போன வருஷம் சொன்னா மாதிரி தான் மொக்கை படம் பார்ப்பதால் பொறுமையும்,சகிப்பு தன்மையும் கண்டிப்பாக கண்டமேனிக்கு வளரும் அதனால் எல்லாரும் மொக்கை படம் பார்க்கணும். ஆனா இப்ப சில மாசமா என்னால மொக்கை படத்துக்கு போக முடியல. மாஸ்கோவின் காவேரி, துரோகி, வம்சம், ரத்த சரித்தரம்னு எந்த படத்துக்கும் போக முடியல....அதனால இது எல்லாம் லிஸ்ட்இல் வராது...
இன்னொரு முக்கியமான விசயம் இது நான் பார்த்த படங்களில் எனக்கு மொக்கையாக ப்பட்டது மட்டுமே வரிசை படுத்தி இருக்கிறேன். சில படங்கள் உங்களுக்கு பிடித்து இருக்கலாம் அதனால கோச்சிக்காதீங்க...!!
********************************
10. தில்லாலங்கடி...(உட்டாலக்கடி)
http://nee-kelen.blogspot.com/2010/07/blog-post_23.html
கிக் படத்தோட ரீமேக்னு சொன்னாங்க....ஆனா படத்துல தான் கிக்கே இல்லை...வடிவேல் காமெடி ஓகே...படம் ரொம்ப நீளம்...பாட்டு மொக்கை.
9.கோவா...(கோ கோ அவே)
http://nee-kelen.blogspot.com/2010/01/blog-post_29.html
முதல்ல நல்ல தான் போச்சு...போக போக பிரேம்ஜி பண்ற காமெடி எல்லாம்
எரிச்சல் ஆகி போச்சி... தீடிர்னு கப்பல் காட்டறாங்க ..ஸ்னேஹா வர்றாங்க.
அப்படியே போச்சி...
8.அய்யனார் (நார்..நார்...)
பாட்டு மட்டும் நல்லா இருந்தது...ரெண்டாவது பாதி தான் முடியல...அடுத்த
வருடம் ஆதியிடம் இருந்து நல்ல படங்களை எதிர்ப்பார்க்கிறேன்....
7.குட்டி.. (உடைஞ்ச சட்டி)
பல படத்தில் பார்த்த காட்சிகள்...தனுஸ்க்கு அந்த கேரக்டர் செட் ஆகலைனு
தான் சொல்லணும். கடைசி அரைமணி நேரம் செம பிளேட்.
6.துரோகம் நடந்தது என்ன...(ஒன்னுமே நடக்கலையே...)
http://nee-kelen.blogspot.com/2010/06/blog-post_15.html
ஏன்டா அட்டு படத்தை இந்த லிஸ்ட்ல சேர்த்தேன்னு நீங்க கேட்கலாம்...
இந்த வருஷம் வந்த பல படங்களை விட இது அதிக வசூல் ஆகி இருக்க
வாய்ப்பிருக்கு...ஏற்கனவே சொன்னது தான்...இந்த படத்தோட இயக்குனர்
தான் படம் பார்த்த அனைவருக்கும் துரோகம் பண்ணிட்டார்...சீனே இல்லை.
5.குரு சிஷ்யன்..(ஹி..ஹி...)
http://nee-kelen.blogspot.com/2010/05/blog-post_11.html
தமிழ்ல இந்த மாதிரி படங்கள் வர கூடாதுனு சொல்றதுக்கு இந்த படம் ஒரு
உதாரணம். சந்தானம் மட்டுமே ஷோ ஸ்டீலர்.சத்யராஜ் எல்லாம் கேரக்டர்
ஆர்டிஸ்ட் ஆக வேண்டிய நேரம் இது....!!
4. அசல்...(மெய்யாலுமே மொக்கை...)
http://nee-kelen.blogspot.com/2010/02/blog-post_08.html
இந்த படத்தில் எனக்கு பிடிச்ச ஒரே விஷயம் படம் ஓடுற டைம் தான்.....
என்ன தான் மொக்கை போட்டாலும் உன்னை ரெண்டு ஹவர்ல வீட்டுக்கு
அனுப்பிருவோம்னு சொன்ன அவங்க டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சு
இருந்தது...அதனால தான் அசலுக்கு நாலாவது இடம்...
3.வ...குவாட்டர் கட்டிங்...(மப்பு இல்ல...)
தியேட்டர்க்கு வானு கூப்பிட்டு செம மொக்கை போட்டாங்க..அதுவும் ஜான்
விஜய் கேரக்டர் கொஞ்சம் ஓவர் ஆகி போச்சு... சில சில காமெடிகள் ஓகே..
தீபாவளியை இந்த படம் கெடுத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
2.மாத்தியோசி...(யோசிக்கவில்லையே...)
http://nee-kelen.blogspot.com/2010/03/blog-post_12.html
எங்கே யோசிச்சாங்கனு இயக்குனர் கிட்ட தான் கேட்கணும்....
2. ராவணன்...(பத்து தலை தலைவலி..)
http://nee-kelen.blogspot.com/2010/06/blog-post_18.html
இந்த படம் பார்த்துட்டு இருக்கும் போது எனக்கு ஒன்னுமே புரியலை...
இனிமே மணிரத்தினம் படம் பார்க்க போறதுக்கு முன்னாடி ஒரு வாரம்
ஸ்பெஷல் கிளாஸ் அட்டென்ட் பண்ணனும் போல....அது சரி அவர் எங்க நமக்கு படம் எடுக்குறார், அவர் பணம் எடுக்க தானே படம் எடுக்குறார்.
2.வெளுத்துக்கட்டு...(ஹ்ம்,,,கட்டணும்)
http://nee-kelen.blogspot.com/2010/07/blog-post_02.html
எஸ்.ஏ.சி. அவர்கள் வாழ்க்கையில் நடந்த கதைன்னு சொல்லிட்டு பத்து படத்தோட கதையை போட்டு படத்தை முடிச்சுட்டாங்க. ஏதோ படம் பார்க்க வந்த ஆட்டோ டிரைவர்களால் எனக்கு டைம் பாஸ் ஆச்சு....
1.வாடா...(வந்துட்டேன்..)
http://nee-kelen.blogspot.com/2010/04/blog-post_14.html
வாடா காவியத்தை பார்க்க ரெண்டு கண் பத்தாது...மேலும் விவேக் காமெடி
செம சிரிப்பு??... வாடாவை பத்தி ஏற்கனவே பல தடவை அலசிவிட்டதால்
விட்டு விடுவோம்....
1.தம்பிக்கு இந்த ஊரு...(வெளியே சொல்லிடாதே)
http://nee-kelen.blogspot.com/2010/03/blog-post_09.html
இந்த படத்தை சொல்றதுக்கு வார்த்தையே இல்லை...மொக்கைனு சொன்னா
அதுக்கு மொக்கைக்கே கேவலம் ஆயிடும்...!!நான் ராஜலீலை படத்துக்கு
போனும்னு தான் போனேன்...என் கெரகம் இந்த மகா காவியத்தை
பார்க்கனும்னு தலைவிதி...வேற என்ன சொல்றது..
1.சுறா...(காஞ்சி போன எறா)
நான் முதல் பாதியிலே வெளியே எந்திருச்சு வந்துருலாம்னு தான் யோசிச்சேன்...ஆனா முதல் ஷோ போனதால் வெளியே அடுத்த ஷோக்கு காத்திருக்கும் ரசிகர்களுக்கு என்ன பதில் சொல்றதுனு தெரியாம அப்படியே உட்கார்ந்து இந்த மரண காவியத்தை ரசித்தேன்.....
வரும் வருடங்களில் மேலும் பல மொக்கை படங்களை பார்க்க அளவுக்கு
அதிகமா பொறுமையும், சகிப்பு தன்மையும் கண்டமேனிக்கு வளர ஆண்டவனை வேண்டுகிறேன்....!!
இந்த வருஷத்தில் எனக்கு பிடிச்ச படங்கள்னு பார்த்தா... ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, மைனா, அங்காடி தெரு, மதராசப்பட்டினம்,இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்,பாஸ், ........
நீங்களும் பின்னூட்டத்தில்(கமெண்ட்இல்) நீங்கள் இந்த வருடம் பார்த்து வெறுத்த மொக்கை படங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...அப்படியே உங்கள் வோட்டையும் போட்டுருங்க....
உங்கள்
ஜெட்லி...(சரவணா...)
16 comments:
"இந்த படத்தோட இயக்குனர்
தான் படம் பார்த்த அனைவருக்கும் துரோகம் பண்ணிட்டார்...சீனே இல்லை"
உங்களுக்கு காட்டலையா, நிறைய சீன் இருந்துச்சே.
எனக்கு தான் வடை!!!!
தில்லாலங்கடி கோவா போன்றதை இதில் சேர்த்தமைக்கு கண்டனங்கள்!
இவை மொக்கை ரகமெனினும் அலுப்படிக்க வைக்காது!
அசலுக்கு நாலாவதுன்னப்போ காண்டானேன்!
சுறாவுக்கு ஒன்னுன்னும் போது ஓகே..ஓகே..லூஸுல விட்டாச்சு!
.ஆனா முதல் ஷோ போனதால் வெளியே அடுத்த ஷோக்கு காத்திருக்கும் ரசிகர்களுக்கு என்ன பதில் சொல்றதுனு தெரியாம அப்படியே உட்கார்ந்து இந்த மரண காவியத்தை ரசித்தேன்.....
.....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,...... நீவிர் வாழ்க! தங்கள் குலம் வாழ்க! இத்தனை மொக்கை படங்கள் பார்த்தாலும், இன்னும் நார்மல் ஆக இருப்பதன் ரகசியம் என்னவோ?
மாமூ அடுத்து வருஷம் நீ மட்டும் மொக்கை படம் பார்க்க வாழ்த்துகிறேன். சகோதரியை கூட்டி போய் அடி வாங்காத...
ஆயிரத்தில் ஒருவன் மொக்கைதான். என்ன இருந்தாலும் உங்க தலைவர் சூப்பர் பாக்குக்கு முதல் இடமா?
ஈசன்
பலே பாண்டியா
10
sindhu samaveli!!!
பார்த்த படங்கள்:
வரிசைப்படி
௧) பத்து தலைவலி
௧) உட்டாலங்கடி
௩) உடைஞ்ச சட்டி
௪) ஹி ஹி
என்ன வாடா வரலையே வரலையேன்னு பாத்துட்டே இருந்தேன்... சூப்பரா முதலிடம் கொடுத்தீங்க... டாகுடர்க்கும் முதலிடத்தை பிச்சி கொடுத்ததற்கு நன்றி...
Viruthagiri,chikku bukku,vallakkottai naan kanda kaviyangal
Bottom பத்து படங்கள்னு போட்டிருந்தா சரியாயிருந்திருக்கும். //இனிமே மணிரத்தினம் படம் பார்க்க போறதுக்கு முன்னாடி ஒரு வாரம்
ஸ்பெ ஷல் கிளாஸ் அட்டென்ட் பண்ணனும் போல....// ஹா...ஹா...ஹா... முன்பெல்லாம் இவரு படத்த பார்க்க டார்ச் எடுத்துகிட்டு போகணும்னு சொல்வாங்க, இப்போ இந்த லெவலுக்கு ஆயிடுச்சே! //நீங்களும் பின்னூட்டத்தில்(கமெண்ட்இல்) நீங்கள் இந்த வருடம் பார்த்து வெறுத்த மொக்கை படங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...// ஆஹா, நாங்க இளிச்சவா பசங்க இல்லிங்கோ, இப்போவெல்லாம் முதலில் பதிவர்களின் விமர்சனகளைப் பாத்துட்டு மொக்கை படங்களில் இருந்து எஸ்கேப் ஆயிடறோம். [அடுத்தவங்க செய்யுற தப்பில் இருந்து கத்துக்குனும்னு பெரியவங்க சொல்றாங்க!. ஹி ....ஹி ....ஹி ....]
ji,
i like the following movies in this year.
1.VTV
2.Paiya
3.Myna
4.Boss
5.Madarasapatnam.
intha Year la Na Paartha First Movie yae periya Mokkai.- Kutty
Munthinam Paarthaena (Marana Mokkai). (In Theater)
Vaada ,palae paandiya ,Va Quarter cutting (DVD il Parthavai).
Post a Comment