாத காட்சிகள், உங்க அம்மா , அண்ணன் செண்டிமெண்ட் எதுவும் எடுபடவில்லை. நான் நீங்கள் நடித்த சத்யம் படத்தை பார்க்கவில்லை, ஆனால் நீங்கள் நடித்த அனைத்து படங்களும் சிவப்பதிகாரம் தவிர எனக்கு மிகவும் பிடிக்கும்.
அப்புறம் சார் உங்க படத்துல என் சார் அரைச்ச மாவையே ஏன் அரைக்கிரிங்க, பைட் காட்சிகள் ரொம்ப பில்ட் அப். நான் இந்த படத்தை பாக்கறதுக்கு முக்கிய காரணம் பொல்லாதவன் புகழ் கிஷோர். அவரின் நடிப்பு மிக அருமையாக இருக்கும். ஆனால் அவர பேச விடாம அவரை மருத்துவமனையில் படுக்க வச்சிடிங்க. சரி, அவர் தான் பேசல ஆனா நீங்க பேசியே உங்க அண்ணன் அடியாட்களை திருத்திரிங்க. பேசாம நீங்க எதாவது ஒரு கல்லூரியில் விசிடிங் பேராசிரியாராக போக உங்களுக்கு நல்ல திறமை இருக்கு.அப்புறம் அது எப்படி சார் நீங்களும் கிஷோரும் கார்ல மாட்டிகிரிங்க, போலீஸ் உங்க காரை சல்லடையாக துப்பாக்கியால் துளைத்து விடுகிறார்கள் அப்புறமும் நீங்க காரை எடுத்துக்கிட்டு போறீங்க, என்கிட்டே மட்டும் சொல்லுங்க சார் "நீங்க கார்ல எந்த இடத்துல்ல ஒளிஞ்சி இருந்திங்க". இத எல்லாம் சொல்ல உனக்கு என்ன அருகதை இருக்குன்னு நீங்க கேக்கலாம் முதல் நாள் உங்கள் படத்தை பார்த்த ஒரு தகுதி போதும்ன்னு நினைக்கிறேன்.
உங்கள்
ஜெட்லி.
Friday, May 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
ஹா ஹா காப்பாத்திடிங்க லீ என்னை படம் பார்க்காம காப்பாத்திடிங்க சிவப்பதிகாரம் சத்தியம் சண்ட கோழி,திமிரு. இப்படி பார்தத எனக்கு நீங்க சொன்ன மாதிரி சிவபதிகாரம், ரெண்டும் பிடிக்காது
என்னது வில்லனை பேசியே திருத்தராரா..
டாக்டர் விஜய் அவர்களின் வெற்றிக்காவியம் நெஞ்சினிலே வில் இருந்து உருகி விட்டார்கள்.. இதை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது..
//இத எல்லாம் சொல்ல உனக்கு என்ன அருகதை இருக்குன்னு நீங்க கேக்கலாம்//
அட யாருங்க நம்மள கேள்வி கேக்குறது.. ???
நல்லா இருக்குனா நல்லா இருக்கு..
நல்லா இல்லைனா நல்லா இல்ல..
அவ்ளோதான்
அப்பே.. தோரனையும்... அம்புட்டுதானா??
உங்களை அட்டு படத்தில் இருந்து காப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது சுரேஷ்.
லோகு மச்சி கப்புனு புடிச்சிட்டியே......
இந்த மாதிரி விஷால் படம் நடிச்சார்ன அவளோதான்.
படம் மொக்கை தான்... ஆனா சந்தானம் காமெடி சூப்பர்...
நான் ரொம்ப ரசிச்சு சிரிச்சேன்.......
முதல் நாளே பார்திங்களா!
நல்லா வேணும்!
கண்டிப்பா காலி கவின்
என்ன பண்றது வால்பையன்,
எல்லாம் டைம்.
புரட்சித்தளபதின்னா சும்மா இல்லீங்க தல
Singapore Mouthayen Mathivoli, "Vishal" is trying to become the next "Vijay" (interms of giving flop movies).
அப்போ ஊத்தி முளுகிட்டாங்கன்னு சொல்லுங்க.
எந்த ஜென்மத்துல புண்ணியம் பண்ணிங்களோ.. சத்யம் பார்க்காம தப்பிச்சிட்டிங்க. :))
நீங்க சொல்றதே ஒத்துக்குறேன் தலைவரே.....
கரெக்ட்ஆ சொன்னிங்க மலேசியா மௌதேன்
கண்டிப்பா அதுல சந்தகமே இல்லை சித்து
ஒரு கண்டத்துல தப்பிச்சு இன்னொருதுல மாட்டிகிட்டேன் சஞ்சய் ,அதான் தோரணை.
En friend rendu ticket irukunu sonnaan, athuku thorani thaan paakanumnu romba aasaiya irukkaan. Sari padathoda review eppadi irukkunu therinjikalaamnu thaan blog open pannaen (kudos to the one who has changed the appearance and few others) itha padichium naan naalaiku intha padatha thaan paarka poraen, yaena sathyamla math-tha padam Ayan, sarvam :( enna pandrathu.
நேத்து இந்த கண்ராவி படத்தை என் மனைவி கூட்டிட்டு போய் பார்த்தேன் அச்சோ சாமி தாங்கல
உங்க பாலோவர் ஜெட்லி
Post a Comment