Sunday, May 10, 2009

சந்திரபாபு, இவரை மாதிரி வாழ்ந்தவனும் இல்லை வீழ்ந்தவனும் இல்லை.


சந்திரபாபு என்ற பேரை கேட்டாலே நம் நினைவுக்கு வருவது முக்கியமா அவரது பாடல்கள் தான் நான் ஒரு முட்டாளுங்க,... புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...... குங்கும பூவே கொஞ்சு புறாவே.......
எனக்கு அவர் பாடிய அனைத்து பாடல்களுமே பிடிக்கும், அவரின் வாய்ஸ் என்னை சிறு வயதிலிருந்து ஈர்த்து வந்துள்ளது என்றால் அது மிகையில்லை. நான் சிறு வயதில் இருந்து படுக்கைக்கு போகும் போது அவரின் பாடல்களை கேட்டு கொண்டே தூங்குவேன்,அவரின் பாட்டு எனக்கு தாலாட்டு. எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத காலத்தால் அழியாத பாடல்கள் அவை.

நான் சந்திரபாபுவின் வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள திரு.முகில் எழுதியுள்ள கண்ணிரும் புன்னகையும் என்ற புத்தகத்தை வாங்கி ஒரே மூச்சில் படித்தேன். அப்போது தான் சந்திரபாபு மாதிரி ஒருத்தன் வாழ்ந்ததும் இல்ல வீழ்ந்ததும் இல்லை என்று அறிந்து கொண்டேன்.

சந்திரபாபு பொதுவாகவே மேல்நாட்டு பாணியில் இருக்க விரும்புவார், ஸ்டைல்ஆக இங்கிலீஷ் பேசுவார் அவர் எவ்வளவு பெரிய மனிதர்கள் ஆயினும் மிஸ்டர் என்று சொல்லியே அழைப்பார் (எம்.ஜி.ஆரை கூட அவ்வாறே அழைப்பார்) யாருக்கும் பயப்பட மாட்டார். காக்க பிடிக்க மாட்டார். மனதில் பட்டதை பேசும் குணம் கொண்ட அவருக்கு இதனால் எதிரிகள் அதிகம் ஆயினர். அவருக்கு அவரின் திருமண வாழ்வு சந்தோசத்தை தரவில்லை அதனால் குடி பழக்கத்துக்கு ஆளானர்.
***********************************************************
(எனக்கு எப்படி வீடியோவை பதிவு ஏற்றுவது என்று தெரியவில்லை.
அதனால் கொஞ்சம் சிரமம் பாராமல் லிங்கை கிளிக் செய்து சந்திரபாபு வீடியோவை கண்டு ரசிக்கவும்.)




**********************************************************
சிவாஜியிடம் சபாஷ் மீனா கதை சொன்னார் தயாரிப்பளார், அந்த காமெடியன் வேடத்தில் சந்திரபாபு தவிர வேறு யாரும் நடிக்க முடியாது என்று கூறி சந்திரபாபுவை புக் பண்ண சொன்னார் சிவாஜி,

சந்திரபாபுவிடம் கதை சொன்னார் தயாரிப்பளார்.
உடனே சந்திரபாபு "யார் ஹீரோ ?"...

"சிவாஜி கணேசன்" என்று பதில் வந்தது.
"கணேசன், he is a good actor, எனக்கு என்ன சம்பளம்"? என்று கேட்டார் சந்திரபாபு.
"நீங்க எவ்வளவு எதிர்பார்க்கிரிங்க?" அப்படினார் தயாரிப்பளார் .
சந்திரபாபு "சிவாஜிக்கு என்ன சம்பளம்?"
"ஒரு லட்சம்"

"அப்போ எனக்கு லட்சத்தை விட ஒரு ரூபாய் அதிகம் தாங்க, ஒரு லட்சத்தி ஒரு ரூபாய்."
தயாரிப்பளார் டர்ராகி சிவாஜியிடம் வந்து விவரத்தை கூறினார்.உடனே சிவாஜி "அவன் கேக்குறத கொடுத்துடுங்க இதுல அவனுக்கு நல்ல scope இருக்கு, அவன் நடிச்சாதான் நல்ல வரும்" தயாரிப்பளாரும் அந்த சம்பளத்தை கொடுக்க ஒத்து கொண்டார். படமும் சூப்பர் ஹிட். .. அந்த படத்தை பார்த்துதான் நம்ம சுந்தர்.சி அவர்கள் உள்ளதை அள்ளித்தா
என்ற படத்தை எடுத்து வெற்றியும் அடைந்தார். இரண்டு படங்களிலும் வெற்றிக்கு காரணம் காமெடி ஜாம்பவான்கள் சந்திரபாபுவும், கவுண்டமணியும் என்றால் அது மறுப்பதற்கு இல்லை.
***********
நான் கண்ணதாசனின் புத்தகங்களை படித்ததில் கண்ணதாசன் சந்திரபாபுவால் பாதிக்க பட்டுள்ளதாக அடிக்கடி கூறுவார். கண்ணதாசன் அவர்கள் தயாரித்த கவலை இல்லாத மனிதன் படத்துக்கு சந்திரபாபு சரியாக படபிடிப்புக்கு வருவதில்லை, வீட்டில் இருந்து கொண்டே இல்லை என்று வேலைகாரர்கள் மூலம் சொல்லி அனுப்பிவிடுவார் என்றும், எம்.ஜி.ஆர் அவர்கள் தலையிட்டு பின்பு தான் சந்திரபாபு ஒழுங்காக நடித்து கொடுத்தார் என்று கண்ணதாசன் அவர்கள் எழுதியுள்ளார். கடைசியில் கவலை இல்லாத மனிதன் படத்தை தான் எடுத்து உலகத்தில் தன்னை கவலை உள்ள மனிதனாக ஆக்கி விட்டது என்பார் கண்ணதாசன்.
**************
திரையுலகில் யாரும் கட்டாத அளவுக்கு வீடு கட்டினார் சந்திரபாபு மாடி வழியே வீட்டுக்குள்ளையே காரை நிறுத்தும் அளவுக்கு பெரிதாக கட்டினார். பிறகு மாடி வீட்டு ஏழை என்ற படத்தை தயாரித்து இயக்க விரும்பினார் இதற்காக எம்.ஜி.ஆர் அவர்களை புக் செய்தார். ஆனால் எம்.ஜி.ஆர் சந்திரபாபு படத்துக்கு ஒத்துழைப்பு தராததால் சந்திரபாபு தன் சொத்துக்கள் அத்தனையும் இழந்தார். குடியால் அவருக்கு படங்களும் குறைந்தன கடைசியில் அவர் 1974
ஆம் ஆண்டு இந்த மண்ணுலகை விட்டு பிரிந்தார். சந்திரபாபு மறைந்தாலும் தன் பாடல்களால் அவரின் நடனத்தால் அவரின் காமெடியினால் அவர் இன்னும் நம்முள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.........

13 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//(எனக்கு எப்படி வீடியோவை பதிவு ஏற்றுவது என்று தெரியவில்லை.
அதனால் கொஞ்சம் சிரமம் பாராமல் லிங்கை கிளிக் செய்து சந்திரபாபு வீடியோவை கண்டு ரசிக்கவும்.)//


புது இடுமை எழுதும்போது கம்ப்போஸ் என்றிருக்கும் அதற்குப் பதிலாக எடிட் எச்டிஎம்மெல் அழுத்துங்கள். யூடுயூப் பில் உள்ள எம்பெட்டெட் குறிப்புகளை காப்பி மற்றும் பேஸ்ட் செய்யுங்கள். விடியோ பெரிசு மற்றும் சிறியதாக மாற்ற யூ டியூப்பிலேயே வழிகளைச் சொல்வார்கள் தல..

டிவிஎஸ்50 said...

நண்பரே இடுகையில் வீடியோ வர வைப்பது தொடர்பாக அறிந்து கொள்ள எனது இந்த இடுகையை பாருங்கள்

http://tvs50.blogspot.com/2009/04/how-to-create-playlist-in-youtube.html

Anonymous said...

////////
இதற்காக எம்.ஜி.ஆர் அவர்களை புக் செய்தார். ஆனால் எம்.ஜி.ஆர் சந்திரபாபு படத்துக்கு ஒத்துழைப்பு தராததால் சந்திரபாபு தன் சொத்துக்கள் அத்தனையும் இழந்தார். ///////

எம்ஜியார் படத்துக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறுவது முற்றிலும் தவறான தகவலாகும். சந்திரபாபு அவர்கள் மது அருந்திவிட்டு சாவித்திரியுடன் அடித்த கும்மாளம் திரையுலகில் அனைவரும் அறிந்த செய்தி. ஒருமுறை படப்பிடிப்புக்கு அனைவரும் வந்து காத்துகொண்டிருக்க எம்ஜியார் உட்பட சந்திரபாபுவும் சாவித்திரியும் மது அருந்திவிட்டு படபிடிப்புக்கு வந்தனர். அதனால் படத்திலிருந்து அவர் விலகிக்கொண்டார் என்பதே உண்மையாகும்.

Kandumany Veluppillai Rudra said...

பிரபு தேவா இவருட்ட இருந்துதான் ......................

Jackiesekar said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்

Tech Shankar said...


Politicians' Drama 2009

butterfly Surya said...

பதிவிற்கு நன்றி. இதே தகவல்கள் அவார்டா கொடுக்கறாங்க என்ற வலையிலும் போன மாதம் வந்துள்ளது...

ஜெட்லி... said...

உங்கள் பின்னூடத்துக்கு என் நன்றி உயிர்நண்பன் ,
உங்கள் தகவலக்கு நன்றி,ஏன் எம்.ஜி.ஆர் நடிக்கவில்லை என்ற காரணம்
எனக்கு தெரியாது , இப்போது புரிந்து கொண்டேன்...... ....

ஜெட்லி... said...

உங்கள் பின்னூடத்துக்கு என் நன்றி சேகர்.

ஜெட்லி... said...

வணக்கம் ருத்ரா,,, சந்திரபாபு ஸ்டை இப்போ எல்லா நடிகரும் பின்பற்றுகிறார்கள்.

On7June said...

I just want to add a point to this article. I read from a magazine that none of the Chandrababu's family members come to see the place where he was cremated. Only few fans of chandrababu visit that place and offer prayers and flowers.

ஜெட்லி... said...

சர்வன் உங்கள் செய்திக்கு நன்றி .... இந்த செய்தி இதுவரை நான் கேள்வி படாதது.

Prasanna Ramachandran - PXR said...

mgr ruined chandrababu's film was the final say. how far and long will mgr's good side alone will be known and spoken about. every moon and a man have a darker side which the world doesn't know.