குஸ்வந்த் சிங் ஜோக்:
"அப்பா உங்களக்கு இருட்டை கண்டால் பயமா ?" - குழந்தை கேட்டது
"இல்லையே. யார் சொன்னார்கள், எனக்கு இருட்டை கண்டால்
பயமென்று?" - அப்பா சொன்னார்
"யாரும் சொல்லவில்லை. பின்னே நீங்கள் ஏன் அம்மாவின் படுக்கையில் ஏறி அவளுடைய போர்வைக்குள் புகுந்து கொள்கிறிர்கள்?"
-குழந்தை மறுபடியும் கேட்டது.
(விவகாரமான புள்ள)
********************
பொன்மொழிகள்:
@ உன்னை நீ நாணயமானவனாக மாற்றி கொண்டால்,
உலகத்தில் ஒரு அயோக்கியன் குறைந்து விட்டான் என்று
நீ திடமாக நம்பலாம்.--தாமஸ் கார்லைல்.
@ ஞாயிற்றுக்கிழமை தவறாமல் பிரார்த்தனை கூட்டத்திற்கு
வருவதை வைத்து, ஒருவரை எடை போட கூடாது. அவர்
மற்ற கிழமைகளில் என்ன செய்கிறார் என்பதையும் கவனிக்க
வேண்டும்.--தாமஸ் புல்லர்.********************
வரும் சனிகிழமை நான், சித்து, அருண் , இலக்கியம் மற்றும் பலர் ஏற்காடு
செல்வதால் ஒரு நாலு நாளைக்கு எங்களிடம் இருந்து உங்களுக்கு
விடுதலை. இது நாப்பத்தி எட்டாவது இடுகை..... ஏற்காடு போயிட்டு ரூம் போட்டு யோசிச்சு எங்களது அம்பதாவது இடுகையை மேலும் சிறப்பாக வெளியிடுவோம் என்று நம்புகிறேன் .
*******************
நீங்கள் எல்லாம் எந்த வயசில் குடிக்க ஆரம்பித்திர்கள் ....கிழே நம்ம
பய புள்ளைய பாருங்க ..........
என்ன கொடுமை சரவணன் இது!
*************************************
ஹிட்லரின் நல்ல குணங்கள்:
சர்வாதிகாரியான ஹிட்லர் பல விருதுகளை பெற்ற ஒரு சிறந்த
போர் வீரர். அவர் ஒரு vegetarian . புகை பிடிக்கும் பழக்கம் இல்லாத
அவர், எப்போதாவது பீர் மட்டும் அருந்துவார். தன மனைவியை தவிர, மற்ற பெண்களோடு, அவர் தொடர்பு வைத்து கொண்டதே கிடையாது. உலகிலேயே மிக பெரிய கார் உற்பத்தியாலராகிய ஹென்றி போர்ட், ஹிட்லரின் விசிறி. போர்டுடைய ஆபீஸ் மேசை மீது ஹிட்லர் உடைய போட்டோ வைக்கபட்டிருக்கும்.
***************************************
கேட்டது:***************************************
அண்மையில் பிக் F.M இல் பாஸ்கி அவர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பேசிய பேச்சு என்னை கவர்ந்தது. அதாவது ஜானி படம் ரீமேக் தொடர்பாக அவர் கூறியதாவது:
"வர வர நம்ம நாட்டுல கதைக்கு பஞ்சம் வந்துடிச்சி போல, எல்லோரும் ரீமேக் படம் எடுக்க ஆரம்பிச்சிடாங்க, அதுவும் பழைய ரஜினி படத்த எடுக்குறதுல ஆர்வமா இருக்காங்க.ஆனா இந்த பழைய படத்த ரீமேக் பண்ணும் போது அந்த originality போய்டுது. நான் என்ன சொல்ல வரானே ரீமேக் படம் எடுங்க ஆனா ரிலீஸ் பண்ணும் போது அதுக்கு பக்கத்துக்கு theatreல பழைய ரஜினி ஜானி படத்தையும் ரிலீஸ் பண்ணனும். அப்போ நாம பாப்போம் எந்த படத்துக்கு கூட்டம் போகுதுன்னு".
பாஸ்கி சொல்றதும் உண்மைதானே. ரீமேக் பண்ணுகிறேன் என்று சொல்லி படத்தை கெடுத்து விடுகிறார்கள்.
****************************
இந்த வார சிந்தனை:
------------------------------
நம்முள் பல பேர் இதை பத்தி யோசிச்சி சிந்திச்சி சந்திச்சி இருப்போம், அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லங்க. அதாவது விஜய் படம் எவ்வளவு மொக்கையா இருந்தாலும் நூறு நாள் ஓடுதே அது எப்படின்னு. அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லங்க இப்போ பாருங்க கஜா,வல்லமை தாராயோ, சற்று முன் கிடைத்த தகவல் போன்ற உப்புமா படங்கள் நூறு நாளை தாண்டி ஓடுகிறது. ஆனால் வெண்ணிலா, பொம்மலாட்டம் போன்ற நல்ல படங்கள் நூறு நாளை நெருங்குவதில்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது
" நூறு நாள் ஓடுற படமெல்லாம் நல்ல படமும் இல்ல,
இருபது நாள் ஓடுற படமெல்லாம் மொக்கை படமும் இல்ல."
(உங்கள் வாய்ஸ்: வேலை எதுவும் இல்லன இப்படிதான் சிந்திக்க தோணும்)
****************************************
4 comments:
பொடிமாஸ் செம டேஸ்ட்!
ஹிட்லருக்கு வேர்த்தா என்ன பண்ணுவாரு?
ஹென்றி போர்ட் ஐ தூக்கி விசிறி கிட்டு இருப்பாரு !!!..
ஏன்னா , ஹென்றி போர்ட், ஹிட்லரின் விசிறி, ஹி,ஹி ....
ஆமா, அவரு சாதா விசிறியா, இல்ல மின் விசிறியா...
வால்பையன் உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
சுந்தர் நீங்க ரொம்ப யோசிக்கிறிங்க.....
உங்கள் வருகைக்கு நன்றி.
Post a Comment