உண்ணாவிரதம் இருந்தால் தனி மாநிலமென்ன, தனிநாடே கிடைக்கும் என்ற இன்றைய சூழலில், ஒரு நூறாண்டுகளுக்கு முன்பே, எங்கள் மகாகவி எழுதிய இரு கவிதைகள் இதோ,
"நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு
கோடியென் றாலது பெரிதாமோ ?"
"வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை, - அவை
பேருக் கொருநிற மாகும்.
சாம்பல் நிறமொரு குட்டி - கருஞ்
சாந்து நிறமொரு குட்டி,
பாம்பு நிறமொரு குட்டி - வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி.
எந்த நிறமிருந்தாலும் - அவை
யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும் - இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?
வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் - அதில்
மானுடர் வேற்றுமை யில்லை;
எண்ணங்கள் செய்கைக ளெல்லாம் - இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்."
9 comments:
பாரதிக்கு பெருமை சேர்த்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.
நாளை ரஜினி பிறந்த நாளுக்காக இன்றே வாழ்த்து சொல்வோர் மத்தியில் மாக கவிக்காக பதிவு போட்டமைக்காக பாராட்டுக்கள்..,
Hi friend this is vennilla here.. ur doing a really good job.. can we exchange links..
மகாகவி பாரதியாருக்கும்,நல்ல பதிவை போட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
அரிய படங்களுடன் ஒரு அருமையான நினைவு கூறல்.
வாழ்த்துக்கள்
//நாளை ரஜினி பிறந்த நாளுக்காக இன்றே வாழ்த்து சொல்வோர் மத்தியில் மாக கவிக்காக பதிவு போட்டமைக்காக பாராட்டுக்கள்//
ரிப்பீட்டேய்!
என்ன சொல்ல வருகிறீர்கள்? தெலுங்கானா அமைத்தது தவறு என்றா? அவர்களது இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும்.
//inertcatalyst said...
என்ன சொல்ல வருகிறீர்கள்? தெலுங்கானா அமைத்தது தவறு என்றா? அவர்களது இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும்.//
தெலுங்கானா பற்றி நான் எதுவும் சொல்லவில்லை, தனி திருநெல்வேலி மாநிலம் அமைக்க கோரி அடுத்தவாரம் உண்ணாவிரதம் இருக்கலாம் என்றிருக்கிறேன், அது பற்றித்தான்கூறினேன்
தாரளமாக இருங்கள். யாரும் கவலைப்படபோவதில்லை. தமிழர்களுக்கு தான் 3 மணி நேர உண்ணாவிரதம் என்பது பழக்கமானதாயிற்றே.
Post a Comment