Friday, May 8, 2009

நியூட்டனின் 3ஆம் சதி ஸாரி விதி

நியூட்டனின் 3ஆம் சதி

எனக்கு மொதல்ல இந்த படம் பாக்கனும்னே தோணல.....சில சதியால்
நான் நியூட்டனின் 3ஆம் விதியை வெள்ளிதிரையில் காண நேர்ந்தது. காலத்தின் கட்டாயம். கால கொடுமைன்னு கூட சொல்லலாம்.





சதிகள்:

1) மே 5 வழக்கம் போல் எனக்கு லீவ், சரி படத்துக்கு போலாம்னு யோசிச்சப்ப நான் இன்னும் பாக்காத படம் GAP10'S மரியாதை படம் மட்டும் தான் . மரியாதை படம் பாக்கறதுக்கு வீட்ல DVDல எதாவது இங்கிலீஷ் படம் பாக்கலாம்னு முடிவு பண்ணேன். அந்த நேரம் பாத்து
திடிர்னு திடிர்னு hang ஆயி என் கம்ப்யூட்டர் சதி பண்ணிடிச்சு.

2) அப்புறம் எப்படியோ முயற்சி பண்ணி பெரிய தலை al pacino நடிச்ச 88 MINUTES படத்தை ஒரு 45 MINUTES படம் ஓடிட்டு இருக்கும் போதே நம்ம கரண்ட் சதி பண்ணிடிச்சு. பொசுக்குன்னு போச்சு, நானும் வரும் வரும்னு பார்த்தேன் வரலே.

3) சரி நாம 1 மணி ஆட்டத்துக்கு எதாவது இங்கிலீஷ் படம் போவலாம்னு ஒரு முடிவு எடுத்தேன், அதுக்குள்ள பல் டாக்டர் போன் பண்ணி 12 மணிக்கு வாங்கன்னு சொன்னாரு. சரி 12 மணிக்கு தானே போயிட்டு ஒரு பத்து நிமிஷ வேலை முடிச்சிட்டு அப்படியே படத்துக்கு போலாம்ன்னு நினைச்சி போன எனக்கு முன்னாடி கிளினிக்ல மூணு பேர் ஆஹா டாக்டரும் சதி பண்ணிட்டாரேன்னு ரொம்ப பீலிங்க்ஸ் ஆயிடிச்சி.

4) கிளினிக் விட்டு வீட்டுக்கு வரும் போது மணி 1 , இனிமே எங்கே படத்துக்கு போறதுன்னு ப்ளாக் பார்த்து கொண்டு இருந்தேன். அப்போ சில ப்ளாக்ல நியூட்டனின் விதி நல்லா இருக்குன்னு சொன்னாங்க அத நம்பி 3.20 ஷோ சாந்தம்ல படம் பாக்க நானும் என் நண்பனும் போனோம்.

*********************************

சத்யம் திரைஅரங்கின் வெளிய நடந்த உரையாடல்:

நான்: டேய் இவன் படத்துக்கெல்லாம் 100 ரூபாய் டிக்கெட் அதிகம்டா.?

நண்பன்: வேற எங்க போறது, 10 ரூபாய் டிக்கெட் வாங்குவோமா?

(அங்கே போய் பார்த்தால் 10 ரூபாய் டிக்கெட் ஹவுஸ் புல்)

*************************************

வேற வழியில்லாமல் 100 ரூபாய் டிக்கெட் வாங்கி கொண்டு உள்ளே அமர்ந்து படத்தை ரசித்தோம். சும்மா சொல்ல கூடாது சாந்தம்ல அவ்ளோ காலிய நான் இது வரைக்கும் எந்த படத்தையும் பார்த்ததில்லை. எங்க ROWல நானும் என் நண்பனும் மட்டும் தான் உட்கார்ந்து இருந்தோம். வழக்கம் போல தள்ளிட்டு வரவங்களுக்கு இந்த படம் ஒரு வரபிரசாதம்(அரை மணி நேரம் பின்னாடி வந்து அரை மணி நேரம் முன்னாடி போறவங்களுக்கு).





படத்தை பத்தி சொல்லனும்னா, அதான் எல்லோரும் சொல்லிட்டங்கலே நல்ல திரைக்கதை, வசனம்,பின்னணி இசை... இந்த மாதிரி படத்தை பாக்கும்போது தமிழ் சினிமாவுக்கு பாட்டுக்கள் கண்டிப்பா
தேவையான்னு ஒரு கேள்வி எனுக்குள் எழுந்து அமுங்கிடிச்சு . படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் திரைஅரங்கில் ஒரே சிரிப்பு ரெண்டு பேரும் மாத்தி மாத்தி கேவலமா கத்துறாங்க. திரைஅரங்கில் சில பேர் தங்கள் நண்பர்களை திட்டி கொண்டு இருந்தார்கள் ஏன்டா சும்மா இருந்தவனை
இந்த மாதிரி படத்துக்கு கூட்டிட்டு வந்திங்கன்னு. ஆனால் இயக்குனர் தாய் முத்துசெல்வனை பாராட்டியே ஆக வேண்டும், அவர் திரைகதையில் செலுத்திய கவனத்தை கொஞ்சம் பாட்டிலும், ஹீரோ தேர்விலும் செலுத்தி இருக்கலாம்.



15 comments:

கடைக்குட்டி said...

நம்ம டேஸ்டுக்கு இந்தப் படமெல்லாம் ஆகாது மச்சா... நானாயிருந்தா படுத்து தூங்கி இருப்பேன்.. காசு மிச்சம்.. :-)

Suresh said...

//வழக்கம் போல தள்ளிட்டு வரவங்களுக்கு இந்த படம் ஒரு வரபிரசாதம்(அரை மணி நேரம் பின்னாடி வந்து அரை மணி நேரம் முன்னாடி போறவங்களுக்கு).//

:-)

Suresh said...

நல்ல வேளை என்னை சதியில் இருந்து காப்பாத்திடிங்க

ஜெட்லி... said...

வணக்கம் சுரேஷ் உங்களை காப்பதினதுல எனக்கு ரொம்ப சந்தோசம்.

ஜெட்லி... said...

கரெக்ட்ஆ சொன்ன கடைக்குட்டி..... என்ன பண்றது சதி பண்ணிட்டாங்களே

SUREஷ்(பழனியிலிருந்து) said...

படம் பார்ப்பது என்றால் முதல்நாளே பார்த்து மீ தி ஃபர்ஸ்டுன்னு விமர்சனம் போடலாம் தல..,

Bala De BOSS said...

ஏன் நண்பா இப்படி உண்மைய சொல்ல பயப்படற? உங்க தலைவர் படத்த பார்க்கணும்னு முடிவு பண்ணிட்டிங்க. போய் பார்த்துட்டிங்க. இதுக்கு போய் ஏன் பொய் சொல்ற? நான் English படம் பார்க்க போனேன், captan படம் பார்கபோனேன், பல்லு புடுங்க போனேன், நர்ச பார்த்து இழிச்சேன், கரண்டு போச்சு, நர்ச ஓ....ன்னு மழுப்பரிங்க??

ஜெட்லி... said...

நம்புடா பால்ஸ்.....
ஏன் என் மேல இந்த கொலைவெறி தாக்குதல்?
கூட்டத்தில கட்டு சோற அவுக்காத மச்சி.

சித்து said...

நண்பா நல்ல வேல செஞ்ச, நான் இந்த படத்த பார்க்கலாம்னு இருந்தேன், காப்பாத்திட்ட.

Anonymous said...

இப்ப வரும் ஒரு சில தமிழ் சினிமாக்கள் திரைக்கதயில கவனம் செலுத்த தொடங்கிருக்காங்க. வணிகத்தனமான படமாக இருந்தாலும் இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. எடுத்துக்காட்டாக "யாவரும் நலம்-13பி" மேலும் இந்த நியூட்டனின் மூன்றாம் விதி.

படத்தில் சில அல்லது பல இடங்களில் நம்பகத்தன்மை மீறி தேங்கி விடுகின்றன. திரைகதையின் விறுவிறுப்பு இந்த மாதிரியான குறைபாடுகளைக் கடந்து செல்ல உந்தி தள்ளுகிறது. இன்னும் கொஞ்ச நாட்களின் நல்ல மாற்றத்தை காணலாம்.

கே.பாலமுருகன்
மலேசியா

Manoj (Statistics) said...

///சும்மா சொல்ல கூடாது சாந்தம்ல அவ்ளோ காலிய நான் இது வரைக்கும் எந்த படத்தையும் பார்த்ததில்லை///

////படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் திரைஅரங்கில் ஒரே சிரிப்பு ////

contradiction!!!

ramalingam said...

இதுக்கு நீங்க கேப்டனின் மூன்றாவது விதி ஸாரி நியூட்டனின் மரியாதை ஸாரி கேப்டனின் மரியாதையையே பார்த்திருக்கலாம்.

ஜெட்லி... said...

உங்கள் கருத்துக்கு நன்றி பாலமுருகன்.
நானும் அந்த மாற்றத்தை தான் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்.

ஜெட்லி... said...

வாங்க மனோஜ் உங்கள் பின்னூடத்துக்கு நன்றி.....

ஜெட்லி... said...

என்ன ராமலிங்கம் இப்படி சொல்லிடிங்க....
மரியாதை போறதுக்கு சும்மா வீட்ல தூங்கலாம்.,,,