Tuesday, May 12, 2009

செல்லிடப் பேசியும் செல்லாத பேச்சுக்களும்.........

நண்பர்களே, வணக்கம் சும்மா இந்த செல் பேசியில் அவனவன் பண்ற அலம்பல் தாங்கல, இந்த விஷயமா எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அப்பா அதை நினைத்தால் இப்பவே கன்னை கட்டுதே.......



சென்ற செவ்வாய் KVB வங்கி சென்று ஒரு பத்து ருபாய் அதாங்க பத்தாயிரம் ஒரு கணக்கில் Deposit செய்வதற்கு சென்றேன். வெளியில் வெயில் மண்டைய பொலந்துடுக்சு உள்ள போனால் ஒரு ஐம்பது பேர் வரிசையில் நிற்கின்றனர், AC வேலை செய்தும் பயன் இல்லை, ஒரே வியர்வை வாடை வேறு. வரிசையோ ஆமை வேகத்தில் நகர்கிறது. அப்பொழுது ஒரு 40-45 மதிக்கத்தக்க பெண் உள்ளே நுழைந்தார், வரும் பொழுதே செல் போனில் சத்தமாக பேசியவாறே. பிறகு சலான் நிரப்பும் பொழுது கழுத்தை சாய்த்தவாறே பேசிக்கொண்டே இருந்தார்.

வந்து என் பின்னால் நின்று கொண்டார். முதலில் யாரோ ஒரு உறவினரை அக்கு வேறாக ஆணி வேறாக கிழித்து தொங்க விட்டார் "அதெப்படி அந்த ஆளு அப்படி பண்ணலாம்?? பெறகு எந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு எங்க வீட்டுக்கு வராரு??" இப்படியாக பேசினார். பிறகு "பேங்க் வந்திருக்கேன், அவரு போய் பத்தாயிரம் பணம் கட்ட சொன்னாரு" இப்படியே பேசிக் கொண்டிருந்தார், வரிசையில் நின்று கொண்டிருந்த பெரும்பாலானோர் இவரின் கச்சேரியை கேட்டவாறே நின்று கொண்டிருந்தனர்.

ஆனால் இதெல்லாம் விட அடுத்து சொன்னாரு பாருங்க "சீ நான் காலைலயே குளிச்சுட்டேன் பா, ஆமா நீல கலர் புடவை தான் கட்டிருக்கேன் அதான் பா அன்னிக்கு பாத்தியே அதே தான்!!!!!!!!" இதை பேசும் பொழுது அனேகமாக வங்கியில் இருந்த அனைவரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர், உற்சாகத்தில் உரக்கக் கத்திக் கொண்டிருந்தார், அனைவரும் தன்னையே பார்க்கின்றனர் என்பதை அவர் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. பொது இடங்களில் எப்படி பேசுவது என்ன பேசுவது என்று தெரியாமல் இப்படியா பேசுவது?? யாரவது சில்மிஷ ஆசாமி இவர் பேச்சை வைத்து ஏதாவது Comment அடித்தால் அனாவசிய மனக்கஷ்டங்களும் பிரச்சனைகளும் தான் ஏற்படும்.



இப்படி தான் திரை அரங்குகளில் சிலர் பண்ணும் அலம்பல்கள் தாங்க முடியாது, அவனவன் சோக காட்சியில் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பான் ஆனால் சிலரோ அங்கேயே முழு மூச்சாக கடலை போட்டு கொண்டிருக்கின்றனர் "அப்படியா பப்பி குட்டி போட்ருக்கா?? வாவ்" இப்படி தொடங்கி இன்னும் என்னனமோ பேசுறானுங்க.

அன்று ஒரு நாள் ஒரு கலந்தாய்வின் பொழுது ஒருவரின் செல் போன் சிணுங்குது "கிட்ட நெறிங்கி வாடி கர்லா கட்ட உடம்பு காரி........" எந்த இடத்தில் செல் பேசியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வெவஸ்தையே கிடையாதா?? இப்படி தான் சமீபத்தில் கூட நடந்த ஒரு கூட்டத்தில் இயக்குனர் இமயம் ஈழத் தமிழர்களுக்காக பேசுகையில் இதே போன்று தான் நடந்துள்ளது அதை இன்று (12/05/2009) தினமலர் பார்க்கவும்.



இந்த செல் போன் வந்தாலும் வந்தது அவனவன் பித்து பிடித்து போல் தனியே பேசுவதும், தலையாட்டுவதும் வாகனம் ஓட்டும் பொழுது கழுதை சாய்த்து கொண்டு பேசுவதும், தலைக் கவசத்துக்குள் சொருகிக் கொண்டு பேசுவதும் இன்னும் என்னென்னவோ வித்தையெல்லாம் காட்டுகின்றனர். முதலில் உங்கள் பாதுகாப்பை பார்க்கவும் அடுத்தது சுற்றம் பார்த்து பேசவும்.

சரி நண்பர்களே உங்களுடைய இது போன்ற அனுபவங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். நன்றி.

7 comments:

Raju said...

Super post Nanba..!

லோகு said...

super nanpa...

சித்து said...

வருகைக்கு நன்றி டக்ளஸ் தொடர்ந்து வரவும்.

சித்து said...

வாங்க லோகு, என்ன உங்க பதிவு வந்து ரொம்ப நாள் ஆச்சு??

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//"சீ நான் காலைலயே குளிச்சுட்டேன் பா, ஆமா நீல கலர் புடவை தான் கட்டிருக்கேன் அதான் பா அன்னிக்கு பாத்தியே அதே தான்!!!!!!!!"
//

சீ யில தான் ஆரம்பிக்குதா வசனம்..,

வங்கியின் நடுவில் ஒரு வக்கிரம்...,

ஹா..., ஹா.....,






பல பிரச்சனைக்களுக்கு இப்படி சுதந்திரமாக இருப்பதுதான் தல..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓட்டுப் போட்டாச்சு தல..,

சித்து said...

சரியாக சொன்னீர் சுரேஷ், வருகைக்கும் ஓட்டு போட்டதற்கும் நன்றி.