Tuesday, December 1, 2009

நான் அவன் தாங்க(இல்லை!!)

நான் அவன் தாங்க(இல்லை!!)


தியேட்டருக்கு கிளம்பும் முன்:

இலச்சி மலை மாரியாத்தா பல பேர் இந்த படத்தை
மொக்கைன்னு சொன்னாலும் உன்மேல பாரத்தை
போட்டு நான் அவன் இல்லை படத்துக்கு போறேன்,
பத்திரமா வீட்ல திருப்பி சேத்துரு தாயி!!

சூப்பர்ங்க, நான் படத்தை பத்தி சொல்லல படத்துக்கு
போறதுக்கு முன்னாடி வூட்லண்ட்ஸ் தியேட்டர்
பக்கத்தில் ஒரு வட நாட்டு சாட் கடை இருக்குது
அங்கே சமோசாவும் ஜிலேபியும் சாப்பிட்டேன்
சூப்பர் ஆக இருந்தது.

நான் அவன் இல்லை கதையென்ன?? அதே பழைய
கதைதான் என்றாலும் இதில் சுவாரசியம் கொஞ்சம்
கம்மி.இசைஅமைப்பாளர் இமான் பற்றி சொல்லியே
ஆக வேண்டும் இந்த அளவுக்கு படு மோசமாக இசை
அமைக்க யாருளும் முடியாது.அவர் பாட்டே ரீமிக்ஸ்
மாதிரி தான் இருக்கு இதில் வேறு பழைய பாடல்களை
ஏன் ரீமிக்ஸ் செய்து கெடுக்கிறார் என்று புரியாத
புதிராகவே உள்ளது.

ஜீவன், இந்த மாதிரி ஒரு நடிகர் நமக்கு கிடைத்தது
நாம் செய்த தவமே.என்னாமா நடிக்கிறாரு??
விக் மட்டும் கண்டுபிடிக்கில இவரால் தமிழ் சினிமாவில்
காலம் தள்ளியிருக்க முடியாது.லட்சுமி ராயை ஏமாற்றும்
காட்சிகளில் ஒரு விக் அணிந்து வருவார் பாருங்க நம்ம
ஊரு பிச்சைக்காரன் தோத்தான் போங்க!!.(தலை புல்லா
நம்ம நண்பர் ஜீத் சூப்பர் பாக்கை கொதப்பி துப்பின மாதிரி
இருக்கும்).மீசையை கிழே விட்டா தம்பி நேரா விட்டா
அண்ணன் உண்மையில் செம டலேன்ட் ஆனா பாருங்க
டைரக்டர் விக்கை மாத்தாம விட்டுடாரு.



அநேகமா ஜீவனோட எக்ஸ்ட்ரா,ஆர்டினரி நடிப்புக்கு
ஆஸ்கார் விருது வாங்கினாலும் அது அவரின் நடிப்பு
திறமைக்கு குறைவான விருதே. ஆனா ஒன்னு மட்டும்
நிச்சயம் ஜீவனுக்கு ஏதோ ஒரு இடத்தில் மச்சம்
இருக்குங்க இல்லனா சும்மாவா ஒரு ஒரு படத்துக்கும்
அஞ்சு கதாநாயகிகள் கூட டூயட் பாடுறாரு.

வியந்தேன், டைரக்டரின் திறமையை கண்டு அல்ல.
என் முன் இருக்கை ஆசாமிகள் செம போதை படம்
ஸ்டார்ட் பண்றதக்கு முன்னாடி ஓவர்ஆ கத்தினார்கள்.
ஒருத்தன் ஆப்பாயில் போட்ட பின் சுத்தமா சவுண்டை
காணோம்.சரக்கின் மகிமையை கண்டு வியந்தேன்.

இதை தான் என் குரு கில்மானந்த முன்னாடியே சொன்னார்

சரக்கினால் உள்ளே போன சைடுடிஷ்
உள்ளாறும் ஆறாதே ஆப்பாயில் போட்ட வடு.....



செல்வா, அநேகமா இவர் நான் அவனில்லை பாகம் மூன்று எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கு இல்லை.என்ன கதையா??
நான் அவன் இல்லை,நான் அவன் இல்லைனு நாலு ரீல்
ஓட்டிடுவாரு மீதியை கில்மான்ஸ் காட்டி சுபம் போட்டு
விடுவார்.

நாலு கதாநாயகிகள் தாராளமாகவே தங்கள் திறமையை
வெளிபடுத்தியுள்ளனர்.ஆனால் நாலு பேருமே அடி
முட்டாளுங்க அதுவும் சாமியாரா ஒரு பொண்ணு வருது
பாருங்க முடியல!!

படத்தில் உச்ச பட்ச கொடுமையாக கிளைமாக்ஸ் இருக்கிறது.
அதில் ஜீவன் அணிந்து வரும் போப் மாதிரியான டிரஸ்
பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

ஜெட்லி பஞ்ச்:

நானே படத்தை பார்த்து பஞ்சர் ஆகி இருக்கேன்,
எங்கே இருந்து பஞ்ச் சொல்றது.


ஆனாலும் மொக்கை படத்தை பார்ப்பதில் ஒரு
சுகம் இருக்குங்க...


இந்த விமர்சனம் அனைவரையும் சென்று அடைய ஒட்டு
போடுங்கள்....


நன்றி:indiaglitz

உங்கள்
ஜெட்லி சரண்.

23 comments:

பெசொவி said...

பின்னூட்டம் போட்டுட்டேன், நம்ம வலைப்பூ பக்கம் வந்துட்டுப் போங்க, பாஸ்!

பெசொவி said...

போடறது மொக்கை, அதுல ஓட்டு வேறயா.....ஆனாலும் உமக்கு ரொம்பத்தான்.....குசும்பு!

250WcurrentIsay said...

padam onnum avvalo mosamillai.... its a movie to kill time.... but yep funny review....

புலவன் புலிகேசி said...

//நாலு கதாநாயகிகள் தாராளமாகவே தங்கள் திறமையை
வெளிபடுத்தியுள்ளனர்.ஆனால் நாலு பேருமே அடி
முட்டாளுங்க அதுவும் சாமியாரா ஒரு பொண்ணு வருது
பாருங்க முடியல!!//

இன்னும் இந்த மாதிரி இயக்குனருங்க மார்பாட்டத்த வச்சி படத்த ஓட்டிடலாமுன்னு நெனச்சிகிட்டிருக்கானுங்க...அந்த காலமெல்லாம் மலையேறிபோச்சு...
//நானே படத்தை பார்த்து பஞ்சர் ஆகி இருக்கேன்,
எங்கே இருந்து பஞ்ச் சொல்றது.//

ஆமாம் பஞ்சர் ஒட்டியாச்சா?

CS. Mohan Kumar said...

தொடரட்டும் உங்க திருப்பணி!! படம் மொக்கைன்னா கூட நாலு பொண்ணுங்க பாத்து happy -யா இருந்தது மட்டும் உண்மை. இல்லையா?

யோ வொய்ஸ் (யோகா) said...

ரொம்பதான் ரிஸ்க் எடுக்கிறீங்க தல..

Ashok D said...

செம்ம செம்ம காமெடி...

கடைக்குட்டி said...

நீங்க வேற என்ன எதிர்பார்த்து போனீங்க???

அந்த 1333 வது குறள் செமங்க... :-)

ஜெட்லி... said...

@ பெயர் சொல்ல விருப்பமில்லை


கண்டிப்பா வரேன் பாஸ்

@ யோ

ரிஸ்க் தான் வாழ்க்கை யோ

ஜெட்லி... said...

@ மோகன்குமார்

உண்மைதான் அண்ணே....
நீங்களும் படம் பார்த்திங்க போல??

ஜெட்லி... said...

@250WcurrentIsay

மோசமில்லை தான் ஆனா
கொஞ்சம் அலுப்பு வருது பாஸ்

ஜெட்லி... said...

@ அசோக்

நன்றி தலைவரே...

@ கடைக்குட்டி

நான் இன்னும் நேரிய எதிர்ப்பார்த்தேன்..
பச் ஒன்னும் அவ்வளவா இல்லை....

பின்னோக்கி said...

உங்க கலைச்சேவையை நான் பாராட்டுகிறேன். படத்துக்கு போறத்துக்கு முன்னாடியே இது தான் கதைன்னு தெரிஞ்சும் ம்.ம்.ம்......

Nathanjagk said...

​செத்த பாம்​பை ஏன் இப்படி சங்கம் வச்சு அடிக்கறீங்க? புரியலி​யே??

Anbu said...

இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம் தல..

CS. Mohan Kumar said...

படம் பார்க்கலை; நம்ம சார்பா பாக்க தான் தம்பி நீங்க இருக்கீங்க. நீங்க பாத்து சொன்ன பிறகு பார்த்தா போச்சுன்னு ஒரு கூட்டமே உங்களை நம்பி இருக்கு. (எவ்ளோ பெரிய பொறுப்பு உங்களுக்கு பாருங்க)

ஜெட்லி... said...

@ பின்னோக்கி

நமக்கு தியாகம்
அதிகமா செஞ்சு பழக்கம் பாஸ்

ஜெட்லி... said...

@ ஜெகநாதன்

யார் சொன்ன செத்த
பாம்புன்னு??

அடிக்கலன்னா
இந்த மாதிரி நிறைய படம்
வரும் ஜி...

ஜெட்லி... said...

@ அன்பு

நன்றி அன்பு...

@ மோகன் குமார்

அண்ணே இப்படியே உசுபேத்தி உசுபேத்தி
என்னை ஒரு வழி பண்றீங்க...

விக்னேஷ்வரி said...

படம் பார்த்து ரொம்ப நொந்து போய் இருக்கீங்கன்னு தெரியுதுங்க.

விக்னேஷ்வரி said...

படம் பார்த்து ரொம்ப நொந்து போய் இருக்கீங்கன்னு தெரியுதுங்க.

பிரபாகர் said...

கடுமையான வேலை, வந்து பாக்க முடியல...

இந்த படம் மாதிரி பாக்கறதுக்கு பேருதான் சொந்த செலவுல சூனியம் வெச்சிக்கிறது...

பிரபாகர்.

Chitra said...

படம் பாத்த சோகத்திலும் சிரிக்கிறீங்க......